வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-03


போன பதிப்பில் அடிமைகளுக்கு அளிக்கப்பட்ட வேலைகளின் பாகுபாட்டையும் அதற்க்கு கொடுக்கப்பட்ட நடைமுறைகளையும் பார்த்தோம். முன்னைய பதிப்பை வாசிக்க இங்கே கிளிக்கவும்.
                            
                                                                                  இவ்வாறு ஒரு நாளில் அண்ணளவாக நாலு மணிநேர ஓய்வைத்தவிர மிகுதிநேரமேல்லாம் கறுப்பர்கள் கடுமையாக இரத்தம் சிந்தி உழைக்க வேண்டியிருந்தது மிகைப்படுத்தவெல்லாம் இல்லை இரத்தமென்றால் நிஜமாகவே இரத்தம்தான்.

கொடுமைகளும் கோரங்களும்........

அன்றைய அமெரிக்காவில் அடிமைகளை வைத்து சூதாடுவது, அடிமைகளை அடமானம் வைத்து பணம் பெறுவது, தாம் செய்த தவறுகளுக்கு கிடைக்கும் தண்டனைகளை அடிமைகளுக்கு கிடைக்கசெய்வது, திருமணப்பரிசாக தம்மக்களுக்கு அடிமைகளை வழங்குவது, வரிபாக்கிக்கு பதிலாக கூட அடிமைகளை வழங்கியது என பல வகையில் அடிமைகள் ஓர் அசையும் சொத்தாகவே கருதப்பட்டார்கள். அதுமட்டுமல்ல யார் கூட அடிமைகளை வைத்திருக்கிறார்களோ அவர்களே பண்ணையார்களில் பெரியவராக கருதப்பட்டார்கள் என்பதுடன் இதனால் விளைந்த கலகங்களும் ஏராளம். 
                                       

                                                                          “............என் எஜமானன் ஒரு விலங்கு அவனது மூர்க்கத்தை விபரிப்பது கடினம்தான், விடிந்ததிலிருந்து பதினேழுவயதுப் பெண்ணை நாலைந்துமுறை உறவுகொண்டிருக்கிறோமே ஒருமணிநேரம் ஓய்வெடுக்க சொல்வோம் என நினைத்தும் பார்க்க மாட்டான் காரியம் ஆனதும் உடனே என்னை வேலைக்கு விரட்டுவான். அவனைத்திருப்தி செய்த கையோடு அவனது குதிரைகளை கவனித்தாக வேண்டும் ஆனால் எஜமானன் எனக்கு கொடுக்கும் உப்புப்போட்ட ஒருபிடி அரிசிப்பொரி எனக்கு போதாது என அறிந்த குதிரைகளோ எனக்காகவே அவற்றுக்கு வைக்கும் கொள்ளில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கும். நான் குதிரைகளை குளிப்பாட்டியதும் பிடிபிடியாக அக்கொள்ளை எடுத்துச் சாப்பிடுவேன்..........” 
                      
                                                      இக்கூற்று எலிசபெத் ஸ்பிரிங் என்னும் வீர்ஜினிய அடிமையால் அவரது அப்பாவுக்கு பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட கடிதத்தில் இடம்பெறுகிறது. ஆனால் அங்கே பிற கொடுமைகளுடன் ஒப்பிடும் பொழுது இதுகூட சாதாரண கொடுமைதான்.
       
                                    வேலைகளில் சோர்வை காட்டும் அடிமைகளுக்கு அந்நாளைய முதலாளிகள் வழங்கிய தண்டனைகளின் கோடுமையுடன் ஒப்பிடும் போது கசையடிகள் எல்லாம் இரண்டாம்பட்ச சாதாரண தண்டனைதான்.
                                              
                   
                                     வேலை நேரத்தில் ஒரு அடிமை அசந்து தூங்கிவிட்டதுடன் குறட்டை வேறு விட்டு விட்டான் என்பதற்காக அவனது மூக்கை அறுத்து தண்டனை கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்ட வர்ஜீனிய பண்ணையார் ஒருவர் இருந்திருக்கிறார் அப்போது. இது மட்டுமல்ல பல அடிமைகள் காது, விரல், நாக்கு என எத்தனையோ உடல் பாகங்களை முதலாளிகளால் அறுக்கப்பட்டதன் மூலம் இழந்திருக்கிறார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்கள் சிலர் இறந்தது கூட தெரியாமல் அவர்கள் பிணத்துடன் புணர்ந்த பெரியார்களும் இருந்திருக்கிறார்கள். மேலும் இவ்வாறு பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்கள் பலர் புத்தி பேதலித்து போய்விடுவார்கள் ஆனால் புத்தி பேதலித்த பெண்களுடன் வெறித்தனமாக புணர்வதையே அப்போதைய பண்ணையார்கள் பலர் விரும்பியிருக்கிறார்கள்.
             
                                                                “.........கருப்பினப்பெண்கள் நிறையப்பிள்ளைகள் பெற்று கொள்வதன் மூலம் சம்பாதிக்கலாம் என நினைப்பார்கள். அவர்களின் சமூகத்தில் நிறையப் பிள்ளைகள் பிறக்க வேண்டும் என வெள்ளைக்காரர்கள் விளையாட்டாக வேண்டிக்கொள்வார்கள். அடிமைகளாக வரும் பெண்கள் நாளடைவில் சித்தம் கலங்கி அரைப்பைத்தியமாகி விடுவார்கள். வெள்ளைக்கார முதலாளிகளுக்கோ சித்தம் கலங்கிய அடிமைப்பெண்களை புணர்வதில் ஒரு இனம் புரியாத கிளுகிளுப்பு............”
                                இது அடிமை வியாபாரி ஒருவர் எழுதி வைத்திருந்த குறிப்பொன்றில் தெரிவிக்கும் தகவலாகும்.
                 
                                              இது என்ன பிரமாதம் பிரசவவலி எடுத்த ஒரு பெண் அடிமை வலியில் துடித்துக்கொண்டிருந்த சமயம் அவளை படுக்கைக்கு இழுத்து பலாத்காரப்படுத்தி புனர்ந்ததின் மூலம் அவ்வடிமையையும் குழந்தையையும் ஒரே சமயத்தில் கொன்று ஆற்றில் வீசியெறிந்த பண்ணையார் ஒருவர் கூட அங்கு பெருமையுடன் தான் தொடர்ந்து வசித்து வந்திருக்கிறார். இதெல்லாவற்றையும் விட தமக்கு வேறேதாவது கோபம் எண்டால் அடிமைகளை வரிசையில் நிக்க வைத்து குருவியை சுடுவது போல் சுட்டு புதைத்த தனவான்கள் வசித்த அமேரிக்கா அது. இரவில் குழந்தையை பார்க்க நியமிக்கப்பட்டிருந்த 14 வயது அடிமைப்பெண் ஒருத்தி வேலைமிகுதியால் அசந்து தூங்கி விட்டால் என்பதற்காக சவளால் அவள் மண்டையை பிளந்து மூளையை பார்த்த தாய்குலம் கூட அப்போதைய அமெரிக்காவில் இருந்திருக்கின்றனர்.
                         
                                       இது போதாது என்று ஒவ்வொரு பண்ணைகளிலும் அடிமைகளை நிர்வகிக்க பண்ணையாரின் நேரடித் தொடர்பில் அடிமை மேய்ப்பாளர்கள் இருப்பார்கள். இவர்கள் அடிமைகளுடன் கதைப்பதே கடுமையுடன் தான். பண்ணையார்கள் செய்த கொடுமைகள் ஒரு புறம் என்றால் அடிமை மேய்ப்பாளர்கள் தங்கள் பங்கிற்கு பெரும் கொடுமைகளை இழைத்தனர் அடிமைகளுக்கு. அடிமைகளை பயமுறுத்தி வைத்திருந்ததன் மூலம் தங்களின் பிறப்பே வெள்ளையர்களுக்கு அடிமையாக இருப்பதுடன் சேவை செய்வதும் தான் எனும் உணர்வை ஏற்படுத்தி வைத்திருந்தனர் அடிமைகளுக்கு. வேலைசெய்ய மறுக்கும் அடிமைகளை தனியே நடாத்தப்பட்ட அடிமை முகாம்களுக்கு அனுப்பி விடுவார்கள் பண்ணையார்கள். அங்கு போடும் போடில் தாங்கள் மனிதர்கள் இல்லை வெறும் மனித இயந்திரம் தான் எனும் நிலைக்கு அடிமைகள் மாறிவிடுவதுடன் மனக்கலக்கமும் பெற்று விடுவார்கள் என்பது தான் கொடுமை. இவ்வாறு மிருகத்தனமாக நடைபெற்ற அடிமைகளின் கொடுமைகளை எதிர்த்து முதல் முதல் கிளம்பியது ஒரு குரல்............
                             
                                                                         ....................தொடரும்................. 
இதன் அடுத்த பதிவிற்கு இங்கே 

                         
                           
  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}