தொடர் கொலைகாரர்கள்-03

முன்னைய இரண்டு பகுதிகளிலும் ஒரு கொலைகாரன் எவ்வாறு உருவாகின்றான்?அதற்கு காரணங்கள்.வரலாற்றில் நடைபெற்ற கோரமான சில சம்பவங்கள் செங்கிஸ்கான்,கலிக்யூலா போன்றவர்களையும் பார்த்தோம். முன்னைய பதிவைப்படிப்பதற்கு
அண்மையில்தான் உருமி படத்தைபார்க்கநேரந்தது சந்தோஸ்சிவனின் திரைப்படம்.சாம்ராட் அசோகா இடையில் வந்துசென்றது.மிகவும் அருமையாக இருந்தது.நடிகர் பிரித்திவிராஜ்ஜின் கம்பீரம் மலைக்கவைத்தது.அடுத்து முக்கிய கதாப்பாத்திரம் வஸ்கொடகாமா.இது திரைப்பட விமர்சனம் இல்லையாயினும் இவை இந்தப்பதிவுடன் தொடர்புடையவை. நான் வரலாறு என்னும் பாடத்தில் வஸ்கொடகாமா,கொலம்பஸ் போன்றவர்களின் வருகையை வஸ்கொடகாமா ஐரோப்பியாவில் இருந்து இந்தியாவிற்கான  கடல்மார்க்கத்தை கண்டுபிடித்தவர்.வர்த்தக ஒப்பந்தம் செய்தார்.சிறந்த கப்பலோட்டி.ராஜ தந்திரி இப்படித்தான் படித்தேன்.ஏதோ நாட்குறிப்பில் இரண்டு வரிகள் எழுதியதுபோல் புத்தகவரலாறுகள்  கற்பிக்கப்பட்டன மதிப்பெண்களுக்காக.கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டு பிடித்தவர்..அமெரிக்காவைக்கண்டுபிடித்தவர்...2 நாளைக்கு ஒரு தடவையாவது இதை நான் கேள்விப்படுகின்றேன்..கொலம்பஸ்  விட்டாச்சு  லீவு என்று பாடல்வேறு.இவர்களெல்லோரையும் சரித்திர நாயகர்களாக சித்தரித்தன பாடப்புத்தகங்கள்.ஆனால் கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டுபிடித்ததும் என்ன செய்தார்?வஸ்கொடகாமா இந்தியாவிற்கு வந்து என்ன செய்தான்? வரலாறுகளை சற்று அலசினால்  நிச்சயம் ரத்தவாடை நெஞ்சைத்துளைக்கும்.வஸ்கொடகாமா ஆடிய ஆட்டத்தைத்தான் உறுமி திறம்பட காட்டியிருந்தது.(உறுமியை நீங்கள் தைரியமாகப்பார்க்கலாம் என நான் அதற்குப்பரிந்துரைக்கின்றேன்).உண்மையில் வஸ்கொடகாமாவை வெறும் கடல் மார்க்கத்தை கண்டுபிடித்தவர் என்று மட்டும் நம்பிக்கொண்டிருப்பவர் இந்தப்படத்தைப்பார்த்தால் நிச்சயம் குழம்பிவிடுவார்.இவைகள்தான் இன்றைய கல்வித்திட்டத்தின் நிலை.

உலகில் நடந்த புரட்சிகள்,புதிய நாடுகளின் கண்டுபிடிப்புகள் போன்றவை ரத்தத்தால் எழுதப்பட்டவைதான்,ஹோச்சுமின்,ஸ்ராலின் போன்றோரும் சரி ஹிட்லர்,முசோலினி,செங்கிஸ்கான் போன்றோரும் சரி தமது தமது எதிர்ப்பாளர்களை ரத்தசகதியில் தோய்த்தவர்கள்தான்.ஆனால் நாம் இந்த சம்பவங்களையாவது வரலாற்றில் இருந்து அறிந்துகொள்ளவேண்டும்.

கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டுபிடிப்பதற்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் மாயன்,இங்கா நாகரீக மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.கொலம்பஸ் அமெரிக்காவை உலக மக்களுக்கு காட்டிக்கொடுத்ததால் ஐரோப்பியர்கள் அமெரிக்காவை நோக்கி படையெடுத்தார்கள்.விளைவு இங்கா நாகரீகமே சூழ்ச்சியால் விழுந்தது.
தென்னமரிக்காவின் பெரு நாட்டின் மன்னராக விளங்கியவர் அட்வால்பா இவரது நாட்டின் எல்லை 3000 மையில்களுக்குமேல் இருந்தது.பிரத்தியேகப்படை வீரர்களின் எண்ணிக்கை 100,000ற்கு மேல்.இப்படிப்பட்ட மன்னனை வெறும் 168 வீரர்களுடன் ஸ்பேயின் நாட்டின் பிரதிநிதியான பிஸாரோ வீழ்த்தியது வரலார்றின் மிகவும் வஞ்சனையானதும் வெட்கக்கேடானதுமான நிகழ்ச்சியாகும்.

பிஸாரோ
நட்பு நோக்கத்திற்காக வந்திருக்கின்றொம் என்று பிஸாரோ தூதுவனை அனுப்ப மன்னரும் இவர்களை காஜாமார்க்கா என்ற இடத்திற்கு வரும்படி கூறினார்.பின்னர் அவ்விடத்திற்கு மன்னர் அட்வால்பா வருகைதந்த விதத்தினை பிஸாரோவின் சகோதரன் விபரிக்கின்றான்.

அவரின் பல்லக்கிற்குமுன் சாமரம் வீசும் வீரர்களின் எண்ணிக்கை 2000 இருக்கும்.100 க்கணக்கான வீரர்கள் ஆவேசமாக நடனமாடியபடி வந்தார்கள்.இதனைப்பார்த்த பிஸாரோவின் வீரர்கள் சிலர் சிறுனீர் கழித்தேவிட்டார்கள்.நமது எண்ணிக்கை168 தான்.மன்னர் பல்லக்கில் இருக்க அவருக்கு நெருக்கமாக 12 ஸ்பானியவீரர்கள் நின்றிருந்தார்கள்.
மன்னரிடம் பைபிளை நீட்ட அவர் கோபத்துடன் அதைத்தூக்கி எறிந்துவிட்டார்.மன்னரோ சூரியக்கடவுளை வணங்குபவர் அத்துடன் அவருக்கு படிக்கவும் தெரியாது.பைபிளை எறிந்ததும் பிசாரோ கர்ச்சிக்க ஏற்கனவே பிஸாரொவின் கட்டளைப்படி ஒளிந்திருந்த வீரர்கள் அட்வால்பாவை சூழ்ந்து தாக்கினார்கள்.இங்கா வீரர்கள் யுத்தத்திற்குதயாராக வந்திருக்கவில்லை.அவர்களால் தக்குப்பிடிக்கமுடியவில்லை.அது வரை யுத்தம் என்றால் 2 பிரிவினரும் எதிரெதிரே நின்று முகத்திற்கு நேரே யுத்தம் செய்வது என்றுதான் நம்பியிருந்தார்கள் இங்கா இனத்தவர்கள்.ஆனால் இப்படியும் ஒரு யுத்தம் உலகில் இருக்கின்றது என்று அவர்களுக்கு அன்றுதான் தெரியும்.மன்னரைக்காப்பாற்ற எதிர்ப்பட்ட அனைத்து இங்கா வீரர்களையும் ஸ்பானிய வீரர்க்ள் வெட்டித்தள்ளினார்கள்.மன்னர் பணயக்கைதியாக்கப்பட்டார்.
தங்கள் மன்னரை விடுவிக்கும்படி இங்காமக்கள் கேட்க 17 அடி அகலமும் 8 அடி உயரமும் கொண்ட தொட்டியினுள் தங்கத்தால் 1 தரமும் வெள்ளியால் 2 தரமும் நிரப்புமாறு கூறினான் பிசாரோ.
மக்கள் மன்னனின் சிம்மாசனத்தைக்கூட பிடுங்கி நிரப்பினார்கள்.ஸ்பானிய வீரர்கள் அத்தொட்டியினுள் உள்ளவற்றை அடித்து நெளித்து உள்ளே தள்ளினார்கள் மேலும் நிரப்புவதற்கு இடம் கிடைப்பதற்காக.ஆனால் பிஸாரோ அத்துடன் விட்டுவிடவில்லை மன்னர் தொடர்ந்து இருந்தால் புரட்சிகள் வெடிக்கும் என்பதால் மன்னரின் தலை சீவப்பட்டது.

ஸ்பானியப்படை நாட்டினுள் புகுந்து எதிர்ப்பட்டவர்கள் அனைவரினதும் வலதுகரம்,மூக்கை சீவினார்கள்.அவர்களின் கரத்தைக்கொண்டு பிரமிட் அமைத்தார்கள்.பெண்களின் மார்பகங்களை வெட்டியெறிந்தார்கள்.குழந்தைகள் மூட்டை மூட்டையாகக்கட்டி தீயில் இடப்பட்டார்கள்.

யுத்தகளங்களில் போரில் பங்குபற்றும் வீரர்கள் போரிடுவதற்கு முன்னதாக அவர்கள் கொலை செய்வதற்கு தயக்கம்,குற்ற உணர்வு போன்றவை இருக்கும்.ஆனால் யுத்தம் ஆரம்பித்ததும் கிளர்ச்சி ஒரு வெறி தொற்றிக்கொள்ளும் இதனால் கொலைவெறியுடன் யுத்தத்தில் ஈடுபடுவார்கள்.நிதானமாக சிந்திக்கும்போதுதான் தர்மம்,ஞாயம்,கருணை,மனிதாவிமானம் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டனிலையில் அவை எல்லாம் காணாமல் போய்விடும்.இந்த நிலைதான் கொலைகாரணது நிலையும்.

உண்மையில் உலகின் பிரபலமான கொலைகாரர்கள்,அவர்களது வாழ்க்கை,எப்படி யார் யாரை கொலை செய்தார்கள்? எப்படி மாட்டினார்கள்? என்பது பற்றி அலசவேண்டும். ஆனால் வரலாற்று ரீதியாகவும் இது வேறொரு பரிமாணத்தில் நடந்துவந்ததுதான் என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும்.இராணுவ வீரர்கள் நாட்டுக்காக யுத்தம் செய்கின்றார்கள்.ஆனால் ஒரு உயிரைக்கொன்றால் அது கொலைதான்.கொலைகாரர்கள் என்றதும் நீங்கள் ஆண்பாலை மட்டும் நினைத்திருந்தால் மன்னிக்கவும்.பெரியவர்களை மட்டும் நினைத்திருந்தாலும் மன்னிக்கவும்.அனைத்து வகையினரையும்  நாம் இத்தொடரினூடாக காண உள்ளோம்.கொலை காரன் என்றதும் நமக்கு ஏற்படும் உந்துதன் ஆவல் அவன் எப்படி இருப்பான்? என்ற எதிர்பார்ப்பு இவை அனைத்துமே கொலைகாரனைப்பார்த்ததும் தலைகீழாக இருக்கும் என்பதையும் பார்த்தோம்.அதாவது இதை இப்படி சிந்தியுங்கள் திரைப்படத்தில் மெயின்  வில்லனின் பாடிக்கார்ட்டாக தனுஸ் இருப்பதைப்போல இருக்கும்.

எதிர்வரும் பதிவுகளில் வரலாற்றின் மறக்கமுடியாத கொலைகாரர்களைப்பற்றிபார்க்க இருக்கின்றோம்.இளவயதில் கொலைசெய்த்வர்கள்,கொடூரமான பெண்கொலையாளிகள்,தனித்துவமான கொலையாளிகள் என ஒவ்வொரு கொலைகாரர்களின் வாழ்க்கை,அவர்களது முக்கிய நிகழ்வுகள் எப்படி அகப்பட்டார்கள் என்பதையும் பார்க்க இருக்கின்றோம்.

Gilles de Rais


தொடர்கொலையாளிகளின் முன்னோடியாகக்கருதப்படுபவர் இவர்தான்.15 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த ஃப்ரெஞ்ச் நாட்டைசேர்ந்த கௌரவஇடத்தில் மக்களால் மதிக்கப்பட்ட பிரபுஇவர்.இவர் பிளக்மாஜிக் போன்றவற்றிலும் உலோகத்தை தங்கமாக மாற்றும் அல்கமிஸ்ட் வேலையையும் பார்த்தவர்.தொடர்ச்சியாக கொலைகளைசெய்யமுன் St Joan of Arc இல் இராணுவத்தலைவராக பணிபுரிந்தவர்.

இவர் நூற்றுக்குமேற்பட்ட சிறுவர் சிறுமிகளை வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்தி சித்திரவதை செய்துகொன்றவர்.இதில் அதிகமாக கொல்லப்பட்டவர்கள் சிறுவர்கள்தான்.பளபளப்பான தலைமுடியையும் நீலக்கண்களையும் கொண்ட சிறுவர்கள் யாராவது இவருக்கு தென்பட்டுவிட்டால் அவ்வளவுதான்.இவர் பல ரகங்களில் பலரை கொலைசெய்தாலும் சாப்பாட்டில் நமக்கு ஒவ்வொரு ஃப்லேவர் பிடிப்பது மாதிரி இவருக்கு மிகவும் பிடித்த ஃப்லெவர்தான் "பளபளப்பான தலைமுடியையும் நீலக்கண்கள்".இவர் இருந்த நகரத்தில் அடிக்கடி பல சிறுவர்கள் காணமல்போய்க்கொண்டிருந்தார்கள் இவர் முக்கிய இடத்தில் இருப்பதால் யாரும் இவர்மீது சந்தேகப்படவில்லை.சிறுவர்களை இவரது கையாட்கள் கடத்திவருவார்கள் அல்லது எப்படியோ ஏமாற்றி அழைத்து வரப்படுவார்கள். இவர் உடனே தனதுகாமப்பசியை தீர்த்தபின்னர் இறந்த சிறுவர்களின் உடலை உருட்த்தெரியாவண்ணம் சிதைத்துவிடுவார்.ஆதாரம் இருக்கக்கூடாதல்லவா.ஆனால் தலையை மட்டும் பக்குவமாக வெட்டி எடுத்துவைத்துக்கொள்வார்.எதற்குத்தெரியுமா? தான் வன்புணர்ச்சியின் பின் கொன்றசிறுவர்களின் தலைகளை ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டு எந்த தலை மிகவும் அழகானது என்றுமுடிவு செய்வார்.ஒவ்வொரு நாளும் கொல்லும் சிறுவர்களது தலை அந்த தலைகளுடன் சேர்க்கப்பட்டு அதையும் ஒப்பிட்டுப்பார்ப்பார்.இதுதான் இவரது அன்றாட வாடிக்கையான நிகழ்வு.

இவரால் கொலைசெய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கையில் பல கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன.உடல்களை சித்தைத்து எரித்துவிடுவதால் அவற்றையும் எண்ண முடியவில்லை.80-100 கொலைகளை செய்துள்ளார் எனவும் சிலர் இல்லை 600 கொலைகள் வரை செய்துள்ளார் எனவும் கூறுகின்றார்கள்.
ஆரம்பத்தில் இவரது ஃப்லேவர் ஒன்று இருக்கின்றது என்று கூறினேன் அல்லவா அதிலும் ஒரு ஸ்பெஸல் இருக்கின்றது.அதாவது 18 வயதுக்கு குறைந்தவர்களயே இவர் கொலைக்கு தெரிவுசெய்வார்.
இவரது சேவர்கள் சிறுவனை பிடித்து கத்தியால் கழுத்தில் குற்றும்போது பீறிடும் இரத்தம் இவரின்மேல் படவேண்டும் இது இவரது சேவகர்களுக்கு இடப்பட்ட கண்டிப்பான கட்டளை.அதில் இவருக்கு ஒரு தனி இன்பம்.அத்துடன் கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் இரத்தத்தை ஒரு தடாகத்தில் நிரப்பிவிட்டு அதில் மூழ்கி இன்பம் அனுபவிப்பார்.இவளவையும் செய்தவுடன்  ஓ என்று அழுதுகொண்டே தன்னை மன்னிக்கும்படி இறைவனிடம் கில்லெஸ் பிராத்தனை செய்துகொண்டிருக்கும்போது இவரது சேவகர்கள் இறந்த சிறுவர்களின் உடலை எரித்துக்கொண்டிருப்பார்கள்.

மச்சியோல் நகரத்தில் 40 உடல்கள்தான் கைப்பற்றப்பட்டன.முதல்முதலில் கொலைசெய்யப்பட்ட சிறுவன் ஜியூடொன் வயது 12 .ஒரு தகவலை கில்லெஸ்ஸிடம் சொல்லிவரும்படி அனுப்பப்பட்ட சிறுவன்தான் இவன்.திரும்பி வரவே இல்லை.விசாரணை செய்தபோது எனக்குத்தெரியாது ஒருவேளை கொள்ளையர்கள் கடத்திசென்றிருக்கலாம் என்று கூறிவிட்டார்.

கில்லெஸ் சிறுவர்களை அவர்களுக்கே உரிய ஆசைகளைப்பயன்படுத்தித்தான் தன் வலையில் விழவைப்பார். ஒரு சிறுவனை அழைத்துவருவார் அந்த் சிறுவன் தன் வாழ் நாளில் பார்த்திராத அளவிற்கு அழகான உடைகள் வழங்கப்படும்.விருப்பமான உணவுகள் குடிவகைகள் வழங்கப்படும். நடக்கப்போவது தெரியாமல் அடித்தது அதிஸ்ரம் என்ற நினைப்பில் சிறுவன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிடுவான். பின்னர் சிறுவன் கில்லீஸின் வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச்செல்லப்படுவான்.அங்கி கில்லெஸிற்கும் அவனது நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே அனுமதி.அங்கு சென்றதும்தான் சிறுவனுக்கு தான் அகப்பட்டுக்கொண்டவிடயமே தெரியவரும்.சிறுவன் அதிர்ச்சியில் இருந்து மீழ்வதற்குள் அனைத்துமே முடிந்துவிடும்.

அகப்பட்ட சிறுவனை கயிற்றில் கட்டி தொங்கவிடுவார்கள்.பின்னர் கில்லெஸ் தனது பாலியக் விளையாட்டுக்களை அரங்கேற்றுவான்.சகலதும் முடிந்து கில்லீஸ் திருப்தியடைந்ததும் அந்த சிறுவனை கீழே படுக்கவைப்பான் சிறுவனின் வயிற்றின்மீது ஏறி உட்காரும்போது சிறுவனின் தலைவெட்டப்படும்.அப்போது கில்லெஸ் சிறுவனின் உடல்மீது முத்தமிட்டுக்கொண்டே பலமாக சிரிப்பான் கில்லெஸ்.
இவ்வளவு விடயமும் கில்லெஸ்ஸிடம் பணியாளாக இருந்த Poitou என்பவரால் வெளியிடப்பட்டவை.

1432 இல் ஆரம்பித்த இக்கொலைகள் 1440 இல் முடிவுக்கு வந்தது.திருச்சபையினரிடம் கில்லெஸ் செய்த தகராறின் காரணமாக தேவாலயப்புலனாய்வாளர்களின் கடுமையான முயற்சியால் கில்லெஸ்ளின் கொலைகள் வெளிச்சத்துக்குக்கொண்டுவரப்பட்டன.


தூக்கிடல் மூலம் மரண தண்டனை அக்டோபர் 26 புதனன்று தீர்வானது. அன்று ஒன்பது மணிக்கு, கில்லஸ் மற்றும் அவரது இரண்டு சகாக்கள் தண்டனை நிறைவேற்றும் இல்லே தே பீச்சே என்ற இடத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.அங்கே அனுதாபத்துடன் குழுமியிருந்த மக்கள் மத்தியில் கில்லஸ் உரையாற்றினார். Henriet and Poitouஆகிய மற்ற இருவரையும் தமது நோக்கத்துக்காக சாகின்ற கம்பீரத்துடன் மடியச் சொன்னார். முதல் நாளில் கில்லஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரயே முதலாவதாக கொல்லஅனுமதிகப்பட்டது. பதினொறரு மணிக்கு அவர் தூக்குமேடைக்கு கொண்டுவரப்பட்டு அவர் தூக்கிடப்பட்டார். பின்னர் அவரது உடல் துண்டாடப்பட்டு தீயிலிடபட்டது. . முழுவதுமாக சாம்பலாகமுன்னர் நான்கு உயர்மட்டப் பெண்மணிகளால் அத்துண்டுகள் நல்லடக்கத்துக்காக வேண்டப்பட்டன.
Henriet and Poitouபின்னர் கொல்லப்பட்டனர். அவர்களது உடல் தீயில் சாம்பலானது.

தொடரும்..........
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}