பேஸ்புக் காதல் தெரியாதவிடயங்கள்

பேஸ்புக் வந்ததுதான் வந்தது டேட்டிங்க் என்ற சொல்லின் பிரயோகத்தை தலைகீழாக மாற்றிவிட்டது.அவ்வளவு இலகுவாக இதன் மூலம் கடலைபோட முடியும்.பேஸ்புக் காதல் பேஸ்புக் திருமணம் வரை சென்றிருக்கின்றன.ஒருவரது எக்கவுண்டை வைத்தே ஒருவரை எடைபோட்டுவிடமுடியும் என்பது அனைவரும் அறிந்ததே.அதனாலோ என்னவோ சட்டிங்கில் வார்த்தைகளுடன் இதயங்களும் பரிமாறப்பட்டுவிடுகின்றன."ஆத்திசூடி" பாடலை பாடிய தினேஸ்கூட பேஸ்புக் காதலினால் திருமணம் செய்திருக்கின்றார்.அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 2,077,000 மக்கள் பேஸ்புக்கால் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றார்கள்.நல்லா இருந்தா சரிதான்.புறாவில் ஆரம்பித்து பேஸ்புக் வரை காதல் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றது.ஓனர் ஆஃப் த தியேட்டர் (பேஸ்புக்கைத்தான் சொல்லுறன்) சக்கர் பேர்க்கிற்குகூட பேஸ்புக் பிரபலமானதால் பழைய காதலி கிடைத்தார்.
அப்படியானால் பேஸ்புக் காதல் சேவையை இலவசமாக செய்கின்றது நல்ல விடயம்தானே என்றால் சற்றுப்பொறுங்கள்.பேஸ்புக்கால் நடக்கும் கூத்துக்கள்தான் இப்பொழுது விளையாட்டுசெய்திகள் என்று செய்திகளுக்குள் ஒரு பிரிவு செய்தி இருப்பதுபோல் பேஸ்புக்செய்திகள் என்று ஓளிபரப்பும் அளவிற்கு தற்கொலைகள் ஏமாற்று வேலைகள் என சகலதும் தாராளமாகவே இலவசமாக கூடவே ஒட்டிக்கொண்டுவருகின்றன.அறிந்ததும் சற்று தலை சுத்திய செய்தி இது.

நடந்தது என்ன? பேஸ்புக்கால் இப்படியும் நடக்குமா?பேஸ்புக்கில் நீங்கள் காதலிக்கும் பெண் உண்மையாகவே பெண்ணாக இருந்து அவர் செய்வது உண்மையான காதலாக இருந்து நேரே நீங்கள் பார்க்கும்போது பேஸ்புக்கில் அந்தப்பெண்"நான் கரீனா காபூரின் தங்கை மாதிரி"என்று கூறியது உண்மையாக இருந்து என்று பல இருந்துகளைக்கடந்துதான் உங்கள் காதல் ஈடேறும் என்பதுதாங்க டுவிஸ்டே.குப்பனோ சுப்பனோ ஒரு எக்கவுண் இருக்கணும் 2 பேக் எக்கவுண்ட் இருக்கணும் அதில ஒன்று பெண்ணுடைய பேக் எக்கவுண்டா இருக்கணும் இப்படியிருந்தாத்தான் நீ கூர்ப்பின் இறுதிக்கட்ட பரிமாணத்தில் இருக்கும் குரங்கு என மற்றக்குரங்குகள் மதிக்கின்றதாம்.இல்லை அவைகள் தம்முடன் ஒரு ஜந்துவாக கூட சேர்ப்பதில்லை.அந்த அளவுக்கு பேக்குகள் தலைவிரித்தாடுகின்றன.ஏதோ இது பழையகேசு மச்சி.பேஸ்புக் என்றால் என்ன? என்று கேட்டால் ஒரு ரியாக்ஸன் கொடுப்பாங்க பாருங்க அது மாதிரித்தான் ஃபேக் இல்லாவிட்டாலும் கொடுக்கின்றார்கள்.

சரி வாருங்கள் ஃபேஸ்புக் காதலை ஆராய்வோம்.

Dating Online Relationships Chart
இதையும் பார்த்துவிடுவோம்...


Infographic: What Does Facebook Know About Your Love Life?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}