coffee அறியாதவை

coffee உற்சாகபானம்.அதிகாலையின் ஆரம்பம் இதனுடன் ஆரம்பித்தால் உற்சாகம்தான்.அதே மணம் அதே திடம்....இது மறைந்துபோன விளம்பரம்.சரி விடுங்கள் மேட்டருக்குவருவோம்.முதன் முதலில் coffeeஐக்கண்டுபிடித்தது ஒரு ஆடு.9 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்டி என்ற ஆடு மேய்ப்பவன் எதியோப்பியாவில் தனது ஆடுகள் கோஃபி மரத்தில் இருக்கும்  செரிபழங்களை  சாப்பிட்டதும் விசித்திரமாக ஆடுவதைஅவதானித்தான்.இது 16 ஆம் நூற்றாண்டில்தான் கதையாக எழுதப்பட்டுள்ளது.இது உண்மையென்றும் நம்பப்படுகின்றது.கோப்பியில் லைட்டான நிறமுடைய கோப்பி விதைகள் டார்க்கான நிறமுடைய கோப்பி விதைகளைவிட அதிக கஃபின்(caffeine) ஐக்கொண்டிருக்கும்.கோஃபி செரிப்பழங்களில் இருந்து பெறப்படுகின்றது.50 கோப்பி இனங்கள் அறியப்பட்டுள்ளன.பொதுவாகப்பயன்படுத்தும் 2 இனங்கள் arabica,robusta.ஒரு வருடத்திற்கு சராடரியாக 500 பில்லியன்  கப் கோப்பி அருந்தப்படுகின்றது.இதில் அரைவாசி காலை உணவுடன் அருந்தப்படுகின்றது.கோப்பியை எரிபொருளாகவும் பயன்படுத்தமுடியும்.கோப்பியை எரிபொருளாகப்பயன்படுத்திபரிசோதனை செய்திருக்கின்றார்கள் காரின் பெயர் Car-puccino 210 மைல்களை கோப்பியை எரிபொருளாகப்பயன்படுத்தி கார் கடந்துள்ளது.இது இதே தூரத்தை பெற்ரோலில் சாதாரணமாக கடக்கும்போது ஏறபடும் செலவைவிட 25 தொடக்கம் 50 மடங்கு அதிகம் .ஆனாலும் எதிர்காலத்தில் இது சாதாரணமாக பயன்படுத்துமளவிற்கு மாற்றப்படும் என நம்பப்படுகின்றது.






வரலாற்றில் கோப்பி அருந்துவது சட்டவிரோதமாககூட கருதப்பட்டது.வரலாற்றில் 3 தடவைகள் இப்படி சட்டவிரோதமாக கருதப்பட்டது.16 ஆம் நூற்றாண்டில் மெக்காவில் சட்டவிரோதமாக கருதப்பட்டது.30 ஆண்டுகள் மெக்காவில் இது பற்றியவிவாதங்கள் இருந்துகொண்டே இருந்தன.இரண்டாவது தடவை சட்டவிரோதமாக்கப்பட்டது  ஐரோப்பாவில் 2 ஆம் சார்லெஸ் மன்னன் காலத்தில்.3 ஆவதாக சட்டவிரோதமாக்கப்பட்டது 1677 இல் பிரடரிக் நோர்த்தினால்   நாட்டின் பெருமளவான செல்வம் இதற்காக செலவழிக்கப்படுவதாக  கருதினார்.இன்றும் பல சமயங்களில் கோப்பி அருந்துவது சமயத்திற்கு விரோதமாகக்கருதப்படுகின்றது.மேலதிக தகவல்கள் கீழே




------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}