பேஸ்புக்கில இந்தவிடயம்தான் புது ரெண்ட்

தற்போது  பிரபலமான பேஸ்புக்பாவனையாளர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களால் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டு பகிரப்பட்டும் தமது  சொந்தக்கமராக்களால் இதேமாதிரி எடுக்க முயன்று அவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அந்த முக்கியவிடயம் இதுதான்.சூரியன் அடிவானில் மறையும் தறுவாயில் கைகளால் அதைபிடிப்பதுபோன்ற படம்.சந்திரனை விழுங்குவதுபோன்ற படம்.சூரியனை வொலிபோல்  போல் பயன்படுத்துவதுபோன்றபடம் இவற்றையெல்லாம் அதிகமாக முகப்புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள்.இவைதான் தற்போது  முகப்புத்தகத்தில் அதிகம் பிரபலமாக வலம்வருபவை. இவ்வாறான படங்களை Forced perspective என்று கூறுவார்கள்.இவை மயக்க உணர்ச்சியை தரக்கூடியவை பார்த்தவுடன் சற்றுக்குழம்பிவிடுவோம்.இந்ததோற்றம் ஏற்படுவதற்குக்காரணத்தை பார்வைக்கோணத்தைப்பயன்படுத்தி விளக்க முடியும்
இதில் காட்டப்பட்டுள்ள கோணம்தான் பார்வைக்கோணம்.அதாவது சாதாரணமாக ஒரு பொருளை நாம் பார்க்கும்போது அந்தப்பொருள்மீது நம் கண்களால் அமைக்கப்படும்கோணம்.இந்த கோணத்தின் அடிப்படையில்தான்  நாம் அறிந்துகொள்ளும் பொருட்களின் உயரம்,பொருட்கள் அமைந்துள்ள தூரங்கள் தங்கியுள்ளன.

இந்தப்படத்தில் முதலாவது படத்தைப்பாருங்கள் அதில் ஒரே பரிமானத்தையுடைய பொருட்கள் வேறுவேறு பார்வைக்கோணத்தில் இருக்கின்றன.
உதாரணமாக ஒரு லைட்போஸ்ட்டின் அடியில் இருந்து கொண்டு தொலைவில் இருக்கும் லைட்போஸ்ட்டை பார்த்தால் அது  நமக்கு அருகில் இருக்கும் லைட் போஸ்ட்டைவிட சிரியதாக இருக்குமல்லவா?ஆனால் இரண்டும் ஒரே  உயரம்தான்


இதே படத்துன் இரண்டாவது படத்தில் வேறுவேறு  பரிமாணம்  உடையவை ஒரே பரிமாணங்கள் உள்ளது போல் இருக்கின்றது.இதே தொழில் நுட்பம்தான் Forced perspectiveற்குப்பயன்படுத்தப்படுகின்றது.
இதில் A என்பதை மனிதனின் முகத்திற்கும் கைகளிற்கும் இடையிலாட இடைவெளியாகவும் Bஎன்பதை சூரியனாகவும் கருதுங்கள்.இதுதான் இந்த போட்டோக்களிலும் நடைபெறுகின்றது.பூமியைவிட லட்சம் மடங்கு சூரியன் பெரியதாய் இருந்தாலும் அது அதிக தூரத்தில் இருப்பதால் சிறியதாக தோன்றி இந்த illusion ஏற்படுகின்றது.இதே மாதிரியான முறையாலேயே பின்வரும் படங்கள் சாத்தியப்பட்டன.


இவ்வாறான படங்களை எடுப்பதற்கான சில டெக்னிக்களைவிளங்கி சிலர் இவ்வாறு எடுத்த தம்முடைய போட்டோக்களை முகப்புத்தகங்களில் பகிர்ந்துகொள்கின்றார்கள்.இது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல நீங்களும் முயற்சிசெய்யலாம்.போட்டோக்கள் எடுக்கப்படும் கோணங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் இவை சாத்தியம் பல திரைப்படங்களில் இதே டெக்னோலொஜியை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.லோர்ட் ஒஃப் த றிங்க்ஸ் திரைப்படத்தில் பெரிய பெரியகோட்டைகள் எல்லாம் வெறும் 12 அடியில் செய்தவைதான்.ஆனால் இதே நுட்பத்தால் மிக உயரமாக காட்டப்பட்டிருந்தனவாம்(அண்ணன் கருந்தேளிடம் வாசித்தேன்).------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}