யு டியூப் சூப்பர் ஸ்ரார் சாம் அண்டர்சன்

sam anderson கூகிளில் தேடியதும் அணு உலை எதிர்ப்பு என்று வந்துவிட்டது பீதியாகிவிட்டேன்.சரி ஆங்கிலத்தில் தலையின் பெயரைத்தேடினால் எத்தனை ரிஸல்ட் வந்தது தெரியுமா 38,700,000 results (0.52 seconds) அட...அட...அட...
(மணிவண்ணன் குரலில்)
 தலையுடன் போட்டியிடும் 
எதிர்க்கட்சிக்காரர்களைக்கேட்கின்றேன்.சூப்பர் 
ஸ்ராரைத்தேடினால் கூட 
இவ்வளவு ரிஸல்ட் வருமா?
(இதற்கு மேல் விறுவிறுப்பாக தலையைப்பற்றி
 என்னால் எழுத முடிய வில்லை)
 தலையை எத்தனை பேர் 
தேடுகின்றார்கள்என்று நன்றாகவே தெரிந்தது.சாம் அண்டர்சனை உங்களுக்கு தெரியாது என்றால் உங்களுக்கு யு டியூப் பற்றி எதுவும் தெரியாது என்றுதான் அர்த்தம்.தலையப்பற்றி அறியும் ஆர்வத்தில் விக்கிபீடியாவில் தேடினால் அதில் தலையைப்பற்றி தரக்குறைவாக எழுதி இருந்தது. There are lot of mock fan base for sam anderson.He has mentioned that he was zero in acting and will try to act in one more movie for his satisfaction. இதன் தலையின் ரசிகர்கள் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.இவர் திரைக்கதை வசனம் போன்றவற்றுடன் நடிக்கவும் கற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.அத்துடன் இவரது அண்மைக்கால நண்பர் பவர் ஸ்ராருடன் சேர்ந்து நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.இதனால் ரஜனியையும் கமலையும் ஒரே படத்தில் காணும் விறுவிறுப்பில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.சாம் அண்டர்சனின் முதல் திரைப்படம் (படம்தான்யா) யாருக்கு யாரோ இதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி சாமுக்கு மிகவும் உதவியாக இருந்தாராம்.அத்துடன் யாருக்கு யாரோவிற்கு இவரே வசனகர்த்தாவாகவும் இருந்திருக்கின்றார்.அத்துடன் இதன் கதையில் இவருக்கு  இரு ஹீரோயின்கள்  இருக்கின்றார்கள்.கிளைமாக்ஸில் அவர்களை நான் கொல்வது மாதிரி திரைக்கதையை மாற்றுவதாக இருந்தேன்.ஆனால் அவ்வாறு செய்தால் திரைக்கதையின் அழகு கெட்டுவிடும் என்பதற்காக அதை நான் செய்யவில்லை.என்று சாம் கூறியுள்ளார்.

யாருக்கு யாரோ திரைப்படத்தின் மிகவும் எமோஸனான பாடல்காட்சி உங்களுக்காக


சாம் அண்டர்சன் எனக்கு முதல் முதல் அறிமுகமானது யு டியூப்பினால். ஏதோ நித்திரையில் தவறிதலாக லிங்க்கை அழுத்திவிட "முக்காலா" பாடல் ஒலித்தது சரி என்று விழித்தால் தலையின் நடனம்.பிரபுதேவாவிற்குப் பதில் சாம் அண்டர்சனே ஆடியிருந்தார்.திடீர் என்று கண்கள் இருட்டியது வீட்டில் உள்ளோர் என்னை எழுப்பினார்கள்.பின்புதான் கூறினார்கள் 2 நாட்களுக்கு முன்னர்தான் நான் மயங்கி விழுந்தேனாம்.மக்களே இதைத்தான் இன்ப அதிர்ச்சி என்று நம்மூரில் கூறுவார்கள்.சரி அந்த வீடியோவை நீங்களும் பார்த்துவிடுங்கள்.

தல யு டியூப்பில் பிரபலமான அளவிற்கு சமூகத்தளங்களில் பிரபலமாகவில்லை எனவே தலையை ஒரு முறை நீயா நானாவில் பங்கேற்று பவரின் வழியைக்கையாளுமாறு ரசிகர் மன்றம் கேட்டுக்கொள்கின்றது.

திரைப்பட அனுபவத்தை பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில்  தல பகிர்ந்து கொள்கின்றார்.

விஜய் டி.வி யில் அது இது எது என்ற ப்ரோகிராமில் கூட சாம் அண்டர்சன் பங்கு பற்றி நிகழ்ச்சையை கௌரவப்படுத்தியிருந்தார்.அந்த ப்ரோக்கிராமின் சிறப்பு என்னவெனில் அதில் சூப்பர் ஸ்ராருக்கே போட்டியாக இருப்பவரான அண்ணன் பவர்ஸ்ராரும் அதில் பங்குபற்றினார் என்பதுதான்.சாம் அண்டர்சனின் வீடியோக்கள் யு டியூப்பில் லட்சக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டு வருகின்றன.உதாரணத்திற்கு படத்தில் கிளைமாக்ஸின் வீடியோ 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.


ஆனால் நமது தல சாம் அண்டர்சனைப்பிடிக்காத சிலர் தலையைப்பற்றி மிகவும் அவதூறான வசனங்களால் திட்டுவதும் தொடர்ந்துவருகின்றது.ஆனால் இதற்கெல்லாம் தலை அசைந்துகொடுப்பவர் அல்ல.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் பவருக்கு 


ஏற்கனவே பல முண்ணனி நடிகர்கள் தமிழ் சினிமாவை நன்றாக வாழவைத்துக்கொண்டிருக்கும்போது இவரைப்போன்ற ஆரம்பகட்ட நடிகர்களையும் வளர்த்துவிடவேண்டியது முண்ணனி இயக்குனர்களின் கடமையாகும்.அப்பொழுதுதான் தமிழ் சினிமா விளங்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}