யார் வேண்டுமானாலும் சுவையாக சமைக்கலாம் டெக்னோலஜி

சமையல் அதுவும் தனிக்கலைதான்.அவ்வளவு இலகுவாக வந்துவிடாது.எப்போதுமே வீட்டில் சமையலைப்பற்றிய நக்கல் நையாண்டிகள் இருந்துகொண்டே இருக்கும்.உப்பில சோறு கம்மி..தோசையை விழுத்திடாத உடைந்துவிடும் போன்ற வார்த்தைகளை அதிகமாக கேட்கவேண்டி  இருக்கும்.முக்கியமாக ஆண்கள் தமக்குத்தாமே சமைத்துக்கொள்ளல் இதுதான் ஆண்களுக்கு கொடுக்கப்படும் பெரிய தண்டனை.எவ்வளவு கடினம் என்று பட்டால்தான் தெரியும்.ஆனால் ஆண்களுக்கும் சமையலில் எக்ஸ்பேர்ட் இல்லாத பெண்களுக்குமாக சேர்த்து ஒரு டிசைனை அமைத்துள்ளார் Okan Akgöl சிலவருடங்களில் இது  பாவனைக்கு வந்துவிடும்.இக்கருவிக்கு அவர்கள் வைத்தபெயர் Electrolux Motherspoon  சாதாரண ஸ்பூன் மாதிரி இருக்கும் இதை நீங்கள் என்ன கறியை,குழம்பை அல்லது எந்த சமையலை சமைக்க விரும்புகின்றீர்களோ அதனுடன் இதை உள்ளே வைத்துவிடவேண்டும்.நீங்கள் விரும்பும் சமையல் எதுவென குறிப்பிட்டால் இந்தக்கருவி இணையத்தில் இருந்து அதற்கான தகவலை எடுத்துவிடும் உப்பு எவ்வளவு வீதம் தூள் எவ்வளவு வீதம் என்னென்ன தேவை எவ்வளவு நேரம் சமைக்கவேண்டும்.இவற்றை உங்களுக்கு தெரியப்படுத்தும்.இதில் உள்ள திரையின் மூலமும் சத்தத்தின் மூலமும் தகவல்களைத்தெரியப்படுத்தும்.உப்பை இட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் சத்தமிடும் அத்துடன் உப்பிடுவதை நிறுத்தவேண்டும்.இப்படி இது சமையலுக்கு உதவும்.உங்கள் சமையல் நன்றாக இருந்தால் அவற்றையும் இணையத்தில் அப்லோட் செய்துவிடும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}