முதல்மழை...ஈழத்து இளைஞர்களின் பாடல்

இந்தப்பாடலை சற்று நேரம் ஒதுக்கிக்கேட்டுப்பாருங்கள்...இரண்டு ஈழத்து இளைஞர்களின் முயற்சி இப்பாடல்...வளம் குறைவாயினும்...தம் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள்...

Music-Jesus yuvaraj
Lyrics-Iroshan puviraj
Singers-Iroshan puviraj&Jesus yuvaraj

ஜீசஸ்,இரோஸன் இருவருக்கும் பாராட்டுக்கள்....உங்கள்  கலையுலகம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...
வாழ்த்துக்கள் நண்பர்களே...

முதல்மழை வந்து உரசிட இலைநுனி சொல்லும் காதல்
மணல்வெளி வந்து தீண்டிட கடலலை கொள்ளும் காதல்
தூக்கத்தை ஏக்கத்திலே தொலைத்திடுமே
ஏக்கத்தில் கவிதைகள் பிறந்திடும்...
மாற்றத்தை மனதுக்குள் விதைத்திடுமே
காற்றுக்குள் சுவாசம் தன்னை தேடிக்கொள்ளும்

அக்கம் பக்கம் பார்த்து அச்சம் வெட்கம் சேர்த்து
புன்னகைத்து இவள் காதல் கொள்வாள்
பதில் கேட்டதும் இவன் முகம் பூத்திடும்
பால்வெளியில் இரு விண்மீன் சேரும் 
இரவின் தொல்லை இளமனதோ கொள்ளை
இது கனவின் தொல்லை
இது காதல் காதல் காதல் காதல்
முதல்மழை வந்து உரசிட இலைநுனி சொல்லும் காதல்
மணல்வெளி வந்து தீண்டிட கடலலை கொள்ளும் காதல்

முத்தம் நித்தம் கேட்டு செல்லத்திட்டு வாங்க
கள்ளமாக இவன் மோதிக்கொள்வான்
இவன் கேட்டதும் அவள் நாணத்தை
மனதுள்ளே பூட்டியே கொல்வாள்.
இரவின் தொல்லை இளமனதோ கொள்ளை
இது கனவின் தொல்லை
இது காதல் காதல் காதல் காதல்
முதல்மழை வந்து உரசிட இலைநுனி சொல்லும் காதல்
மணல்வெளி வந்து தீண்டிட கடலலை கொள்ளும் காதல்


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}