செயற்கை அவயவங்கள் சயன்ஸ்

விபத்துக்களால் அல்லது வேறுகாரணங்களால் அங்கவீனப்படுபவர்களை  மரத்தாலான கால்களுடனோ மரத்தாலான போலி கைகளுடனோ பார்த்திருப்போம்.இவை நெகிழ்வற்றவையாகவும்,பரிகாசத்திற்குட்பட்டவையாகவுமே இருந்துவந்தன.ஆனால் அவர்கள் அதனுடன் அவதிப்படத்தேவையில்லாதவகையில் அவர்களுக்கு உதவும் வகையில் மாற்று உறுப்புக்கள் பல வடிவமைக்கப்பட்டுள்ளன.ஊன்றுகோல்,வீல் செயார்களில் இருந்து இப்பொழுது கருவிகள் பவர் ஸூட்களாகவும் ரோபோட்டிக் கைகளாகவும் மாற்றமடைந்துள்ளன.இத்துறையில் இவ்வசதிகளை அனுபவிப்பதற்கு பெருமளவு பணம் அவசியம் என்பதும் மறுக்கமுடியாததுதான்.ஆனால் விஞ்ஞானத்தின் உதவியால் இவ் அவயவ இழப்புக்கள் ஓரளவிற்கு ஈடுகட்டப்படும்.அவயவங்களுக்கான மாற்று செயற்கை உறுப்புக்களை அவதானிக்கும்போது சயன்ஸ்பிக்ஸனில் வரும் உறுப்புக்கள்போன்றுகூட தோன்றலாம்.பிக்ஸன் கூட எதிர்காலத்தில் உண்மையாகும்.

செயற்கை அவயவங்கள் தொடர்பில் ஆரம்பகாலம் தொட்டு அண்மைக்காலம் வரை இருந்த நடைமுறைகளை முதலில் பார்ப்போம்

செயற்கைப்பாகங்கள் எகிப்திய மம்மிக்களில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.ஆனால் இவர்கள் இதற்கு அதிகளவான தொழில் நுட்பத்தை செலவு செய்யவில்லை.சாதாரண மரங்களால் ஆன அவயவங்களையே பயன்படுத்தினார்கள்.அது தற்காலத்தில் சற்று திரிபடைந்து பழைய பாஸ்கெட்போல் பெடெல்களாக மாறியுள்ளது.
(மேலே காட்டப்பட்டுள்ள படம் பேஸ்புக்கில் வெகுவாக பகிர்ந்துகொள்ளப்பட்டுவருகின்றது)

England இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைப்பாதம்
ரோமிலும் இதேபோன்ற செயற்கை அவயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆனால் இவை மாற்றீட்டு அவயமாக பயன்படுத்தியதை விட அதையும் ஆயுதமாகவே பயன்படுத்தினார்கள். செயற்கை அவயவங்களை அண்மைக்காலத்தில்தான் மனிதன் பயன்படுத்த தொடங்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள்தான் இவை.
கிரேக்கத்தில் கிரேக்க கடவுளான   Hegesistratus  ஸ்பார்ட்டாவை சேர்ந்த கடத்தல்காரர்களிடமிருந்து தப்புவதற்காக தன் கால்களை தானே வெட்டிக்கொண்டார்.பின்னர் அதற்குப்பதிலாக செயற்கையாக மரத்தாலான கால்களைப்பொருத்திக்கொண்டார் என்ற கதை ஒன்று உள்ளது.1600 ஆம் ஆண்டைசேர்ந்த கப்டன்  François de la தனது குண்டடிபட்ட கையை அகற்றிவிட்டு இரும்பாலான கைகளை பொருத்திக்கொண்டார்.

விசேடதேவைஉடையோரின் கவவு என்றே இதைக்குறிப்பிடலாம்.இது பல படங்களிலும் காட்டப்பட்டுள்ளது.suit இது உடலின் வெளியில் அணியும் கவசம் போன்ற கருவி.அங்கவீனமானவர்களின் உடல் பாகங்களில் உள்ள மூட்டுக்களின் அமுக்கமாற்றங்களை உணர்வதன் மூலம் தன்செயற்பாட்டைமேற்கொள்ளக்கூடியது.பாரமான பொருட்களை தூக்கும்போது ஏற்படும் அழுத்தங்களை மிகவும் குறைக்க இது பயன்படுத்தப்படும்.இவ்வாறான தொழில் நுட்பங்களின் ஆரம்படியிலேயே நாம் உள்ளோம்.இதன் மக்ஸிமம்தான் அயெர்ன் மான் திரைப்படத்தில் வரும் சூட்.இத்தொழில் நுட்பம் வெற்றியளிக்குமாயின் அங்கவீனமானவர் கூட ஹல்க்தான்.

எதிர்பாராத விபத்துக்களால் உடல் அவயவங்கள் இழக்கப்படுதல் எமக்கு மட்டும்தான் நடப்பவைஅல்ல.நமது சகாக்களான பிராணிகளும் இதே ஆபத்தை பெருமளவாக எதிர்நோக்குகின்றன.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பிராணிகள் அவயவங்களை இழந்து கஸ்ரப்படுவதை சகிக்கமுடியாமல் கருணைக்கொலையுடன் அனைத்தையும் முடித்துவிடுவார்கள்.தற்பொழுது அதற்கு அவசியமே இல்லை.அக்காளப்பட்ட யானைக்கு கால் அகற்றவேண்டியேற்பட்டாலும் அதற்கும் மாற்று செயற்கைக்கால் இருக்கவே இருக்கின்றது.இதே தொழில் நுட்பத்தால் மற்றைய விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன.
மாற்று அவயங்கள் பொருத்துவதில் மிக கடினம் என விவாதிக்கப்படுவது இழந்த கைகளுக்குப்பதிலாக செயற்கைக்கைகளைப்பொருத்துவதுதான்.எமது உடலில் அதிக அளவான நுட்பமான அசைவுகளை மேற்கொள்வது நமது கைகள்தான்.அடிப்படையில் மிக கடினமான வேலை ஊசியில் நூல்கோற்றல்.இவ்வாறான செயற்பாட்டை சும்மா செய்வதே கடினம் எனவே செயற்கை கையைப்பொருத்தினால் அதற்குரிய கணத்தாக்கத்தை மூளையில் இருந்து கைக்கு எவ்வாறு முழுமையாக கடத்தல் சாத்தியம்?என்றுதான் இது தொடர்பான விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன.
ஆனால் தற்பொழுது செயற்கை கை பொதுவாக எந்த சாதாரண பொருளையும் தூக்க முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.கணத்தாக்கம் கைக்குகடத்தப்படுவதுடன் மீண்டும்  மூளைக்குகடத்தப்படவேண்டும்.ஓரளவிற்கு இது தற்பொழுது வெற்றியீட்டி உள்ளது.

கால்களை இழந்தவர்கள் வழக்கமாக செய்வது தமது இலக்குகளில் இருந்து வலிந்து ஓய்வு பெற்றுவிட்டு ஊன்றுகோலின் உதவியுடன் தமது  மீதமான வாழ்க்கையை தொடருதல்.ஆனால் இன்று இதற்கு அவசியமே இல்லை.ஊன்றுகோல்களுக்குப்பதிலாக செயற்கையாக மெடெல்களினால் ஆன கால்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவை உலோகங்களின் material strength and flexibility இயல்பின் உதவியினால் வெற்றிகரமாக செயற்பட உதவுகின்றது.இதற்குப்பயன்படுத்தப்படும் உலோகத்தில் மீள்தன்மை வலிமை முக்கியமாக கருதப்படுகின்றது.பாதத்திற்கான மாற்று பாதம் பார்ப்பதற்கு பாதம்போன்று இருத்தல்மட்டும்போதுமானதல்ல.பாதத்திலும் கைகள் அளவு இல்லாவிடினும் பல சிக்கலான அசைவுகள், மூட்டுக்கள் இருக்கின்றன.


சாதாரண அங்கவீனமானவர்களுக்கான தேவைகளை அவர்களாகவே குறைத்துக்கொள்வதால்அதிக திறனுடைய மாற்று அவயவங்களை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.ஆனால் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களுக்கு பிஸிக்கல் லிமிட்டேஸன்ஸ் இருக்கக்கூடாது.இருந்தால் அவர்களது தனிப்பட்ட  திறனை இது நிச்சயம் பாதித்துவிடும் எனவே இதற்காக விளையாட்டுவீரர்களின் பயிற்சிகள்,பிரயாணங்களுக்கென விசேடமான கருவிகள் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மனித பாதத்தில் மொத்தமாக 26 எலும்புகள் உள்ளன.இவற்றில் ஒன்றை இழந்தாலும் உங்கள் சமனிலை நிச்சயம் குழப்பப்படும்.சாதாரணமாக ஒருவர் காலை தூக்கி வைத்து நடக்கும்போது அமுக்கம், நிறை மாற்றமடையும்.இதனால் செயற்கைப்பாதம் என்பதும் கடினம்தான்.சாதாரண மரத்தால் ஆன கால்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான பாதங்கள் மிக சிக்கலான அமைப்புடையவை.

ஏதோ எமக்குமட்டும்தான் இது அவசியமானதல்ல விலங்குகளுக்கும் இவ்வாறான செயற்கை அங்கங்கள் அவசியம்.காட்டுவிலங்குகள் பறவைகள் அதிகளவாக இவ்வாறான ஆபத்துக்களை சந்திக்கின்றன.சொண்டுகள் உடைதல்.அவயவ இழப்பு,மீன்கள்க அலகுகள்,வால்களை இழத்தல்.ஆனால் இவ்வாறான ஆபத்துக்களுக்குள்ளாகிய விலங்குகள் எமது கவனத்திற்கு வரும் முன்னரே நோய்த்தொற்றினாலோ அல்லது வேறு விலங்குகளினாலோ இறந்துவிடும்.அதிஸ்ரவசமாக மனிதரின் கண்ணில் படும் விலங்குகளுக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி காப்பாற்றப்படுகின்றன.

உலகின் முதல் முதலாவது ( cybernetic)செயற்கைபாதம்  MIT (Massachusetts Institute of Technology ) குழுவால் உருவாக்கப்பட்டது.யுத்தத்தில் தமது கால்களை இழந்தவர்களுக்கு உதவுவதற்காகவே இது உருவாக்கப்பட்டது.முன்னைய செயற்கை அவயவங்களை விட இது அதிக வசதிகளைக்கொண்டுள்ளது.ஆனால் சாதாரணமாக காலை அசைப்பதற்கு செலவிடும் சக்தியை விட 30% அதிக சக்தியை இதற்கு செலவிடவேண்டும்.ஸ்பிரிக்குங்கள்,சிறிய பற்றியால் இயங்கக்கூடிய மோட்டர்களைக்கொண்டது  காலை நிலத்துல் அழுத்தும்போது சக்தி சேமிக்கப்படும்.காலை எடுக்கும்போது சக்திவிடுவிக்கப்படும்.
Professor Hugh Herr  இனால் இது உருவாக்கப்பட்டது.ஆப்கானிஸ்தான்  ஈராக்கில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு இது வழங்கப்பட்டது.

இது சாதாரண செயற்கை பாகத்தைவிட வித்தியாசமானது.பார்க்கும்போதே எதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பது புரிந்திருக்கும்.யானையின் துதிக்கையை மொடலாக வைத்து உருவாக்கப்பட்டது.இதை  Kaylene Kau  என்ற மாணவர் உருவாக்கியுள்ளார்.பொருட்களை சுற்றி வளைத்து இதனால் கையாளமுடியும்.


நியூஸிலாத்தை சேர்ந்த  கம்பனியின் தயாரிப்பு இது.சக்கர நாற்காலியில் இருக்கும் நபர்களை எழுந்து நடக்கவைப்பதற்கான முயற்சி இது.இக்கருவியின் பெயர்  Robotic Exoskeleton.ஆரம்பத்தில் இது அச்சுறுத்தும் விதமாக இருந்தாலும் மக்களிடம் தற்போது வரவேற்பைப்பெற்றுள்ளது.பொறியியளாளர்கள் விஞ்ஞானிகளின் 8 வருட உழைப்பில் இது சாத்தியமானது.
இவ்வாறான செயற்கை உறுப்புக்களை செய்பவர்கள் நிஜத்தில் உறுப்புக்கள் என்ன மாதிரி இருக்கின்றதோ அதேபோல் உறுப்புக்களை உருவாக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள்.ஆனால் சிலர் இதை பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் வடிவமைக்கின்றனர்.மேலே காட்டப்பட்டுள்ள செயற்கை கை  Creative DNA Australia இனால் உருவாக்கப்பட்டது.சுவிஸ் நாட்டின் கத்தியில் ஓபினர் கத்தி போன்ற பல விடயங்கள் ஒரே கத்தியில் இருக்குமல்லவா அதே போல்தான் இக்கையையும் உருவாக்கியுள்ளார்கள்.

செயற்கை உறுப்புக்களால் பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

Oscar the Cat

Naki’o the Dog(செயற்கை உறுப்புப்பொருத்திய முதலாவது நாய்)


Boonie the Goat


Fuji the Dolphin(முதலாவது செயற்கை துடுப்பை பெற்றுக்கொண்ட டொல்பின்)
Yu Chan the Sea Turtle


Beauty the Eagle


Motala the Elephant


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}