wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-05

இது 5 ஆவது பதிவு.ரெஸ்லிங்க்கில் இரத்தம் வருவது என்பதைப்பற்றி முன்பே ஓரளவுக்கு பார்த்திருந்தோம்.இரத்தம் வருவதற்காக கப்ஸூல்களைப்பயன்படுத்துகின்றார்கள் என்று.இதை ஒரு பேட்டியின்போது காலி உறுதிப்படுத்தியிருந்தார்.அதிகளவான மச்களில் வரும் இரத்தம் கப்ஸூல்கள் மூலம் வரவழைக்கப்படுகின்றன என்று.காலியின் பேட்டிஇதன் முன்னைய பதிவுக்கு இதை கிளிக் செய்யவும்


ஆனால் மச்களில் உண்மையாகவே இரத்தம் வரவழைக்கப்பட்டும் இருக்கின்றன.ஆனால் எவ்வாறு இவர்கள் கதிரை மேசைகளால் அடித்துவந்த இரத்தமா? இல்லை.இவர்களே தமது உடல்களை பிளேட்களால் காயப்படுத்திக்கொள்கின்றார்கள்.இதற்கு இவர்களுக்கு பிளேட்டை வழங்குபவர் வேறுயாருமல்ல சாட்சாத் ரெஃப்ரிதான்.
கீழே பாருங்கள் அதில் ஒருவரை மற்றவர் மேடையின் மூலையில் இருக்கும் கம்பிமுனைமீது தள்ளிவிடுவது போல் தோன்றினாலும் உண்மையில் என்ன நடக்கின்றது? அவருக்கு அடி படுவதே இல்லை.








ஆனால் இப்படியான தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னராக அடி வாங்குபவருக்கு பிளேட் ரெஃப்ரியால் வழங்கப்படுகின்றது.



இல் இவ்வாறு வழங்கப்பட்ட பிளேட் மேடையில் தவறவிடப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி கீழே



கிறிஸ்ட் ஜரிக்கோ என்பவருக்கு ரெஃப்ரியால் பிளேட்வழங்கப்படுதல்


காலி அண்டர்டேக்கருடன் மோதியதால் காலியின் வாயால் இரத்தம் வந்தது.அந்த இரத்தம் காலியால் கப்ஸூல் விழுங்கப்பட்டதால் ஏற்பட்டது.அதற்கான வீடியோ




wwe இல் ஒருவர் மற்றயவருக்கு அடிக்கும் அடிகள் போலியாவவை என்று எமக்குத்தெரியும்.ஆனால் அடி கொடுப்பது போல் கையை அல்லது காலை உடலுக்கு மிக அருகாமையிலாவது கொண்டு செல்வார்கள் ஆனால் அவ்வாறு இல்லாமல் வெளிப்படையாகவே அடிவாங்காமல் எஃபெக்டு கொடுத்தசந்தர்ப்பங்கள் கீழே..அய்யோ..அய்யோ...(வடிவேல் பாணியில்)



ரண்டி வேஸ் சீமஸ்


ரெஸ்லிங்கின் பிரபலமான அடுத்த தாக்குதல் "பக் பிறேக்கர்" உக்கிய மரத்தை காலால் முறிப்பதைப்போல தம்மை நோக்கி ஓடிவருபவரை தூக்கி அவரது முதுகெலும்பை காலால் பதம்பார்த்தல்.

ஆனால் இதனால் அடிவாங்கியவரின் முதுகில் வலி இருக்காது கால்களிலேதான் இருக்கும்.காரணம் இவ்வாறு அடி வாங்கும்போது அடி வாங்குபவரின் கால்கள்தான் முதலில் தரையை அடைகின்றன. இவர் தனது நிறையை கால்களின்மீதே செலுத்துகின்றார்.ஆனால் நாம் அவற்றை கவனிக்கத்தவறி அவரின் கத்தலையும் அவரது முதுகையும் கவனித்துக்கொண்டிருப்போம்.



சிங்காரா என்பவர் அண்மயில் ரெஸ்லிங்கிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவர் ரேமஸ்ரீறியோ மாதிரி இருப்பார்.மேடைக்கு இவர் வரும் ஸ்டையில்தான் அசத்தலாக இருக்கும் மேடையை நோக்கி ஓடிவந்து வந்தவேகத்தில் மேடையினருகில் நின்று 8 அடிக்கு மேலே இருக்கும் கயிற்றின் மேலாக உள்ளே பாய்வார்.எப்படிப்பாய்கின்றார்?

இப்படித்தான் பாய்கின்றார்...


அடுத்த பதிவில் அண்டர்டேக்கர்...

தொடரும்.........................
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}