அடிமை எதிர்ப்பும்....சுதந்திரத்திற்கான பாதையும்.....

வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-04

போனபதிப்பில் அடிமைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஏதோ என்னால் முடிந்தவரை சுருக்கமாக தந்திருந்தேன். அப்பதிவை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்து விட்டு தொடரவும்.                            
                     
                                   
                      இவ்வாறு கையில் கிடைத்த எலியை கொல்வதுபோல் அடிமைகளை கொன்று போட்டாலோ அல்லது உடல் பாகங்களை வெட்டிஎறிந்தாலோ யாருமே கேள்வி கேட்க மாட்டார்களா எனும் சந்தேகம் நிச்சயம் வாசகர்களுக்கு எழுந்திருக்கும். அந்தவகையில் நாம் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் அமெரிக்கா என்பது ஒரு முதலாளித்துவ நாடு மட்டுமல்ல ஆட்சிபீடத்திலிருந்த அதிகாரிகளும், சட்ட வல்லுனர்களும் , ஏன் அமெரிக்க அதிபர்களில் வாஷிங்டன் உற்பட பெரும்பாலானவர்களும் கூட பண்ணையார்களாகவே இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தெரிந்திருந்தும் கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள் அல்லது ஆதரித்தார்கள் ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளை வைத்திருந்தார்கள்.

          இவ்வளவு ஏன் அந்நாளைய அமெரிக்காவின் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் ஏன் மதப்போதகர்கள், கூட வீட்டில் அடிமைகளை வைத்திருந்தார்கள். இதனால் தான் அடிமைகளின் மீதான கொடுமைகளுக்கு எதிரான குரல்கள் அரங்கிற்கு வராமலே முடக்கப்பட்டுவிட்டன. மேலும் இக்கொடுமைகளை சட்டங்களும் ஆதரித்தபடியால் அடிமை எதிர்ப்பு உடையவர்களால் கூட எதுவுமே செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. 

உருவாகிறது அபாலிஷனிஸ்ட் {ABOLITIONISTS}


மேலும் பண்ணையார்களுக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமே இந்த மிருகத்தனமான நடவடிக்கைகள் தெரிந்திருந்தது. சாதாரணதர மக்களுக்கு இந்த விடயங்கள் ஏதோ அரசல் புரசலாகவே தெரிந்திருந்தது அல்லது தெரிந்திருக்கவில்லை.
                 
                  இதனால் தான் கிபி 1820 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்துக்காரரான பத்திரிகை ஆசிரியர் வில்லியம் லாயிட் காரிஸன் “அடிமை முறையை ஒழிப்போம்” என குரல் கொடுத்த போது அவரின் பின்னால் ஒரு மக்கள் கூட்டம் அணிதிரண்டது. அடிமை முறையை எதிர்த்து தெளிவான எதிர்க்குரலை கிளப்பிய முதல் மனிதர் காரிஸன் தான். ஆனால் இதை விரும்பாத அடிமை விரும்பிகள் காரிஸனுக்கும் அவர் பின்னால் அணிதிரண்ட மக்களுக்கும் அபாலிஷனிஸ்ட் {ABOLITIONISTS} எனும் பட்டத்தை கட்டி விட்டார்கள் என்பதுடன் இவர்களுக்கு எதிராக கிளம்பிய குரல்களும் அடக்குமுறைகளும் ஏராளம்.
வில்லியம் லாயிட் காரிஸன்
                             
                                 மேலும் அந்நாளைய ஆட்சியாளர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைமுறை ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் காரிஸன் பெரும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. “அடிமைஎனும் சொல்லில் இருந்து அவர்களை தவிர்த்து மனிதர்களாக பாருங்கள்” எனும் சாரலில் அமைந்த காரிஸனின் பேச்சு சாதாரண அமெரிக்க மக்களின் மனதை கவரத்தொடங்க அவர்களும் சிந்திக்க ஆரம்பித்தார்கள். இங்கு அடிமைகளுக்கு எதிரான குரல்கள் கிளம்ப்பத்தொடங்க பண்ணைகளிலோ இந்த ஆத்திரத்தை அடக்குமுறைகளாயும் கொடுமைகளாயும் மாற்றி முதலாளிகள் அடிமைகளின் மேல் பிரயோகிக்கத் தொடங்கினார்கள்.

               தம்மீதான அடக்குமுறைகள் அதிகரிக்க தொடங்கியதும்தான் பெரும்பாலான அடிமைகள் பண்ணைகளிளிருந்து தப்பிக்க பெரும் முயற்ச்சிகள் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தது பிறப்பிலேயே அடிமையாக இருந்து அடிமை ஆதிக்கத்தில் இருந்து தப்பிச்சென்றதன் மூலம் விடுதலை பெற்ற பிரடரிக் டக்ளஸ் எனும் முன்னாள் அடிமையின் விடுதலையும் அவரது உணர்ச்சி பூர்வமான பேச்சும் தான். காரிசனுக்கு பெரிதும் பலம் சேர்த்தது பிரடரிக் டக்ளஸ் எனும் இவரின் பேச்சும் துணிச்சலும் தான் என்பதால் நாம் இவரை பற்றியும் சிறிது பார்த்துவிடலாம்.


பிரடரிக் டக்ளஸ் அடிமைகளின் நம்பிக்கை

பிரடரிக் டக்ளஸ் 
அமெரிக்காவின் அடிமைகளை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப் போராடியவர்களில் ஃபிரடெரிக் டக்ளஸ் மிக மிக முக்கியமானவர். ஏனெனில் இவரும் ஒரு கறுப்பின அடிமையாக இருந்து வட மாநிலதிற்க்கு தப்பியோடி சட்டரீதீயாக சுதந்திரம் பெற்றவர். இவரது பிறப்பை பொறுத்தவரை இவர் கருப்பின தாய்க்கும் வெள்ளையினத் தந்தைக்கும் பிறந்தவர். ஆம் ஓரடிமையாகத்தான் பிறந்தார். தனது பிறந்தநாள் எப்போதேன்றே தெரியாது வளர்ந்தவர் அவர் அவர் மட்டுமல்ல பல அடிமைகள் தம் பிறப்புக்கூட தெரியாமல்தான் வளர்க்கப்பட்டார்கள். இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால் ஒரே குடும்பத்தை சேர்ந்த அடிமைகளை ஒரே இடத்தில் வேலைக்கு வைக்க மாட்டார்கள். இதன் காரணமாக பிரடரிக் டக்ளஸ் தன் தாயாரையும் சகோதரர்களையும் பிரிந்தே வளர வேண்டியிருந்தது. மேரிலாந்து மாகாணத்தில் டகாலோ என்னும் இடத்தில்தான் பிறந்தார் பிரடரிக் பெய்லி ஆம் பிரடரிக் பெய்லி என்பதுதான் அவரது இயற்பெயராக இருந்தது. தப்பிக்கும் போது தன் அடையாளத்தை மாற்றி கொள்ளும் நோக்கில் அவர் வைத்துக்கொண்ட பெயர்தான் டக்ளஸ் என்பது பின்னர் அதுவே அவரது நியப்பெயராகவும் ஆகிப்போனது. அடிமைக் குழந்தைகள் பிறந்ததுமே தாயிடம் இருந்து குழந்தையை பிரித்துவிடுவார்கள் தனவான்கள் ஏனெனில் பாசம் எனும் உணர்ச்சி அடிமைகளிடத்தே தவிர்க்கப்படவேண்டியது என அவர்கள் கருதினார்கள். அவ்வாறு தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட டக்ளஸ் இன்னொரு பண்ணையிலிருந்த கிழவியிடம் கொடுக்கப்பட்டே வளர்க்கப்பட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து தாயார் இறக்கும் வரை அவரை நாலைந்து முறை தான் டக்ளஸ் பார்த்திருக்கிறார்.

                               
     தன் நினைவுகளில் தான் ஓர் அடிமையாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என உணரத்தொடங்கிய காலங்களில் தன் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை தன் அத்தை ஒருவருக்கு வழங்கப்பட்ட கொடூரமான கசையடித்தண்டனை மூலம் தெரிந்து கொண்டார்  டக்ளஸ். தன் எஜமானனுக்கு தெரியாமல் ஒரு வெள்ளைகார கர்னலின் மகனின் வற்புறுத்தலுக்கு டக்களஸின் அத்தை ஹெச்டர் இணங்கியதால் கைகளை பிணைத்து மேலாடையை களைந்து அரைமணிநேரத்திற்க்கு மேலாக அவளுக்கு கொடுக்கப்பட்ட கசையடியால் அவளது உடல் முழுதும் சிவப்பாக இரத்தத்தால் தோய்ந்ததை கண்ணுற்ற டக்ளஸ் தன் அடிமை வாழ்வு எவ்வளவு கொடூரமானதாக இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொண்டார். இளைஞனாக வளர்ந்த போது மண்டையுடையும் அளவுகூட சித்திரவதைகளை ஆண்ட்ரு என்ற தன் எஜமானனிடம் அனுபவித்திருக்கிறார்.

                ஆல்ட் எனும் எஜமானனிடம் அவனது பிள்ளையை பராமரிக்கும் பொறுப்பிற்கு அனுப்பப்பட்ட போதுதான் ஓரளவுக்கு எழுதப்படிக்கக் கற்று கொண்டார். ஆல்ட்டின் மனைவி டக்ளஸிற்கு முதல் அடிமைகளை வைத்து கொள்ளவில்லை ஆதலால் டக்ளசிடம் சற்று பாசமாக இருந்ததுடன் அவருக்கு எழுதப்படிக்கவும் கற்று கொடுத்தாள். ஆனால் ஆல்ட் தன் மனைவியிடம் அடிமைகள் படித்தால் அவர்களின் நிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என விளக்கியத்தில் இருந்து டக்ளஸிற்கு பாடம் சொல்லி தருவதும் குறையிலேயே நிறுத்தப்பட்டு விட்டதுடன் டக்ளஸ் எப்போதும் படிக்காத படியும் பார்த்துக்கொள்ளப்பட்டது. தனக்கு படிப்பது மறுக்கப்படுவது ஏதோ ஒரு முக்கிய காரணத்திற்காகவே என்று உணர்ந்து கொண்ட டக்ளஸ் எவ்வாறு விடா முயற்சிமூலம் எழுதப்படிக்கக் கற்றுகொண்டார் என்பது அவரது சுயதரிதையை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். எவ்வளவோ கொடுமைகளின் மத்தியிலும் சுயமுயர்ச்சியின் மூலம் கல்வியை அவர் கற்றவிதமும் படிப்புக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் தான் பின்னாளில் அவரை ஒரு சிறந்த பேச்சாளராகவும், ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் உயர்த்தியது. பின்னாளில் அவர் எழுதிய சுயதரிதை ஒரு புத்தகமாக வெளிவந்து பெரு வரவேற்பை பெற்றதுடன் இன்றுவரை அமெரிக்க அடிமைகளின் கொடுமைகளை பிரதிபலிக்கும் எழுத்து மூல ஆவணமாகவும் திகழ்கிறது. பலமுயர்ச்சிகளின் பின்னர் 1838 இல் பால்டிமோரிலிருந்து நியூயார்க் தப்பி வந்ததிலிருந்துதான் அவரது வாழ்கையின் புது அத்தியாயம் ஆரம்பமானது. அன்னாமுரே என்கிற பெண்மணியை மணந்து கொண்டு வாழ்கையை தொடங்கிய டக்ளஸ் அடிமை எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து கொண்டு தன் புதுப்பயணத்தை தொடக்கினார்.

                                                                      ........................தொடரும்......................
இதன் அடுத்த பதிவிற்கு 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}