9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன?-03

கடத்தப்பட்ட இறுதிவிமானம் யுனைட்ரெட் 93 காலை 88.42.42 ற்கு 8.42 நியூஜெர்ஸி விமான நிலையத்தில்  இருந்து சான்ஸ்பிரான்ஸிஸ்கோவிமான நிலையத்திற்கு போவதற்காகப்புறப்பட்டது.
ஏனைய 3 விமானங்களுள் நடந்தவற்றைமுதல் பதிவில் பார்த்திருந்தோம் அதைப்படிப்பதற்கு இங்கேகிளிக்.
இவ்விமானத்திற்கு கப்டனாக இருந்தவர் ஜேசன் டால்,முதன்மை அதிகாரியாக இருந்தவர் லியோரி ஹோமர்.கடத்தல்காரர்கள் உட்பட மொத்தம் 37 பயணிகள் அவ்விமானத்தில் இருந்தார்கள்.8.25ற்குப்புறப்படவேண்டியிருந்த இவ்விமானம் நெரிசல் காரணமாக 8.42ற்குத்தான் புறப்பட்டது.இவ்விமானம் விமானத்தளத்தில் இருந்து புறப்படும்வரை ஏனையவிமான்ங்கள் கடத்தப்பட்ட விடயம் விமானத்தளத்திற்கு எட்டியிருக்கவில்லை.9 மணிக்குத்தான் விமானங்கள் கடத்தப்பட்டவிடயம் நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்டது.


ஆனால் 8.25 அளவிலேயே குழப்பமான ஒரு தகவல் பொஸ்ரன் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்குகிடைத்திருந்தது.அமெரிக்கன் 11 விமானத்தை கைப்பற்றியதும் முகமது அட்டாவினால்  பயணிகளை பயப்படுத்துவதற்காக கூறியவார்த்தைகளேஅவை. “We have some planes “ விமானம்கடத்தப்பட்டதே அதிகாரிகளுக்கு தெரிந்திருக்காததால் அதிகாரிகளுக்கு விடயம் விளங்கியிருக்கவில்லை.விளங்கியிருந்தால் விமானம்புறப்படுவதை தடுத்திருக்கலாம் ஏனெனில் விமானம் 8.42ற்குத்தான் புறப்பட்டது.
யுனைட்ரெட் ஏர்லைன்ஸ் அதிகாரியான எட்பாலிங்கர் யுனைட்ரெட் 93 விமானத்தின் விமானிகளுக்கு ஒரு உத்தரவை 9.19ற்கு அனுப்பினார்.காக்பிக்ட் ஜாக்கரதை 2 விமானங்கள் கடத்தப்பட்டு இரட்டைக்கோபுரங்கள் மீது மோதப்பட்டிருக்கின்றன.ஆனால் துரதிஷடவசமாக விமானிகளுக்கு இச்செய்தி 9.23  வரைவந்துசேர்ந்திருக்கவில்லை 9.24 ற்கு இச்செய்தி விமானத்தை அடைந்திருந்தது.அடுத்த 4 நிமிடத்திற்குள் விமானம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டது.


ஓஹயா பகுதியில் 35 000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த இவ்விமானம் சடுதியாக 700 அடி உயரத்திற்கு தனது பறக்கும் உயரத்தைக்குறைத்துக்கொண்டது.ரேடியோமூலம் பைலட் உயிருக்குபோராடிய அலறல்குரல் கட்டுப்பாட்டு நிலையத்திற்குக்கேட்டது.யுனைட்ரெட் 93 இல் அன்று பயணம்செய்த பயணிகள் 33பேர்தான் அவர்களுடன் 4 கடத்தல்காரர்கள் ஆனால் வழக்கமாக இவ்வளவு குறைவான பயணிகளுடன் விமானம் பறப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை.செப்டெம்பர் 11 இல் கடத்தப்பட்ட ஏனைய 3 விமானங்களிலும் 5 கடத்தல்காரர்கள் இருந்தார்கள்.அத்துடன் விமானம் புறப்பட்ட அரைமணி நேரத்திற்குள்ளாகவே விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.ஆனால் இவ்விமானம் மட்டும் புறப்பட்டு 46 நிமிடங்களுக்குப்பின்னர்தான் கடத்தப்பட்டிருக்கின்றது.ஆனால் விமானத்தில் பயணம் செய்தபயணிகள் கடத்தல்காரர்கள் நால்வர் அல்ல மூவர் என்று கூறினார்கள்.அது சற்றுக்குழப்பமாகவே இருந்தது.

யுனைட்ரெட் 93 ஐ கைப்பற்றிய தீவிரவாதிகள்

பயணிகள் பகுதியில் அல்லாமல் காக்பிட்டுக்கு அருகில் ஒரு ஸ்பெஸல் இருக்கை உண்டு.இது சில வி.ஐ.பிக்களுக்காக ஒதுக்கப்பட்டது.யாரும் அமர்ந்து செல்லமுடியாது.ஒரு வேளைஒரு கடத்தல்காரன் இதில் அமர்ந்திருந்தால் பயணிகளுக்குத்தெரிந்திருக்காது.ஆனால் விமானியின் அனுமதி இன்றி இவ்விருக்கையில் யாரும் அமரமுடியாது.விமானிக்கு தெரிந்துதான் இதில் அமரமுடியும்.இறுதிவரையில் இவ்விடயம் குழப்பமாகவே இருந்துவருகின்றது.


காக்பிட்டை உடைத்து உள்ளே சென்றஜாரா என்ற கடத்தல்காரன் ஒருவேளை உள்ளேயேதங்கியிருக்கலாம்.கடத்தல் காரர்களில் விமானம் ஓட்டத்தெரிந்த ஒரே ஒரு நபர் ஜாராதான்.இதனால் பயணிகள் 3 கடத்தல்காரர்கள் என்று கூறியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
9.32 ற்கு ஜாரா ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
தயவுசெய்து உட்காருங்கள் நாங்கள் விமானத்தில் வெடிகுண்டுவைத்திருக்கின்றோம் பிரச்சனைசெய்யாமல் உட்காருங்கள்
இதன்பின்னர் விமானத்தின் பயணத்திசை மாற்றப்பட்டது.
பயணத்திசைமாற்றப்படல்


இது நடந்துகொண்டிருக்கையில் விமானத்தில் இருந்தபயணிகளுக்கு தமது உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புவந்த்து.இவர்களும் தமது உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்கள்.இதனால் இரட்டைக்கோபுரத்தின்மீது விமான்ங்கள் மோதியவிடயம் விமானத்திலிருந்த அனைவருக்கும் தெரியவந்தது.வித்தியாசம் என்னவெனில் மற்றைய 3 விமானங்களிலும் பயணிகள் இரகசியமாகவே தொடர்புகளை ஏற்படுத்தினார்கள்.ஆனால் இவ்விமானத்தில் தீவிரவாதிகள் தொடர்புகொண்டபயணிகளைத்தாக்கவோ தடுக்கவோ இல்லை.


இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டவிடயம் தெரிந்து எம்மை இனித்தடுக்கமுடியாது. தடுத்தும் பிரயோசினம் இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.குறைந்தது 10 பயணிகளாவது தரைக்கு தொடர்புகொண்டிருக்கின்றார்கள்.4 விமான்ங்களிலும் கடத்தல்காரர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவே மிரட்டியுள்ளார்கள்.ஆனால் யாரிடமும் வெடிகுண்டு இல்லை.பயணிகளை மிரட்டுவதற்காகவே அவ்வாறு கூறியிருக்கின்றார்கள்.கடத்தப்பட்ட 4 விமானத்தில் இருந்து தொடர்புகொண்ட எந்தப்பயணியும் கடத்தல்காரர்கள் துப்பாக்கி வைத்திருக்கின்றார்கள் என்று கூறவில்லை.
Jason Dahl (43)
The Pilot on
United Airlines
Flight 93


ஏனையவிமானங்களுக்கு நடந்தகதி தெரிந்ததால் விமானத்தில் இருந்தவர்கள் கடத்தல்காரர்களுடன் போராட முடிவு செய்திருக்கின்றார்கள்.ஏற்கனவே இரண்டுவிமானங்கள் கடத்தப்பட்டு மோதப்பட்டன.இதுவும் அப்படியான ஒரு நோக்கத்திற்காக கடத்தப்பட்டிருக்கும் எப்படியும் உயிர்போகப்போகின்றது.எதற்கும்தாம் சிறு முயற்சிசெய்யப்போகின்றோம் என்று தரையுடன் தொடர்புகொண்டவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
9.57 வரை மிகபதட்டத்துடன் தரையுடன் தொடர்பைஏற்படுத்திய பயணிகள் அத்துடன் தொடர்பைத்துண்டித்தார்கள்.ஒருவர்மட்டும் கடைசியாக சொன்னார் “சரி நான் போனை வைக்கின்றேன்.எல்லோரும் கடத்தல்காரர்களைதாக்குவதற்கு ஓடுகின்றார்கள் நானும் போகின்றேன் பாய்


இதன்பிறகு நடந்தவை காக்பிக்ட் ரக்கோடர்மூலம் அறியப்பட்டது.அதில் பலர் அலறும் சத்தமும் பொருட்கள் உடையும் சத்தம்,ஆக்ரோஷமான குரல்கள்,ஐயோ என்ற அலறல்கள் கேட்டன(பின்னர் இக்குரல்கள் யார் யாருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டினார்கள்)
நிலைமைகையைமீறிப்போகின்றதை உணர்ந்த ஜாரா விமானத்தை தாறுமாறாக ஓட்டத்தொடங்கினான்.காக்பிட்டிற்கு காவலுக்காக நிறுத்திவைத்திருந்த கடத்தல்காரனை பயணிகள் பிளந்துகட்டிவிட்டார்கள்.
9.58 ற்கு காக்பிட்டை அடைத்துவிடுமாறு ஜாரா உத்தரவிட்டான்.ஆனாலும் பயணிகள் அடங்கவில்லை.எனவே விமானத்தை மேலும் கீழுமாக ஓட்டினான் ஜாரா.


இப்படிப்பறத்தல் மிகவும் ஆபத்தானது.இதன்போது பயணிகள் அலறும்சத்தம் கேட்டது.வெடிகுண்டுவைத்திருக்கின்றோம் என்று மிரட்ட எண்ணியிருக்கின்றார்கள் ஆனால் பயனில்லை நாங்கள் இறக்கத்தயார் ஆனால் போராட்டத்தின் இறுதியில்தான் இறப்போம் என ஆக்கிரோஷமாக கத்தினார்கள் பயணிகள்.பயணிகள் காக்பிட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடத்தல்காரர்களை அடித்து நொருக்கும் வெறியில் இருந்தார்கள்.
தீவிரவாதிகளுக்கு எதிராகபோராடிய பயணிகள்

இனித்தாக்குப்பிடிக்கமுடியாது என்ற நிலைக்குவந்தஜாரா தன் சக கூட்டாளியிடம் இறக்கிவிடவா?இவ்வளவுதான் முடியுமா?என்று என்று கேட்க ஆம் இதுதான் எல்லை இறக்கிவிடு தாக்குப்பிடிக்கமுடியுமென்று தோன்றவில்லை என அவன் கூறினான்.அவ்வளவுதான் விமானம் சடுதியாக தரையை நோக்கிப்பாய்ந்த்து.அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அந்த சத்தத்துடன் ஒட்டுமொத்த பயணிகளின் சத்தத்துடன் விமானம் தரையிலேமோதி நொருங்கியது.

சரியாக இன்னும் 20 நிமிட பறக்கும் தூரத்தில்தான் வெள்ளைமாளிகை இருந்தது.இதுதான் அவர்களது இலக்காகவும் இருந்தது.ஆனால் வீரம்மிக்க 33 பயணிகளின் போராட்டத்தினால்  இவர்களின் திட்டம் தோல்வியடைந்தது.செப்டெம்பர் 11 இல் கடத்தப்பட்ட 4 விமானங்களில் இந்த விமானக்கடத்தல் மட்டுமே தோற்கடிக்கப்பட்டது.உள்ளே என்ன நடந்தது என்று அதிகமான விடயங்கள் பெறப்பட்டதும் இந்தவிமானத்தில் இருந்துதான்.

united 93 என்றபெயரில் ஹொலிவூட்திரைப்படம்  ஒன்று 2006 இல் வெளிவிடப்பட்டது.அந்த திரைப்படத்தில் விமானத்தின் இறுதி நேரக்காட்சிகள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தலையேபோய்விட்ட இன் நிகழ்வு நடைபெறப்போகின்றது என்ற விடயத்தை கவனிக்காமல் தாங்கள்தான் உலகின் அதிசிறந்தவர்கள் என ஹொலிவூட் படங்களினூடாக  விளம்பரப்படுத்தும் எஃப்.பி.ஐயும்சி.பி.ஐ யும் எதைப்புடுங்கிக்கொண்டிருந்தன?


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}