நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் காண்பதற்காக மதுரை ஆதீனம் நாகூர் சென்றிருந்தார். நாகூரும் ஆதீனமும் பழைய   நண்பர்கள்  நீண்டகாலத்தின் பின் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்  ஆனந்தமடைந்தனர்.

நாகூர் ஹனிபா
மதுரை ஆதீனம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க நோன்பு பிடித்து களைப்புற்றிருந்த நாகூர் ஹனிபா அவர்களிடம் பாட்டொன்றை பாடும்படி கேட்கப்பட்டது. நோன்பினாலும் வயதானதாலும் மிகவும் களைத்துப்போயிருந்தார் நாகூர் ஹனீபா.ஆனாலும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாடலை படிக்கமுயன்றார்.உடனடியாக அவரால் பாடவும் முடியவில்லை குரல் தளர்ந்துவிட்டிருந்தது.ஆனால் ஆதீனம் நண்பர் கேட்டுவிட்டாரே என்று சிரமத்துடன் பாடினார் .ஹனீபாவின் புகழ்பெற்றபாடல் அது இறைவனிடம் கை ஏந்துங்கள்.....ஆனால் ஓரளவிற்கு மேல் அவரால் பாட முடியவில்லை.சற்றும் எதிர்பாக்காத வகையில் ஆதீனமே மிகுதிப்பாடலை பாடிவிட்டார்.

இச்சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணமாகிவிட்டது.நித்தியானந்தா ரஞ்சிதா என்று பல சம்பவங்களால் மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்த ஆதீனத்திற்கும் சற்று மன அமைதிதான்.

மத சகிப்புத்தன்மை வெகுவாக குறைந்துவருகின்றது. இதற்கு தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் நல்ல உதாரணம்.பலர் இதில் நெறிதவறியிருக்க ஆதீனம் ஹனீபாவின் சந்திப்பு மத நல்லிணக்கத்தின் ஆரோக்கியமான சந்திப்பாக அமைந்துள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}