Facebook இல் நண்பர்களை கலாய்க்க புதிய வழி.

பொதுவா நாம மத்தவங்கள எப்டிடா கலாய்க்கலாம், எப்படா அந்த Chance வரும்னு தவியா தவிச்சிட்டு இருக்கிறம். அதிலயும் Facebook எண்டா சொல்லவே வேணாம். எப்ப பாத்தாலும் இதபத்தி தான் நினைப்பெல்லாமே. எங்கட பாட புத்தகத்த தூக்கி வைச்சுக்கிட்டே நாம அததான்யா யோசிச்சுக்கிட்டு இருக்கிறம். ( அப்ப பாருங்கோவன்). ஒண்டில் நீங்க (இந்த இடத்தில் நாம எண்டு கதைக்க என் மனது இடம் தரவில்லை.) Facebook ல இருக்கீங்க.. இல்லேன்னா உங்க face உ book ல இருக்குது ( ஆக மொத்தம் இப்ப, படிக்கிறது Facebook ல படுக்கிறது உங்க book ல. (என்ன புழப்புடா இது. ) சரி அத விட்டுத்தள்ளுவம்... அது வேற department ஆச்சே....!!! இப்ப விசயத்துக்கு வருவம்.

அன்பு நண்பர்களே...!!! ஆசை பெரியோர்களே...!!! இது மிகவும் ஜாலியான  Friends ஐ கலாய்க்க கூடிய ஒரு வழி. இதில் உங்கள் முழு திறமையை காட்டுவதன் மூலம் (கொய்யால. இதிலயாச்சும் திறமைய முழுசா காட்டுங்கையா) உங்க Friends ஐ  "இதெப்படா Facebook la நடந்தது.. ஒரு வேளை எனக்கும் தெரியாம நித்திரையில நான் இப்டி comment  பண்ணி இருப்பனோ" எண்டு நினைக்க வைக்கிறதில இருந்து "எப்புடிடா இப்டி... இதெல்லாம் எங்கடா போயி படிச்ச...டேய் டேய்.. எனக்கும் சொல்லித்தாடா..."எண்டு அவங்க உங்ககிட்ட கெஞ்சிர வரைக்கும் ஆக்கலாம்.. அப்ப சந்தோசமா? ( இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இப்டி அவங்கள கலாய்ச்சு முடிச்சப்றம் அவங்க என்ன திட்டினாலும் அதற்காக நான் கடுகளவேனும் பொறுப்பு ஏற்கமாட்டேன் என்பதை தாழ்மையாக தெரிவிக்கிறேன்.)

ஒபாமா உங்க போஸ்ட்ட லைக்பண்ணணுமா? பில்கேட்ஸ் உங்களுக்கு கொமண்ட் பண்ணணுமா? ரஜனிகாந்த உங்களை டாக் பண்ணணுமா? சமந்தா ஐ லவ் யூடா செல்லம் எண்டு உங்க ஸ்ரேட்டஸுக்கு கொமண்ட் போடணுமா? அதுக்கு ஒரு வழி நம்மக்கிட்ட இருக்குஆனா இதை மாதிரி பல போட்டோக்களை பார்த்திருப்பீர்கள்.வழி இருக்கு தொடருங்கள்


இப்படி Fake wall posts ஐ உருவாக்க பல வழிகள் ( paint , photoshop and some websites ) இருந்தாலும் "www.fakeconvos.com" எனும் தளம் இதனை மிக இலகுவாக தயாரிக்க வழி சமைத்து தருகிறது.( அடடே.... சமைத்து என்டோன்ன பசி வந்து சாப்ட போயிராதீங்க )என்னால் உருவாக்கப்பட்ட sample fake post.

1.  இந்த தளத்திற்கு சென்று Facebook "login" button அ பயப்படாம click பண்ணுங்க.
2.  அடுத்து தோன்றும் window வில் உங்கள் Facebook username ஐயும் password ஐயும் கொடுத்து login செய்யுங்கள்.
3.  Create a new convo என்பதை கிளிக் செய்யுங்கள்.
4.  Name of Commenter இல் பெயரை எழுத்து பிழையின்றி type செய்யுங்கள்.( பிழையிருப்பின் இது நீங்கள் செய்த சித்து விளையாட்டு என மற்றவர்களுக்கு புரிந்துவிடும்.அப்புறம் நீங்கள் மொக்கையாகி விடுவீர்கள் )
5.  Browse images என்பதில் நீங்கள் விரும்பியபடி உங்கள் photos ஐ upload செய்யலாம் அல்லது facebook இலுள்ள உங்கள் friends இன் photo களை தெரிவு செய்யலாம் அல்லது google இல் photos ஐ தேடி add செய்யலாம்.
6.  அவர்கள் எப்டி comment செய்திருக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ, அவ்வாறானதை நீங்கள் இதில் type செய்யுங்கள்.
7.  add to stream என்பதை கிளிக் செய்து இத்தரவனைத்தையும் add செய்யுங்கள். 
8.  தங்களுக்கு எவ்வளவு comments தேவையோ அவ்வளவு தடவைகள் 4 ஆம் step இலிருந்து மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
9.  இறுதியாக save என்பதை கொடுங்கள்.
10.  அட அம்புட்டும்தான்யா....!!! வேலை முடிஞ்சுது....(மத்தவங்க சோலியும் முடிஞ்சுது.)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}