உலகில் அதிக விலைக்குவிற்கப்பட்ட ஓவியங்கள்

இவ்வாறு அதிகவிலைக்கு விற்கப்பட்டஓவியங்கள் எல்லாமே உலகப்புகழ் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்டவை.இவை மியூசியத்திலே பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.இவை மிகவும் அரிதாகவே ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.இவை மியூசியத்தால் விற்பனை செய்யப்படின் அந்த ஓவியங்களின் பெறுமதி நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும்.அத்துடன் இவ்வாறான ஓவியங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் மிகவும் அதிகம்.உலகப்புகழ்பெற்ற மோனலிஸா ஓவியம்தான் உலக வரலாற்றில் அதிக பணத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஓவியமாகும்.14, 1962 டிசம்பரில் இவோவியத்தின் பெறுமதி 100 மில்லியன் டாலர்களாகும்.இப்பணத்தின் பெறுமதி 2006 இல் 670 மில்லியன் டொலர்கள் இப்பொழுது இது இன்னும் அதிக அளவாக அதிகரித்திருக்கும்.

இவ் ஓவியம் பாரிஸ்ஸில் உள்ள Louvre Museum  இல் அதிக செலவுடன் கூடிய கடுமையான பாதுகாப்பின் கீழ்வைக்கப்பட்டுள்ளது.

Irises by Vincent Van Gogh : $53,900,000

இவ் ஓவியத்தை வரைந்தவர் Vincent van Gogh ஃபிரான்ஸின் Saint Paul de Mausole இல் தாம் இறப்பதற்கு 1 வருடத்திற்கு முன்பாக இதை வரைந்தார்.1987 இல் அதிக விலை கூடிய ஓவியங்களுள் ஒன்றாகாக் காணப்பட்டது.Alan Bond என்பவருக்கு 53.9 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு மீண்டும் கலிபோர்னியாவின் அருங்காட்சியகத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Femme aux Bras Croises by Pablo Picasso: $55,006,000

இவ்ஓவியம் பிக்காஸோவினால் 1901 இல் வரையப்பட்டது.இவ்ஓவியத்தை வரையும் போது பிக்காஸோ வறுமையால் வாடிக்கொண்டிருந்தார்.இவ் ஓவியம் நியூயோர்க்கில் 2000 ஆண்டு 55 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.



Rideau, Cruchon et Compotier by Paul Cezanne: $60,502,500

இவ் ஓவியம் Paul Cezanne ஆல் 1893-1894  காலப்பகுதியில் வரையப்பட்டது.May 10, 1999 இல் உலகின் முண்ணனிப்பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் Whitney என்பவரால் 60 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது.



Portrait de l’Artiste Sans Barbe By Vincent Van Gogh: $71,502,496

ஃபிரான்ஸின் ஓவியரான Vincent van Gogh ஆல் வரையப்பட்ட ஓவியங்கள்தான் இவை.Vincent van Gogh சுய உருவப்படங்களில் இதுவும் ஒன்று.1889 இல் இதை வரைந்தார்.இது ஒரு ஓயில் சித்திரம் 40 cm x 31 cm அளவை உடையது.1998 இல் நெயூயோர்க்கில் அதிக விலைக்கு இவ் ஓவியம்  விற்பனையாகியது.1998 இல் 71.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியது.


Massacre of the Innocents By Peter Paul Rubens: $ 76,700,000

Paul Rubens ஆல் வரையப்பட்ட ஓவியம்தான் இது.1611 ஆம் ஆண்டில் வரையப்பட்டது.76.7 மில்லியன் டொலர்களுக்கு 2002 இல் விற்பனைசெய்யப்பட்டது.இந்த ஓவியத்தை வாங்கியவர்  கனடாவின் Kenneth Thomson என்ற செல்வந்தர்.




Bal Au Moulin de la Gallet By Pierre-Auguste Renoir: $ 78,000,000

1876 இல் ஃப்ரான்ஸின் ஓவியரான Pierre Auguste  ஆல் வரையப்பட்டது.May 17, 1990 இல் 78 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. Ryoei Saito இனால் வாங்கப்பட்டது இவர்தான் நாம் முதலில்பார்த்த Vincent van Gogh இன் ஓவியத்தையும் 71 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியவர்.






Portrait of Dr Gachet by Vincent van Gogh: $82,500,000


இந்த ஓவியத்தை வரைந்தவர் Vincent van Gogh.இவரது ஓவியம் ஜப்பானை சேர்ந்த Ryoei Saito இனால் 82.5 மில்லியன் டொலர்களுக்கு வாங்க்யதும் பிரபலமடைந்தன.Ryoei Saito ற்கு ஓவியத்தின் மீது அதிக வெறியைஉடையவர்.இதன் காரணமாக இந்த ஓவியத்தை தான் இறந்ததும் தன்னுடன் அடக்கம் செய்துவிடும்படி கூறியிருந்தார்.ஆனால் அவ்வாறு ஓவியம் அவருடன் புதைக்கப்படவில்லை.




Dora with Cat By Pablo Picasso: $95,200.000


இந்த ஓவியம் பிக்காஸோவினால் 1941 இல் வரையப்பட்டது.சுய உருவஓவியமாக வரையப்பட்டது.ஆனால் இந்த ஓவியத்தில் சர்ச்சைகள் தொடர்கின்றன.இது இவரது உருவமல்ல இவரது 10 வருட நண்பியான  Dora Maa இன் உருவம்தான் என்பதுதான் அந்த சர்ச்சை.2006 இல் இவ் ஓவியம் 95.2 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.



Garcon a la Pipe By Pablo Picasso: $ 104,100,000

இது பிக்காஸோவினால் வரையப்பட்ட ஓயில் பெயிண்டிங்க்.100 x 81.3 cm பரிமாணமுடையது.இன்த ஓவியம் பாரிஸ்ஸில் ஒரு பையன் வலது கரத்தில் புகைபிடிக்கும் பைப்புடன்  நிற்பது வரையப்பட்டுள்ளது.ஒரேஞ்,பிங்க் கலர்களைப்பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. ஏனைய பிக்காஸோவின் ஓவியங்களைப்போல் இது தனிச்சிறப்பைக்கொண்டிருக்காவிடினும் இது விற்கப்பட்ட விலை 104 மில்லியன் டொலர்கள்.


Portrait of Adele Bloch-Baeur By Gustav Klimt: $135,000,000


இவ் ஓவியம் 1907 இல்  ஒஸ்ரியாவைச்சேர்ந்த Gustav Klimt இனால் வரையப்பட்டது.ஒஸ்ரியா நாஸிக்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது இவ் ஓவியம் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.2006 இல் இவ் ஓவியத்தை Ronard S. Lauder என்பவர் 135 மில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}