உலகின் முதல் சிவில் இன்ஜினியர் ~ ராமர்!


raama

நமது வளமிக்க இலங்கை நாட்டில் இந்தியாவிலேயே இலாத ஒரு சிவத்தமிழ் சிறப்பு உள்ளது. அதுதான் ராமாயணத்தை தத்தமது உயிரினும் மேலாக போற்றுவது. ஒரு கதையை கொடுத்தால் வாசித்தோமா, மூடி வைத்தோமா, மூடிக்கொண்டு போனோமா என்றில்லாமல், அதை உண்மையாக நம்பி சீரழியும் வெட்கக்கேடான நிலைதான் இனத்தின் வளர்ச்சியில் முக்கியமான தடைக்கல். இன்றைய இளைஞர்கள் சினிமாக்களை பார்த்துவிட்டு, அந்த கானல் நீர்க் காட்சிகளை உண்மை என்று நம்பி, அதிலே காட்டப்படும் நாயகன் செய்த சாகசங்கள் உண்மை என்று நம்பி, நாயகியின் அங்கங்கள் உண்மை என்று நம்பி  சீரழிகிறார்களே, அதே மாதிரியான சீரழிவுதானே ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மை என்று நம்பி அவற்றை தூக்கி பிடிப்பது? பெரியோரோ, சிறியோரோ, பிழை ஒன்றுதான், சீரழிக்கும் ஊடகம்தான் வேறு வேறு. அதுவும் இந்த ராமாயணத்தை வைத்து நமது மண் படுகிற சீரழிவு இருக்கிறதே... ஹூம்!

ராமாயணம் நடந்திருக்க வாய்ப்பில்லை, அதிலுள்ள பிழைகள், ராமரின் கேவலங்கள்... இவை எல்லாவற்றையும் ஆராயத் தொடங்கினால் விடிந்துவிடும். நமது நோக்கமும் அஃதல்ல. இந்தக் கட்டுரையின் நோக்கமே யாழ்ப்பாணத்திலும் புவியியலிலும் அதை அடிப்படையாக வைத்து நடைபெறும் ஏமாற்று வேலைகளைப்பற்றி சொல்வதுதான்.

இந்தப் படத்தப் பார்த்துவிட்டுத்தான் ராமர் கட்டிய பாலம் என்று  கத்தத் தொடங்கினார்கள். 


ராமர் இருந்ததற்கே ஆதாரமில்லை, அப்படி இருந்தாலும், கதையில் சொன்னபடி நடந்திருக்க வாய்ப்பில்லை, அப்படி நடந்திருந்தாலும் புவியியல் மாற்றங்களுக்கு அவர் காரணமாகவிருந்திருக்க வாய்ப்பில்லை. (சொந்த மனைவியை காப்பாற்றத் தெரியாதவர், பெற்ற பிள்ளைகள் யாரென்றே தெரியாதவர், மான் எது, மாரீசன் எது என்று வித்தியாசம் தெரியாதவர் இலங்கைக்கு பாலம் கட்டுவாராம், எறியும் வருவாராம்.)

யாழ்பாணத்தில் ராமர் செய்த அட்டூழியங்கள் பலப்பல. தனக்கு தாகம் எடுக்கும் இடத்திலெல்லாம் வில்லை ஊன்றினாராம், தண்ணீர் சீறியதாம். (ராமாவில் (சாவகச்சேரி), நிலாவரை, வில்லூன்றி) இது யாழ்ப்பாணத்தின் புவியியலமைப்பு தெரியாத காலத்தில் யார்யாரோ கிளப்பிவிட்ட கதைகள் என்பதை தரம் 3 படிக்கும் குழந்தையால் சொல்லிவிடமுடியும். மாரீசன்கூடல் போன்ற ஊர்ப்பெயர்களை வைத்துப்பார்த்தால் ஒட்டுமொத்த இராமாயணமே யாழ்பாணத்தில் நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. (மாரீசன்கூடலை விடுங்கள். மானிப்பாய் என்ற ஊருக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள் விளக்கம்... ஐயகோ...! மான் ஓடியாதாம், ராமர் துரத்தினாராம், அதை துரத்த முடியாமல் ஒரு கட்டத்தில் மானே, நிற்பாய்! என்று கத்தினாராம், அது மானிப்பாய் ஆகிவிட்டதாம். வட இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் சீதைப்பாய் என்று இடம் இருக்கிறதா, பார்க்கவேண்டும்.) இத்தனைக்கும் ராமர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததற்கு ஆதாரம் இல்லை.

எல்லா பம்மாத்துக்களையும் விட்டுவிடுவோம். இந்த ராமர் பாலம் ராமர் பாலம் என்று ஒன்றை வைத்து பண்ணுகிறார்களே, அது துன்பியலின் உச்சம். அதுவும் தமிழ் அரசர்களை கொன்ற ஆரிய அர்சாசர்களைப்பற்றி பாடப்பட்ட காவியங்களை தமிழர்கள் கொண்டாடுவதும், அந்த ஆரிய அரசர்களையே கடவுளாக வழிபடுவதும் நமது கலாசார அவலம். பிராமணர்களின் நரபலி பூசைகளை ஆதரித்த கிருஷ்ணன் என்ற அரசன், அதை மறுத்த தமிழ் அரசனை போரில் வென்ற வரலாற்றுக் கதையே, மிகைப்படுத்தப்பட்டு, தமிழ் மன்னன் நரகாசுரன் எனப்பட்டு, அவன் சாவுக்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆக்கப்பட்டது பிராமணர்களால். (மறைமலை அடிகள்) பெரும்பாலும் வெல்லும் கடவுளாக ஆரிய மன்னர்களும், தோற்கும் அரக்கர்களாக தென்னிந்திய மன்னர்களும் சித்தரிக்கப்பட்டார்கள். (கிருஷ்ணன் – நரகன், முருகன் – சூரன் (முருகன் தமிழ்க்கடவுள் என நம்பும் முட்டாள்களுக்கு கொடுக்கவேண்டியது தனி விளக்கம்.) ராமன் – இராவணன்.)

கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. உட்கார்ந்து supervise  பண்ணும் நீல நிற மனிதனே ராமன். 


தமிழ் மன்னர்கள் வட இந்தியாவை வென்றபோதும் இவ்வாறான மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் கதைகள் புனையபட்டன. ஆனால், அதில் இருசாராருமே மனிதர்களாக காட்டப்பட்டதால், மக்களின் அபிமானத்தை பெறவில்லை போலும். அதே ஆரியக் காவியங்கள் உண்மையாக நம்பப்பட்டன. கதைகளின் நாயகர்கள் கடவுள்களாக கொண்டாடப்பட்டனர். கோயில்கள் எழுப்பப்பட்டன. தோற்ற தமிழ் மன்னர்கள் அரக்கர்களாக தமிழ் பாடப்புத்தகங்களிலேயே சித்தரிக்கப்பட்டனர். புவியியல் ரீதியாக அமைந்த சிறப்பம்ஸங்கள் எல்லாம் அந்தக் கதைகளின் வரலாற்றுச் சுவடுகள் ஆகின.

இந்த ராமாயணம் இருக்கிறதே, அது வரலாற்றில் நடந்த ஒரு ஆரியப் படையெடுப்பின் மீ........ மிகைப்படுத்தப்பட்ட வடிவம். இலங்கையில் முற்காலத்தில் வடபகுதியில் நாகர்களின் ஆட்சி இருந்தது என்பதுவும், அக்காலத்தில் புவியியல் ரீதியாக வட இலங்கையும், தென்னிந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும், நாகர்களின் ஆட்சி தென்னிந்தியாவின் பெரும்பரப்பில் விரிந்திருந்தது என்பதுவும், இராவணன் என்ற சிவபக்தன் நாகர்களின் அரசனாக அப்பரப்பை ஆண்டான் என்பதுவும் வரலாற்று உண்மைகள். அப்படியான தமிழ் அரசின்மேல் நிகழ்ந்த ஆரியப் படையெடுப்பே மிகைப்படுத்தப்பட்டு ராம கதையாக எழுதப்பட்டு ராமாயணமாகி விட்டது. ராமாயணத்தை வாசித்தவர்களுக்கு அதன் அபத்தம், அசிங்கம், ஆபாசம் எல்லாம் புரிந்திருக்கும். தமிழின் மிக உச்சப் படைப்பாக கொண்டாடப்படும் ராமாயணம் ஒரு தமிழ் மன்னனின் அழிவை பாடுவது என்பது வரலாற்று அவலம். அதுவும், அவனை ஒரு காமுகனாக காட்டியே கொல்கிறது என்பது அவமானம். அந்த  அவமானத்தை நாம் இன்றுவரை போற்றுகிறோம் என்பதோடல்லாமல், புவியியலின் பல சிறப்பம்ஸங்களை உள்ளடக்கிய வட இலங்கையின் பல பகுதிகளை ராமாயணத்துக்கு ஆதாரமாக்கிவிட்டோம்.
இலங்கையும் இந்தியாவும் முற்காலத்தில் நிலரீதியாக இணைந்திருந்தது என்பதற்கான ஆதாரம் ஆதாம் பாலம் எனப்படும் ராமர் பாலம். அதை ராமர் கட்டியதாக மின்னிவிட்டோம். இதில் மிகவும் அதிசய முரண் என்னவென்றால், அவர்களின் சொற்படி ராமர் கதை நடந்த காலகட்டத்தில் (கி.மு.3600 – 5600 வருடங்கள் முன்னர்) குமரி நிலநீட்சி இருந்தது, இலங்கை இந்தியா இடையே நிலப்பகுதிதான் இருந்தது. (தற்போதிருக்கும் மட்டத்திலும் அப்போது கடல்மட்டம் 100-120 மீற்றர் தாழ்ந்திருந்தது.)

மார்க்ஸ் முல்லர் தன் ஆராய்ச்சி மூலம் முன்வைக்கும் வேத காலம், அவர் இந்தியர்களின் தோற்றம் குறித்த வரலாற்று ஆதாரங்களை அளித்ததாக கூறிய அதே துபாசின் இந்தியாவின் தொல்குடியேற்ற நம்பிக்கையின் அடிப்படையிலான கால ஓட்ட அளவுகோல்
இன்றைய படையெடுபு, இடப்பெயர்வு கோட்பாடுகளின் கால ஓட்ட அளவுகோல் பொதுவாக அகழ்வாராய்ச்சியாளர்களால் மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால், மொழியியலாளர்களினால் முன்வைக்கப்படுகிற கால ஓட்ட அளவுகோல்
பல அகழ்வாய்வு அடிப்படையிலும், வேதங்கள், இராமாயணம் மற்றூம் மகாபாரத இலக்கியங்களினால் கூறப்படும் வானவியல் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் முன்வைக்கப்படுகிற கால ஓட்ட அளவுகோல்.

கிமு 4004 : மனித தோற்றம்
கிமு 4000 குதிரைகள் மத்திய ஆசியாவில் பயன்படுத்தப்படத் தொடங்கின.
கிமு 4500 4000 : வேத தொகுப்பு

கிமு 2400 2300 : நோவா சந்தித்த பேரு ஊழி வெள்ளம் மற்றும் மத்திய ஆசியாவில் ஊழியில் பிழைத்த மனித இனம்

கிமு 3700 : இராமாயணம்

கிமு 2000 1500 : நோவாவின் ஒரு சந்ததி இந்தியாவில் குடியேற்றம்

கிமு 3500 3000 : மகாபாரதம்

கிமு 1500 1000 : வேதங்கள் இயற்றப்பட்டு தொகுக்கபடுகின்றன.

கிமு 800 300 இராம காதை : தெற்கில் ஆரியப் படையெடுப்பு பரவியதன்  மிகைப்படுத்தப்பட்ட காலம்


-திண்ணை(தினக்குரலில் இருந்து)-

உலகில் மூன்றே மூன்று இடங்களிலுள்ள மத்தியதரைக் காலநிலை, மயோசின் காலத்தில் தானாகவே கடலிலிருந்து உயிர்த்தெழுந்த மண், நூறடி ஆழத்துக்கு சுண்ணாம்புக்கல் இருப்பு, அவற்றில் இடையே மண்ணில் ஏற்படும் பொறிவுகள் காரணமாக ஏற்படும் கிணறுகள்,  நிலம் வேறு, கடல் வேறு என்றில்லாமல் இரண்டும் கலந்துள்ள நிலை இப்படி புவியியல் ரீதியாக ஏனைய தமிழ் உலகத்திலிருந்து வேறுபட்ட விசித்திர மண் யாழ்ப்பாணம்.  அது பெருமை. யாழ்ப்பாத்தின் தனிச்சிறப்பு. ஆனால் என்ன செய்தோம்? விடை தெரியாத சகல புவியியல் கேள்விகளுக்கு முன்னோர் கொடுத்த பதில்? ராமாயணம். இது வெட்கக்கேடு. யாழ்ப்பாணத்தின் அவமானம்.


இது போதாதென்று அனுமாருக்கு கோயில், சிலைகள் என்று அதுவேறு நடக்கிறது. மருதனார்மடத்தில் உள்ள தனியார் சொத்தான அனுமார் கோயிலுக்கு அருகில் ஒரு பிரமாண்டமான அனுமார் சிலையை கட்டுவதற்காக நிதி திரட்டப்படுகிறது. எங்கு போய் சொல்ல?

பௌத்த மத அடையாளங்கள் யாழ்ப்பாணத்தில் எழுப்பப்படும்போது ஆரவாரிக்கும் உங்களது சைவப்பற்று, வைணவக் கடவுள், அவர் முதலில் கடவுளே இல்லை என்பது ஒரு புறமிருக்கட்டும், இத்தனை உயரமாக எழுப்பப்படும்போது எங்கே போகப் போகிறது? வல்லிபுர ஆழ்வார் ஆலயம் உட்பட எத்தனையோ வைணவ மதாலயங்கள் இருக்கிறதுதானே என்கிறீர்களா? பாரம்பரியமிக்க அவையும், தனிப்பட்ட மனிதர்கள் தமது ஆசைக்கு கட்டும் சுற்றுலாத்தலமும் ஒன்றா? போதாததற்கு வல்லிபுர ஆழ்வார் ஆலய வரலாற்றை ஆராய்ந்தால் அதை நாம் பௌத்தர்களுக்கு தாரை வார்க்க வேண்டி வரும் நண்பர்களே!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}