கலவர வதந்தியும் கலவரமும்...

தென் மாநிலங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தவர் மீது ஆகஸ்ட் 20 ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாம் பாணியில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று பரவி வரும் வதந்தியினால் பல்லாயிரம் வட கிழக்கு மாநில மக்கள் பீதியின் உச்சத்தில் உள்ளார்கள். இந்த வதந்தியைக் கட்டுப்படுத்தும் முகமாக இன்று (ஆகஸ்ட் 17) மதியம் முதல் மொத்தமாக S.M.S/ M.M.S களை அனுப்புவதற்கு 15 நாட் தடை விதித்துள்ளது இந்திய மத்திய அரசு.

அழகிய அசாம்


நேற்று கர்நாடக மாநிலத்தில் இந்த வதந்தி பரவியதன் காரணமாக நேற்று காலை முதலே பல வட கிழக்கு மாநில மக்கள் கர்நாடகாவை விட்டு வெளியேற ரயில் நிலையங்களில் கூடியதால் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. வெளி மாநில மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அளித்த உத்தரவை நம்பத் தயாராக இல்லாத மக்கள், மாநிலத்தை விட்டு வெளியேறுவதிலேயே அதிக முனைப்புக் காட்டியதால் ரயில்கள் நிரம்பி வழிந்தன. வேறு வழியில்லாத நிலையில் மேலதிகமாக சிறப்பு ரயில்களை ஒழுங்கு செய்து இயக்கிக்கொண்டிருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

கலவர பூமியாக...இந் நிலையில் இந்த வதந்தி இன்று ஆந்திராவிலும், மும்பையிலும் தீவிரமாகப் பரவத் தொடங்கியிருக்கின்றது. S.M.S, M.M.S, மற்றும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களின் உதவியுடன்  காட்டுத் தீயாகப் பரவி வருகின்றது இந்த வதந்தி...[அதுவும் கருணாநிதி பேஸ்புக், டிவிட்டரில் அக்கௌன்ட் திறந்த நேரமாகப் பார்த்து....ஒரு வேளை இது ஜெ வின் வேலையாக இருக்குமோ..? கவலையை விடுங்க தலீவா...பதிலுக்கு ஜெ மேல ஒன்னென்ன ஒம்பது கேஸ் போட்ருவோம்...பிந்திக் கிடைத்த தகவலின் படி, கடுமையான எதிர்க்கருத்துகள் கிளம்பியதால் கருணாநிதியின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.]
இந்த வதந்தி இன்று ஹைதராபாத் இலும் பரவியதன் காரணமாக அங்கும் மக்கள் அந்தரித்து வெளியேறுவதற்காக ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.  இதனையடுத்துத் தான் இன்று முதல் பதினைந்து நாட்களுக்கு மொத்தமாக S.M.S/ M.M.S அனுப்பத் தடை விதித்திருக்கின்றது மத்திய அரசு. மேலும் இந்த வதந்தியை டிவிட்டர்,பேஸ்புக் மூலம் பரப்புபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காமெடி பண்ணியிருக்கிறார் பிரதர்...சாரி பிரதமர்...
உண்மையில் இந்த நிலைமைகளுக்கு மூல காரணம் காங்கிரஸ்,பா.ஜ.க அரசுகள் தான்... தம் சுயநல அரசியலுக்காக அசாம் பிரச்சனைகளை தீர்க்காமல் இழுத்தடித்து வந்தன இந்த அரசுகள்... இதனால் பலமுறை பல கலவரங்கள் நிகழ்ந்து பல உயிர்கள் வருடந்தோறும் பலியாகி வந்துள்ளன...

அசாம் கலவரங்களுக்கான காரணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்...

போடோ பழங்குடியினருக்கும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஊடுருவி குடியேறிய இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனை தான் இந்தக் கலவரங்களின் மையம். இவர்களுக்கிடையிலான பிரச்சனை பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகுவதற்கு முன்பிருந்தே இருந்து கொண்டிருக்கின்றது. 1952 ம் ஆண்டு இதன் காரணமாக ஒரு பெரிய கலவரமும் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வந்த காலத்தில் பங்களாதேஷ் தனி நாடாகிய பின்னர், பங்களாதேஷ் இலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஊடுருவுபவர்கள் அசாம் மாநிலத்தில் உள்ள எல்லைப் புற மாவட்ட மக்களுடன் தங்களை கலந்து கொண்டு, எண்ணிக்கையில் அவர்களை விட அதிகமானவர்களாக மாறிவருவது,  உள்ளுர்வாசிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மிகப் பெரிய போராட்டங்களை எண்பதுகளின் ஆரம்பத்தில் அசாம் மாணவர் அமைப்பு நடத்தியது. சுமார் ஆறு ஆண்டுகள் இடைவிடாத போராட்டத்தின் காரணமாக 1984ல் அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்த உடன்பாட்டின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை இதுவரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசோ அல்லது பா.ஜ.க அரசோ நடைமுறைப் படுத்தவில்லை. காரணம், பங்களாதேசிலிருந்து அகதிகளாக ஊடுருவியோர் மிகப் பெரிய அளவில் வாக்கு வங்கியை தம்வசம் வைத்திருந்தனர்.


ஊடுருவியோர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் 1993,1994 ம் ஆண்டுகளிலும் இங்கு பெரும் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. இதனையடுத்து கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே, போடோ பழங்குடியினருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தும், கொடுத்த உறுதிமொழிப்படி சுயாட்சி அந்தஸ்து வழங்கவில்லை. பின்னர் 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ந் தேதி கோக்ரஜார் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு போடோ பழங்குடியினருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. அசாம் மாநிலத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தனியாக ஆளும் அதிகாரம் கொண்ட Bodoland Territorial Council என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த அமைப்புக்கு எந்தவொரு அதிகாரத்தையும் வழங்காததால் பிரச்சனை முடிவின்றித் தொடர்ந்து கொண்டே வந்தது.
இதன் தொடர்ச்சியாகத் தான் அசாம் மாநிலத்தில் கடந்த ஜூலை 20 ம் திகதி கலவரம் ஏற்பட்டது. ஜீன் மாதம் 30ந் தேதி ஒருமுஸ்லீம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், இந்த கொலைக்கு காரணமானவர்கள் போடோ இனத்தவர்கள் என தவறான/உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் போடோ இனத்தவரின் மீது குற்றச்சாட்டு சுமத்தி, இறந்து தச்சுத் தொழிலாளியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்ற போது நடத்த வன்முறையே, பின்னர் பெரும் கலவரமாக மாறியது. கடந்த 12 ம் தேதி அசாம் கலவரத்தைக் கண்டித்து முப்பையில் நடைபெற்ற ஆர்ப்பாடப் பேரணியும் இறுதியில் கலவரத்தில் முடிந்திருந்தது. நேற்றைய தினம் கூட அசாமின் சில பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் நிகழ்ந்திருந்தன. இந்தக் கலவரங்களின் காரணமாக இதுவரை மொத்தமாக 80 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிய முடிகின்றது. மேலும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.


இந்தப் பின்னணியில் தான் தற்போதைய கலவர வதந்தி பரவி வருகின்றது. இந்தக் கலவரங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் அசாம் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். காங்கிரஸ் அரசு நிச்சயம் அதைச் செய்யாது....அதற்காக ஏதோ பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தீர்வு கண்டுவிடுமென்பதல்ல...அவர்களும் தீர்வு காண மாட்டார்கள்...
சுதந்திர இந்தியாவுக்கு 65 வயதாகிவிட்டது....

அசாம் மக்களின் பிரச்சனைக்கான காரணங்கள் http://www.tamilhindu.com இலிருந்து பெற(சுட)ப்பட்டது!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}