முடிந்தால் பேசிப்பாருங்கள்...ரங்க்ருவிஸ்ட்

இன்றைய தலைப்பு ரங்க் ருவிஸ்ட்(tongue-twist).இது ஒரு பேச்சுவிளையாட்டு உச்சரிப்பில் ஏற்படும் கடினத்தன்மையை நீக்குவதற்கு உருவாக்கப்பட்டது.
நமது சிறியவயதுகளில் ஆளாளுக்கு இதை கூறி கலாய்த்திருப்போம்.

"ஏழைக் கிழவன் வாழைப்பழத்தோல் வழுக்கி; சருசருக்கி, வழுவழுக்கிக் கீழே விழுந்தான் "
"ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி, கிழ நரி பிடரியில் ஒரு பிடி நரை முடி" இதை மிகவும் வேகமாக கூறவேண்டும். சரி இதைக்கூறுங்கள் பார்க்கலாம் 

(வேகமாக)" யார் தைத்த சட்டை தாத்தா தைத்த சட்டை" 

காளமேகப்புலவரின் பாடல் இதுவும் டங்க்ருவிஸ்ட்தான்

இவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்?
இவரோ வழுவூரில் ஈசர்?- இவரோ
கடத்தடக்க தக்கரிப்பி டித்திழுத் தழுத்தி மெத்த
அடித்தறுத் துரித்துடுத்த வர் ?


அருகில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.இல்லையெனில் தம்பிக்கு ஏதோ நடந்துவிட்டது என்று குடும்பம் குழம்பிவிடும். ரங்க் ருவிஸ்டில் உள்ள நகைச்சுவையான விடயம் இதுதான் அதை சொல்லுபவர் இடையில் சொதப்பினால் ஊரே சிரிப்பா சிரிச்சுடும். அத்துடன் அடுத்துவருவதை யோசித்துக்கொண்டும் பேச இயலாது.

லொரி ரொலி லொரி ரொலி..இதை விரைவாக தொடர்ந்து கூறிப்பாருங்கள் லொலி லொலி என்றுதான் வருகின்றது.


எனக்கு இந்த விடயங்கள்தான் ரங்க் டுவிஸ்ட் என்று சில வருடங்கள் முன்னால்தான் தெரிந்திருந்தது.ஆனால் தரம் 5 இல் கற்கும் போது எனக்கு கற்பித்த பெரியம்மாவால் நகைச்சுவையாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.அது இதுதான்

"பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்(வைத்தியசாலை) பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கின்ற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பார்?"

சற்று பைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்கும்.இந்த லட்சணத்தில ஸ்பீடாவேற சொல்லணுமாம்.இப்படியான ரங்க் ருவிஸ்ட்களை நீங்கள் ஸ்பீடாக சொல்லமுனைவீர்களாயின் நாக்கு நாலு இஞ் வெளியில் நட்டுக்கும் கீழே இருக்கும் படத்தில் இருப்பதைப்போல ஆனால் அந்தபடத்திலும் ஒரு ருவிஸ்ட் இருக்கின்றது.

பெரியம்மா சொன்னதும் சொன்னா பிறகு கேட்கவா வேணும் ஊர்முழுவதும் தண்டோரா போட்டுவிட்டேன்.ஆசிரியர்களிடமும் சென்று இதை கூறிக்காட்டும்படி கேட்பது வரை நடந்தது.ஆனால் இவ்வளவு நீளமானதை நினைவில் வைத்திருக்கு முடியாமல் இருந்தமையால் பெரியம்மாவிடம் ஒரு துண்டில் எழுதித்தரும்படி கேட்டு அதை யாருக்கும் தெரியாமல் மனப்பாடம் செய்து வெளியில் பீற்றிக்கொண்டு திரிந்தது வேறுகதை.

உலகில் இருக்கும் பல மொழிகளில் ரங்க் ருவிஸ்ட்கள் இருக்கின்றன.ஆங்கிலமொழியில் இருக்கும் ரங்ருவிஸ்ட்டில் தொடர்ந்து வரும் சொற்களில் சில எழுத்துக்கள் மாறும் அதாவது அடுத்தடுத்த சொற்களில் s ,sh,se,ts இப்படி வார்த்தைகள் முடியும்.அத்துடன் ஒரே உச்சரிப்பையுடைய வேறு கருத்துக்களை உடைய சொற்களும் தலை காட்டும்.இது பொதுவாக சகல மொழிகளிலும் இருக்கும் ரங்க்ருவிஸ்ட்களின் இயல்பு.இது நாவுக்கு வலுவூட்டலுக்காக உருவாக்கப்பட்டது.தமிழ் மொழியில் தாலாட்டு என்பதும் அண்ணளவாக இதேவகைதான் தாலாட்டின் இடையில் எழுப்பப்படும் வித்தியாசமான ஒலிகள் இதற்கு ஆதாரம்.

ஆங்கில மொழியில் மிகவும் கடினமான டங்க்ருவிஸ்ட்டாக கருதப்படும் ரங்க் ருவிஸ்ட் இதுதான்.வில்லியம் பவுண்ட்ஸ்ரோனினால் உருவாக்கப்பட்டது.

"The seething sea ceaseth and thus the seething sea sufficeth us"

அண்ணளவாக ஒரே உச்சரிப்பை உடைய வேறுகருத்துக்களை உடைய ரங்க்ருவிஸ்ட்


Betty Botter bought a bit of butter.

The butter Betty Botter bought was a bit bitter

And made her batter bitter.

But a bit of better butter makes better batter.
So Betty Botter bought a bit of better butter
Making Betty Botter's bitter batter better


பின்வரும் ரங்க்ருவிஸ்ட் 1979இல் கேம் சஞ்சிகையில் கிராண்ட் ப்ரைஸ் வாங்கியது.


1.Shep Schwab shopped at Scott's Schnapps shop;
One shot of Scott's Schnapps stopped Schwab's watch.


2.A Proper Copper Coffee Pot.
Betty bopper's battering batton made bertie bopper bite her.
Cecily thought Sicily less thistly than Thessaly.
Irish Wristwatch, Swiss Wristwatch.
Peggy Babcock.
The bog above Bob Gorman's bog.
Pleasant mother pheasant plucker.
Red Leather, Yellow Leather.
Red Lorry, Yellow Lorry.
Rubber Baby Buggy Bumper.
Smiley shlug with Shloer.
Mad Man.
Toy Boat
Unique New York.

500 ற்கு மேற்பட்ட ஆங்கில ரங்க்ருவிஸ்ட்கள் இருக்கின்றதளம்... 

118 மொழிகளில் 3491 ருவிஸ்ட்கள் இங்கே கிளிக்

கின்னஸ் சாதனையாக பதியப்பட்ட மிகவும் கடுமையான ரங்க்ருவிஸ்ட் இதுதான்.
The sixth sick sheik's sixth sheep's sick

சிறிய ஆனால் மிகவும் கடினமான ரங்க்ருவிஸ்ட் "Strange Strategic Statistics"


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}