தற்கொலை முயற்சி

ஒரு தற்கொலை முயற்சியை நேரில் பார்க்க நேர்ந்ததால் இப்பதிவை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.யாழ்ப்பாணத்தில் தாவடியில் பைக்கிற்கு காற்றடிப்பதற்காக சென்றபோது ஒரு மெக்கானிக் வேர்க்ஸொப்பில் அசாதாரணமான விடயம் நடந்தது. சிறிது நேரத்தில் அவலக்குரல் சென்று பார்த்தால் அங்கு வேலை செய்த இளைஞன் ஒருவன் விஸத்தை குடித்துவிட்டானாம்.உடனே பொலீஸிற்கு தகவல்சென்றுவிட அவர்கள் அவனை ஆட்டோவிற்குள் தூக்கு செல்லமுற்பட்டார்கள்.ஆனால் தற்கொலை முயற்சி செய்த அவ்விளைஞன் உள்ளே செல்ல மறுத்துவிட்டான். பார்த்த எனக்கு திக் என்றாகி விட்டது. "அந்த பொம்பிளைல்லு தகப்பன் இல்லை அதோட அவளுக்கு குடும்ப பொறுப்புகள் வந்திருக்கும் இவனுக்கு எங்க போச்சுது புத்தி?". என்று சில பழசுகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் அவனுடன் வேலை செய்த இளைஞனோ "அண்ணை அவளும் இவனோட நைனாதீவு கீரிமலை எண்டு ஊரை சுத்தினவள் ஆனா திடீரெண்டு வேண்டாம் எண்டுட்டாள் "என்று.தற்கொலைக்கு முயன்றது கோழைத்தனம்தான் நான் அதற்கு ஆதரவுஅளிக்கவில்லை ஆனால் ஏதோ அவனிடம் மட்டும்தான் பிழை உள்ளது என்றவகையில் அங்கு கூடியிருந்தவர்கள் விமர்சனம் செய்ததுதான் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.அவளும் சேர்ந்துதானே ஊரைசுற்றினாள் ஆனால் அங்கு ஒருவன் விஸத்தைக்குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்க இவர்கள் அவனையே குற்றம் சொல்கின்றார்கள்.எனக்கு இவனை ஏமாற்றியவள் மீதுதான் கோபம் அதிகமாக வந்தது. வந்ததும் எனது முகப்புத்தகத்தில் அந்த கோபத்தை ஓரளவிற்குத்தீர்த்துவிட்டேன்.

//அவளும்தானேய்யா சேர்ந்து சுத்தினவள்....அவளை நினைக்கும் போது வாயில் செந்தமிழ்வார்த்தைதான் வந்தது ############ ஒருதத்னின் வாழ்க்கை உனக்கு விளையாட்டா? பிடிக்கலையெண்டால் முதலே சொல்லுங்கடி சேர்ந்து சுத்துவினமாம் ஆனா கடைசியில் பிடிக்கல எனக்கு குடும்பப்பிரச்சனை இருக்கு எண்ணுவினமாம் பின்ன என்ன ம### சேர்ந்து சுத்தினி? விஸம் குடிச்சவண்ட தாய் தலையில அடிக்கிறத நீ நேரில பாப்பியாடி தே#####..என்னமோ நாசமாய் போங்கடி//

காதல் தோல்வி,பரீட்சைகளில் தோல்வி,கடன் தொல்லைகள்,போதை,தொழில் நஸ்டம்,கள்ளக்காதல்,பாலியல் குறைபாடுகள் போன்றவை தற்கொலையை தூண்டுகின்றன.தற்கொலை கோழைத்தனம் என கூறினாலும் தற்கொலை செய்வதற்கு அசாத்திய தைரியம்வேண்டும் என்று மனநலமருத்துவர்கள் கூறுகின்றார்கள்.ஆனால் இந்த தைரியத்தை இவர்கள் தற்கொலைக்கு பயன்படுத்திக்கொள்கின்றார்கள் என்பதுதான் கவலை.காதல் தோல்வி பெரும்பாலானோர் இதை நிச்சயம் சந்தித்திருப்பார்கள்.ஆனால் சிலரால் இவற்றைத்தாங்கிக்கொள்ள முடிவதில்லை.வெளியில் இருந்துகொண்டு தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று கூறினாலும்.அவரவர் மன உழைச்சல் அவரவருக்குத்தான் தெரியும்.சரியான சந்தர்ப்பத்தில் தக்க அறிவுறுத்தல்கள் ஆறுதல்கள் இல்லாது போகவே முடிவு தற்கொலையாகிவிடுகின்றது.

இலங்கையில் தற்கொலை அதிகம் குறிவைத்திருப்பது 20 தொடக்கம் 25 வயது வரை உள்ளோரைத்தான்.இந்த வயதை உடையோர்தான் அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என புள்ளிவிபரன்கள் தெரிவிக்கின்றன.இந்தவயதில் உள்ளோரில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்காரணமாக இருக்கும் விடயம் காதல்.ஒருத்தன் லவ்பண்ணி தோல்வியடைந்தால் அந்த நேரத்தில் பெற்றோர்,நண்பர்களின் உதவி அரவணைப்பு மிகவும் அவசியம்.என்ன முட்டாள்தனமையா இது காதலில் தோல்வி என்பதற்காக தற்கொலை செய்துகொள்வதா?இந்த முட்டாள் தனத்தை நான் செய்ய மாட்டேன் என்று மார் தட்டும் இளைஞ்ரா நீங்கள்? மன்னிக்கவும்.ஒருவரது இன்டலக்ஸுவல் அறிவிற்கும் இவ்வாறான அசாதாரண சம்பவங்களின்போது எடுக்கும் முடிவிற்கும் சம்பந்தமில்லை அதுவும் காதலில் சொல்லவே வேண்டாம் அதன் முன் எல்லோரும் முட்டாள்கள்தான்.பெரும்பாலான பெற்றோரிடம் காதல் தோல்விக்கு ஆறுதலையோ அரவணைப்பையோ பெறமுடியாது.ஆனால் கூடவே இருக்கும்  நண்பர்களுக்குத்தான் இதில் பொறுப்பு அதிகம்.தனது மகன் தற்கொலைக்கு முயற்சிசெய்து வைத்தியசாலையில் உள்ளான் என்று அறிந்த பின்னர்தான் பெற்றோர் அதற்கு காரணம் தேடுவார்கள்.ஆனால் நண்பர்களுக்கு முன்னரே தெரியுமல்லவா.தோல்வியடைந்தவருக்கு உடனடியாக அட்வைஸ் கொடுத்து அறுக்காமல் அவரை நன்றாக அழ விடுங்கள் பிதற்ற அனுமதியுங்கள் பின் ஆறுதல்படுத்தி அட்வைஸ் செய்யுங்கள்.இவை கிடைக்காவிடின் தோற்றவர்களது பார்வையில் அந்தக்கணம் தனிமையானதாக,சூனியமானதாக இருக்கும். அவர்களுக்கு அவர்கள் மீதிருந்த சுயமரியாதையே போய்விட்டிருக்கும். இவற்றால் அந்த நேரத்தில் எடுக்கும் சடுதியானமுடிவு விபரீதமாக முடிந்துவிடும்.தற்கொலை பலவகையில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றதோ என்று அண்மைக்காலமாக ஐயப்பட்ட விடயம் முக்கியமாக மாணவர்கள் தற்கொலை செய்யும் செய்திகள் அதிகமாக பத்திரிகைகளில் பார்க்கமுடிந்தது. ஏ.எல் பரீட்சையில் முடிவுகள் 2011 இல் வெளியாகிய போது அது பலருக்கு எதிர்பாராத முடிவுகளாக இருந்தது (இன்றுவரை சற் புள்ளிகளின் பிரச்சனை தொடர்ந்தவண்ணமுள்ளது என்பது வேறுகதை.மாணவர்களது மனது ஏதோ ஃபூற் பால் என்று நினைக்கின்றது அரசாங்கம். இதனால் கல்வி அமைச்சர் முதல் அனைவரும் இந்த விடயத்தில் தம் பங்கிற்கு பந்தை தம் போக்கிற்கு எட்டி உதைத்து விளையாடுகின்றார்கள். மாணவர்களை தனியார் பல்கலைக்கழகங்கள்,தனியார் துறைகளுக்கு வலிந்து செலுத்துவதற்கு திட்டமிட்டே இந்தகைங்கரியம் செய்யப்படுவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன ). ஒரு பாடசாலையில் தொடர்ந்து முண்ணணியில் இருந்து வந்த மாணவியொருவருக்கு பெறுபேறு குறைவாக வரவே அவர் தற்கொலைக்கு முயன்றார்.அவர் காப்பாற்றப்பட்டு விட்டார்.வேறொரு செய்தி பிரபல பாடசாலை மாணவன் தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டான்.இப்படி அண்மைக்காலத்தில் செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

வருடமொன்றிற்கு உலகில் 10 லட்சம் நபர்கள் தற்கொலைசெய்துகொள்கின்றார்கள்.இவ்வாறு நடக்கும் தற்கொலைகளில் 60% ஆன தற்கொலைகள் ஆசியாவில்தான் இடம்பெறுகின்றன என்கின்றது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை.உலக தரப்படுத்தலில் தற்கொலையில் இலங்கைக்கு 11 ஆவது இடம் கிடைத்துள்ளது.75% ஆன தற்கொலைகள் கிராமப்புறங்களில் இடம்பெறுவதாகவும் அதில் 55% ஆன தற்கொலைகளுக்கு பூச்சிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.21 தொடக்கம் 25 வயதினையுடையவர்களில் அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்கள் ஆண்கள்தான்.ஆரம்பத்தில் இருந்ததைவிட தற்பொழுது இலங்கையில் தற்கொலை விகிதம் குறைந்து வருவது ஆரோக்கியமான விடயம்தான்.

ஆண்டுகள்,ஒருவருடத்திற்கான தற்கொலைகள்
1995   - 8449
2006   - 4504
2007   - 4225
2008   - 4120

இலங்கையில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 12 பேர்தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.இலங்கையில்    தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ‘ஸ்ரீ லங்கா சுமித்திரயோ’அமைப்பு இன,    மத, மொழி சார்பற்ற ஒரு அமைப்பாகவுள்ளதுடன் தற்கொலைகளைத் தடுப்பதற்கான பல்வேறு விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டு வருகின்றது.இவ்அமைப்பே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலையானது அவரது குடும்பத்தினர், உறவினர்களையும் பாதிப்பதுடன் தற்கொலை ஒரு சட்டவிரோத செயலென பலர் அறிந்திருப்பதால் பொலிஸ் விசாரணைகள் சமூகத்தில் அவமானத்தை ஏற்படுத்துமெனக் கருதுகின்றார்கள்.இதனால் பல குடும்பங்கள் தற்கொலை மரணங்களை மூடி மறைத்துவிடுவதால் தற்கொலை தொடர்பிலான சரியான தகவல்களைப் பெற முடியாதுள்ளதாகக் கூறும் இந்த அமைப்பு, அதனால் இது தொடர்பில் நாடு முழுவதற்குமான பாரிய விழிப்புணர்ச்சி நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்துகின்றது.

தற்கொலை செய்யும் எண்ணத்தை மாற்றும முடிவு அதை எடுத்தவர் கைகளில் உள்ளதாயினும் நாம் அவற்றை மாற்றமுயற்சி செய்யவேண்டும்.சரியான விழிப்புணர்வு,தகவல்கள்,புரிந்துணர்வுகள் மூலமாகவே இவற்றை ஓரளவிற்கேனும் குறைக்கமுடியும்.இதனை ஊடகங்கள் தமது தளங்களில் இருந்து ஆரம்பிப்பது  மிகப் பொருத்தமாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}