யாழ் மாணவரின் தலை விதி
யாழ்சமூகத்தில் முக்கியமாக குறிப்பிட்டுக்கூறக்கூடியவிடயம் கல்வி.யாழ்சமூகத்தவர் வேறு எதற்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.வசதியில்லாத குடும்பத்தவராக இருந்தாலும் வீடு,நகைகளை அடகுவைத்தாவது தமது குழந்தைகளைக்கற்பிக்கும் பெற்றோர் இருக்கின்றார்கள்.வேலைசெய்துகொண்டே படிக்கும் மாணவர்களும் இங்கு இருக்கின்றார்கள்.யாழ்மக்கள் கூடும் பொதுவான இடங்களில் பெற்றோர்களுக்கிடையே கேட்கப்படும் முதலாவது கேள்வி உங்கட மகன்/மகள் இப்ப என்ன செய்யிறா?படிக்கிறாரா/வா?என்னதுறை? இல்லாட்டில் வேலைசெய்யிறாவா? இவ்வளவும் தமக்குள் பரிமாறப்பட்டபின்பே மிகுதிக்கதை அவர்களுக்கிடையில் தொடர்கின்றது

வயது முதிர்ந்தவர்கள்கூட நீ இப்ப என்ன செய்யிறா?எஸ்.எஸ்.எல்.சி முடிச்சிட்டியா(சில முதியவர்கள் இன்னும் அப்டேற் ஆகவில்லை ஆனாலும் நிலைமையை தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றார்கள்).ஏ.எல் படிக்கிறியா? படிச்சு முடிச்சுட்டன் பெரியப்பா.என்ன ரிஸல்ட்? 2 ஏ ஒரு பி......அப்ப யூனிவேசிட்டிக்குபோக காணூமே?
(அடிங்க் கொய்யாலே என்ன கொடுமை சரவணா?என்று தலையை தொங்கப்போட்டுக்கொண்டு)ஆமா தாத்தா ஏதோகாணும்.எங்க சாதி சனத்திலையும் ஊருக்க ஒரு டாக்குத்தர்,எஞ்சினியரா இருக்கவேணும் கண்டியோ?....
சரி இவ்வளவு நடந்தாலும் யாழில்தற்பொழுது ஏ.எல் மாணவர்களது கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது.இதற்கு என்ன காரணம் என்று ஆராட்சிசெய்து விடைகள் பலவற்றைக்கண்டுபிடித்திருக்கின்றார்கள்.


சமூகப்பெரியவர்களின் கருத்து-

ஏ9 பாதை திறக்கமுன்னம் இங்க யாழ்ப்பாணத்தில பெரிசா ஒரு வசதியும் இல்லை.ஆனா இப்ப இங்க எல்லாத்தையும் கொண்டுவந்துகொட்டுறாங்கள்.அதால எங்கட இளசுகள் காணாதத கண்டமாதிரி காஞ்சமாடு காம்பிலே பாஞ்சதுமாதிரி பாயுதுகள்.போனோட திரியுதகள் அட பொடியள்தான் அப்படியெண்டால் இந்தப்பெண்டுகள் இருக்குதுதானே அதுகளும் இப்ப காதில அதைப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள்.இப்ப அதால தானே பேப்பரில ஓடிப்போனதுகளைப்பற்றி போடுறாங்கள்.பெண்டுகள் இப்படி அழிஞ்சா பொடியள் தண்ணியடியெண்டு திரியுறாங்கள்.கல்யாணவீட்டில சரி இல்லாட்டில் எங்கயாவது பாட்டியாம் அங்கயும் குடிக்கிறாங்கள்.....யாழில்வாழும் இலட்சக்கணக்கான மக்களின் மத்தியில் வருட்த்திற்கு6 பாலியல் வன்முறைகள் குடித்துவிட்டு கும்மியடித்தல் சிலவன்முறைசெய்திகள் கொலை என்பவற்றைவைத்துக்கொண்டு ஒட்டுமொத்த யாழுமே இப்படித்தான் ஆகிவிட்டது என்ற நிலைமைக்கு வந்தால் அதைவிட முட்டாள்தனம் ஒன்றுமே இல்லை.ஆனால் இப்படி யாழில் நடைபெறும்  மட்டகரமான செய்திகளை ஊதிப்பெரிதாக்கி தமது இணையத்தளங்களை பிரபலமாக்குவதற்காக ஒரு சிலர் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.இதைவிட வேண்டுமென்றே சில செய்திகளையும்போட்டுத்தொலைக்கின்றார்கள்.இவ்வாறானவர்களின் செய்திகளைக்கொண்டு ஒட்டுமொத்தசமூகத்தின் மீதும் பழியைப்போட்டுவிடமுடியாது.


ஏ.எல் மாணவர்களது பெறுபேறுகள் ஏன் குறைகின்றன?இந்தக்கேள்விக்கு ஒரு கதையினூடாக நான் பதில்கூறமுயற்சி செய்துள்ளேன்.ஒரு சராசரி ஏ.எல் மாணவனது ஏ.எல் வாழ்க்கையினூடாக கதை செல்லும்.
ஏ.எல் கற்கும் மாணவர்களை சமூகம் எவ்வாறு பார்க்கின்றது?
அவனெல்லாம் என்ன மொக்குப்படிப்பு?நெருப்பு கிட்டவே போகமுடியாது.செத்தவீடு கல்யாணவீடுகளில் கூட சந்திப்பது கடினம்.வந்தால் கூட 2 வரிக்குமேலே கதைக்கமாட்டான்.ஓடு ஓடு என்று ஓடித்திரியிறான்,ஊருக்கு ஒரு டொக்ரர்/எஞ்சினியர் ரெடி.அவனெல்லாம் ஊரில இருக்கிறான் எண்டே தெரியிறதில்ல.காலைல போய் இரவுதான் வாறான்.

மாணவர்கள் வீட்டில் எப்படி பார்க்கப்படுகின்றார்கள்?

காலமை எழும்பி டீ குடிச்சிட்டு சாப்பிடாமகொள்ளாம ஓடுறான்.இரவுவாறான்,சில நாள்ள காலமை 3 மணிவரைக்கும் படிக்கிறான்.பல நாள் இரவு நல்ல நித்திரை பாவம் பிள்ளை ஓடுற ஓட்டத்தில களைச்சுப்போய் நித்திரை கொள்ளுது.மாசம் மாசம் ரியூசன் காசு கூடிக்கொண்டே போகுது.கேட்டா எக்ஸாம் காசு ஏதோ செக்ஸனாம் ஒவ்வொரு செக்ஸனா சொல்லி காசு வாங்கிறான்.சிலவேளை ஒரு பாடத்துக்கு ரண்டு மூண்டு சேற்றை பேரை சொல்லி காசு வாங்கிறான்.ஒருக்காப்போய் விசாரிக்கவேணும் இவன் உண்மையிலேயே என்ன செய்யிறான் எண்டு.ஒவ்வொரு  நாளும் ஓடுறான் ஓடுறான் இரவிரவா படிக்கிறான் ஆனா ரேர்ம் எக்ஸாமுக்கு மார்க்ஸ்தான் வரமாட்டேன் எங்குது.அவண்ட ஸ்கூல் வாத்திமார் கூப்பிட்டு எங்களுக்குத்தான் பேசினம் பாடத்தை மாத்தட்டாம்.ஸ்கூல் கௌரவம் போய்டுமாம்.போனமுறையும் அங்கதானாம் ஓல் எஃப்ஃபும் கூட.பொடியன் பேரன்ஸ் மீட்டிங்க்குக்கு போகும்போது யார் யாரிட்ட என்ன பேசனுமெண்டு எங்களுக்கு பெரிய லிஸ்டே தந்துவிடுது.அதோட பொடியனிட்ட ஏன் மார்க்ஸ் குறைஞ்சது எண்டு கேட்டால்.சிலபஸ் முடியல என்கிறான்.எனக்கு ஒண்டுமே விளங்கல.இவண்ட ரியூசன் காசு கொடுக்க நான் எங்கேயாவது இனி களவெடுக்கத்தான் போகவேணும்.பெரியப்பற்றமேன் அவன்தான் கணேசன் அவனும் ஏ.எல் தானே படிச்சவன்.டொக்ரர்தானே அவன். உன்னைமாதிரி அவன் இப்படி காலமை பின்னேரம் எண்டு ஓடலயே?அப்படி படிச்சுத்தானே டொக்ரர் ஆனவன்?என்ன செய்றா நீ?
இவை அன்றாடம் ஏ.எல் மாணவன் கேட்கும்வார்த்தைகள்.

ஆனால் ஏ.எல் மாணவனின் நிலை என்ன?பாடசாலை ,தனியார்கல்வி நிலையம்,வீடு இவற்றுள் பாடசாலை,தனியார் கல்வி நிலையங்களில்தான் மாணவர்களது பெருமளவான வாழ்க்கை செலவழிகின்றது.
அவனைப்பொறுத்தவரை ஏ.எல் வாழ்க்கை என்றால் என்ன?என்ன செய்கின்றான்?என்ன போராட்டம்?

அருள் யாழ்ப்பாணத்தில் பிரபலமான பாடசாலையில் கற்கும் மாணவன் ஓ.எல் முடிந்ததும் என்ன துறையை தெரிவு செய்வது என்ற குழப்பத்தில் இருந்தான்.பயோ அல்லது மற்ஸ் எதை தெரிவுசெய்வது என்றபோது நண்பர்களிடமிருந்து அட்வைஸ் இலவசமாகக்கிடைத்தது. நீ நல்லா பாடமாக்குவியா? நல்லா கொப்பியை மேய்வியா அப்படியென்றால் பயோ எடு.குழப்பத்தில் இருக்க வீட்டிற்கு ஒரு மற்ஸ்சேர் வந்திருந்தார் மற்ஸ் என்றால் கடல் பாருங்கோ என்று ஒரு லெக்ஸர் எடுக்க குடும்பம்  மொத்தமும் பயோவிற்கு வாக்களிக்க டெப்போசிட் இழந்தான் அருள்.அடுத்து அட்வைஸ் செய்தவர்கள் ஏற்கனவே ஏ.எல் படித்துக்கொண்டிருக்கும் அண்ணன்கள்.

நீ சுயன்ஸ்கோலுக்கு போகவில்லையாயின் உன்னை ஏ.எல்லில் இருக்கும் யாரும் வித்தியாசமான ஜந்துவாகப்பார்ப்பார்கள் அத்துடன் இந்தஜென்மத்தில் உன் ஏ.எல்லிற்கு விடிவில்லை.பாடசாலையில் வடிவா படிப்பிக்கமாட்டாங்கள்.சிலபஸ்ஸும் முடியாது.ஒண்டும் முடிக்காம ரோட்டில நிற்பாய் என்றனர்.அத்துடன் ஒரு அண்ணனின் படிக்குமறையைப்பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.ஒரு பாட்த்திற்கு ஒரு மேசை என்றவீதம் மூன்று மேசைகள்.3 மேசை நிறையக்கொப்பிகள் ஒவ்வொரு பாடத்திற்கு ஒவ்வொரு ஆசிரியர்களின் பெயருடன் அடுக்கப்பட்டிருந்தது.இவ்வளவும் படிக்கவேண்டும்.4 ஆவதாக ஒரு அலுமாரி அது நிறைய ரியூட்கள்,பாஸ் பேப்பர்கள்.இப்ப பாஸ்பேப்பர் வாங்காத.. அடுத்தவருடம் உன்ர சீனியர் பச்சின்ட எக்ஸாம் முடிய வாங்கினாய் என்றால் அவங்கட பேப்பரும் சேர்த்துக்கிடைக்கும்.என்று அட்வைஸ் கிடைத்தது.உனக்குத்தெரிந்த ஏ.எல் முடித்த சீனியர்களிடம் அவர்களது நோட்ஸைவாங்கி வைத்துக்கொள்.உனக்கு உதவும் வேளைக்கு போய்வாங்குசரி என்று ஒருவாறாக அருள் சுயன்ஸ்கோலுக்குசென்றான் அட்மிஸன் எடுப்பதற்காக.மருள் என்பவர்தான் சுயன்ஸ்கோலை நடத்துபவர்.அடையாள அட்டையை வாங்கி அட்மிஸனை பதிந்துகொண்டார்.தம்பி பிஸிக்ஸ் 2 பேர் படிப்பிக்கினம்.ஒருவர் கமரன் மற்றையவர் சொதிலிங்கம் சொதிலிங்கம் சேரிட்டை படிச்சால் உங்களுக்குத்தான் நல்லது.2 தரம் படிச்ச மாதிரியும் இருக்கும் வித்தியாசமா ஐ.கியூ எல்லாம் சொல்லித்தருவார்.இப்ப வேண்டாம் என்றால் பிறகு இங்க வரக்கூடாது.என்ன ஒரு அக்கறை அருள் நினைத்துக்கொண்டான்.யாழ் மாணவர்கள் மீது தன் மகன்போல் அக்கறைப்படும் நிர்வாகி மருள் மாதிரியும் மனிதர்கள் இப்பூவுலகில் இருக்கின்றார்கள்தானே என்று நினைத்துக்க்கொண்டு ஆமாம் என்று தலையாட்டினான்.

அடுத்ததாக கெமிஸ்ட்ரிக்கு ஆசிரியரைதெரிவு செய்யவேண்டும்.யாரைத்தெரிவு செய்வது என்று அலசியபோது அரத்திரன் , குக்கர் என்ற ஆசிரியர்களைப்பற்றிய செய்திகிடைத்தது.இவர்கள்தான் யாழில் கெமிஸ்ட்ரிக்கு மிகவும் பிரபலமானவர்களாம். கெமிஸ்ட்ரியை குக்கரிடம் எடுக்குமாறு நண்பர்கள் அருளுக்கு அட்வைஸ் செய்தார்கள்.
ஏனென்றால் அவர்தான் பாடசாலையில் கற்பிப்பாராம் தனது பாடத்தை குக்கரிடம் எடுக்காவிட்டால் அதை மனதில் வைத்திருந்து சில பழிவாங்கல்கள் இடம்பெறலாம் என்று எச்சரித்தார்கள்.உடனேயே குக்கரை தெரிவு செய்திருந்தான் அருள்.பின்னர் குக்கர் ஒரு அப்பாவி மனிதன் என்று தெரியவந்தது வேறுகதை.ஆனால் வேறு பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் இதே காரணத்தால் மாணவர்களைபழிவாங்கிய கதைகளும் அருளின் காதுக்கு எட்டியிருந்தன.

தொடரும்.....

பகுதி 2 க்கு இங்கே கிளிக்...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}