நடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள்4: சோழர்கள்

இப்படியாக வணங்கப்பட்டு வந்த நடராஜார் திருவுருவங்களை பிரபலமாக்கியது சோழர்கள்தான். வெண்கல வார்ப்புச் சிலைகளாகவும், ஐம்பொன் சிலைகளாகவும், கிபி 800 – 1300  காலகட்டத்திலே சிற்ப ரீதியாக தமிழகத்திலே அதி உன்னத நிலையை தோற்றுவித்தவர்கள் பல்லவர்கள். அவர்களை தொடர்ந்து ஆட்சியை பிடித்த சோழர்கள் அதை அதி உன்னத நிலைக்கு கொண்டுவந்தார்கள். நாடுகளை பிடிப்பதும், கோயில்களை கட்டுவதுமாக இருந்த சோழர்கள், அந்தக் கோயில்களிலெல்லாம் பிரதிட்டை செய்ய வெண்கல வரப்புக் கலையை வளர்த்தெடுத்து அற்புதமான சிற்பங்களை ஆக்குவித்தார்கள். அவ்வாறாக அவர்கள் அதிகளவில் அமைத்த  சிற்பம் நடராஜத் திருவுருவமே. (இலங்கையிலுள்ள பொலநறுவையில் அவர்கள் ஆட்சி செய்தபோது, அங்கே கட்டிய சிவன் கோயில்களிலும் பலப்பல விக்கிரகங்களை அமைத்திருந்தது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது அறிந்ததே. அழகிய வெண்கலத்தாலான நடராஜர் சிலை ஒன்றும் அங்கே கண்டுபிடிக்கப்பட்டது.) சோழர்களின் பெரும் சாதனைகளில் ஒன்றாக இன்றளவும் போற்றப்படுவது தமிழர்களின் கலைச் செல்வமாக இருக்கும் நடராஜர் சிலையை யுலகமேன்கும் பிரபலப்படுத்தியதுதான்.


5: நடராஜ தத்துவம்

உலகத்திலே இத்தனை தத்துவ, மத, வரலாற்றுக் கருத்துக்கள் கொண்டதாக இன்னொரு உருவம் இருக்குமா தெரியவில்லை. இந்துசமயம் போதிக்கிற மதக் கருத்துக்கள், நம்புகிற பிரபஞ்ச, பௌதிகக் கருத்துக்கள், எச்சரிக்கிற ஊழிக் கருத்துக்கள், விருத்தியடைந்த வரக்லார்றுக் கருத்துக்கள் எல்லாமே இந்த வடிவத்திலே செய்தது வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்றளவும், எந்த ஒரு பண்டைய, புதிய தத்துவத்துக்கும் குறியீடாக இதை பாவிக்கக் கூடியதாக உள்ளது என்பது ஆச்சரியமே. பிரபஞ்ச தோற்றம், இயக்கம், முடிவு, நடனம், சிற்பம், ஐந்தொழில், சத் சித் ஆனந்தம், முப்பொருள் விளக்கம், திருவைந்தெழுத்து, சிவ குறியீடுகள், தென் இந்திய மானிடவியல் வரலாறு... எல்லாமே!

5.1: இந்துசமயத்தின் தத்துவங்கள்

திருவைந்தெழுத்து

தூல பஞ்சாட்சரம்
(நமசிவய)
முக்தி பஞ்சாட்சரம்
(சிவயநம)
தொழில்
சி
தோள்
உடுக்கை
படைத்தல் (சிருஷ்டி)
முகம்
வீசிய திருக்கை
அருளால் (அனுக்கிரகம்)
முடி
அபயத் திருக்கை
காத்தல் (ஸ்திதி)
திருவடி
அனலேந்திய திருக்கை
அழித்தல் (சம்ஹாரம்)
வயிறு
ஊன்றிய திருவடி
மறைத்தல் (திரோபவம்)


திருவைந்தெழுத்தாகிய நமசிவய என்பது வரிசைமாற்றத்தின்படி 120 வகைகளில் எழுதப்படலாம். அந்த 120 வகைகளும் சிவனின் ஒவ்வொரு அங்கங்ககளை குறிப்பதாக அமைந்துள்ளது. உதாரணமாக, நயவமசி – நாவின் அடிப்பகுதி, யவநமசி – மூச்சு என்பதாக. இப்படியாக 120 அங்கங்களின் சேர்க்கையாக நடராஜர் உருவம் அமைக்கப்படுகிறது.


நடராஜரின் சடாமுடியானது மயிற்றோகை போலக் கட்டப்பட்டு, நாற்புறமும் விரிந்தாடுகிறது. அதிலே நாகங்களும், கபாலங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. முடியப்பட்டுள்ள கங்கையும், பிறைச் சந்திரனும் உள்ளன. வலது காதிலே குண்டலமும், இடது காதிலே குழையும் உள்ளன, இது தனது பாதியை சக்திக்குக் கொடுத்ததன் குறியீடாகும்.
இவ்வாறாக நடராஜத் திருவுருவத்தின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஆகமத்திலே ஒவ்வொரு கருத்தும், விளக்கமும், உள்ளது.

5.2: பிரபஞ்ச இயக்கம்

பிரபஞ்சத்தின் உற்பத்தியையும், அழிவையும் தீர்மானிக்கும் சக்தியே சிவனாவார். பிரபஞ்சமானது முடிவில்லாத பல காலச் சக்கரங்களை கொண்டது. ஒவ்வொரு காலச் சக்கரத்தின் தொடக்கத்திலும் ஆனந்த நடனமாடி அந்தக் காலச் சக்கரத்துக்குரிய அண்டத்தை உற்பத்தி செய்து, தொடர்ச்சியான நடனத்தின் மூலம் அதை விரியச் செய்து, பின்னர் அந்தக் காலச் சக்கரம் முடிவுக்கு வந்ததும், ஊழித் தாண்டவமாடி அந்த அண்டத்தை ஒடுக்கி, அழிப்பது சிவனே.

பூலோகத்தின் 864 கோடி ஆண்டுகள் பிரமனின் ஒரு நாளாகும். அப்படியான 360 நாட்கள் ஒரு பிரம்ம வருடமாகும். அப்படியான 100 வருடங்களே பிரம்மாவின் ஆயுட்காலமாகும்.

பிரம்மாவின் ஒரு நாளானது ஒரு கற்பமாகும். அந்த ஒவ்வொரு கற்பத்திலும் பகல் வேளையான 432 கோடி ஆண்டுகளே பிரபஞ்சங்களின் ஆயுட் காலமாகும். கற்பத்தின் காலை வேளையில் அந்தத்தை படைக்கும் இறைவன், மாலை வேளையில் அதை ஒடுக்குகிறார், பின்னர் இரவு வேளையானது  பிரபஞ்சம் அற்ற வெறுமையாகும்.

இப்படியான ஒவ்வொரு கற்பமும் 14 மன்வந்தரங்களாக பிரிக்கப்படும். ஒரு மன்வந்தரம் 30,67,20,000 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் மனித இனம் படைக்கப்பட்டு,ன்வந்தர முடிவில் அழிக்கப்படும். அப்படி படைக்கப்படும் முதலாவது மனிதன் மனு எனப்படுவான். ஒரு கற்ப காலத்தின் ஏழாவது மன்வந்தரத்திலேயே நாம் இருக்கிறோம். வைவசுதான் என்கிற மனுவின் வழித் தோன்றல்கள் நாம்.

ஒவ்வொரு மன்வந்தரமும் 71 மகா யுகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மகா யுகமும், 4 யுகங்களாக பிரிக்கப்படும். (கிருத யுகம், திரேதா யுகம், துவாபார யுகம், கலி யுகம்)

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் அண்டத்தை உருவாக்கி, பின்னர் அழிக்கும் இறைவன், பிரம்மாவின் நூறு பிரம்ம வருடங்கள் முடிந்ததும், பெரும் ஊழிக் கூத்தாடி, அந்த அண்டத்தையும், பிரமாவையும் அழிக்கிறார். பின்னர் பிரபஞ்ச இயக்கமானது இறைவனுள் அடங்குகிறது. மீண்டும் ஒரு ஆனந்த நடனத்தின் மூலம் புதிய பிரமாவையும், அண்டத்தையும் உருவாக்குகிறார் சிவன்.

நடராஜரின் பின் வலது கரத்தில் டமருகமான உடுக்கை உளது. அதுவே பிரபஞ்சத்தின் படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பை ஆக்கும் தனது ஆனந்த தாண்டவத்தை தொடங்க முன்னர் சிவன், தனது உடுக்கையை பதினான்கு முறை அடித்தார், அதிலிருந்து வந்த வெவ்வேறுபட்ட நாதங்களே நாட்டிய சாத்திரத்தை அறிவித்து பாரத முனியாகவும், சங்கீத சாத்திரத்தை அறிவித்து நாரத முனியாகவும், இலக்கண சாத்திரத்தை அறிவித்து பாணினி முனியாகவும், யோக சாத்திரத்தை அறிவித்து பதஞ்சலி முனியாகவும் ஆகின்றன.
இவ்வாறாக பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான அனைத்தையும் படைத்தபின்னர், இறைவன் ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறார். பிரபஞ்சம் உருவாகிறது. சுற்றிலும் திருவாசி அமைந்திருக்க நடுவே நடராஜர் ஆடுவதன் கருத்து யாதெனில், இந்தப் பிரபஞ்சத்துள்ளே நடக்கும் சகல இயக்கங்களும் அவரது நடனத்தலேயே நடக்கிறது என்பதைக் காட்டுவதேயாகும். நின்றாடும் பீடம் மகா அம்புஜ பீடம் ஆகும். அதிலிருந்துதான் பிரபஞ்சம் விரிவடைந்தது எனப்படுகிறது.

இதுவே இந்து சமயம் சொல்லுகின்ற நடராஜரின் பிரபஞ்ச இயக்கத் தத்துவமாகும்.நடனத்தின் தலைவனே சிவனாவான். நடராஜராக பரத முனிவர்முன் தோன்றி, பரத முனிவருக்கு ஆடிக் காட்டிய நூற்றெட்டு தாண்டவங்களும், நூற்றெட்டு கரணங்களும் என்னென்ன?

......பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}