wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?

நீங்கள் wwe(World Wrestling Entertainment) ரசிகரா? அண்ணன் அண்டர் ரேக்கர்,தலைவர் ரொக்,ஜோன் சீனா என wwe ஐ ரசிப்பவரா?(பதிவின் நீளத்திற்கு மன்னிக்கவும்) அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தப்பதிவு.நானும் ரெசிலிங்க்கிற்கு ரசிகன் தான் எனது நண்பர்களுக்கும் எனக்கும் சினிமா ஹீரோக்களைப்பற்றிய சண்டையை விட இதனாலும் வாய்த்தர்க்கங்கள் அடிக்கடி வரும்.எனக்கு பிடித்த  wwe சூப்பர் ஸ்ரார்கள் ஒஸ்ரின்,ரொக்,அண்டர் ரேக்கர் யாராவது ஒருதரைக்கூறச்சொன்னால் அது ஓஸ்ரின்தான்.ஏனோ முதலாவதாக அவரது மச்சை பார்த்ததாலோ என்னவோ பிடித்துவிட்டது பின்னர் அவரை பற்றிய விடயங்களை இணையத்தில் தேடி அறிந்துகொண்டேன்.பின்னர் அவரும் முண்ணணியில் இருப்பவர்தான் என்று தெரிய வந்தது.wwe ஆரம்பத்தில் wwf ஆக இருந்தது பின்னர் wwe ஆக மாற்றப்பட்டுவிட்டது. wwf ஆக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முக்கிய ஸ்ராரும் ஏதாவது ஒரு சில வருடங்களுக்கு முண்ணணியில் இருந்தார்கள். ஒஸ்ரின் ரொக்கை ஓட ஓட விரட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.ரொக்கும் அவ்வாறே ஒஸ்ரினை விரட்டிய சம்பவங்களும் நடந்தன.ஹோகன் என்ற பெரிய சூப்பர் ஸ்ராரும்  wwf இல் இருந்தார் இவருக்கும் ரொக்கிற்கும் இடையில் நடைபெற்ற மச்சிற்குத்தான் அனேக பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.கேன்,ரிக் ஃப்லேயர் ,ரிபிள் ஏஜ்,ஷோன் மைக்கல்,ரண்டி ஓற்றன், கோல்ட் பேர்க் என்று  wwf இல் பெரிய பட்டாளமே இருந்தது. 

wwf இல் நடந்த அவ்வளவு மச்சும் மிகவும் துடி துடிப்பாக இருந்தன அதாவது இப்பொழுடு ஜோன் சீனா பங்கை அடித்துவிட்டு அரைமணித்தியாலம் கழித்து எழுந்திருப்பது போல் இல்லை.1990 வரை  wwf ஹோகனின் வசம் இருந்தது என கூறலாம் விதி 1990 இல் அண்டர் டேக்கரை கொண்டுவந்து சேர்த்தது.டங்க்......இந்த ஒலியை ரெஸிலிங் ரிங்கில் கேட்பவர்கள் எல்லோரும் தமது இறுதிச்சடங்கில் கேட்கும் ஒலியாக உணர்ந்தார்கள்.ஹோகன் ரொக் ஒஸ்ரின் என சகலரையும் ஆட்டம் காட்டியவர் அண்டர் டேக்கர்.இவர் ரெஸ்ரில் மேனியா எனப்படும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் விழாவில் நடைபெறும் மச்சில் இதுவரை தோற்றதில்லை.அத்துடன் தனித்துவமான ஃபினிஸ்ஸிங்க் ஸோர்ட் அப்படியே கவிழ்த்து ஒரு அடி ஆள் காலி.உண்மையில் இப்படி ஒருத்தனை அடித்தால் கொலை கேஸ் கொஃன்பேர்ம்.

வித்தியாஸமான் களங்களில் மச்கள் நடைபெறும்.கூண்டுக்குள் மச்,மச்சில் ஆயுதங்கள் தளபாடங்கள் என எதையும் பயன்படுத்தும் மச்.அத்துடன் ரோயல் ரம்பிள் என்று ஒரு மச் நடைபெறும் அதில் இறுதியில் எஞ்சியிருப்பவர் சாம்பியனை தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவார்.இது மிகவும் சுவாரிஸ்யமாக இருக்கும்.நானும் எனது நண்பனும் வாய்த்தர்க்கமிடுவது நமக்கு பிடித்த இருவரில் யார் பெரியவர் என்பதில்தான்
அதாவது அண்டர் டேக்கர் வெர்ஸ் ஒஸ்டின் ஆனால் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் அண்டர்டேக்கர் அளவிற்கு யாருமே இருக்க முடியாது என்பதுதான் உண்மை.இப்பொழுதும் அண்டர்டேக்கர் என்றால் எல்லோருக்கும் சிம்மசொப்பனம்தான்.ஜோன்சீனா கூட பாவம் அழுதுகொண்டு ஓடியிருக்கிறார்.ஆனால் அது தெரிந்தும் நான் விடுவதாக இல்லை அந்த மச்சில் அவர் தோற்றார் இந்த மச்சில் இவர் ஓடிவிட்டார் என முடியாமல் சென்று கொண்டே இருக்கும் எமது சண்டை.இப்போதைய பலருக்கு ஆரம்ப மச்ச்களைப்பற்றிய விடயங்கள் தெரிவதில்லை சோ இப்பொழுது காண்பவற்றைக்கொண்டு அவர்களை ஹீரோக்களாக்கிவிடுகின்றார்கள்.wwe இல் நடைபெறும் மச்கள் நாடகம் மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை போல செல்லும்.அண்ணன் தம்பி சண்டை.கணவன் மனைவி சண்டை நண்பர்களுக்கிடையில்  பழிவாங்கல் என கதை தொடரும்.

வீட்டில் நான் ரெஸ்லிங்க்கை பார்ப்பதை எனது அம்மாவோ அப்பாவோ பார்த்தால் அவ்வளவுதான் வாயைமூடிக்கொண்டிருக்கமாட்டார்கள்."இன்னொருதனைப்போட்டு அடிக்கிறதை எல்லாம் சந்தோசமா பாத்துக்கிட்டிருக்கிறியே என்ன ஜென்மமேடா நீ?" அதால தான் உன் மூன்சியும் விடியாம கிடக்கு என்று ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் வழக்கம் போல் அவற்றை புறம் தள்ளிவிட்டு எனது வேலையை தொடர்ந்துவிடுவேன்.என் இன்னொரு நண்பங்கூட என்னை திட்டியதுண்டு "இன்னொருதனை அடிக்கிறதை பார்க்கிறது காட்டுமிராண்டித்தனம்"என்று.இப்பொழுதெல்லாம் இதை பார்த்து பல காலம் ஆகிவிட்டது ஏனென்றால் wwe நிலை அவ்வளவு கேவலம்.இப்பொழுது அவர்கள் செய்யும் நொட்டல்களை எல்லாம் சகிக்க எனக்கு தைரியமில்லை அத்துடன் அண்டர் டேக்கர் வாராமல் போனபிற்பாடு எனக்கு அங்கு என்னவேலை என்று பாதியில் ஸ்டொப்பண்ணி விட்டேன்.

சரி ஒரு wwe ரசிகனாக நான் அலட்டியாகிற்று ஆனால் இனி அறிவியல் தளத்தில் சற்று சிந்திக்கப்போகின்றேன்.
wwe மச்சில் அடிபடும் ஸ்ரார்க்ள் எல்லோரும் மேடையில் தான் மூஞ்சையை தூக்கி வைத்திருக்கிறார்க்ளே தவிர உண்மையில் மேடைக்கு வெளியே அவரவர் நண்பர்கள் போலத்தான் இருக்கிறார்கள்.ஆரம்பத்திலேயே உதைக்கும் ஒரு விடயம் என்னவெனில் சாதாரணமாக ஒருவருக்கு முகத்தில் ஒரு குத்துவிட்டாலே முகம் புடைத்துவிடும் தக்காளிச்சட்னி வெளியே வரும்.ஆனால் ரெஸ்லிங்க்கில் ஓங்கி அந்தக்குத்து குத்தினால் கூட தலையை லேசாக உலுப்பி விட்டு மீண்டும் சண்டையிடத்தொடங்கிவிடுகின்றார்கள்.அத்துடன் மேடையில் நின்று சண்டையிடுவதுடன் மூலையில் இருக்கும் கம்பி மீது ஏறி நின்று பாய்வது என்று பல விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன.கம்பி கதிரை முதல் சுத்தியலால் கூட அடிக்கின்றார்கள் ஆனால் அடிவான்கிய நபர் அடுத்த நாள் ஏதோ சிறு கட்டுக்களுடன் வருவார்.சனம் விடுவதாக இல்லை தொடர்ந்து பார்த்துவருகின்றார்கள்.பல ஸ்ரார்கள் வரும் போது அவர்களுக்கே உரிய தீம் சோங்க் போடுவார்கள் அத்துடன் அவர்கள் தமது கை கால்களைத்தூக்கி அக்ஸன் செய்யும்பொழுது அவர்கள் வரும் வாசலில் நெர்ப்புத்துகள்கள் வெடித்துப்பறக்கும்.இது சாதாரணமானவர்களுக்கு ஆனால் அண்டர்ரேக்கர் ஒரு படி மேலே இவருடன் யாரவது சண்டையிட்டால் சண்டையிட்டவர் இன்னொருவருடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது இடையில் டங்க்..கேட்கும் வருவார் ரேக்கர் இவரது வருகையே பலமுறை வித்தியாசமாக இருக்கும் வாசலில் இருக்கும் மேடை பிளக்க உள்ளே இருந்தெல்லாம் வந்திருக்கிறார்.

இவர் வந்து வாசலில் நிற்பார் மேடையில் ஏற்கனவே ரேக்கருடன் சண்டையிட்டவர் சற்றுக்கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்.ரேக்கர் கையை தூக்குவார் மின்னலடிக்கும் பின்னர் மெடையில் இருப்பவரை  நோக்கி கையை காட்ட மேடையில் மின்னலடித்து மேடை உடைந்து விழும்.உதாரணமான காட்சி இதோ....


ஆனால் ரெஸ்லிங்கில் மோதுபவர்களுக்கு இரத்தம் வருகின்றதே அதுவும் அடித்தவுடன் /அடி பட்ட இடத்தில் இருந்து இரத்தம் வருகின்றதே என்று நீங்கள் கேட்கலாம் சற்றுப்பொறுங்கள்.அதற்கு விடை கூறமுன் இந்த வீடியோக்களையும் பார்த்துவிடுங்கள்.இதில் இதுவரை நடந்த விபத்துக்கள் காட்டப்பட்டுள்ளன.
விபத்துக்கள் மட்டுமல்ல சிலரது உயிர்கூடப்போயிருக்கின்றது.Owen Hart  1999 இல் மேடைக்கு அவரதுஸ்ரைலில் மிக உயரமான இடத்தில் இருந்து கேபிளில் வழுக்கிக்கொண்டு வரும்போது தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலே கூறிய விபத்து உண்மையில் நடைபெற்றது.இவ்வாறான விபத்துக்களை நாம் நாடகமென்று கூறமுடியாது.இது வரை உண்மையில் விபத்துக்கள் நடந்துள்ளன.
ஆனால் ரெஸ்லிங்கில் இரத்தம் வருவது பற்றி wwe இல் பிரபல ஸ்ரார் காலி உண்மையை அனைவருக்கும் முன் போட்டு உடைத்திருக்கின்றார்.
நாம் இரத்தம் வருவதற்கு ஸ்பெஸலான மாத்திரைகளை உட்கொள்கின்றொம் என்று.அப்படியானால் ரெஸ்லிங்கில் இரத்தம் வருவது 100% மாத்திரையால என கேட்ட பொழுது.இல்லை 90% ஆன மச்களில் ஸ்கிரிப்ட்டில் இரத்தம் வருவது அவசியமாயின் அவர்கள் இவ்வாறான இரத்தத்தை வருவிக்கும் மருந்துகளை உட்கொள்வார்கள் என கூறினார்.அத்துடன் அவ் மருந்தின் பெயரை நான் கூறமுடியாது ஏனெனில்  wwe அதற்காக மில்லியன் டாலர்களை செலவிடுகின்றது என கூறினார் காலி.

அப்படியானால் ரெஸ்லிங்கின் மச்களின் போது காலியிடமிருந்து வருவது அவரின் சொந்த இரத்தம் இல்லையா?என கேட்டபொழுது ஆம் பெரும்பாலான நேரங்களில் வருவது எனது சொந்த இரத்தமல்ல ஆனால் சில நேரங்களில் இரத்தம்வரத்தான் செய்யும் என காலி கூறினார்.

அதற்கான வீடியோ...ரெஸ்லிங்கில் இரத்தம்வருவது மட்டும்தான் பித்தலாட்டம் என்றுதப்பாக நினைக்கவேண்டாம் உன்னிப்பாக நாம் கவனிக்கவேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.ரெஸ்லிங்கிற்கென பாடசாலைகளே உள்ளன.அங்கு கற்பிக்கின்றார்கள் எவ்வாறு ரிங்கிற்குள் சண்டையிடுவதுஎன்று.சண்டையிடுதல் என்றதும் ஓங்கி அடித்தல் பாய்ந்து அடித்தல் கதிரை கடப்பாரையால் அடித்தல் மட்டும்தான் கண்ணுக்கு தெரியாலாம்.ஆனால் நன்றாக கவனித்தால் பல விடயங்கள் புலப்படும்.உண்மையில் ரெஸ்லிங்கில் இருவர் சண்டையிடுகின்றார்களாயின் ஒருவர் மற்றவரை என்நேரமும் பாதுகாத்துக்கொண்டுதான்(தனது எதிரியை) இருப்பார்.

ரிங்கின் மூலையில் ஏறி நின்று பாயும்போது கீழே நிற்கும் நபர் கைகளை நீட்டி அவரை லாவகமாக அடிபடாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டு தானும் கீழே விழுவார்.இதனால் இருவரும் காயப்படாமல் தப்பித்துக்கொள்வார்கள்.அத்துடன் ஒருவரை மற்றவர் கைகளாலும் சரி அல்லது ஏதாவது ஆயுதத்தாலும் சரி தாக்குவார்கள்.இப்படி எவ்வாறு அதிக சேதமில்லாது தாக்குவது ?,காயப்படாமல் எவ்வாறு மற்றவரைக்காப்பாற்றுவது போன்றபயிற்சிகள்தான் இவ்வாறான பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன.ஆனால் இங்கு குறிப்பிடப்படும் குறைந்த அளவு சேதம் என்பது  சாதாரண இரு மனிதர்கள் தமக்கிடையே சண்டையிடும்போது ஏற்படும் சேதத்தை விட அதிகம்தான் இதற்காகத்தான் தமது உடல்களை அவ்வளவு கட்டுமஸ்தானதாக வைத்திருக்கிறார்கள் அத்துடன் மில்லியன் கணக்கான பணத்தையும் சம்பளமாகப்பெறுகின்றார்கள்.அதோடு சகலதும் பாதுகாப்பானது என்றால் எந்த சுப்பனோ குப்பனோ வந்து ஸ்ரார் ஆகிவிட முடியும்.


அத்துடன் நான் நமது ஹீரோக்கள் என தலையில் தூக்கிவைத்திருப்பவர்களெல்லாம் நமக்கு ஹீரோவாகத்திணிக்கப்பட்டவர்கள்.நமது சுயமான சிந்தனையில்  நாம் அவர்களை ஹீரோவாக்கவில்லை.ஒரு திரைப்படம் சுவாரிசயமாக இருப்பதற்கு ஹீரோ தேவை அத்துடன் வில்லனும் தேவை.அது போலத்தான் ரெஸ்லிங்க்ஐ சுவாரிஸ்யமாக்குவதற்கு சிலர் வில்லன்களாக சித்திகரிக்கப்படுகிறார்கள்.அவர்களுக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டின் படி அவர்கள் வில்லன்களாகுகின்றார்கள்.இதனால் நாம் ஹீரோவாக நினைப்பவர்கள்  நமக்கு ஹீரோக்களாகிவிடுகின்றார்கள்.ஒருவர் புதிதாக ரெஸ்லிங்க் கிற்கு அறிமுகமாகினால் அவருக்கு ஆடியன்ஸிடமிருந்து உடனடியாக வரவேற்புக்கிடைக்காது இதற்காக அவரை அந்த சந்தர்ப்பத்தில் ஹீரோவாக இருப்பவருடன் வில்லனாக மோதவிடுவார்கள்.புதிதாக வந்தவர் முறையற்று மோதுவார்.பின்னால் வந்து அடித்துவிட்டு ஓடிவிடுவார் இப்படியெல்லாம் செய்து.பின்னர் திடீர் என்று மனம்மாறிவிடுவார்.ஆனால் அப்பொழுதும் அவர் முழுமையான ஹீரோஅல்ல பின்னர் இவரை மாதிரி ஒருவருடன் மோதி பலதடவைகள் இவருடன் மோதுபவரிடம் அடி வாங்கி அடிவாங்கி அவர் 4/5 பேரைக்கூட்டிகொண்டுவந்தும் அடிப்பார் இப்படியெல்லாம் அடிமேல் அடிவாங்கி பின்னர் திருப்பி எல்லோரையும் ஓட ஓட விரட்டி.இப்படித்தான் உருவாக்கப்படுகிறார் ஒரு ஹீரோ.

ஆனால் வில்லனாக இருப்பவர் உண்மையில் அப்படி வில்லனாக இருக்கமாட்டார். நாம் ரெஸ்லிங்க்கில் மோதும் ஸ்ரார் ஒருவரது காரக்ரரை அங்கு அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துக்கொண்டு முடிவுசெய்ய முடியாது.உதாரணமாக அண்டர் ரேக்கரை எடுத்துக்கொள்வோம் இவரைப்பார்த்தால் ரிங்கில் இருக்கும் ஸ்ரார்களே கலங்குவார்கள் என்றால் சாதாரண மனிதர்களான நாங்கள் எப்படி இவரை அணுகுவது? என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் அண்டர் ரேக்கர் நாம் நினைப்பதைப்போல் அல்ல அவர் சாதுவான சாதாரண மனிதராகத்தான் நடந்துகொள்கின்றார்.

இவரைப்போலத்தான் ஏனைய ஸ்ரார்களும்
wwe ரெஸ்லிங்க் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ரெஃபிரக்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு அவசியம்? ரிங்கில் மோதும் ஸ்ரார்கள் மோதும்போது தங்களுக்குள் எப்படி எமக்குத்தெரியாமல் சைகைகளை பரிமாற்றுகின்றார்கள்?.அடி பட்டது இரத்தம் உடனே எப்படி இரத்தம் வருகின்றது? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்........விரைவில்...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}