இன்று இரண்டாவது அணுகுண்டு நாகசாகியில்

ஓகஸ்ட் 6 காலை 8.15 இற்கு ஹீரோசிமா மீது லிட்டில் போய் என்ற அணுகுண்டு போடப்பட்ட நீண்டகால அளவில் அண்ணளவாக 2 லட்சம் வரையான மக்கள் இறந்தார்கள்.அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று ....நேரம் காலை 8.15 ஆனால் இந்தத்தாக்குதலுக்கு ஜப்பான் உடனே வளைந்துகொடுக்கவில்லை.
Fat man 

நாகசாகி பெரிய துறைமுகங்கள்,இராணுவத்தளபாடங்கள்,தொழிற்சாலைகள் என மிக இயந்திரமயமாக இயங்கிக்கொண்டிருந்தது.நாகசாக்கி மீது அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னதாகவே அதிக அழிவைத்தரக்கூடிய குண்டுகள் போடப்பட்டன.வைத்தியசாலை மீதும்,பாடசாலை மீதும் அதிக அழிவைத்தரக்கூடிய 6 குண்டுகள் இடப்பட்டன.ஆனால் அதிஸ்ரவசமாக இழப்புக்கள் பெரிதாக ஏற்படவில்லை.உண்மையில் நாகசாகிகூட அணுகுண்டு போடப்படுவதற்கு இலக்காக தெரிவுசெய்யப்படவில்லை.அணுகுண்டை  ஓகஸ்ட் 11 இல் கொகுரா நகரின்மீது போடுவதாக இருந்தார்கள்.ஒரு தாக்குதலுக்கும் அடுத்த தாக்குதலுக்குமிடையே 5 நாட்கள் இடைவெளி இருந்தால் அவ்வளவு நல்லா இருக்காது என்ற காரணத்தினாலும் காலனிலை நிலைமைகளாலும் ஓகஸ்ட் 9 இலேயே அணுகுண்டுத்தாக்குதலை நடாத்துவதற்குத்தீர்மானிக்கப்பட்டது.ஓகஸ்ட் 9 காலையில் அமெரிக்க Bockscar என்ற பெயரைக்கொண்ட B-29 விமானம் ஃபட்  மான் என்ற அணுகுண்டைத்தாங்கி சென்றது.முதலாவது இலக்காக கொக்குறாவும் அடுத்த இலக்காக நாகசாகியும் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.1 மணித்தியாலத்திற்கு முன்பாகவே இரண்டு B-29 விமானங்கள் தாக்குமிடங்களின் வானிலையை பரிசோதிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.பொக்ஸ்கார் குண்டை தயாராக வைத்திருந்த வேளை அனைவரும் சந்திப்பதாக குறிப்பிடப்பட்ட இடத்திற்கு ஒரு விமானம் வருவதற்குத்தாமதம் ஏற்பட்டது.பிக் ஸ்ரீங்க் என்ற போட்டோக்களை எடுப்பதற்குக்கட்டளையிடப்பட்ட அந்த விமானமே பிந்தியது.இதனால் பொக்ஸ்கார் 40 நிமிடங்கள் சும்மா சுற்றிக்கொண்டிருக்கவேண்டியேற்பட்டது.

இதனால் இலக்கைத்தாக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு பின்னராகவே இலக்கை அடைந்தார்கள்.கொகுறாவை அடைந்தபோது அன் நகரத்தின் 70% மேகங்களால் சூழ்ந்து காணப்பட்டது.எரிபொருளும் முடிந்தவண்ணம் இருந்தது.ரிசேர்வ் டாங்கும் செயலிழந்திருந்தது.இதனால் வேறுவழியின்றி இரண்டாவது இலக்கான நாகசாக்கிமீது தாக்குதல்  நடத்தப்பட்டது.
நாகசாகிமீது ஃபட்மான் அணுகுண்டுத்தாக்குதல் நடத்திய விமானமும் குழுவும்

ஜப்பானிய நேரப்படி காலை 11.01 ற்கு தாக்குதல் நடத்தப்பட்டது.ஃபாட்  மான் என அழைக்கப்படும் அணுகுண்டு தன் வசம்  6.4 கிலோ புளுட்டோனியத்தைக்கொண்டிருந்தது.1500 அடிகளுக்கு மேல் இருந்து 43 செக்கன்ட்கள் பிரயாணத்தின்பின் நாகசாகியைத்தாக்கியது ஃபாட்மான்.இது வெடிக்கும் போது 21 கிலோதொன் TNT யின் சக்தியை வெளியிட்டது. வெடித்த இடத்தில் வெப்பநிலை 3,900 °C ற்கு உயர்ந்தது. 1,005 km/h இல் அனல் காற்று உடனே வீசியடித்தது.உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை 40 000 இல் இருந்து 80 000 வரை.

ஆனால் இத்துடன் அணுகுண்டுத்தாக்குதலை அவர்கள் நிறுத்த எத்தனிக்கவில்லை மேலும் 3 தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தார்கள்.அப்பொழுது மார்ஸலாக இருந்த க்ரோவ்ஸ் என்பவர் அனுப்பிய பதிவுக்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்  "the next bomb . . should be ready for delivery on the first suitable weather after 17 or 18 August." ஆனால் ஓகஸ்ட் 12 இலேயே அடுத்த இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்துவதற்குத்திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் ஜப்பான் சரணடைந்து விட்டதால் இது கைவிடப்பட்டது.
அணுகுண்டுத்தாக்குதலுக்கு முன்,பின்னரான நாகசாக்கி

அணுகுண்டுபோடப்பட்டதும் அப்போதைய பிறசிடன்ற் ஹரி ரூமனால் வெளியிடப்பட்ட கருத்து

"I realize the tragic significance of the atomic bomb... It is an awful responsibility which has come to us... We thank God that it has come to us, instead of to our enemies; and we pray that He may guide us to use it in His ways and for His purposes."

அழிவுகள்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}