விடுதலை வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-05


போனபதிப்பில் சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த புதிய கட்சியை பற்றியும் அதற்கான காரணத்தையும் பார்த்தோம் அப்பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.
                                போன பதிப்பில் பார்த்தவாறு காங்கிரசும் ,காங்கிரஸ் ஜனநாயக கட்சியும் பூரண சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடிவரும் சமயத்தில்தான் வைசிராய் லார்டு இரவின் வட்டமேசை மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
        அதுமட்டுமல்லாமல் லண்டனில் நடந்த இம்மாநாட்டில் பிரிட்டிஷ் ஆதரவு இந்தியர்களும் கலந்து கொண்டனர். அதேசமயம் நேதாஜியை ஜனநாயகம் அற்றமுறையில் காங்கிரஸ் செயற்குழுவில் சேர்க்காதது மிகப்பெரிய துரோகம் என பலரும் கருதியதால் சுபாஷுக்கும் காங்கிரசுக்கும் மனப்பொருத்தம் சரியில்லை என காந்திஜி பதிலளிக்கவேண்டியதும் ஆயிற்று. 1930 ஆம் ஆண்டு தை மாதம் 30 ஆம் திகதி பூரண சுதந்திர தினம் கொண்டாடத்திட்டமிட்டத்தை தொடர்ந்து ஏதோ பழைய காரணங்களை காட்டி நேதாஜி மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால்  சிறையிலிருந்தவாறே மூவர்ணக்கொடிஏற்றி சுதந்திர தினத்தை கைதிகளுடன் கொண்டாடி பதிலடி கொடுத்தார் நேதாஜி. 
                 
                          இதில் வியப்பு என்னவென்றால் இச்சமயத்தில் நடைபெற்ற கல்கத்தா மாநகராட்சி தேர்தலில் சிறையிலிருந்த நேதாஜியின் பெயரில் கல்கத்தா மக்களே வேட்புமனு தாக்கல் செய்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை மேஜரும் ஆக்கிவிட்டார்கள் மக்கள். சிறையில் இருந்தபடியே மக்களால் தெரியப்பட்டு ஜெயித்த நேதாஜியின் மக்கள் செல்வாக்கிற்கு இது ஒரு தக்க உதாரணமாகும். சிறிது காலங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுதலையான நேதாஜி மேஜராக தன் பங்கை சிறப்புரவே ஆற்றினார். ஆனால் மீண்டும் சிலகாரனங்களை காட்டி அவரை சிறையிலிட்டது அரசாங்கம். இதற்கு சிலகாலங்கள் கழித்து நடைபெற்ற காந்தி-இரவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில அரசியல் கைதிகள் விடுதலையான போது நேதாஜியும் விடுதலையானார். ஆனால் இவ்வொப்பந்தத்தில் புரட்சி விடுதலை வீரர்களின் விடுதலை குறித்து காந்திஜி முக்கியத்துவப்படுத்தாதது நாடுபூராகவும் காந்திஜிமீதான பெரும் எதிர்ப்பலைகளை கிளப்பிவிட்டது.
                 
                              


 பகத்சிங் போன்ற மக்கள் அன்பை சம்பாதித்த தலைவர்களுக்காக காந்திஜி ஜோசிக்காதது குறித்து நேதாஜியும் கடுமையாக கண்டித்து பேசலானார். உண்மையும் அதுதான் காந்திஜி நினைத்திருந்தால் பகத்சிங் போன்றோரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அப்புரட்சி வீரர்களை தூக்கிலிட்ட ஆங்கில அரசு யாருக்கும் தெரியாமல் தகனமும் செய்துவிட்டது. ஆங்கிலேயரிடம் அகிம்சையை பேணிய காந்திஜி சொந்த நாட்டுக்காக  போராடிய வீரர்களை அகிம்சையுடன் பார்க்கவில்லை என்பது வேதனையுடன் கூடிய வியப்பிற்குரியது. பகத்சிங்கின் மரணம் நடந்து ஓரிரு நாட்களிலேயே கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வருகைதந்த காந்திஜியை மக்கள் கருப்பு கொடிகாட்டி வரவேற்றதுடன் பகத்சிங் போன்றோரை காப்பாற்றாதோருக்கு “இர்வின் ஒப்பந்தம்” ஒரு கேடா என கதைக்கலாயினர். “தனிப்பட்ட நபரான காந்திஜியிடம் காங்கிரஸ் சிக்கி கொண்டு அவதியுறுவதை ஒரு போதும் அனுமதிக்க ஏலாது காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை கிழித்தெறியவேண்டும். ஒரு பயனுமற்ற இவ்வொப்பந்ததிற்காக ஒத்துழையாமை போராட்டத்தை நிறுத்தியது தவறு” என காந்திஜியை  சாடியே பேசியிருந்தார் நேதாஜி. இக்கூட்டத்தில் கூட நேதாஜி கொண்டுவந்த தீர்மானங்களை ஏற்ப்பதை விடுத்து காந்திஜியின் தீர்மானங்களை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தையும் ஆதரித்தது. 


                                                 


இவ்வொப்பந்தத்தின் அடுத்தபடியாகவே லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்திஜி கலந்து கொண்ட போதும் நேதாஜி குறிப்பிட்டதை போல இம்மாநாட்டில் ஒருபயனும் கிட்டவில்லை. இதனால் சட்டமறுப்பு போராட்டங்கள் மீண்டும் ஆரம்பித்துவிடக்கூடாது என்றஞ்சிய  ஆங்கில அரசும் சுதந்திர போராளிகளை கைது செய்து சிறையில் அடைக்கலாயிற்று. இதன் போது பம்பாய் சிறையில் அடைக்கப்பட்ட நேதாஜி காசநோயாலும் ஈரல் பாதிக்கப்பட்டதாலும் உடல்நிலை பாதிப்படைந்தார். இந்திய சிகிச்சைமுறைகளில் எதுவித முன்னேற்றமும் இல்லாததால் அவரை ஐரோப்பாவிற்கு சிகிச்சைகளுக்காக செல்ல அனுமதித்தது ஆங்கில அரசு. அதன்படி வியன்னா பயணமான நேதாஜியும், வித்தல்பாய் பட்டேலும்   அங்கிருந்தபடியே அற்பகாரணங்களுக்காக போராட்டங்களை நிறுத்திவைக்கும் காந்திஜியை கண்டித்து கண்டனஅறிக்கை வெளியிட்டனர். மேலும் இச்சமயத்திலேயே சுவிட்சர்லாந்து, இத்தாலி,யூகோஸ்லேவியா போன்ற நாடுகளுக்கும் சுற்று பயணத்தை மேற்கொண்டார் நேதாஜி. மீண்டும் தன் தந்தையின் மரணத்திற்காக இந்தியா வந்த நேதாஜி மீண்டும் உடல்நலச் சிகிச்சைகளுக்காக வியன்னா பயணமானார். அங்கிருந்தபடியே வெளிநாட்டு இந்தியர்கள் நாடாத்திய பெரும்பாலான மாநாடுகளில் கலந்து கொண்ட நேதாஜி இந்திய விடுதலையின் அவசியத்தை வலியுறுத்தி பேசலானார். இச்சமயத்தில் பெரும்பாலான இந்தியர்களின் மனதில் நின்ற நேதாஜியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்க விருப்பம் கொண்டிருந்தனர் மக்களும் காங்கிரசாரும்................
                                 
                                                                                ........................தொடரும்......................

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}