9/11 தாக்குதல் C.I.A,F.B.I என்ன புடுங்கிக்கொண்டிருந்தது?


9/11 தாக்குதலுடன்சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடைபெறுவதற்கு 1  வருடம் முன்னதாகவே சிறு சிறு குழுக்களாக போய்ச்சேர்ந்துள்ளார்கள்.அமெரிக்காவை அடைந்ததும் அங்கு விமானப்பயிற்சி நிலையங்களில் இணைந்து விமானம் ஓட்டுவதுதொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்டார்கள்.இத்தீவிரவாதக்குழுக்கள் அமெரிக்காவில் ஒருவருடத்திற்கு மட்டும் செலவளித்த தொகை 4 இலட்சத்தில் இருந்து 5 இலட்சம் டொலர்கள்.தாக்குதலில் சம்பந்தப்பட்ட 19 தீவிரவாதிகளும் ஒன்றாக இணைந்தது தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முன்னால்.2001இன் முதல் 4 மாதங்கள் தனியார் விமானப்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றார்கள்.வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் உள்ளூரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடல்வலுவேற்றல் பயிற்சிகளை செய்தார்கள்.
  

2001 ஜூலை 30 இல் கடத்தல்காரர்களில் சிலர் இலக்கற்ற சில பயணங்களை மேற்கொண்டார்கள்.நகரத்திற்கு நகரம் பயணித்தார்கள்.இந்தப்பயணங்கள் எல்லாம் அதுவரை விமானத்தில் பயணம் செய்யாத தீவிரவாதிகளுக்கு விமானத்தின் அமைப்பையும் அங்கு நடைபெறும் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதற்குமே மேற்கொள்ளப்பட்டது.

jarrah
2 ஆவது விமானத்தை உலகவர்த்தகமையகட்டிடத்தில் மோதியவனான ஜாரா தனது விமானப்பயிற்சியின்போது பல தடவைகள் வர்த்தகமையக்கட்டிடத்தின் அருகாமையில் பறந்திருக்கின்றான்.இதேபோல் இராணுவத்தலமையகமான பெண்டகனின் அருகாமையில் நவாப்,ஹஜ்மி ஆகிய தீவிரவாதிகள் பறந்திருக்கின்றார்கள்.

அக்காளப்பட்ட அமெரிக்காவிற்குள்ளேயே 19 நபர்களைக்கொண்ட தீவிரவாதக்குழு இஸ்ரத்துக்குவந்து பயிற்சிகளைமேற்கொள்கின்றது.அதுவும் தாக்குதலுக்கு 1 வருடத்திற்கு முன்பிலிருந்தே.ஹொலிவூட்டின் அனைத்துப்படங்களிலும் தங்களைவிட்டால்ஆளில்லை என்று சகல பிரச்சனைகளுக்கும் முன்னிற்கும் சி.ஐ.ஏயும் எப்.பி.ஐயும் என்ன புடுங்கிக்கொண்டிருந்தன?

உளவு அமைப்புக்கள் தமக்கு வரும் தகவல்களை அறிக்கைகளாக தயாரிக்கும்.பின் அவற்றை நாட்டின் அதிபருக்கு தினசரிகாலை வாசிப்பார்கள்.2001 இல் சி.ஐ.ஏ இயக்குனர் ஜார்ஜ் டெனட் இவ்வாறான அறிக்கைகளை புஷ்சிற்கு வாசித்துக்காட்டி விவாதித்துக்கொண்டிருந்தார்.அதில் அனைத்து அறிக்கைகளுமே அல்கொய்தாவுடன் தொடர்புடையவையாக இருந்தன.

richard clarke
2001 ஜனவரி 20 தொடக்கம் செப்ரெம்பர் 10 வரை புஷ்சிற்கு பின்லேடன் தொடர்பாக 40 அறிக்கைகள் சி.ஐ.ஏவினால் சமர்ப்பிக்கப்பட்டன.இவ் அறிக்கைகளை புஷ்ஷிற்கு மட்டும் தெரிவிப்பதுடன் நின்றுவிடாது எப்.பி.ஐயின் இயக்குனரும் தேசியப்பாதுகாப்புப்படை கவுன்சிலின் தீவிரவாத தடுப்புக்கமிட்டியின் ஒருங்கிணைப்பாளருமாகிய ரிச்சர்ட் கிளார்க்கிற்கும் சமர்ப்பித்திருக்கவேண்டும்.ஆனால் சமர்ப்பிக்கப்படவில்லை சி.ஐ.ஏ ,எப்.பி.ஐ ற்குமிடையில் ஈகோ,தனி நபர் அரசியல்,போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தமைல் கிளார்க்கிற்கு விடயம்தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை.எப்.பி.ஐ இயக்குனர் ரிர்ச்செட்கிளார்க் தீவிரவாதிகள் தொடர்பில் மிகுந்த அனுபவம் உடையவர்.

Florida pupils recall Bush hearing news of 9/11 attacksதிடீரென்று சி.ஐ.ஏற்கு தீவிரவாதத்தாக்குதல் தொடர்பான தாக்குதல் தகவல்களின் வரவு அதிகரித்துக்கொண்டிருந்தன.மே மாதத்தில் எப்.பி.ஐ யிற்கு தகவல் வந்தது லண்டன்,பாஸ்டன்,நியூயோர்க் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்.இதற்கு அடுத்த நாள் அமெரிக்கத்தூதரகத்திற்கு மர்மதொலைபேசி அழைப்புவந்தது.பின்லேடனின் ஆதரவாளர்களால் அமெரிக்காவில் மிகப்பெரும் அளவில் வெடிகுண்டுத்தாக்குதல் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது என்பதுதான் அது.ஆனால் இத்தகவலைப்பற்றி யாரும் எந்தவித விசாரணையும்மேற்கொள்ளவில்லை.இத்தகவல்கூட அதிபருக்கு வாசிக்கப்பட்டிருக்கின்றது.ஆனால் உதாசீனப்படுத்திவிட்டார்கள்.(அக்காளப்பட்ட அமெரிக்கா என்று நினைத்துவிட்டார்கள்)

ஜூன் 12 இல் சி.ஐ.ஏ ஓர் அறிக்கையை அனுப்பியது அமெரிக்காவிற்கு பின்லேடனுடன் நேரடித்தொடர்புள்ள அல்கொய்தாவின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான காலித்ஷேக்முகம்மது ஆட்களை தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றார்.சில தினங்களில் அமெரிக்க இலக்குகள்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றது அறிக்கை.
condalisa rice

ஜூன் 25 இல் கிளார்க்(எப்.பி.ஐ இன் இயக்குனர்) கொண்டலிசாரைஸிற்கு 6 அறிக்கைகளை அடுத்தடுத்து அனுப்பிவைத்தார்.அமெரிக்காவிற்கு அல்கொய்தாவால் ஆபத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் என்றுகேட்க வழக்கம்போல் மௌனமே பதிலாகக்கிடைத்தது.2000 இல் புஷ்ஆட்சிக்கு வந்ததும் நிர்வாகத்தலைவர்கள் பலர்மாற்றப்பட்டார்கள்.தேசியப்பாதுகாப்பு கவுன்ஸில் ஆலோசகராக கொண்டலிசா ரைஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.2001 இன் தொடக்கத்திலேயே கொண்டலிசா ரைஸிற்கு கிளார்க் அல்கொய்தா பற்றிவிரிவாக விளக்கியிருந்தார்.ஆனால் புஷ்ஷின் நிர்வாகம் அமெரிக்காவிற்கு வெளியில் இருக்கும் தீவிரவாத நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர்.அத்துடன் ரிர்ச்சட் கிளார்க் கொண்டலிஸாரைஸினால் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டார்.

செப்ரெம்பர் 11 சம்பவத்தை தடுத்திருக்கமுடியுமா?

ஆரம்பத்தில் சி.ஐ.ஏ எப்.பி,ஐ ற்குக்கிடைத்த தகவல்களின் ஊகங்களை அடிப்படையாகக்கொண்ட எச்சரிக்கைகள் அறிக்கைகளை பார்த்தோம்.ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை ஊகத்தை அடிப்படையாகக்கொண்ட தகவல்கள்தான் அவை நடக்காமல்கூடவிட்டிருக்கலாம்.ஆனால் அகப்பட்ட ஆதாரங்களை வைத்து சில கைது நடவடிக்கைகளை மேற்கொண்கொண்டிருக்கலாம்.ஆனால் அவற்றையும் மிக அழகாகக்கோட்டைவிட்டுவிட்டார்கள்.கலித் என்ற தீவிரவாதிஜெனவரி5 2000இல் மலேசியாசெல்லும்வரை அவனை உளவுப்படையினர் பின்தொடர்ந்தார்கள்.கலித்துடன் பயணம்செய்த ஏனைய அராபிய இளைஞர்களும் தீவிரவாதிகள்தான் என்றவிடயம் சி.ஐ.ஏற்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.ஜனவரி 8 இல் மலேசியாவில் இருந்து இவர்கள் திடீரென்று பாங்க்கொக் சென்றுவிட்டார்கள்.இந்ததகவல் மலேசியாவில் இருந்து பாங்கொக்கில் இருந்த சி.ஐ.ஏ விற்கு செல்வதற்கு காலதாமதம் ஆகிவிட்டது.இதனால் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.சோ வேறுவழியில்லாமல் அவர்களின் பெயரைமட்டும் அங்கிருந்த லோக்கல் காவல் நிலையத்தில் கொடுத்து விசாரிக்கும்படி கூறிவிட்டார்கள்.

A still image taken from a surveillance camera shows two men identified by authorities as suspected hijackers Mohammed Atta

மார்ச்சில் நவாப் பற்றி பிறிதொரு விடயம் தெரியவந்தது.அவனது முழுப்பெயர் அத்துடன் அவன் பாங்கொக்கில் இருந்து லொஸேஞ்சல்ஸுக்கு புறப்பட்டுவிட்டான் என்பதுதான் அது.சந்தேகத்துக்கிடமான அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவிற்குள் புகுந்துவிட்டார்கள் என்றவிடயம் 2000 இன் ஆரம்பத்திலேயே சி.ஐ.ஏ விற்குத்தெரியும்.ஆனால் இவர்களது பெயர் இவர்கள் தொடர்பான விடயத்தை அமெரிக்க உள்விவகாரங்களை கவனிக்கும் எஃப்.பி.ஐ யிடம் சி.ஐ.ஏ தெரிவிக்கவில்லை.இவர்களின் பெயரை உள்துறைக்கண்காணிப்புப்பட்டியலிலும் சேர்க்கவில்லை.இவர்களை தேடவோ இவர்கள் பற்றிய தகவல்களைத்திரட்டவோ எந்தமுயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
At 8:41 p.m. on September 10, 2001, these two men later identified by the FBI as 9/11 hijackers Mohamed Atta (Left-Rear) and Abdulaziz al-Omari, (Right-Foreground) were photographed by a security camera at a Fast Green ATM money machine in South Portland, Maine. Only 12 hours after these photos were taken, Atta and al-Omari would fly American Airlines Flight 11 into the North Tower of the World Trade Center in New York City. 

கலித்தைப்பற்றி 2 புகைப்படங்கள் சி.ஐ.ஏயிற்குக்கிடைத்தன.அதில் கலித்துடன் இன்னொருவரும் இருந்தார்.பின்னர்தான் அது கல்லத் என்ற தீவிரவாதி என்று அடையாளம்காணப்பட்டது.இதனால் கலித் மீதும் சந்தேகம் வலுப்பெற்றது.
2001 ஜனவரி 15இல் கலித் அமெரிக்காவிற்கு வந்திருந்தான்.கிழக்காசிய நாடுகளில் சந்தேகத்திற்கிடமான பயிற்சிகளைமேற்கொண்டவன்,அரேபியன்,பின்லேடனுடன் தொடர்புடையவன்,இவனைத்தேடி ஒரு படையேபோய் கோட்டைவிட்டுவிட்டு வந்துள்ளது.அத்துடன் கலித் என்ற தீவிரவாதியுடன் ஒரே பட்த்தில் இருப்பவன்.தற்பொழுது இருப்பது அமெரிக்காவில் இவ்வளவு ஆதாரத்தைகைவசம் வைத்திருந்தும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.ஏன் என்றகேள்விக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

இக்காலத்தில் அரேபியதொலைக்காட்சியோன்று நாம் விரைவில் வெற்றிகரமான ஒரு செய்தியை வெளியிடுவோம் என்று அல்கொய்தா தலைவர்களை ஆதாரம்கூறி தகவல் வெளியிட்டது.இவை அனைத்தையும் ஒன்றாக கவனித்து நடக்கப்போவதை ஓரளவிற்கு ஊகித்தவர் எஃப்.பி.ஐயின் இயக்குனரான கிளார்க் ஆனால் அதை கொண்டலிஸா ரைஸ்ஸிற்கு தெரிவிக்கும்போது அவர் அதை துளியும் கவனிக்கவில்லை.அல்கொய்தா என்பது ஒரு சாதாரண அமைப்பென்று  நினிக்கின்றீர்களா?என்றெல்லாம் கிளார்க் கொண்டலிஸா ரைஸிற்கு கடிந்து பல அறிக்கைகளை அனுப்பியுள்ளார்.அமெரிக்கா மிகப்பெரும் ஆபத்தில் அப்பொழுது இருந்த்து கிளார்க்கிற்கு மட்டுமே விளங்கியிருந்தது.கிளார்க் கடிந்துகொண்ட்தையும் கொண்டலிஸா புறக்கணித்து சரியாக 1 கிழமையில் தாக்குதல் நட்த்தப்பட்டது.
9/11 விசாரணைக்கமிஸன் சில குற்றச்சாட்டுக்களை இத்தாக்குதலுக்காக சிலர் மீது சுமத்தியுள்ளது.
எலியும்  பூனையுமாக இருந்த எப்.பி.ஐ,சி,ஐ,ஏ கொண்டலிஸா ரைஸின் அலட்சியப்போக்கு கிளார்க் மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகளின் எச்சரிக்கை மீது கவனம் செலுத்தாமை,அமெரிக்காவிற்குள் வந்து யார் புடுங்குவார்கள் என்ற அலட்சியப்போக்கு.
இவை அனைத்திற்கும் சேர்த்து தாங்கள் கனவிலும் நினைத்துப்பார்க்காத பெரிய விலையைக்கொடுக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.ஆனால் எதிர்பாராத பெரிய விலையைக்கொடுக்கவேண்டியேற்பட்டுவிட்டது.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}