wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-04

தொடர்ந்து 3 பதிவுகள் பார்த்தாயிற்று இது 4ஆவது பதிவு wwe உண்மையாய் இருந்தால் உனக்கென்ன இல்லையென்றால் என்ன? விரும்பினால் பாருய்யா இல்லைன்னா பார்க்காத என்றும் சில நேரடிக்கருத்துக்கள் வந்தன(கோபமாய் அல்ல).சரி ஆனால் உண்மை என்னவென்று தெரியவேண்டுமல்லவா? தனது ஹீரோ படத்தில் இறந்ததும் தியேட்டரை அடித்து நொருக்குவது அல்லது என்னுடைய தலைவன் இறந்தால் தியேட்டர் இருக்குமா? என்று பீத்திக்கொள்ளும் முட்டாள் ரசிகனைப்போல் சகலவற்றையும் விளக்கமில்லாமல் உண்மை என்று நம்பக்கூடாது. ஏதோ அவர்கள் காட்டுகிறார்கள் நாங்கள் நம்புகின்றோம் என்று இருக்கக்கூடாது இல்லையா அதனால் தான் தொடர்ந்து எழுதுகின்றேன்.ஆனால் ரெஸ்லிங்க் ஒரு நாடகம் தான் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகின்றேன்.என்ன செய்ய உண்மைகள் கசப்பானவைதான்.நானும் இவர்களுக்கு விசிறியாக இருந்தவன்தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.அதற்காக இப்பொழுது பார்ப்பதில்லை என்று அர்த்தமல்ல ஆரம்பத்தில் இருந்த வெறித்தனம் போய்விட்டது.இப்பொழுது பிழைகள் வெளிப்படையாக தெரிகின்றனவா ரெஃப்ரி எனவுன்சர் போன்றவர்களை கவனமாகப்பார்த்துவருகின்றேன்.
.இதன் முன்னைய பதிவிற்கு  இங்கே கிளிக்.

சரி வாருங்கள் தொடருவோம்...

ரெஸ்லிங்கில் சிலவேளைகளில் பார்வையாளர்களே தாக்கப்படுவார்கள்.பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் கொதிப்படைந்துவிடுவார்கள்.சில ரசிகர்கள் கையில் இருக்கும் போப்கொன்,கப்கள் போன்றவற்றை அடித்தவரை நோக்கி எறிவார்கள்.
ஆனால் உண்மை என்னவெனில் இதுவும் ஸ்கிறிப்ரின் ஒரு பகுதிதான்.இங்கே நீங்கள் பார்க்கும் காட்சியில் தள்ளி விழுத்தப்பட்ட வயது முதிர்ந்தவர் கீழே விழுவதற்கு முன்னரே லாவகமாக பிடிக்கப்பட்டு விட்டார்.ஆனாலும் பின்னர் கீழே விழுந்துவிடுவார்.இங்கு சகலருமே நடிகர்கள்.


santino marella
இவ்வாறு பலமுறை wwe யில் நடந்துள்ளது.இதன் ஆக உச்சக்கட்டம் பார்வையாளர்களில் ஒருவரை "யாராவது தைரியமிருந்தால் வாருங்கள் "என அழைத்து வந்தவரை ஒரு ரெஸ்லருடன் மோதவைப்பது.உண்மையில் பார்வையாளர்களை சுற்றி செக்குரிட்டி போட்டிருப்பார்கள் அவர்களைத்தாண்டி பார்வையாளர்களால் உள்ளே வரமுடியாது. இப்படி அழைக்கும் போது திட்டமிட்டபடி ஒருவர் வருவார் தேவையில்லாமல் வாங்கிக்கட்டிக்கொள்வார்.பின்னர் ஆம்புலன்ஸில் அவரை அள்ளிக்கட்டிக்கொண்டு செல்வார்கள். வில்லன்களை சிறந்த வில்லன்களாக்க இம்முயற்சி பயன்படுத்தப்படுகின்றது.இவ்வாறு பார்வையாளர்களில் இருந்து சண்டையிடவந்தவர்தான்santino marella இவரை பின்னர் wwe ஸ்ரார் ஆக்கிவிட்டார்கள்.இப்பொழுது இவர்தான் wwe இல் காமடியன்.

பக் ட்ரொப்..
தன்னை நோக்கொ ஓடிவருபவரை தன் தலைக்கு மேல் தூக்கி பின்னால் போடுவது.ஆனால் பல வேளைகளில் அதிக தூரத்திற்கு ஒருவரை தூக்கி எறியமாட்டார்கள்.இதில் பாவிக்கப்படும் டெக்னிக் என்னவெனில் விழும்போது மேடைக்கு சமாந்தரமாக உடலை வைத்திருத்தல்.அத்துடன் இவரது தோள் பகுதிதான் முதலில் கீழே செல்லும்.தனது கைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றது.பார்ப்பவருக்கு இவரது முதுகெலும்புப்பகுதியில் பலத்த அடி விழுவது போல் தோன்றினாலும்.இவருக்கு தோள்பட்டையிலேயே அடி விழும்.ஆனால் இந்த அடியால் வலி ஏற்படுவது உண்மை.இதை சாதாரண மனிதர்கள் செய்தால் முதுகெலும்ம்பு தெறித்துவிடும்.ஆனால் இவர்களது வருடக்கணக்கான பயிற்சிக்ளால் இவை சாத்தியமாகின்றன.

ரெள்லிங்கில் ஒருவர் மீது மற்றையவர் மரத்தாலான பொருட்களால் தாக்குவார்.அந்தப்பொருள் சிதறுவதுடன் தாக்குதலுக்குள்ளானவர் அத்துடன் காலியாகி கீழே விழுந்துவிடுவார்.உண்மையில் என்ன நடக்கின்றது.மரத்தாலான பொருட்கள் உடைத்து ஒட்டப்பட்ட பின்னர்தான் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.எனவே இவை உடனடியாக உடைந்துவிடும்.

அதெல்லாம் சரி ஆனால் இரும்புக்கதிரைகளால் ஓங்கி அடிக்கின்றார்களே? அதை எப்படி செய்கின்றார்கள் ? அதற்கும் விடை இருக்கின்றது.
கதிரையால் அடித்தபின்னர் கதிரையை தெளிவாகக்காட்டுவார்கள் அப்பொழுது கதிரை நெளிந்திருக்கும்.ஆனால் உண்மையில் அதற்கு முன்பே கதிரை நெளிந்திருக்கும்.
கதிரையால் அடிப்பதற்கு சில டெக்னிக்குகள் இருக்கின்றது.
ஆரம்பத்தில் ரெஸ்லர் கதிரையை சரியாகத்தான் பிடித்திருப்பார்.அதாவது கதிரை நேராக இருக்கும்.

ஆனால் கதிரையால் தலையில் தாக்கும்போது கையைத்தளர்த்திப்பிடிப்பார்.அப்போது கதிரை V போன்று விரியும்.அடித்து முடிந்ததும் மீண்டும் கையை இறுக்கிக்கொள்வார்.சாதாரணமாக முதுகில் அடிக்கும்போது தோள்பட்டைக்கு சமாந்தரமாகவே அடிப்பார்கள்.அத்துடன் ரெஸ்லிங்கில் பயன்படுத்தும் கதிரைகள் சாதாரண இரும்புக்கதிரைகள் அல்ல சாதாரண இரும்புக்கதிரைகள் குறைந்தது 20 பவுண்டுகள் இருக்கும்.இவை அதை விடக்குறைவானவை.அதற்காக இவற்றினால் ரெஸ்லேர்ஸ் அடிவாங்கும் போது அவர்களுக்கு தலையணையால் அடி வாங்குவது போல் இருக்கும் என்று பொருள் இல்லை.இது ரெஸ்லிங்கின் எந்த அடிக்கும் பொருந்தும் கூற்று என்பதை தெளிவு படுத்துகின்றேன்.

போலியாக எப்படி அடிப்பது?அடித்தால் என்னமாதிரி எஃபெக்ட் கொடுப்பது என்று ட்ர்பிள் ஏஜ் விளக்கும் வீடியோ இதோ.....


இது டி.என்.ஏயில்  வெளிப்படையாக அகப்பட்ட விடயம்.ஏதோ டி,என்,ஏ தானே என்று நினைக்கவேண்டாம்.இதில் இப்பொழுது இருக்கும் அனைவரும் ஆரம்பத்தில் நம்ம wwf இல் இருந்து சென்றவர்கள்தான்.

டேபிள்கள் எல்லாவற்றையும் போட்டு நொருக்குகின்றார்களே? நொருக்குகின்றார்கள் எல்லாம் சப்பைப்பலகைகள்தான் அதுவும் அந்த டேபிளின் நடுப்பாகத்தில்தான் ஒருவரை தூக்கிப்போடுவார்கள்.இதனால் மேசை இலகுவில் உடைந்துவிடும்.இதைப்பார்த்துவிட்டு அசல் பலகையில் ஒருவரைத்தூக்கிப்போட்டால் நீங்கள் காலி.


இன்னொருவகைத்தாக்குதல் என்னவெனில் ஒரு கதிரையின் மீது ஒருவரின் தலையை வைத்துவிட்டு வேறோரு கதிரையால் அவரது தலைமீது அடித்தல்.ஆனால் இவ்வாறு செய்ய முடியுமா? உண்மையில் நீங்கள் இப்படி செய்தால் உங்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
உண்மையில் மற்றைய கதிரையின் மீதுதான் அடி விழுகின்றதே தவிர அவரது தலைமீது அல்ல.

 வழக்கமாக சீனா "you cant see me" காட்டிவிட்டு தலையில் ஓங்கி ஒன்று போடுவாரே இதற்கு Five Knuckle Shuffle என்று பெயர்.ஆனால் இதை ஒருமுறை கூட யாருக்கும் உண்மையாக அடித்தது கிடையாது.ஆதாரம் கீழேஇதற்கான வீடியோக்காட்சிகள்


காலி ஜோக்....

எப்படி இருந்த நான்..


இப்படியாகிட்டேன்...


தொடரும்.....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}