நோஸ்ரடாமஸ்ஸின் தீர்க்கதரிசனங்கள்-03

நோஸ்ரடாமஸ் என்பவர் யார்?திடீர் என்று அவர் எப்படி எதிர்வுகூறல்களைக்கூற ஆரம்பித்தார் என்பதை அவரது வாழ்க்கைவரலாறில் பார்த்தோம்.அதைப்படிப்பதற்கு இங்கே கிளிக்

முதல் இரு பதிவுகளில் நோஸ்ரடாமஸ் நெப்போலியன், ஹிட்லர், டயானா போன்றபிரபலங்களைப்பற்றி   முன்பே என்ன கூறினார் என்று பார்த்தோம்...

நோஸ்ரடாமஸ்ஸின் தீர்க்கதரிசனங்கள் -02

மேலும் அவர்கூறிய எதிர்வுகூறல்களைப்பார்ப்போம்...


கென்னடி சகோதரர்களின் கொலை...

ஜோன் கென்னடி அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதி.Dealey Plaza ற்கு செல்லும் வழியில் சுடப்பட்டு இறந்தார் கென்னடி.இரண்டுதடவைகள் சுடப்பட்டார் .
முதலாவது குண்டு கென்னடியின் குரல்வளையினூடு சென்றபொழுது அவர் தன் இடது கரத்தை தன் குரல்வளையை நோக்கி கொண்டு செல்லப்பட்டபோது எடுக்கப்பட்டது.
இரண்டாவதுதடவை சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

என்று குறிப்பிடப்ப்டுமிடத்தில் இருந்துதான் கென்னடி சுடப்பட்டார்.செஞ்சுரியில் நோஸ்ரடாம் கூறியது

The great man will be struck down in the day by a thunderbolt.  
An evil deed, foretold by the beare of a petition.  
According to the prediction another falls at night time.  
Conflict at Reims, London, and pestilence in Tuscany.(1.26)

புகழ்பெற்ற மனிதன் ஒருவன் பகல்பொழுதில் ஓர் இடிமின்னல் தாக்கிவிழுவான்.(இங்கே இடிமின்னல் என குறிப்பிடப்படுவது துப்பாக்கிக்குண்டு) தீயவனால் இது அரங்கேறும்.இன்னொரு மரணம் இரவில் நடைபெறும்.

இன்னோர் மரணம் எனக்குறிப்பிடப்படுவது ஜோன் கென்னடியின் சகோதரனான  ரொபேர்ட் கென்னடியின் மரணத்தை இவர் 1968 ஜூன் 5 இல் நடு இரவுல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் சுடப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள்.Before the conflict the great wall will fall,  
The great one to death, death too sudden and lamented,  
Born imperfect: the greater part will swim:  
Near the river the land stained with blood. (2.57)

பிரச்சனைக்குரிய பெரியசுவர் வீழ்வதற்கு முன்பே அந்த பெரிய மனிதன் வீழ்ந்துவிடுவான்.அவனுடைய மரணம் சடுதியாக நிகழும்.குறைகளுடனேயே பிறப்பான்.ஆற்றின் கரை அருகே இரத்தக்கறை படியும்.
பிரச்சனைக்குரிய பெரியசுவர்  வரலாற்றின் முக்கிய சுவர் அதுதான் அது பேர்லின் சுவர் இது கட்டப்பட்டது 1961 இல் உடைக்கப்பட்டது 1989 இல்.
இது உடைக்கப்படுவதற்கு முன்பாக இவர் கொல்லப்பட்டார்.


Those at ease will suddenly be cast down,  
the world put into trouble by three brothers;  
their enemies will seize the marine city,  
hunger, fire, blood, plague, all evils doubled. 

நிம்மதிகள் மறைந்துபோகும். மூன்று சகோதரர்களால் உலகம் துன்பப்படும்.

 துறைமுக நகரம் எதிரிகளால் சூழப்படும். பசி பஞ்சம் எல்லாமே உலகில் 

பெருகிவிடும்.கென்னடியுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர்.4 வருமே இறந்துவிட்டார்கள் அண்மையுல் இறந்தவர் டெட் கென்னடி இவர் பிரேயின் டியூமரினால் இறந்தார்.மற்ற சகோதரரான  ஜோசப் கென்னடி உலகயுத்தத்தில் பங்குபற்றியபோது இறந்துவிட்டார்.ஆக இயற்கையாக மரணமடைந்தவர் ஒரே ஒருவர் மட்டுமே.

A great King taken by the hands of a young man,  
Not far from Easter confusion knife thrust:  
Everlasting captive times what lightning on the top,  
When three brothers will wound each other and murder. 


ஒரு சிறந்த அரசன் இளைஞனின் கைகளில் சிக்குகிறான்.ஈஸ்ரர் பண்டிகை வெகு நாட்தொலைவில் இல்லை.உயர்ந்த இடத்தில் தோன்றிய மின்னல் மூவரையும் பழிவாங்குகின்றது.


அடுத்து நொஸ்ரடாமஸ் கூறியது லூயிஸ்பாஸ்டரைப்பற்றி....


The lost thing is discovered, hidden for many centuries.  

Pasteur will be celebrated almost as a god-like figure.  
This is when the moon completes her great cycle,  

he will be dishonored by other winds


பல நூற்றாண்டுகாலம் மறைந்திருந்த விடயம் கண்டுபிடிக்கப்படும்.பாஸ்ரர் கடவுளைப்போல் போற்றப்படுவார்.சந்திரன் தனது பெரிய சுழற்சியை முடித்துக்கொள்ளும்போது இது நடைபெறும்.ஆனால் வதந்திகள்மூலம்  அவர் அவமானப்படவேண்டிவரும்.

நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாளர். நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டு அவற்றை அறிமுகப்படுத்தியவர்.
மற்றபாடல்களைப்போல் அல்லாமல் நொஸ்ரடாமஸ் நேராகவே சம்மந்தப்பட்டவரை குறிப்பிட்டது இந்தப்பாடலில் மட்டும்தான்.ஃபிரஞ்சில் Pastor  என்று குறிப்பிட்டிருந்தார்.ஆங்கிலத்தில் பெயர்Pasteur அண்ணளவாக சரியாகிவிட்டது. July 6, 1885 ஒன்பது வயதான Joseph Meister என்ற விசர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல்முதலில் இவரது விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசியை வழங்கும்போது இவர் பலத்த எதிர்ப்புக்குள்ளானார்.


தொடரும்.....


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}