அதற்குள் மாற்றான் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது


இன்றுதான் படத்தையே வெளியிட்டார்கள்.ஆனால் அதற்கு அதை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் சில விஸமிகள்.இது ஒரிஜினலாக ஹை டெபினிஸனில் வெளியாக வில்லை தியேட்டரில் திருட்டுத்தனமாக தமது கைபேசியால் எடுத்து வெளியிட்டுள்ளார்கள் இவர்கள்.இதை வெளியிட்டுள்ள தளம் திருட்டு வி சி டி டொட் கொம்.இந்ததளம் இந்த படத்தை மாத்திரமல்ல இவ்வாறு பல படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஒரு படத்தை வெளியிடுதல் என்பது பிரசவத்திற்கு நிகரானது என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு ஒரு படத்தின் பின்னணியில் பலரது உழைப்புக்கள் தியாகங்கள் இருக்கும்.ஆனால் இவ்வாறானவர்களால் அவ்வாறான தியாகங்கள் உழைப்புக்கள் அவ்வளவும் தரைமட்டமாக்கப்படுகின்றன.

சூரியா ரசிகர்கள் இதன் மூலம் மிகவும் கவலையடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதுதான் வெளியிடப்பட்ட லிங்க் 

http:///www.thiruttuvcd.com/2012/10/12/watch-maatran-movie-online-maattrraan-moviemaatran-download-maatran-torrent-maatran-links-maatran-free

இதில் 13  நிமிடக்காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது மிகுதிக்கு நீங்கள் பணம் கட்டவேண்டுமாம்.

ஆனால் தற்பொழுது வரும் சினிமாப்படங்களிற்கு நம்பி ஆதரவு தெரிவிப்பதும் ஆபத்தான செயலாகவே உள்ளது.சில வருடங்கள் முன்னர்வரை ஆங்கிலமொழிப்படங்களைப்பற்றிய அறிமுகம் இயக்குனர்,நடிகர் வரையிலேயே இருந்தது.ஆனால் இப்பொழுது அப்படியல்ல ஒரு படத்தை வெளியிட்ட அடுத்த நாளே அது எந்த படத்தின் கொப்பி போஸ்ரர் எந்த ஆங்கிலப்படத்தினுடையது என்று வெளிவந்துவிடுகின்றது..ஆனால் இயக்குனர் ஏதோ தானே பலவருடங்களாக மூளையைப்போட்டு கசக்கிப்பிழிந்து திரைக்கதையை உருவாக்கிய ரேஞ்சிற்கு பீற்றிக்கொள்கின்றார்.ஆனால் இனிமேல் இவ்வாறான பருப்புக்கள் வேகாது..இது தொடர்பான பதிவு கீழே...


தமிழ் சினிமாவின் பித்தலாட்டங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}