பஸ்ஸினுள் அடித்த பெண்ணை திருப்பி அறைந்த இளைஞன்

ஒரு இளைஞன் பஸ்ஸில் தன் பாட்டுக்கு சிவனே என்று பிரயாணம் செய்துகொண்டிருக்கிறான் பஸ் இடையிடையில் ஸ்பீட் ப்றேக்கர்,பஸ் ஸ்ரொப்  போன்றவற்றில் சடுதியாக நிற்பது வழமைதான்.அப்படி நிற்கும் போது அந்த இளைஞன் அருகில் இருந்த பெண்மீது தவறுதலாக மோதிவிடுகிறான்.உடனே அந்தப்பெண் அனைவருக்கும் முன்னால் அறைந்துவிடுகிறாள்.இதன் போது பஸ்ஸினுள் சலனம் அதிகரிக்கின்றது.(இப்படியான சந்தர்ப்பத்திற்காக அலையும் ஆண்களை செருப்பால் அடிக்கலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்)
இளைஞன் சற்று நேரத்தில் அவளின் முன்பக்கமாக அவளை விலத்தி நகர்ந்து செல்கின்றான்.மறுபடியும் ஸ்பீட் ப்றேக்கர் அல்லது பஸ் ஸ்ரொப் வரும் இல்லையா? அவள் இவன் மீது மோத(இதற்காகத்தான் முன்னே வந்தான் அவன்) ஓங்கி ஒரு அப்பு லெஃப்ட் அவுட்டு...பஸ்ஸில் எஞ்சின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

முகப்புத்தகத்தில் ஸேர் செய்யப்பட்டுவரும் வீடியோ இது.இதில் யாரை பிழைசொல்வது என்று தெரியவில்லை? உங்களுக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}