பெண்களைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்(சுவாரசியமான விடயங்கள்)

ஆண்கள் பெண்களைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியவிடயங்கள்.நல்லவேளை பெண்களைப்பற்றிப்புரிந்து கொண்டவிடயங்கள் என்று தலைப்பிடவில்லை இதெல்லாம் நடக்கிறகாரியமாய்யா? எல்லாரும் தலையைக்குழப்பிக்கொள்ளும் விடயம் அது.தன் வசம் ஒன்லைனில் 16 அதிகாரபூர்வமான  காதலிகளை வைத்துக்கொண்டு நண்பிக்கு(அந்த 16 இல் இது இல்லை இது இலவச இணைப்பு) 24 000 மெசேஜ் அனுப்புபவன் கூட இந்தப்பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியலயே புருஸோத்தமா....என்று கூவுமளவிற்கு போய்விட்டது நிலைமை.அதை விடுங்கள் குறைந்தபட்சம் அவர்களைப்பற்றிய விடயங்களையாவது அறிந்துகொள்வோம்.

ஒரு பெண் முதலில் பார்ப்பது ஆணின் அழை இல்லையாம் அவனது பேர்சனாலிட்டியையாம்.(இது சராசரிப்பெண்களுக்குத்தான் ஹீரோயினை எல்லாம் விட்டுடுங்க)அப்படி அசத்தும் அழகுடையவராக இருந்தால் அது உங்களுக்கு ஒரு பிளஸ்.

ஆண்கள் தமது பெயரை அழைப்பது பெண்களுக்கு பிடிக்கும்.


ஆண்களைப்போல் இன்னொருவருடன் தொடர்புகளை ஏற்படுத்துக்கொள்வதற்கு பெண்கள் தயங்குவார்கள்.குறிப்பாக எதிர்ப்பாலருடன்.

பெரும்பாலான பெண்கள் தாம் அழும்போது தம்மை ஆறுதல்படுத்தும் ஆண்களையே விரும்புகின்றார்கள்.

தங்களிடம் வழிந்துபேசும்(ஓரளவு)  ஆண்களை  பெண்களுக்கு பிடிக்கும்.அதைப்பிடிக்காதது போல் காட்டிக்கொண்டாலும்.பின்னர் அதை தமக்குள் நகைச்சுவையாக பேசிக்கொள்வார்கள்.

பெரும்பாலான பெண்களுக்கு நீங்கள் ரொம்ப அழகு என்று சொன்னால் பிடிக்கும்.அதற்காக யு ஆர் வெரி ஹாட்,செக்ஸி என்றால் அவ்வளவுதான்.

உங்களுக்கு நெருக்கமான பெண் உங்களுக்கு பிடிக்காத அல்லது அவருக்கு சம்பந்தமே இல்லாத ஆடையை அணிந்துவந்தால் உடனே மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இது நன்றாக இல்லை என்று கூறக்கூடாது.இதை விட அன்று நீ நன்றாக இருந்தாய் என்றுதான் கூறவேண்டும்.

பெண்கள் பெரும்பாலும் இருவராக அல்லது நண்பிகளுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கு காரணம் ஒன்று பாதுகாப்பு அடுத்தது சில கிசு கிசுக்களை தங்களிடையே பகிர்ந்துகொள்வதற்கு இதை சம்பந்தப்பட்டவரிடமிருந்தே அறிந்து கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை.தாம் ஒரு வேளை முட்டாளாக்கப்பட்டு விடுவோமோ என்றபயமும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாளின் 15% ஆன  நேரம் பெண்கள் தன்னைகவர்ந்த தனித்துவமான ஆணைப்பற்றி சிந்திப்பார்கள்.
20% பொதுவான ஆண்களைப்பற்றி சிந்திப்பார்கள்
25% ஆன நேரம் ஆண்களை எப்படிக்கவருவது?, நாம் ஏதாவது செய்யும்போது ஆண்கள் என்ன கூறுவார்கள் என்பதைப்பற்றி சிந்திப்பார்கள்.
30% ஆன நேரம் ஆண்களைப்பற்றி தமக்கிடையே பேசுவார்கள்.
10% ஆன நேரம்தான் வேறு வேலைகளை செய்வார்கள்.

பெரும்பாலான பெண்கள் உங்கள் நண்பர்கள்பட்டாளத்திற்கு முன்னால் சிறிது நேரம் தன்னுடன் அரவணைப்புடன் பேசுவதையோ அல்லது அழைத்துச்செல்வதையோ விரும்புகின்றார்கள்(மற்றவனை வயித்தெரிச்சல் பட வைக்கிறதில அப்படியொரு சந்தோசம்)

தம்மை தேவதை என்றொ பிறின்ஸஸ் என்றோ அழைப்பது பெண்களுக்கு பிடிக்குமாம் ஆனால் சில பெண்கள் இவ்வாறு அழைத்தால் தான் ஒரு அப்பாவி என்னை நானே கவனிக்க தகுதியற்றவள் என்ற அர்த்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது.ஏனெனில் இவ்வாறு அழைத்தல் மிகைப்படுத்தலாகும்.

அவர்களது செல்லப்பெயர்களை கொண்டு பெண்களை அழைப்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெரும்பாலான பெண்கள் தாங்கள் விரும்பும் ஆண்களைப்பிடித்திருக்கின்றது என்பதை குறிப்புக்களாலேதான் காட்டுவார்கள்.உதாரணத்திற்கு உங்களது நிக்னேமை அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஆனால் நேரே முகத்தில் அடிப்பதுபோல் ஐ லைக் யு என்று கூறமாட்டார்கள்.

அடுத்தவிடயத்தைத்தான் நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டும்.
உங்கள் காதலிக்கு(ஆண்ரியா) ஒரு நண்பி இருக்கிறாள் அவள் உங்களிடம் வந்து உங்களுக்கு ஆண்ரியாவைப்பிடிக்குமா? என்று கேட்கின்றாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.என்ன? இதை ஏன் இவள் என்னிடம் வந்துகேட்கின்றாள்?,எம் இருவருக்குமிடையில் இவள் யார்?(உண்மையில் இந்தக்கேள்வி நண்பியினுடையதல்ல காதலியினுடையது நேரே கேட்க கூச்சப்பட்டு அதை அவளினூடாககேட்கின்றாள்.)என்று நினைத்து நோ..நோ.. அப்படி எதுவும் இல்லை என்று சொல்லித்தொலைத்துவிடாதீர்கள்.

பெண்கள் வக்கிரமான விடயங்களை கூறுவதையோ,செய்வதையோ மிகவும் வெறுக்கின்றார்கள். மச்சி ஓங்கி ஒரே அடி சும்மாகீஞ்சுட்டுது...இது உங்கள் நண்பருக்கு படம்காட்டவேண்டுமானால் சொல்லலாம் இங்கே செல்லுபடியாகாது.

பெண்கள் தாங்கள் ஸ்பெஸலானவர்களாக ஃபீல் பண்ணுவதை மிகவும் விரும்புவார்கள் ஆனால் வெளியேகாட்டிக்கொள்ளமாட்டார்கள்.சோ நீங்கள் அவர்களை மற்றயவர்களிடமிருந்து ஸ்பெஸலாகவே நடத்துங்கள்.

உங்கள் நெருங்கிய தோழியிடம் அல்லது காதலியிடம் ஒரு விடயத்தைகூறி அதை வேறுயாரிடமும் கூறிவிடாதே என்று கூறினால் அவ்வளவிதான்.மூன்றே நாட்களில் அது அவர்களுக்கு தெரிந்துவிடும்.பெண்கள் தங்கள் நண்பிகளிடம் 90% ஆன விடயங்களைப்பகிர்ந்துகொள்கின்றார்கள். உங்களைப்பற்றித்தான் 90% ஆன அவர்களது உரையாடல் இருக்கும்.

காதலன் தன்னை தனது இடுப்பைப்பற்றி அவன் வசம் அணைப்பதையே காதலி விரும்புகின்றாள்.இது பெண்களுக்கு கூடுதலான நெருக்கத்தை தருகின்றது.

பெருமளவான பெண்கள் ஆண் தம்முடன் நடனமாடுவதை விரும்புகின்றார்கள். நடனம் தெரியாது விடின் அவர்கள் அதைப்பற்றிக்கவலைப்படுவதில்லை.

ஒரு பெண் உங்களை பப்லிக்காக நையாண்டிசெய்கின்றாள் எனில் அதற்கு அர்த்தம் அவளுக்கு உங்களைப்பிடித்திருக்கின்றது.ஆனால் கூறப்பயப்படுகின்றாள்.

சில பெண்கள் தமது காதலனைப்பற்றி 18 மணித்தியாலத்திற்கும் அதிகமாக நினைத்துக்கொண்டிருப்பார்களாம்.பகலிலேயே அதிகமாக கனவுகாண்பார்கள்.

ஒரு ஆண் பெண்ணிடம் உருக்கமாக உணர்ச்சிபூர்வமாக கதைத்த எந்தவிடயத்தையும் பெண் மறக்கவே மாட்டாள்.

அத்துடன் பெண்கள் இலகுவாக அவமானப்பட்டுவிடுவார்கள். நாம் ஏதோ நமது நண்பருடன் உரையாடுவதைப்போல் நினைத்தி கூறிவிடுவோம் ஆனால் அவர்களுக்கு அது உறைத்துவிடும்.வெளியில் அதைக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

பெண் அப்செட்டாக இருந்தால் அவள் தான் கூறுவதைக்கேட்கவே விரும்புவாள்.அப்செட்டான விடயத்திற்கு உங்களிடமிருந்து அட்வைஸ்ஸையோ ஆறுதலோ முதல் விடயமல்ல முதல்விடயம் அவள் கூறுவதை நீங்கள் கேட்பதுமட்டும்தான்.

பெண் அழுகின்றாள் என்றாள் தான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கருதுமிடத்தில்தான் அழுவாள்.(எதற்கெடுத்தாலும் ஓ என்று ஒப்பாரி வைப்பவர்களை கூறவில்லை பெரும்பாலான பெண்கள் தாம் பப்லிக்காக உடனே அழ மாட்டார்கள். தமது வீட்டிற்கு அல்லது ரூமிற்குசென்றுதான் அழுவார்கள். சோ நீங்கள் இருக்கும்போது அழுதால் அவள் உங்களைமுக்கியமாக கருதுகின்றாள் என்று அர்த்தம் அருகில் சென்று ஆறுதல் கூறுங்கள்" எல்லாம் சரியாகிவிடும்" என்று.

 ஒரு பெண்உங்களுக்காக சமைத்தால் அவளுக்கு நீங்கள் முக்கியமானவர்.

தீயவார்த்தைகளை பயன்படுத்துவதை பெண்களில் அதிகமானோர் ரசிப்பதில்லை வெறுக்கின்றார்கள்.

நீங்கள் உங்கள் முன்னால் காதலியைப்பற்றி கூறும்போது சாதாரணமாகவே கூறவேண்டும்.ஏதோ ஆச்சரியப்படத்தக்க அதிசயமாக கூறுவீர்களாயின் தாம் என்ன தாழ்ந்துவிட்டோமா? என்று கடுப்பாகிவிடுவார்கள்.எனவே சாதாரண நிகழ்வாக கூறுங்கள்.

உரையாடும்போது பெண்கள் தம்முடன் கண் தொடர்பைபேணுவதை விரும்புவார்கள்.(இதை நீங்கள் பெண்கள் தமக்குள் கதைக்கும்போது அவதானித்திருப்பீர்கள். ஆண்கள் நண்பர்களுடன் கூட்டமாக கதைக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருதிசையில் பார்த்தும் கதைத்துக்கொண்டிருப்பார்கள் ஆனால் பெண்கள் சுற்றிக்கூட்டமாக இருந்து ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் கதைத்துக்கொண்டிருப்பார்கள்.)

பெரும்பாலான பெண்கள் தமது சுதந்திரத்தை ஆண்களுக்காக விட்டுக்கொடுப்பதை விரும்புவதில்லை.

பெரும்பாலான பெண்களுக்கு ஆண்கள் தம்மிடம் அட்வைஸ்கேட்பதை மிகவும் விரும்புகின்றார்கள்.


ஒரு பெண்தான் கவலையாக இருப்பதாக கூறுகிறாள்.ஆனால் அழவில்லையாயின் மனதிற்குள் அழுதுகொண்டிருக்கின்றாள் என்பதைப்புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஏதாவது தவறு செய்திருப்பின்.சிறிது நேரம் கொடுத்தபின்னர் அவளிடம் மன்னிப்புக்கேட்பது நல்லது அவள் கூலாகுவதற்கு நேரம்கொடுக்கவேண்டும்.

ஒருவனைக்காதலித்தால் உறவு முறிந்தபின் அவனை வெறுப்பதற்கு பெண்கள் காரணங்கள் தேடினாலும் இலகுவாக கிடைக்காது.இதனால் பெண்கள் நீண்டகாலம் காதலால் பாதிக்கப்படுவார்கள்.வெளியில் எதுவுமே தெரியாது என்பதுதான் ஹைலைட்.

தனது சிரிப்பை ரசிக்கும்,தன் கண்களை ஊடுருவிப்பார்க்கும் ஆணிடம் உருகிவிடுவாள் பெண்.

எந்தக்காரணத்திற்காகவும் நீ ஒரு புறம்போக்கு என்று கூறிவிடாதீர்கள்.

உங்கள் காதலியிடம் இருந்து உங்களுக்கு முதல்முதலில் தொலைபேசி அழைப்புவரும்போது தனக்கு ஈடுபாடே இல்லை என்பது மாதிரியும் ஏதோ தவறி ரோங்க்னம்பருக்கு எடுத்த மாதிரியும் தான் கதைப்பார்கள் நீங்களும் அதற்கு ஏற்றாற்  போல் கதைத்துவிடாதீர்கள்.அவர்கள் அப்படி கோல் செய்து முடித்ததும் செய்யும் அடுத்த காரியம் என்ன தெரியுமா? இதை பெருமையாக தனது தோழிகளிடம் தண்டோரா போடுவது.

பெண் ஒரு ஆணைகாதலித்ததும் ஆச்சரியப்படும் விடயம் என்ன தெரியுமா? இதற்கு முன்னர் ஏன் நான் அவனைக்கவனிக்க வில்லை?

வகுப்பறைகளில் தனது காதலனை கவனிப்பதற்கு முன்னதாக காதலனுக்கு அருகாமையில் இருப்பவர் யார் என்று கவனித்தபின்பே காதலனை கவனிக்க   தொடங்குவாள்.

சாதாரணமாக கூறும் ஹாய் அன்றைய நாளை மேலும் பிரகாசமாக்கும்.

அவளை விட அழகான அவளது  நண்பியிடம் அதிகமாக நீங்கள் கதைத்தால் ஜோலி முடிஞ்சுது.காதலைப்பற்றி சுவாரசியமான விடயங்களை அறிய

தேவதைக்கு பிறந்தநாள் பரிசு...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}