மாற்றான் ஸ்பெஸல்- இரட்டையர்கள்


இணைந்துள்ள இரட்டையர்களைப்பற்றி  நாம் ஓரளவிற்கு அறிந்திருக்கின்றோம்.அண்மையில் திரைக்குவந்த சூர்யாவின் மாற்றான் திரைப்படத்திலும் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்திருந்தார்.படத்தில் இருக்கும் பல லொஜிக் பிழைகளுடன் ஒரு பிழை என்னவெனில் இருவரில் ஒருவருக்குத்தான் இதயம் இருப்பதாக காட்டியிருக்கின்றார்கள்.ஆனால் இருவரும் பறந்து பறந்து அடிபடுகின்றார்கள்.சாதாரணமாக ஹார்ட்டில் ஹோல் வந்துவிட்டாலே ஒருவரால் வேகமாக ஓடமுடியாது காரணம் ஒட்சிசன் போதாது(இது  ஒட்சிசன் அற்ற குருதியும் ஒட்சிசன் உள்ள குருதியும் கலப்பதால் போதிய ஒட்சிசன் கொண்ட குருதி உடலுக்கு போதாமை காரணமாக ஏற்படும்) படத்தில் ஒரு இதயத்துடன் இருவர் சாகசம் செய்கின்றார்கள்.இருவருக்கும் நிச்சயமாக ஒரு இதயத்தின் குருதி போதவே போதாது.அப்படி இதயம் இருக்கவேண்டுமானால் வழக்கத்தைவிட பெரிய இதயமாக இருக்கவேண்டும்.அந்த இதயத்துடன் இப்படி பறப்பது ரொம்பவும் ஓவர்.இவ்வாறு ஒரு இதயத்துடன் ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்களை thoracopagus twins என்று கூறுவார்கள்.இந்தவகை இரட்டையர்களில் 75% ஆனவர்கள் தம்முள் இதயத்தை பகிர்ந்துகொள்வார்கள்.அதாவது ஒரு இதயம் இருக்கும்.Scotland இல்July 11, 1996இல் இவ்வாறான குழந்தைகள் பிறந்தன 4 நாட்களே உயிர்வாழ்ந்தன.சரி வாருங்கள் தொடர்வோம் இரட்டையர்கள் இருவரது உடல்களும் இவர்களின் உடலின் எந்தப்பகத்தினூடகவோ இணைந்திருக்கும் இவர்களின் உடல்கள் கருவிலே இணைந்து விடுகின்றது இவ்வாறு நடைபெறுவது மிகவும் அரிய நிகழ்வாகும் இது நடைபெறுவதற்கான  நிகழ்தகவு 1 :100 ,000  இல் இருந்து 1 : 200 ,000  வரையாகும் அதாவது 200 ,000  பிறப்புக்களில் ஒரு பிறப்பு இப்படி அமையும் ..

இது போன்ற இணைந்த இரட்டையர்களின் பிறப்புக்கள் தென் மேற்கு ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் கூடுதலாக காணப்படுகின்றது   இப்படிப்பிறப்போரில் 40 -60 % இனர் கருப்பையிலேயே இறந்துவிடுகின்றனர் இதனை மீறிப் பிறப்பவர்கள் இயற்கைக்கு மாறான உடல் அமைப்புடன்  பிறக்கின்றார்கள்  5-25 % ஆனவர்கள் மட்டுமே இவரில் இருந்து தப்புகிறார்கள் இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் ஆண் பெண் விகிதம் 1 :3 ஆகும் பெண்களே அதிக அளவில் இணைந்துள்ள இரட்டையர்களாக பிறக்கின்றார்கள் இவ்வாறு தோன்றும் இரட்டையர்கள் ஒரே முட்டையில் இருந்து தோன்றுவதால் இருவரும் ஒரே பாலினத்தவர்களாக  காணப்படுகின்றார்கள்.அத்துடன் சாதாரணமாக ருவின்ஸ்( twin) என்று அடையாளப்படுத்தப்படுபவர்களில் இரண்டுவகை இருக்கின்றது.monozygotic/identical ஒத்த இரட்டையர்,ஒரு கரு இரண்டாக பிரிவதன் மூலம் உருவாவது இது.dizygotic,fraternal ஒவ்வாத இரட்டையர் வேறு வேறுகருக்கள் விந்துடன் இணைந்து உருவாகும் குழந்தைகள் இந்த வகை.இரட்டையர்கள் தொடர்பில் பல மூட நம்பிக்கைகள் உள்ளன.ஒருவர் நினைத்தால் மற்றவருக்குத்தெரியும்.ஒருவருக்கு விபத்து நடந்தால் மற்றவர் உணர்வார்.ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் மற்றவருக்கும் ஏற்படும்.இவ்வாறு நம்புபவர்கள் சிறீ நித்தியானந்த பரமவம்சரிடம் சென்று தீட்சை பெற்றுக்கொள்ளுங்கள்.


உலகில் மிகவும் பிரபலமாக இருந்த இரட்டையர்கள் "chang and engbunker"



இணைந்துள்ள இரட்டையர்களின் வகைகள்




Thora  copayus  -

இவர்கள் மேல் கீழ் நெஞ்சுகளின் மூலம் இணைக்கப்பட்டு இருப்பார்கள் இவர்கள் இதயத்தைப் பங்கிடுகிறார்கள் (இருவருக்கும் ஒரு இதயம் )சில சமயங்களில் ஈரல் சமிபாட்டுத்தொகுதிகளும் பங்கிடப்படுகின்றன இவர்களில் 32 % காணப்படுகின்றார்கள் 

Omphalopagus-

இவர்கள் நெஞ்சின் மூலம் இணைக்கப்படுகின்ரர்கள் இதயம் பங்கிடப்படாது ஈரல் சமிபாட்டுத் தொகுதிகள் பங்கிடப்படும் இவர்களில் 33 % ஆனவர்கள் காணப்படுகின்றார்கள் 

Xophopagus -

இவர்கள் வலிமையான தசைகளால் மட்டும் இணைக்கப்பட்டிருப்பர்கள் இவர்கள் பொதுவாக தமக்குள் எந்த பாகங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை இவர்களில் 3 % ஆனவர்கள் காணப்படுகின்றார்கள் 

Ischio pagus -
இவர்கள் இடுப்பு எலும்புகளால் இணைக்கப்பட்டவர்கள் .இருவரது முதுகு எலும்புகளும் (spine ) இணைந்து காணப்படும் .இருவரது முதுகு எலும்புகளும் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் இருக்கும் .இவ்வாறு பிறக்கும் இரட்டையர்களில் 70   % ஆனவர்கள் நான்கு கால்களுடன் பிறக்கின்றார்கள் இவர்களில் 14 % காணப்படுகின்றார்கள் 

Ischio-omphalopagus

 இவர்களின் முதுகு எலும்பு "Y " வடிவில் காணப்படும் .பொதுவாக மூன்று கால்கள் காணப்படும் 

Dicephalus-
கழுத்துக்கு மேலான பகுதியை அல்லது நெஞ்சுக்கு மேலான பகுதியை பங்கிடுகிறார்கள் இவர்களுக்கு 2  கால்களே காணப்படும் ஆனால் இரண்டு தொடக்கம்  நான்கு கைகள் காணப்படும் இவர்களால் நீண்ட காலம் வாழ முடியும் 

Crani opagus-
இவர்கள் தலை ஓட்டின் மூலம் இணைக்கப் படுகின்றார்கள் .இவர்களுக்கு தனித் தனி உடல்கள் கழுத்துக்கள் உண்டு ..இவர்கள் தமக்குள் மூளையை பங்கிட்டால் இவர்களைப்பிரிப்பது மிகவும் கடினம் 

Cephalo pagus-
இவர்களது தலையும்  கழுத்தும் இணைந்திருக்கும் ஆனால் இருவருக்கும் தனித் தனி உடல்கள் காணப்படும் ..இவர்கள் இறந்து பிறப்பதில்லை ..பிறந்து சிலமணி நேரங்களில் இறந்துவிடுவார்கள் 

Cephalothoracopagus-
இவர்களுக்கு தலை கழுத்து  நெஞ்சு மூளை என்பன இணைந்து காணப்படும் ..இதயத்தை பங்கிட்டு இருப்பார்கள் 

Pygopagus-
இரட்டையர்கள் இருவரும் பின்புறம் பின்புறமாக இணைக்கப்பட்டிருப்பர்கள் ..
இவர்களது முதுகு எலும்பின் கீழ்பகுதி இணைக்கப்பட்டிருக்கும் ..இப்படியான இரட்டையர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் .ஆண் இரட்டையர்கள் கருவிலேயே இறந்து விடுவார்கள் 

Rachipagus- 
இவர்களும் பின்புறம் பின்புறமாக இணைக்கப் பட்டிருப்பார்கள் ..இடுப்பு நரம்புகள் பல இணைந்து இருக்கும் ..இதுவரையும் இப்படியான ஒரே ஒரு இரட்டையர் மட்டுமே இருப்பதாக பதிவுகள் உள்ளது (1960 )

இப்படி இணைந்துள்ள இரட்டையர்களை சத்திர சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிப்பது கடினமாகும் இதற்கு கரணம் இவர்கள் தமது பகுதிகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதாலகும் பெரும்பாலான சத்திர சிகிச்சைகளில் இரட்டையர்களில் ஒருவர் இறந்துவிடுவர் அல்லது இருவரும் இறந்துவிடுவார்கள் 

2001 இல் "ganga & jamuna shreshta" என்பவர்களுக்கு தனித்தனி ஆக்கும் சத்திர சிகிச்சை 97 மணித்தியாலங்கள்  நடை பெற்றது இவர்கள் தனித்தனி ஆக்கப்பட்டாலும் இதில் "ganga " இறந்துவிட்டார் ..

தலை ஒட்டிப்பிறந்தவர்களை உலகில் முதல் முதலாக வெற்றிகரமாக வேறாக்கியவர் Dr.bencarson இது 1987 இல் நடைபெற்றது இதற்கு 70 பேர் கொண்ட சத்திர சிகிச்சைக்குழு 22  மணித்தியாலங்கள் நடை பெற்றது 

2003  இல் "ladan & laleh bijani" என்ற தலை ஒட்டிப்பிறந்த ஈரானிய இரட்டையர்கள் சத்திர சிகிச்சையின் பொது இறந்தார்கள் ...

வரலாற்றில் பல இணைந்திருக்கும் இரட்டையர்கள் இருந்திருக்கிறார்கள் இதில் மிகவும் பழமையான ஆதரமாக இருப்பது கி.மு 300 ஆம் நுற்றாண்டை சேர்ந்த மரச்சிலைகள் "moche " நாகரீகத்தை சேர்ந்தது "peru " மியூசியத்தில்   உள்ளது 


Conjoined twin sisters fromNuremberg Chronicle (1493). 

இரட்டையர்கள் பொதுவாக சமூகத்திற்கு முகம்கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றார்கள்.இவர்களது தோற்றம் விசித்திரமாக நோக்கப்படுவதே காரணம்.இதனால் இவர்கள் மெடிக்கல் ரிப்போர்ட்கள்,போட்டோக்கள்,இரட்டையர்களைப்பற்றிய ஆய்வுகளுக்கு மட்டும் தம்மை பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.


சில பிரபலமான இரட்டையர்கள்...

Daisy and Violet Hilton

Millie and Christine, advertised as the ‘Two-headed lady’, in 1882.

Millie and Christine in Philadelphia, 1871.

The Tocci twins with their parents and younger sister in Berlin, 1891.

The Samar twins in an orchestra bound for the United States.


Simplicio and Lucio Godina 1930


Family portrait with Rosa’s son Franz.

The Blazek twins at age 15.

Rosa and Josefa Blazek 1878


Liou Seng-Sen and Liou Tang-Sen with their father in 1905.
அதிக காலம் வாழ்ந்த இரட்டையர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் 71 வயதுவரை

Liou Seng-Sen and Liou Tang-Sen 

கொரியாவை சேர்ந்தவர்கள்


Giacomo and Giovanni.


Millie and Christine McCoy in the early to mid-1890s.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}