பின்லேடன் எப்படி கொலைசெய்யப்பட்டார் ?திரைப்படம் வெளிவருகின்றது


பின்லேடன் 9/11 இரட்டைக்கோபுரத்தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும்முகமாக 2011 மே 2 இல் பாகிஸ்தானில்வைத்து கொல்லப்பட்டார்.United States Naval Special Warfare Development Group இன் நேவி சீல் அதிரடிப்படையினரால் இத்தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.Operation Neptune Spear என இந்த மிஸினிற்கு கோட்னேம் இடப்பட்டிருந்தது. இவையனைத்தும் உங்களுக்குத்தெரிந்தவிடயம்தான்.எப்படி தாம் வேறொரு நாட்டிற்குள் அவர்களது அனுமதியில்லாமல் புகுந்து பின்லேடனை கொலை செய்தோம் என்பதை டிஸ்கவரி சனலில் பெருமையுடன்  காண்பித்தார்கள் ன்பது வேறுகதை.
பின் லேடன் கொல்லப்பட்ட விடயம் நமக்கு தெரிந்திருந்தாலும் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது இப்படத்தினூடக வெளிவர இருக்கின்றது.

படத்தின் பெயர் Zero Dark Thirty இது ராணுவத்தினர் பயன்படுத்தும் வார்த்தை 30 minutes after midnight என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம்.இத்திரைப்படத்தின் இயக்குனர் Kathryn Bigelow.சிறந்த இயக்குவருக்கான அக்கடமி அவார்ட்டைப்பெற்றுகொண்ட முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.அத்துடன் 2008 இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த  The Hurt Locker என்ற திரைப்படம் 6 ஒஸ்கார் அவார்ட்களைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Kathryn Bigelow

ஆரம்பத்தில் இப்படத்தின்( Zero Dark Thirty) பெயர் For God and Country என இருந்தது பின்னர் மாற்றப்பட்டது.நிஜத்தில் நேவி சீல் துருப்புக்களை வழி நடத்திய அனோனமிஸ் சி.ஐ.ஏ ஏஜண்ட் ஒரு ஆண் ஆனால் படத்தில் அவருக்கு பதிலாக பெண் காரக்ரர் நடிக்கின்றார்.ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட  Jessica Chastain இதில் சி.ஐ.ஏவாக நடிக்கின்றார்.Ricky S. Sekhon என்பவர்தான் பின்லேடனாக நடிக்கின்றார்.
Jessica Chastain 
படத்தின் சில காட்சிகள்
பின் லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தானின் Abbottabad நகரம்


 Kyle Chandler ,Jason Clarke சி.ஐ.ஏ ஏஜண்ட்களாக நடித்துள்ளார்கள்
பாகிஸ்தானுக்கு புறப்படமுன்னர் சீல் படையினர்

பின் லேடனை தாக்குவதற்காக சீல் படையினர் வைத்திருந்த சங்கேதப்பெயர் Geronimo.பின்லேடனை நெருங்குவதற்கு ரேடர்களை ஏமாற்றவேண்டியிருந்தது.அத்துடன் நைட் விஸனையும் பயன்படுத்தவேண்டியிருந்தது.படத்திலும் இதே போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்க அரசியலில் இப்படம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நம்பப்பட்டாலும் இதில் எந்த அரசியலும் இல்லை என்று போல் கூறியுள்ளார்.இது அமெரிக்க எலக்ஸனில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் Obama Administration  இதை தேர்தலுக்கு முன்பே வெளியிட அனுமதியளித்திருந்தது.ஆனாலும் படத்தை தேர்தலின் பின்னரே வெளியிட முடிவு செய்திருக்கின்றார்கள்.
"Can I be honest with you? I am bad news,"
"I'm not your friend. I'm not gonna help you. I'm gonna break you."  என்பதுடன் படத்தின் ட்ரெயிலர் அட்டகாசமாக ஆரம்பிக்கின்றது.


இந்தப்படத்தில் அரசியல் எதுவுமில்லை என படக்குழுவினர் கூறினாலும் உள்குத்துகள் இருக்கலாம் என்றுதான் விமர்சனம் இப்பொழுதே எழுத ஆரம்பித்துள்ளார்கள்.நம்மவர்கள் போல் இந்தப்படத்தில் ரொம்பவித்தியாசமாக எல்லாவற்றையும் அமைத்திருக்கின்றோம்..நா கூட வித்தியாசமான ரோல் ஒண்டு பண்ணியிருக்கன் ரகம் இல்லை அவர்கள் எனவே படத்தைப்பார்த்தபின்னர்தான் மிச்சம்.பாகிஸ்தான் இந்தப்படத்தை என்ன கண்ணோட்டத்தில் பார்க்கப்போகின்றது என்பதும் பிரச்சனைதான்.இதே பின்லேடன் கொலை விவகாரத்தில்  பிஸ்ஸோனெட்என்ற  சீல் படை வீரரே (அவரும் கொலையில் பங்குபற்றியவர்) தன் அனுபவத்தை  "No Easy Day" என்ற தலைப்பில் புத்தகமாக எழுத அமெரிக்க பாதுகாப்புத்துறையும் பெண்டகனும் ஓ என்று கத்தியது  நினைவிருக்கலாம்.(((அதைப்பற்றிப்படிப்பதற்கு 

சர்ச்சைக்குரிய பின்லேடன் கொலைபற்றியபுத்தகம்)))

பார்ப்போம் இது என்ன பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என்று.

Directed byKathryn Bigelow
Produced byKathryn Bigelow
Colin Wilson
Greg Shapiro
Ted Schipper
Megan Ellison[1]
Written byMark Boal
StarringJessica Chastain
Jason Clarke
Joel Edgerton
Chris Pratt
James Gandolfini
Mark Strong
Edgar Ramirez
Ricky Sekhon
Jennifer Ehle
Kyle Chandler
Nina Arianda
Music byAlexandre Desplat
CinematographyGreig Fraser
Editing byWilliam Goldenberg, Dylan Tichenor
StudioAnnapurna Pictures
Distributed byColumbia Pictures
(United States)[2]
Universal Pictures
(Worldwide)[3]
Release date(s)
  • December 19, 2012
CountryUnited States
LanguageEnglish


உலகெங்கும் வெளியிடப்படும் டேற்

CountryDate
Argentina20 December 2012
Germany10 January 2013
Iceland11 January 2013
Belgium23 January 2013
Finland25 January 2013
Netherlands24 January 2013
France23 January 2013
UK25 January 2013
USA19 December 2012
Norway8 February 2013
சீல் படையணி 6 இன் பயிற்சிகள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}