ஆழ்கடல் சிற்பங்கள்

ஆழ்கடலில் மனித உருவங்கள்,பொருட்களுடன் கூடிய சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.தற்பொழுது இந்தபிரதேசம் சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ளது.இது கரீபியன் கடலுக்கடியில் அமைந்துள்ளது.பெயர் Molinere Underwater Sculpture Park .இங்குள்ள சிற்பங்கள் சீமெந்தினால்  Jason deCaires Taylor என்ற பிரிட்டிஸ் சிற்பியினால் ஆக்கப்பட்டவை.2006 இல் இது முதல் முறையாக மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.கடலுக்கடியில் இருக்கும் வேறொரு உலகத்தை மக்கள் அனுபவிப்பதை ஊக்குவிப்பதற்காகவே தாம் இவற்றை உருவாக்கியுள்ளதாகவும் 2050 இல் 60%ஆன பவளப்பாறைகள் அழிக்கப்பட்டுவிடும் அதை தடுப்பதற்கு கடலுக்கடியிலான உலகத்தை காட்டுவதற்கும் இதை அமைத்துள்ளதாக டெயிலர் கூறியுள்ளார்.அதிகமான சிற்பங்கள் மனித உருவில்தான் இருக்கின்றன.800 சதுர அடி பரப்பளவில் 65 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.15 தொன் சீமெந்து இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.12 அடிகளில் இருந்து 25 அடி உயரம் வரை இச்சிற்பங்கள் அமைந்துள்ளன.


The Lost Correspondent

இது 2006 இல் அமைக்கப்பட்ட 22 அடி உயரமான சிற்பம்.கியூபாவில் புரட்சி நடைபெறுவதற்கு முன்னர்  இருந்த அரசியல் நிலமைகளை வெளிப்படுத்துவதாக இது அமைக்கப்பட்டுள்ளது.

The Unstill Life 

இது 2006 இல் அமைக்கப்பட்டுள்ளது.25 அடி உயரமானது.

The Unstill Life 

இது 2007 இல் அமைக்கப்பட்ட சிற்பம்.14 அடி உயரமுடையது.26 சிறுவர்கள் தம்முள் கைகளைக்கோர்த்து வட்டவடிவில் நிற்பதாக அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை உருவாக்க 6 மாதங்கள் எடுத்தது. 4 தொன் சீமெந்தினால் உருவாக்கப்பட்டவை.

இவற்றை உருவாக்கிய சிற்பி Jason deCaires Taylor 
அதிசய உலகம் .....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}