உலக புகைப்பட தினம் இன்று.


இன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 2009 இல் ஒரு செயற்றிட்டமாக தொடங்கப்பட்ட இது 2010 இலிருந்தே சர்வதேச ரீதியாக ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 9, 1839 இல் பிரான்ஸில் ஜோசப் நைஸ்போர் நைப்ஸ் மற்றும் லூயிஸ் டகுவேரால் டகுவேர்ரோடைப் என்கிற ஒரு புகைப்படம் எடுக்கும் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓகஸ்ட் 19, 1839 இல் பிரான்ஸ் அரசாங்கமானது உள்ளகத்துக்கு இந்த நுட்பத்தை காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் அர்ப்பணித்தது. அந்த நாளின் நினைவாக இன்னாளானது புகைப்பட தினமாக கொண்டாடப்படத் தேர்வானது.

கலோடைப் என்கிற புகைப்படம் எடுக்கிற இன்னொரு நுட்பமும் இதே ஆண்டில் வில்லியம் பொக்ஸ் தல்போட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. (ஆனால் இது இரண்டு வருடங்கள் கழித்தே உலகுக்கு அறிமுகப்படுத்தபட்டது.) எனவே, இந்த இரண்டு காரணங்களால், இவ்வாண்டு புகைப்பட வரலாற்றின் மைல்கல்லாகிறது.

வரலாற்றின் முதலாவது புகைப்படமாக நம்பப்படும் படங்களில் ஒன்று. படத்தை பதிவுசெய்ய பத்து மணித்தியாலங்கள் எடுத்தது. எனவேதான் இரண்டுபக்கமும் கட்டடங்களில் வெயில் விழுகிறது.

1839 இல் எடுக்கப்பட்டது. மனிதர்கள் தோன்றும் முதல் புகைப்படம். (இடது கீழ்மூலையில் இருவர் சப்பாத்து துப்பரவாக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளார்கள்.) இப்புகைப்படம் உண்மையில் ஒரு பரபரப்பான வீதியை எடுக்கப்பட்டதுதான். ஆனால் இப்புகைப்படத்தை எடுக்க எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடங்கள். எனவேதான் அவ்வளவு நேரமும் அசையாது நின்ற இருவர் மட்டும் தென்படுகிறார்கள்.
வியட்னாம் அரசின் அநீதி நடவடிக்கைகளை கண்டித்து அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவிக்க பிக்குகள்தம்மைத்தாமே எரித்துக்கொண்ட புகைப்படம்.

சே குவேரா கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட படம். அவர் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்டவற்றை விட அதிக உணர்வுகளை எழுப்பிய படம்.

1968 இல் சந்திரனிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் படம்.

வியட்னாம் போரில், அமெரிக்கா போட்ட குண்டினால் உடல் பற்றி எரிய, ஓடிவரும் சிறுமியின் படம்.மிகைகள் இல்லாது, வரலாற்றை மாற்றிய மிக முக்கியமான படம்.

வரலாற்றின் மிகமுக்கியமான படம். அதிக பிரபலமான படமும்கூட. ஆபிரிக்காவின் வறுமையை எடுக்கப்போய், புலிட்சர் விருது கிடைத்து, பின்னர் மனிதாபிமானத்தின் சர்ச்சையாக மாறிப்போன படம். படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.


உலகின்  வரலாற்றிலும், புகைப்பட வரலாற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்திய புகைபடங்களின் முழுமையான தொகுப்பு விரைவில்...


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}