யாழ் மாணவரின் தலை விதி-02


கெமிஸ்ரி பாடத்திற்கு குக்கரை தெரிவுசெய்திருந்தான் அருள்.குக்கரை தெரிவு செய்வதற்கு இன்னொரு கிளுகிளுப்பான காரணமும் இருந்தது.குக்கர் டபிள் மீனிங்கில் பாடம் நடாத்துவார்.அவர் என்னவோ அப்பாவித்தனமாக பால் குடி குழந்தை மாதிரித்தான் முகத்தை வைத்துக்கொண்டு பேசுவார் பாடம் நடத்துவார்.ஆனால் கவனித்தால் எல்லாம் வெளிப்படையாகவே விளங்கிவிடும். அப்பொழுது சுயன்ஸ்கோலில் கற்பிக்காத வெளி இடங்களில் கற்பிக்கும் பிரபலமான ஆசிரியர்களின் லிஸ்ட்டைப்பற்றி எந்தவிபரமும் தெரியாது. (காலா காலமாக சுயன்ஸ்கோல் மாணவர்களின் நிலைஇதுதான்.ஆனால் நாட்கள் நகர நகர ஏனைய மாணவர்களால் ஏனைய வெளி ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவிடுவார்கள்.)


இதன் முதலாவது பகுதியுடன் இதைதொடரவும்....முன்னைய பகுதிக்கு இங்கே கிளிக்


அடுத்த பாடமான பயோவிற்கு ஆசிரியரை தெரிவு செய்யவேண்டும்.யாரை தெரிவு செய்வது என்று பெயர்களைத்தேடியபோது ஆரம்பத்தில் கனசீலன் என்ற ஆசிரியர் இருந்தார்.அவர் மிகவும் திறமையானவர், நோட்ஸ் எடுக்காமலே அவர் கற்பிப்பதைக்கேட்டாலே போதும்.ஆனால் கண்டிப்பானவர் தற்பொழுது குடும்ப விவகாரம் காரணமாக வெளி நாடு சென்றுள்ளார் என்று சில செப்பேடுகள் அருளுக்கு கனசீலன் பற்றி ஆதாரம் காட்டின.ஆனால் தற்பொழுது கங்காரு சேர்தான் கற்பித்துக்கொண்டிருந்தார்.அதனால் அருள் கங்காருசேரையே தெரிவு செய்திருந்தான்.சுயன்ஸ் கோல் ஆரம்பித்த்தில் இருந்து சுயன்ஸ்கோலில் எழுதப்படாத பல சட்டங்கள் இருந்தன.அதில் ஒன்று 3 பாடங்களும் ஒருவர் கட்டாயம் எடுக்கவேண்டும்.ஒரு பாடத்தையோ அல்லது இரு பாடத்தையோ எடுக்க முடியாது.அப்படி எடுப்பதானால் இங்கே வராத நான்க என்ன உங்களை வெத்தில பாக்கு வச்சாகூப்பிடுறம்? வாறவன் வா இல்லாதவன் நாசமாய்ப்போ!!! ஆனா ஒண்டு நீங்க ஏல் பெயில் விட்டு நடு றொட்டில நிப்பியள்.அப்ப செக்கண்ட் ஸை எடுக்க இங்க தான் வருவீங்கள்.அப்ப தெரியும்.

நிர்வாகி அருளின் சாபம் அனைவருக்கும்முன்னால் காதில்கேட்கும்.மருள் பழைய புராணக்கதைகளில் வரும் பத்தினி தெய்வங்கள் சாபமிடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கின்றான்.ஆனால் ஒரு ஆண் பத்தினி தெய்வத்தின் சாபமிடுவதை அன்றுதான் பார்த்தான்.அருளின் நண்பன் டோர்ன் கூறினான் ஒருவேளை  இவன் பச்ச வாளையை பத்தி எரியவச்சிருப்பானோ?
மருள் கூறினான் சே சே அவனால ஒரு தீப்பெட்டி கூட பத்தவைக்கமுடியாது.

கடுப்பில் கூறிய வார்த்தைகள் இவை.ஆண்கள் என்றாலாவது போய்க்கேட்பார்கள் சற்றுவிவாதிப்பார்கள் ஒரு பாடம் எடுப்பதற்கு.ஆனால் பெண்கள் பாவம் அவர்கள் மருள் ஏதாவது கூறிவிடுவானோ என்ற பயத்தில் எதற்கும் தலையை ஆட்டுவதோடு சரி.தன் சக மாணவன் ஒருவன் போய்க்கேட்டதற்குத்தான் அருள் ஆண் பெண் அனைவருக்கும் முன் அவனை அவமானப்படுத்தினார்.அவமானப்பட்டவனை அருளிற்கு நன்றாக தெரியும் ஒரே ஊர் தந்தை இல்லை தாய்தான் வேலை செய்து குடும்பத்தை கவனித்தாள்.அவன் ஏழை போய் ஒரு பாடம் எடுக்கலாம என்றதற்கு பத்தினி அருளின் சாபம் கிடைத்தது. அவனிடம் சென்று டேய் எனக்கு கஸ்ரம் எண்டு சொல்லிப்பாற்றா சிலவேளை மருள் ஒரு பாடம் எடுக்க ஓம் எண்டு சொல்லுவான்.இதற்கு அவன் நான் ஏற்கனவே கேட்டனாண்டா ஆனா கமரன் சேர் அரத்திரன் சேர் எண்டு எல்லாரிட்டையும் சைன் வாங்கட்டாம் அதோட கிராமசேவை அதிகாரிட்டையும் சைன் வாங்கட்டாம்.அது என்னால் முடியாது.

தான் ஒரு ஏழை என்று சேர்ட்டிபிக்கட் வேண்டவோ பலரிடம் கூறி முறையிடவோ அவன் தன்மானம் தடுத்தது.அவன் கூனிக்குறிகி சென்றுவிட்டான்.இவற்றைப்பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் சல சலப்புக்கேட்டது...இவ்வளவு உழைக்கிறாங்கள் தானே ஒருதனுக்குமட்டும் ஒரு பாடம் எடுக்கவிட்டா என்ன?வேச மக்கள் ஏன் இப்படி செய்யுறாங்கள்?
ஏழை மாணவனுக்கு உதவி  செய்தால் உதவிபெற்ற மாணவனின் போட்டோவை மறைக்கும் அல்லது செய்த உதவியை மறைக்கும் செய்திகளைத்தான் அருள் இதுவரை அறிந்திருந்தான்

(லைனில் பல மாணவர்கள் அட்மிஸன் வாங்க நின்றிருந்தார்கள்.)
ஆனால் அந்தவார்த்தை நிர்வாகி மருளிற்குக்கேட்டுவிட்டது.உடனே கத்திக்கொண்டு கொட்டிலின்வெளியே வந்தார் யார்ரா கதைக்கிறது?எவண்டா கதைச்சயன் தைரியமிருந்தா வெளில வாடா..சொன்னவன் நடு றொட்டிலதாண்டா நிப்பான்...உங்களுக்கு மட்டும்தான் ஆக்களை தெரியுமே(ரௌடிகளை) எங்களுக்கும் தெரியும்...எல்லாரையும் தெரிஞ்சுதாண்டா நடத்துறம்.....ஒரு வேளை நிர்வாகி மருள் கசாப்புக்கடையில் ஆடு வெட்டுபவனாக இருந்திருப்பானோ என்றுகூட அருள் யோசித்தான்.இந்த நிர்வாகி அருளின் தலைமையில்தான் பிஸிக்ஸ்,கெமிஸ்ரி போன்றபாடங்கள் சுயன்ஸ் கோலில் நடைபெறுகிறதா?என்ன கொடுமை?

நிர்வாகி மருளைப்போல் இன்னும் பல ஜீவன்கள் சுயன்ஸ்கோலின் உள்ளே இருந்தன. மாணவர்களது கார்ட்டில் பேமெண்டை வாங்கி சைன் வைக்கும் சில பெண்கிளார்க்கள்.அவர்கள் மாணவர்களை மனித ஜந்துக்களாகவே மதிப்பதில்லை..ஏய் அங்கபோ இங்கே போ என்று ஏய்ப்பதில் அவ்வளவு பிரியம்.அந்த கிளார்க் வேலையில் இருக்கும்பெண்கள் ஏதோ ஐஸ்வர்யா ரேஞ்சில் இருந்தால் கடைசி ஐஸ்வர்யாவின் பாட்டி சாயலில் இருந்தால் கூட அருள் மன்னித்திருப்பான்.ஆனால் எல்லாமே ஈயம் பித்தளை அலுமினியம் ஓட்டை ஒடிசல்கள்தான் இருந்தன மனதளவில் ஐசுவின் தங்கை நினைப்பில்.

இவர்கள்தான் இப்படியென்றால் பாலா,சசி என்ற 2 செக்கிகளுக்கு மாணவர்கள் மத்தியில் மரணபயம் இருந்தது.இவர்கள் சுயன்ஸ்கோல் ஆரம்பித்த காலம் முதல் சுயன்ஸ்கோலை ஆண்டவர்கள் என்று சுவடிகளும் கல்வெட்டுகளும் அருளிற்கு குறிப்புரைத்தன.வகுப்பில்  மாணவர்களை அமைதியாகபேணுவதுதான் இவர்களது முக்கிய கடமை அத்துடன் ஆசிரியருக்கு டஸ்ரர் எடுத்துக்கொடுப்பது பரீட்சைத்தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்தல் போன்றபணிகளை செய்பவர்கள்.இவர்கள் முக்கியமாக மாணவர்களை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டார்கள்.ஆசிரியர்கள் இல்லாத நேரம் மாணவர்கள் கதைக்கும்போது பெரிய சலசலப்பாகத்தான் கேட்கும் காரணம் குறைந்தபட்சம் 500 மாணவர்களாவது ஓலைக்குடிலில் இருப்பார்கள்.எவனாவது கத்திவிடுவான் மாணவர்களிடம் சசி வந்து கேட்பார் யார் கத்தியது என்று?மாணவர்கள் காட்டிக்கொடுக்கமாட்டார்கள்.

உடனே சசி தன் வழக்கமான புராணத்தை ஆரம்பித்துவிடுவான்.500 மாணவர்கள் மத்தியில் அதுவும் பெண்களும் இருக்கத்தக்கதாக சசி என்ற செக்கியின் பேச்சு இப்படித்தான் இருக்கும்...கத்தினவன் எப்படி பிறந்தவன் எண்டு எனக்கு தெரியும்தானே....ரோட்டில நாயள் இழுபடுறது மாதிரி இழுபட்டு பிறந்தவன்.போய் உண்ட அம்மாட்ட கேள்.....
மாணவர்கள் மத்தியில் எவனாவது பேசக்கூடிய பேச்சா இது?பெண்களும் அல்லவா இருக்கின்றார்கள்.அருள் பல தடவைகள் மனம்வெதும்பி இருக்கின்றான் இதற்காக.புதிதாய் கற்கவரும் மாணவர்கள் இவர்களது அடி மாடுகள்.அடுத்து பாலா என்ற செக்கி பெரும்பாலான நேரங்களில் குடித்துவிட்டுத்தான் வகுப்பறைகளில் நிற்பார்.இவர் பெண்களுடன் சேட்டைவிடுவதில் அலாதிப்பிரியம் இதற்காக ஒவ்வொரு பச் பச்சாக மறக்காமல் நையைப்புடைக்கப்படுவார்.இவர் புதிதாக வந்த பச் மாணவியை தடியால் அடித்துள்ளார்.அருளின் நண்பனின் தங்கைதான் அடி வாங்கியவள். நண்பன் பாலாவை நொங்கெடுத்துவிட்டான்.இத்துடன் பாலா என்ற செக்கி இப்படியும் மிரட்டுவதுண்டு “ஆக பிரச்சனை எண்டால் காட்டை கிழிச்சு வெளில அனுப்புவன் இங்க கமரன்சேர் அரத்தின் சேர் எல்லாம் என்னை ஒண்டும் கேக்கமாட்டினம்.கேட்டு கேள்வி இல்லாம கிழிச்சு அனுப்புவன்.இப்படியான சம்பவங்கள் சுயன்ஸ்கோலில் வழமையான நிகழ்வுகள்தான்.சுயன்ஸ்கோலில் சேர்ந்த்தும் கார்ட் (அனுமதி அட்டை)ஒன்று தருவார்கள் அதை கொண்டுவந்தால்தான் உள்ளே அனுமதி கிடைக்கும்.ஏ.எல் லின் 3 வருட சுயன்ஸ்கோல் வாழ்க்கையில் மாணவர்கள் காட்டை தவறுதலாக வீட்டில் விட்டுவந்தால் தொலைந்தார்கள்.

 இந்த செக்கிகள் விடவே மாட்டார்கள். 2 வருடமாக பார்க்கும் மூஞ்சி என்றாலும் இரக்கமே இருக்காது.நிர்வாகத்திடம் சென்று காரணம் கூறவேண்டும்.அல்லது ஆசிரியரிடம் அனுமதி பெறவேண்டும் காட் செக் செய்வதெ கற்காத ஏனையோர் களவாக வரக்கூடாது என்பதற்காக.ஆனால் 2 வருடம் தொடர்ந்து வருபவனுக்குக்கூட அதே நிலைதான்.ஆசிரியர் வரும்வரை வாசலில் காவல் நிற்கவேண்டும் கற்பிப்பவர் கமரன் ஆசிரியராக இருந்தால் 9.30 கிளாஸிற்கு 11 மணிக்குத்தான் வருவார் அதுவரை வெளியே நாய் மாதிரி நிற்கவேண்டிதயதுதான்.சுயன்ஸ்கோலில் ஒவ்வொருபாடம் முடிந்ததும் 20 நிமிட இடைவேளைகிடைக்கும்.அது சட்டரீதியான இடைவேளை அல்ல அடுத்த ஆசிரியர்வருவதற்கு 30 நிமிடம் லேட் ஆகும் அதைத்தான் மாணவர்கள் இடைவேளையாகப்பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

அதற்குள் மாணவர்கள் சென்று நீர் அருந்திவிட்டு வரலாம்.ஏதோ சுயன்ஸ்கோல் நீர் வசதி மாணவர்களுக்கு இல்லை.ஆசிரியர்களுக்கு மாணவிகளுக்கு மட்டும்தான்.மாணவர்கள் அருகாமையில் இருக்கும் கோவில் கிணற்றில்அல்லது பைப்பில் நீரைக்குடிக்கவேண்டியதுதான்.

ஒரு பெரிய நீண்டகொட்டிலில்தான் வகுப்புக்கள் நடைபெறும்.அண்ணளவாக 500ற்குகுறையாத மாணவர்கள் ஒரே நேரத்தில் நெருக்கமாக இருந்து கற்பார்கள்.பிந்திவந்தாலோ சரியாக வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்திற்கு வந்தாலோ இடம் கிடைப்பது கடினம்.அதனால் மாணவர்கள் முன்பேவந்து கொப்பியைப்போட்டு இடம்பிடித்துவிடுவார்கள்.மாணவர்கள் அமரும் வாங்கு,மேசைகள்,பனை மர சிலாகைகளால் ஆனவை.பனைமர சிலாகைகளில் சாதாரண மரப்பலகையை ஆணியால் அறைந்து மேசை வாங்கு அமைக்கப்பட்டிருக்கும்.இதனால் வகுப்பறையின் பின்னால் இருக்கும் பல மேசைகள் ஒழுங்கில்லாத பலகைகளால் கோணல் மாணலாக மேசைகள் வாங்கில்கள் செய்யப்பட்டிருக்கும்.இதனால் பிற்பகுதியின் அரைவாசிக்கு மட்டுமே பல நேரங்களில் இடம் கிடைக்கும்.சுவாசிப்பது சில வேளைகளில் கடினம்.

 சுற்றிவர தகரங்களால் வேயப்பட்டிருப்பதால் வெக்கை அள்ளி எறியும்.500 மாணவர்களது சுவாசம் வெளியே செல்வதும் கடினம்.பல பெண்கள் இதனால் மயங்கிவிழுந்துள்ளார்கள் இதுவும் வழக்கமான ஒன்றுதான் சில கொட்டகைகள் மட்டும்தான் திறந்தவெளியாக இருக்கும்.பல மாணவர்கள் கற்கும் தனியார் கல்வி நிலையத்தில் பெண் பணியாளர்கள் இல்லை.பெண்கள் மயங்கிவிழுந்தாலோ அல்லது வெறு பிரச்சனைகள் என்றாலோ மாணவியருக்கு அவர்களது நண்பிகளே உதவி.மயங்கிவிழுந்தால் அப்படியே வாங்குபலகையைக்கழற்றி நண்பிகள் தூக்கி செல்வார்கள்.ஒரு பச்சில் 1200 பேர்வரை கற்கும் சுயன்ஸ்கோலில் மொத்தமாணவர்களுக்காக ஒரே ஒரு மலசலகூடம்தான் அமைக்கப்பட்டுள்ளது.அதுவும் பெண்களுக்காக மட்டுமே.ஆண்கள் என்னசெய்வது?புதருக்குள் செம்புடனா நுழையமுடியும்? இப்படி 1200 பேருக்கு ஒரு மலசலகூடம்.போதிய காற்றுவசதி இல்லை இவ்வாறான தகமைகளுடன் ஒரு கல்வி நிலையம் இயங்க  நகரசபை எப்படி அனுமதியளித்தது என்று தெரியவில்லை.ஒரு கழிப்பறையின் காரணமாக அருளும் அவனது  நண்பர்களும் காளியேதுணைஎன்று பாரத்தை காளிமீது போட்டார்கள்.


சுயன்ஸ்கோல் அருகில் இருக்கும் தேர் முட்டிக்குத்தான் மாணவர்கள் மூத்ராபிஸெகம் செய்தார்கள்.அருகில் இருக்கும் பெருமாள் கூட இதற்கு வஞ்சனை இல்லாமல் உதவி செய்ததுண்டு.ரத்தங்களினால் அபிடேகங்களுக்கு பழக்கப்பட்ட கடவுள்களாதலால் மூத்ராபிடேகங்கள் எல்லாம்.கடவுள்களைப்பாதிக்காது.குறிப்பாக இரத்தத்துடன் ஒப்பிடுகையில் இது புனித நீர்தான் கடவுளருக்கு.

தலைவிதி தொடரும்...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}