களை கட்டாத நல்லூர் திருவிழா ~ கல்லா கட்டும் கொள்ளையர்கள்?


நிலவின் ஒளியில் உயிர்த்தெழும் கோபுரம்.

அண்மைக்காலமாக நமக்கு எதை எதிர்பார்த்தாலுமே அது சப்பென்று முடிகிறது. அதுக்காக நல்லூர் கூடவா? என்னவாயிற்று இந்தமுறை? நல்லூர் திருவிழாவை நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் கண்டுகளிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக கால வரையறையற்ற விடுமுறை வேறு வழங்கப்பட்டுள்ள நிலைமையில் இது என்ன கொடுமை?

நல்லூரானின் அருட்கடாட்சத்தை பெற்று வாழ்வில் உய்யும் பொருட்டு அங்கே போகும் உண்மையான பக்தர்கள் எண்ணிக்கை ஐயரையும் சேர்த்து இருபத்தி இரண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த எண்ணிக்கை கடந்த முப்பது வருடமாக மாறவில்லை என்பதுவும் வேறுகதை. ஆனால் நல்லூர் என்பது என்ன? 

'அந்த' இருபத்திரண்டு பேர்.

அது யாழ்ப்பாணத்தின் அடையாளம். சுற்றுலாத்தலம். வரலாறு. ஆண்டுதோறும் உலகெங்கிலும் சிதறிக்கிடக்கும் யாழ்ப்பாணத்தார் சொந்த மண்ணில் குவிவதற்காக நடத்தப்படும் 25 நாள் திருவிழாதான் இலங்கைத் தமிழர்களின் மிக முக்கியமான நிகழ்ச்சி. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு இந்தமுறை ஈ காக்காவைக்கூட காணோமே? இத்தனைக்கும் உலகத்திலுள்ள ‘வெளிநாட்டுக்காரர் எல்லாம் வேறு இங்கேதான் திரிகிறார்கள். அங்கே காணோம். வந்திருக்கும் கொஞ்சநஞ்ச ‘வெளிநாட்டுகாரரும் உடுப்பு என்று எதைஎல்லமோ போட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்நியன், தென்னிலங்கையான், வெள்ளையன் தாறுமாறாக போட்டுக்கொண்டு வந்தால் மன்னிக்கலாம், இங்கே கிடந்தது குப்பை கொட்டிவிட்டு ஓடிப்போன நீங்கள் நல்லூருக்கு – ஒரு ஆலயத்துக்கு – இலங்கையின் கலாசாரத் தலைமையிடத்துக்கு – வரும் அறம் அறியாதவர்களா? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் மனதிலே? சரி, நல்லூருக்கு உள்ளூர்காரர்களில்கூட முக்கால்வாசிப்பேர் சாமி கும்பிட வருவதில்லைதான். கலாசார உடை என்று வேட்டியையோ சேலையையோ சுற்றிக்கொண்டு வரவேண்டாம், அதற்காக இப்படி வேகாத வெயிலுக்குள் கிரிக்கெட் மட்ச் பார்க்கப் போவது போலவா வரவேண்டும்? (இதிலே ஒரு சம்பவம் வேறு மேலும் வெறுப்பேற்றியது. ஏழு பெண்கள் உட்பட்ட பன்னிரண்டு பேர்கொண்ட குழு அங்கே உலாவியிருக்கிறது. பன்னிரண்டு பேருமாக சேர்த்து அணிந்திருந்த ஆடையின் மொத்தப் பரப்பளவு அரை சதுர மீட்டர். நான்கைந்து இளைஞர்கள் அவர்களின் பின்னாலே எதார்த்தமாக நின்று கதைத்துக்கொண்டிருக்கிரார்கள். திடீரென்று அந்த வெளிநாட்டு குழுவின் ஒரு பையன், இவர்களை பார்த்து ஆங்கிலத்தில் ‘எங்களை படம் எடுக்கிறாயா? என்று மிரட்டியிருக்கிறார். நம்மவர்களோ கொந்தளித்துவிட்டார்கள். பிறகு அந்த வெளிநாட்டு குழுவுடன் வந்த உள்ளூர் பெரியவர் சமாதானமாக, படம் எடுத்தீர்களா? என கேட்க, அந்தப் பையன் நம்மவர்களில் ஒருவனை காட்டி ‘இவனட போன்தான், வாங்கி பாருங்கோ என்று கூற, அவன் வெளியே எடுத்து காட்டிய போன், நோக்கியா 1280. அது ஒரு கருப்பு வெள்ளை போன்.)

சனம் இருந்ததோ, இல்லையோ, அறம் இருந்ததோ இல்லையோ, வழக்கம்போல இந்த உற்சவகாலம் நமக்கு கற்பிப்பது அதிகம்.

சைக்கிள் பாதுகாப்பு நிலையங்கள் 

நல்லூர் ஆலய சூழலில் குடியிருப்போரின் சைக்கிள் பாதுகாப்பு மூலமான ஒருமாத வருமானம் ஒரு வருடத்தை கொண்டுநடத்த போதும் என்று நினைகிறேன். ஆனால் அதிலும் நிறைய உள்குத்துக்கள். அவர்கள் தரும் சிட்டையில் மோட்டர் சைக்கிளுக்கு பத்து ரூபாய் எனத்தான் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வாங்குவது இருபது ரூபாய். இது பலவருடங்களாகத்தான் நடக்கிறது. இந்த முறை எதோ நடவடிக்கை எடுத்ததாக சொன்னார்கள்.. ஆனால் மறுபடியும் இருபது ரூபாய்தான் வாங்குகிறார்கள். இப்போதெல்லாம் தலைக்கவசங்களுக்கு இலக்கம் ஒட்டி அதை தனியாக ‘பாதுகாத்து தருகிறார்கள். அதற்குத்தான் தனியாக பத்து ரூபாய்.(ஒரு ஹெல்மெட் ஐந்து ரூபாய்ப்படி இரண்டு.) அப்படியானால் மூன்று லட்சரூபாய் மோட்டர் சைக்கிளுக்கும் முந்நூறு ரூபாய் சட்டிக்கும் ஒரே ரேட்டா? இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா? என்கிறீர்களா? சரிதான். இத்தனைக்கும் மாநகரசபை அனைத்து குத்தகைகளையும் அடிமாட்டு விலைக்குத்தான் வழங்குகிறது. சைக்கிள் பாதுகாப்பு நிலையத்துக்கு என்ன கட்டுப்பணம் தெரியுமா? ஒரு பரப்புக்கு வெறும் 4000 ரூபாய். உற்சவகாலம் மொத்தம் 27 நாளுக்கும் சேர்த்துத்தான் இந்தத் தொகை. (வரி தனி, அத்துடன் காணியை வாடகைக்கு எடுத்தால் அந்த செலவு தனி. அதெல்லாம் சரிதான். சொந்த காணிக்குள் நடத்துபவர்கள், ஒழுங்கைக்குள் எல்லாம் பாதுகாப்பு நிலையம் நடத்துபவர்கள் பற்றியெல்லாம் நினைத்துப் பாருங்கள்.) 

அடேய் தமிழ் ஆர்வலர்களே! சைக்கிள் என்பது ஆங்கில வார்த்தை என்றுவிட்டு “துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு என்று எழுதுகிறீர்களே, துவிச்சக்கரம் என்பது தமிழ் என்று உங்கள் குஞ்சியம்மாவா வகுப்பெடுத்தார்? அது தேவநாகரி. ஈருருளி என்பதுதான் தமிழ் என்று யாரையாவது கேட்டால் சொல்லுவார்கள். ஆனால் சைக்கிள் விட வருபவன் எல்லாம் என்ன, வ உ சிதம்பரமா, கப்பலோட்டிய தமிழன் மாதிரி சைக்கிளோட்டிய தமிழனாக? சைக்கிள் பாதுகாப்பு என்று எழுதித் தொலையுங்கள். அறம் வளர்க்கக் காணோம், தமிழ் வளர்க்கிறார்களாம்.

செருப்பு பாதுகாப்பு

செருப்போடு ஆலயத்துக்குள் போவதை கட்டுப்படுத்த இந்த ஐடியா ஓகேதான். அதற்காக இரண்டு லட்சம் பேர் வரும் கோயிலுக்கு இது என்னப்பா லைபிரரி வாசலில் வைக்கிறமாதிரி? அதுவும் நீங்கள் நிற்பாட்டி வைத்திருக்கிறீர்களே துவாரபாலகர்கள், அவர்கள், இரண்டு சோடி செருப்புக்கு ஒரு சிட்டை தருகிறார்கள். ஆனால் இரண்டு சிட்டைக்கு காசு எடுக்கிறார்கள். பாருங்கள் கொடுமையை, நல்லூரானின் அர்ச்சனைக்காசு ஒரு ரூபாய், செருப்புக்கு பத்து ரூபாய். அடுத்த வருடத்திலிருந்து ஆளுக்கு இரண்டு செருப்பு கொண்டுவருகிறார்கள் என்பதால் (அதுதான் காலுக்கு ஒன்று என்று ஒரு சோடி) செருப்புக்கு பத்து ரூபாய் ஆக்கப்போகிரார்களாம். ஆனா இத்தனையும் கடந்து செருப்புடன் உலாவுகிறார்களே, அவர்கள் அங்கே நிற்கும் சாரணர், போலீசார், மாநகரசபையினர் என யார் கண்ணுக்கும் தட்டுப்படாததன் காரணம் என்ன?

பிச்சை
சுண்டல் விற்கும் சிறுவர்களும், பிச்சை எடுக்கும் 'ஓம் முருகா!'வும். (இருபது ரூபாய்க்கு குறைந்த பிச்சைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.)

அடேய் குருட்டு சனமே, நீ திருந்தவே மாட்டாயா? இந்த பிறப்பில் பாவம் செய்தால் அடுத்த பிறப்பில் கஷ்டப்படுவாய், பிச்சை எடுப்பாய் என்று நீயே கூறுகிறாய், பின்னர் பிச்சைக்காரனுக்கு, அதாவது போன பிறப்பில் பாவம் செய்தவனுக்கு நீ இந்த பிறப்பில் தானம் செய்கிறாய். கேட்டால் புண்ணியம் என்கிறாய். நீ நினைக்கிறாய் பிச்சை போடுவது புண்ணியம் என்று. ஒருவனுக்கு பிச்சை போட்டு, அவனை பிச்சைக்காரனாக்கும் பாவத்தைத்தான் நீ செய்கிறாய். புண்ணியம் யாருக்கு தெரியுமா? உன்னிடம் பிச்சை பெற்று, உன்னை தர்மவானாக்கியவனுக்கு. அதே நல்லூரில் பார்வையிழந்தவர்களின் சங்க நிதிக்காக, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்று பல நல்ல நோக்கங்களுக்காக நிதி சேர்க்கிரார்களே, அதை கண்டுகொள்ளுவார் இல்லை. இயலாதவர்களுக்கு உள்ளவர்கள் உதவுவதில் எந்தத் தவறையும் நான் சொல்லவில்லை. முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிரார்கள்? பாத்திரம் அறிந்து பிச்சை போடச்சொல்லி. நல்லூரில் கைகால் நன்றாக உள்ளவர்கள் எல்லாம் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு பிச்சை போட்டு போட்டு, அவர்களை உழைப்பதைப்பற்றியே சிந்திக்கவிடாமல் தடுக்கிறீர்கள். இது பாவம் இல்லையா? அதே நல்லூரில் சிறுவர்கள், இயலாதவர்கள் சிலர் சக்கர நாற்காலிகளில் சென்று பலூன், கச்சான் விற்கிறார்கள். எல்லாம் ஒழுங்காக உள்ளவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.

கடைகள்

நல்லூரில் குருக்கள் குளத்துக்கு அருகே கட்டிடமாக  உள்ள குளிர்களிக் கடையின் வருமானத்தைப்ப்றி என்ன நினைக்கிறீர்கள்? திருவிழா நாளில் அங்கே சென்று சாப்பிடும் யாருமே ஒருமுறை கணக்குப் போட்டுப் பார்த்திருப்பீர்கள். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் விசேட கடைகள் குத்தகை மூலம் கிடைக்கின்ற வருமானம் எல்லாமே யாழ் மாநகர சபைக்குரியது. அப்படி மாநகர சபை வருடம் ஒன்றுக்கு சேகரிக்கும்  தொகை சுமார் ஒரு கோடி ரூபாய். பத்து மில்லியன். அனைத்துக் கடைகளுக்குரய் நிலமும் ஏலத்தில் விடப்படுகிறது. மிகச்சிறிய தொகையாக தொடங்கும் ஏலத்தொகை முடிவின்போது உச்சத்தை தொடுகிறது.
 
27 (25+2) நாட்களுக்குமான குத்தகைத்தொகை

#இனிப்புப் பொருட்கள் விற்கும் கடைகள்:       ரூ.120,000 – 150,000
#கச்சான் கடைகள்:      ரூ. 60,000(பின்வீதி), 20,000(ஏனைய இடங்கள்)
#அழகுசாதன, விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள்:    ரூ. 60,000
#நிறுவனங்களின் stall கள்:     ரூ. 100,00 - 120,000
#துணிக்கடைகள்:     ரூ. 100,000
இத்துடன் 14% வரி தனி.
 

 

 

கோயில்


கோயிலின் கம்பீரத்தை மிக்கவும் கூட்டிக்காட்டுகிறது தெற்குப்புற கோபுரம். சந்தன நிறத்தில் அத்தனை அழகு. நிலவொளியில் சந்தனக் கட்டைகளாலேயே செய்தது போன்ற தோற்றம். கோயிலே திசைபெயர்ந்து தென்புறம் வந்தது போன்ற உணர்வு. புதிதாகப் போடப்பட்ட வீதிகள், பழைய மதில்கள் இடிக்கப்பட்டு பரந்த வெளியாக்கப்பட்ட கிழக்குப்பகுதி என கோயில் படு அமர்க்களம். ஆனால் வழக்கத்துக்குமாறாக சனம்தான் ர