Man vs Wild நிகழ்ச்சி உண்மைதானா, காதில் பூவா?Man vs Wild நிகழ்ச்சி உண்மைதானா, அல்லது நடித்துத்தான் படம்பிடிக்கிறார்களா என்பது பலகாலமாகவே கேள்வியாக உள்ளது. நீங்கள் பியர் கிரில்ஸ் ரசிகராக இருந்தால் நிச்சயமாக அது நாடகமாக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். சரி.. சரி.. நானும் அந்த மனிதருக்கு ரசிகன்தான். என்னதான் அவருக்கு அடிமையாக இருந்தாலும், உள்ளே போய் குடைந்துதான் பார்ப்போமே?


Man vs Wild நிகழ்ச்சி பற்றிய பதிவை இங்கே செருகியுள்ளேன். பியர் பற்றிய பதிவை இங்கே செருகியுள்ளேன்.
முதலில் அந்த நிகழ்ச்சிக்காக காட்டுக்குள் அலைபவர்கள் யார்யார் என்பதை ஆராய்வோம். 2006 லிருந்து 2011 வரை எடுக்கப்பட்ட மொத்த 36 பகுதிகளிலும் நிகழ்ச்சியை நடத்தியது நமது தலைவர்தான். அதில் மாற்றமில்லை. ஆனால் குழு மாறிக்கொண்டே இருக்கும்.

இயக்குனர்கள்
# நிக்கோலஸ் வைட் (2008 -2011)
# டேவிட் ஒநியல் (2008-2010)
# மைக் வோர்நெர் (2006)
# ஜஸ்டின் கெல்லி (2007)

தயாரிப்பாளர்கள்
# மாரி டோனாஹூ (2006)
# நிக்கோலஸ் வைட் (2008-2011)
# ஸ்டீவ் ரங்கின் (2009-2011)
# ஸ்கொட் றன்காட் (2009-2011)
# ஜஸ்டின் கெல்லி (2007)
# ஜோன் கவனாக் (2009)
# டானியல் கொண் (2009)
# விக்கி ரோஜெர்ஸ் (2009)
# ஜூலியன் க்ரிம்மொன்ட் (2011)

பின்னணி இசை
# போல் ப்ரிச்சாட் (2007-2011)
# டான் டிலோர் (2009-2011)
# நிக் பயன் (2009-2011)
# ரொப் டேவிட் (2009-2011)

ஒளிப்பதிவு
# சைமன் ரே (2006-2009)
சைமன் ரேயுடன்.

நிகழ்ச்சியில் அவ்வப்போது  Behind The Scenes என்பதாகவோ, Top 25 என்பதாகவோ சில தொகுப்பு நிகழ்ச்சிகள் போடுவார்கள். அதிலே எவ்வாறு படப்பிடிப்பை செய்கிறார்கள் என்பதை காட்டுவார்கள். எதெல்லாம் உண்மை, எதெல்லாம் நாடகம் என்பதை விலாவாரியாக காட்டுவார்கள். ஆனாலும், இது எல்லாமே நாடகம் என்று விடாப்பிடியாக கத்திக்கொண்டிருப்பவர்களும் உள்ளார்கள். நமது சமூகம் அப்படிப்பட்டது. இதே வேலைகளை திரைப்படங்களில்  நமது நாயகர்கள் செய்யும்போது புல்லரிக்கிறோம், அதிலே ஒரு சதவீதம்கூட நாயகர்களால் செய்யப்படுவதில்லை என்பதை அறிந்தபிறகுகூட. (இங்கே நான் கதைப்பது யார்யாரை என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். பிறகு ஹெலிகொப்டரில் கயிறுகூட கட்டாமல் ஒற்றைக்கையை பிடித்துக்கொண்டு சண்டை பிடிப்பதையோ, அல்லது எதிர் போக்குவரத்தில் 180kmph இல் மோட்டர்சைக்கிள் ஓடுவதையோ செய்பவர்களைப்பற்றி நான் கடிக்கவில்லை.)
சாதாரண மனிதர்கள் சாப்பிடும் உணவை சாப்பிடும்போது.


குதிரையை தடவி பல்பு வாங்கிய இந்த நிகழ்ச்சியை பார்த்தீர்களா, தெரியவில்லை. நாடகம் என்றால் குதிரை ஏனையா ஓடுகிறது?

கயிறு கட்டித்தான் இறங்கிறார் என்று சொன்னதென்னவோ உண்மைதான். அதுக்காக இப்பிடியா?
காலை சிற்றுண்டி. புரதம் நிறைந்தது.இதை பார்த்தபிறகுமா நாடகம் என்கிறீர்கள்? சரிதான் போய்யா!

என்னதான் இருந்தாலும் நிகழ்ச்சியில் சில விஷயங்கள் நடிக்கப்படுகின்றன என்பதில் வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்குவதற்காகவும், பியரின் உயிரை கருத்திற்கொண்டும், நேரத்தை சிக்கனப்படுத்தவும் சிலவேளைகளில் கள்ள விளையாட்டுக்களை காட்டத்தான் செய்வார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று விடவேண்டியதுதான்.

ஒருவித உபகரணங்களும் இல்லாமல் மரக்கட்டையில் கடைந்து தீயை தலைவர் உருவாக்கும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் அத்தனை இலகுவானதில்லை.  கட்டையிலே புகை வருவதற்குள் விடிந்தே விடும். அந்தக் காட்சிகளை பார்த்தீர்களானால் அந்தாள் தேய் தேய் என்று தேய்த்து புகை வரவைப்பதுவரை காட்டுவார்கள். பிறகு பார்த்தால் தணலை கொட்டுவார். இடையிலே மிட்டாயை சூப்பியபடி ஒரு பையன் ஓடிவந்து அதற்குள் தணலை கொட்டிவிடுவான். அதை காட்டமாட்டார்கள்.

பல சந்தர்ப்பங்களில் பியர் ஒரு சீனிப் பொட்டலம் சுற்றும் சனல் கயிற்றில் தொங்கியபடி மலைகளை கடப்பார். அப்போதெல்லாம் வலைகளை பிடித்தபடி ஆறேழு பேர் கீழே ஓடிக்கொண்டிருப்பார்கள். பின்னே? ஏதாவது நடந்து தொலைத்துவிட்டால் அந்த மனுசிக்கும் மூன்று குத்தியங்களுக்கும் யார் கணக்குக் காட்டுவது?

மிகவும் விறுவிறுப்பான அந்த பகுதியை நீங்கள் பார்த்தீர்களா தெரியவில்லை, எங்கெல்லாமோ அலைந்து திரிந்து கடைசியில் ஒரு நாற்பதடி உயரமான ரயில் பாலத்துக்கு அடியில் வருவார் நம்மாள். அந்த இரும்புப் பாலத்தில் ஏறுவார். அதுவரை ஓகே. அதன் பிறகு ஒரு சங்கிலியை அப்படியே எறிவாராம், அது மேலே போய் எங்கேயோ சிக்கிவிடுமாம், அதிலே ஏறுவாராம். இப்படி எத்தனையோ பார்த்திருப்பீர்கள். எல்லாமே டுப்சாதான். (அந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பு இதற்கு பிறகுதான். ரயில் சுரங்கத்துக்குள்; போய், பாதி தூரத்தில் ரயில் துரத்தத் தொடங்கும். உயிரையும், காமெராவையும் கையில் பிடித்துக்கொண்டு ஓடுவார்கள். விறுவிறுப்பு. ஆனால் உள்ளூர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ரயில் வரும் நேரத்தை விசாரித்த தகவல் உனக்குத் தேவையில்லை தம்பி.)


ஹவாயில் ஒரு செத்த எரிமலையில் படப்பிடிப்பு நடந்தபோது அது செயற்படுகிறது என காட்ட செயற்கை புகை போட்டார்கள் பத்து பேர். அதுபோல  உத்தியோகபூர்வமாக இரண்டு தடவைகள் படப்பிடிப்பின் இடையி இவர் ஹோட்டலில் இரவை கழித்துள்ளார்.
அவர் படகு கட்ட, பாலம் கட்ட என சூழலிலே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவார் என்பதெலாம் ஓகேதான். சூழலில் அவற்றை போடுவதும் மாமாவின் கூட்டத்தினர்தான்.

ஒரு இடத்துக்கு போக முதலே அந்த இடத்தைப்பற்றி முற்றிலுமாக ஆராய்ந்துவிடுவார்கள். அதன்பின்னர் அதற்கேற்ற மாதிரி பியரின் பாதையை அமைப்பார்கள். பெரும்பாலான வேளைகளில் அவர் போவதாக காட்டப்படும் பாதைகள் உண்மையில் வெவ்வேறு இடங்களாக இருக்கும். ஒட்டுமொத்தமாக உயிர்பிழைக்கும் உத்திகளை காட்டுவது மட்டும்தான் நிகழ்ச்சியின் நோக்கம். பெரும்பாலும் என்பது வீதமான பயணத்திட்டம் முதலே போடப்பட்டதாக இருக்கும்.

இவ்வாறாக கிக்கிலி பிக்கிலி விளையாட்டுக்களையும் கடந்து அந்த நிகழ்ச்சி அத்தனை பெரிய வெற்றி பெற்றதற்கு காரணம் மேலே சொன்ன நாடகமாக்கல் வேலைகள் ஏறத்தாழ ஐந்து வேதம்கூட இல்லை. மீதி எல்லாமே உண்மை. ஒரே ஒரு மனிதனின் அதி உச்சபட்ச மனிதத் திறமைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நிகழ்ச்சி அது. ஒரு வாதத்துக்காக தொண்ணூறு வீதமானது நடிப்புத்தான் என்று எடுத்துக்கொண்டால்கூட மீதி பத்து வீதம் அவர் செய்யும் சாகசத்தை செய்ய யாருமே இல்லை. மனித அசாத்தியங்கள் அவை. அவரைப்பற்றிய வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும், அவர் செய்யும் சாதனைகளின் உண்மை சதவீதம். லண்டன் ஒலிம்பிக்கில் பாலத்திலிருந்து தீபத்துடன் குதிக்க இவரை சும்மாவா தேர்ந்தெடுத்திருக்கும் பிரிட்டன் அரசு?


ஆயா யார் தெரிகிறதா? பிரிட்டிஷ் அரசி எலிசபெத் 2. நாடகம் நடிப்பவருக்கு இந்த மரியாதை கிடைக்குமா? (லொள்ளு விரும்பிகள் பியரின் சப்பாத்தை பாருங்கள். ) பியரை கலாய்க்கும் சிலபல மீம்களை பேஸ்புக்கில் பார்த்திருப்பீர்கள். இதோ மீதி.
அத்துடன் எனக்கு மிகப் பிடித்தது...

இன் நிகழ்ச்சி தொடர்பான காணொளி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}