சுதந்திரதின ஸ்பெஸல் கெஸ்ட்டாக பவர்ஸ்ரார்,சந்தியா


மனதை திடப்படுத்திக்குங்க..செய்தி நம்ம தலிவர் பவர்ஸ்ராரைப்பற்றித்தான்.இந்தியாவின் 65 ஆவது சுதந்திரதினத்தை யாரும் மறக்கக்கூடாது என்பதற்காக நம்ம தலிவர் பவர்ஸ்ராரை பொலிமர் டி,வி கெஸ்ட்டாக அழைத்திருக்கின்றது.சூப்பர்ஸ்ரார் பவருடன் காதல் புகழ் சந்தியாவும் அழைக்கப்பட்டார்.இவர்களது நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர் யார் தெரியுமா? ஈஸ்ரர்...(அந்த ஈயை அடிச்சு கலைங்கடா)..என்னதான் இருந்தாலும் நீண்டகாலத்தின் பின் சுதந்திர தினத்தில் பவரைக்காண்பது தனி சந்தோசம்தான்.இதனால் வீட்டில் சிறிது அசாதாரண அமைதி நிலவியது.நிகழ்ச்சியின் போது ஈஸ்ரர் பவரிடம் என்ன கேட்டார் தெரியுமா? உங்களுக்கு சந்தியாமேல் அவ்வளதுகாதல்...சும்மா வெறிபிடிச்சிருக்கீங்க...(ஏய் நம்ம தலிக்கு ஐஸ்வரியாதான் காதலி அவ ஆண்டியாகிட்டாலும் அவதான் காதலி) அதை அவங்களுக்கு நீங்க சொல்லி ஓகே பண்ணுற மாதிரி நீங்க பெஃபோர்ம் பண்ணணும்.நீங்க எந்த டயலக்கும் பயன்படுத்தலாம் கதறி அழலாம்....இதோட காதலி வந்திடனும்(வந்துடும்) வர்ர வரைக்கும் விடக்கூடாது...

கேட்டது பவருக்கிட்டயாச்சே விடுவாரா நம்ம தலிவர்.அசத்தினாரு பாருங்க..
செல்லம் நான் உன்னை ரொம்ப காதலிக்கிறண்டா...உன் மேல என் உசுரையே வச்சிருக்கிறண்டா....

பாவம் புள்ள ...பயந்துட்டுது....தலிவற்ற நடிப்பு அப்படி...புத்திபேதலிச்சு சிரிக்க ஆரம்பிச்சுட்டுது....
அதோட விடலயே.....அடுத்த டயலக்

செல்லம் நீ ஏற்கனவே காதல் படத்தில் சத்தியாவா நடிச்சிருக்கடா...அந்தப்படம் அவ்வளவு நல்லா வந்திச்சு அதில வர்ர மாதிரி  நீ என்னை காதலிக்கணும் நான் உன்னைக்காதலிக்கணும்...(பாக்கும் போது எனக்கு கண் கலங்கிடிச்சு)..எனக்கு நீ இல்லாம உலகம் இல்லை....

என்னை எத்தனையோ பேர்காதலிக்கிறாங்க...(ஏஞ்சலினா ஜூலி,மேகன் ஃபொக்ஸ்) ஆனா நான் யாரையும் காதலிக்கல...உன்னை மட்டுந்தான் காதலிக்கிறன்.

ஆனா பொண்ணு மசியல...(என்ன ஒரு கல் நெஞ்சக்காறி...)
இரக்கப்பட்டு ஈஸ்ரரே எனக்காக ஏத்துக்குங்க என்று பரிந்துரைவேறு செய்தார்....ஊகும்  மசியவே இல்லை...

உடனே ஈஸ்ரர் முட்டிபோட்டிருந்து என் காதலை ஏத்துக்க என்று சந்தியாவின் காலில் விழுந்து நடித்துக்காட்டி சேர் இப்படி கேளுங்க சேர் என்றார்....
தலிவர் ஒத்த வார்த்தையில ரசிகர் மனதில் பெரிய அலவாங்கால் குத்திவிட்டார்...
"என் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" 
யார் இந்த பவர் ஸ்ரார்? என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப்பார்க்க நேர்ந்தது....அதில் ஒரு இன்ப அதிர்ச்சி கிருத்திகா என்ற பெண் தலிவரின் லத்திகா படத்தைபார்த்தவுடன் தன் பெயரை லத்திகா என்றே மாற்றி வைத்துக்கொண்டாராம்....
வெள்ளையர்கள் ,சைனிஸ்,வெளி நாட்டில் இருக்கும் நம்மவர்கள் என அனைவரும் பவரைப்பற்றிப்பெருமையாக கதைப்பது..."நான் பவர் ஸ்ராரின் தீவிர ரசிகன்" அதில் காட்டப்பட்டுள்ளது......ம்ம்ம்ம்....இதல்லாம் கேட்கும்போது வாழ்க்கையையே மிஸ் பண்ணின மாதிரி இருக்கு.....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}