மீம்கள் - எள்ளல், எகத்தாளத்தின் ஃபேஸ்புக் வடிவம்
சும்மா மீம்(meme) என்று சொன்னால் பலருக்கு புரியாமல் போகலாம். ஆனால் பேஸ்புக் பாவனையை தொழிலாக வைத்திருப்பவர்களுக்கும், முக்கியமாக பேஜ் நடத்துபவர்களுக்கும் மீம்களை தயாரிப்பதுதான் குடிசைக் கைத்தொழில். இது மீம் தான், அல்லது இதுதான் மீம் என்று தெரியாமலே நாம் தினமும் ஆயிரக்கணக்கான மீம்களை பார்க்கிறோம். சரி, மீம் என்றால் என்ன?

மீம் என்றால் உண்மையில் ஒரு (நல்ல) கருத்தை பலருக்கு சொல்ல பயன்படுகின்ற வழி. ஆனால் இந்த இன்டர்நெட் உலகத்தில் எந்த சொல்லைத்தான் நாம் அதன் உண்மையான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம்? விண்டோஸ், அப்பிள், ஃப்ரெண்ட், லைக், ட்வீட்டர், குரோம் எல்லாவற்றுக்கும் அவை அவற்றின் சொந்தக் கருத்தா இருக்கிறது? நாளைக்கே ஒரு பையன் ஒரு ஆங்கில அகராதியை வாங்கிப் புரட்டினால், அதிலே இவற்றின் கருத்துக்களை பார்த்துவிட்டு, அந்த அகராதியே தப்பு என்று  சொல்லி அதை குப்பையில் போடமாட்டானா? ஆக, மீம் என்பதற்குரிய பாரம்பரிய அர்த்தம் எங்களுக்கு உதவப் போவதில்லை. இன்டர்நெட் மீம் என அழைக்கப்படும் மீம் தான் நமது கண்ணும், கருத்தும்.

இணையத்தில் பரவும் ஒரு கருத்தைத்தான் மீம் என்கிறார்கள். மீம் என்கிற சொல், ரிச்சட் டோக்கின்ஸின் The Selfish Gene என்கிற புத்தகத்தில் அவரால் முதன் முதல் பயன்படுத்தப்பட்டது. (1976) நல்லதோ, கெட்டதோ, லொள்ளோ, லோலாயியோ, நக்கலோ, குக்கலோ எதோ ஒரு கருத்தை இணையத்தில் உலவ விடுகிற உத்திதான் மீம். அது ஒரு படமாகவோ, சொல்லாகவோ, லிங்காகவோ, வீடியோவாகவோ இன்னும் எதாகவுமோ இருக்கலாம். சமூக வலைதளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள் எதன் வழியாகவும் அது பரவலாம். பரவினால் சரி. மீம்கள் பரவுவதன் நோக்கங்கள்

# முதலாவதும் முக்கியமானதுமான நோக்கம் : சும்மா. ஆம், சும்மாவேதான். லைக்குகள் வரவேண்டும் என்பதற்காக நாம் மினக்கெட்டு போட்டோஷொப் பில் செய்து facebook கில் போடும் பெரும்பாலானவை அந்த வகைதான்.
# நக்கல் : யாரையாவது நக்கல் பண்ணுவதற்காக. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தேர்தல்களின்போது இது ஒரு முக்கியமான பிரசார உத்தி. நம்மூரில் நடிகர்கள் விஜய், பவர் ஸ்டார் போன்றோரை கழுவி ஊற்றும் மீம்களை நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள்.
# சந்தைப்படுத்தல் : திரைப்படங்கள், ஃபஷன் பொருட்கள் போன்றவற்றை விளம்பரப்படுத்த இது பயன்படுகிறது.
# கருத்துக்களை பகிர்தல் : எகிப்தில் மக்களின் புரட்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவை மீம்களே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அரசு, சமூகம் தொடர்பான தங்களது கோபத்தை, சந்தோஷத்தை, ஆதங்கத்தை பகிர இது பயன்படும். share if you are proud to be a Tamilian, hit like if you love your mom என்பதான அபத்தங்களும் இந்த வகைக்குள் அடக்கம்.
# ஊக்கப்படுத்தல், உதவல் : ஊனமுற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு மக்களை அழைக்கும் மீம்கள். அல்லது பாதிக்கபட்டவர்களுக்கு உற்சாகமூட்டுபவை.மீம்கள் : facebook கில் பிரபலமான சில வகைகள்

LOLcat லோல்கட்ஸ் (பூனைகள்)வழமைக்கு மாறான சிரிப்பூட்டும் நிலையிலுள்ள ஒரு பூனையின் புகைப்படத்துடன் மொக்கையான SMS இல் பயன்படுத்தும் ஆங்கிலத்தில் ஒரு லொள்ளு வசனமும் (அந்தப் பூனை சொல்லுவதாக) இடம்பெற்றிருக்கும்.(லொள்ளு பேசும் கற் என்பதுதான் மருவி லொள்கற் ஆனதா என்பது கலாநிதிப்பட்ட ஆராய்ச்சிக்குரியது.) வெள்ளை கலிபிரி எழுத்துரு, அதற்கு கருப்பு விளிம்பு, சீலிங் கற்கள் உயர்ந்தவை... என்பதாக இதற்கே ஏகப்பட்ட விதிமுறைகள். பெரும்பாலும் பூனைகள் படுத்திருக்கும் நகைச்சுவையான தோற்றங்களை படம்பிடித்து அதற்கு மனிதத் தனமான ஒரு வசனம் சேர்ப்பதாகவே இது உருவானது. இப்போதெல்லாம் இதிலேயும் பல வகைமைகள் வந்துவிட்டன. ஃப்ரிஜ்சுக்குள் போய் சாப்பாட்டை திருடுபவை, காதலிப்பவை, குழந்தைகளுடன் கதைப்பவை என பலப்பல.

FAIL 


திரைப்படங்களிலோ, பொது வாழ்க்கையிலோ, தவறாக செய்யப்பட்ட ஏதாவது ஒன்றை சுட்டிக்காட்டி பல்பு கொடுப்பது. திரைப்படங்களின் காட்சிகளில் செய்யப்பட்ட தவறுகள், கட்டுமானப் பணிகளில் விடப்பட்ட பிழைகள் என்பவற்றை சுடிக்காட்டுபவற்றுடன், மனிதர்கள் செய்கின்ற தவறுகளை சிகப்பு வட்டம் போட்டு மானத்தை வாங்குபவையும் இந்த வகைதான். உதாரணமாக உங்களுக்கு தெரியாமல் உங்கள் காற்சட்டை பின்பக்கம் கிழிந்தால், அந்தப் படத்தை நீங்கள் மறுநாள் பேஸ்புக்கில் பார்க்கிறீர்களே, பூங்காவில் காதலிக்கு தெரியாமல் பின்னால் இருப்பவளை தடவுவது, வாத்திக்கு தெரியாமல் பிட் அடிப்பது, பெண்கள் கிரீம் தீர்ந்துவிட்டால் தம்பியின் வோட்டர் கலரை பூசிக்கொண்டு வெளியே வருவது... எல்லாமே!


மீம் முகங்கள்


சில வரையப்பட்ட முகங்களின் படங்களை மறுபடி மறுபடி நீங்கள் பேஸ்புக்கில் பார்க்கிறீர்கள். தேவைக்கேற்ப வெட்டி ஒட்டப்பட்டு மீமாக மாற்றப்படுவதற்கு என்றே யாரோ ஒரு மொக்கை ஓவியனால் வரையப்பட்டவை. எப்படியோ, தவிர்க்க முடியாத அளவுக்கு பிரபலமாகி விட்டன இவை. 

வசனங்கள்

the awkward moment… என்பதாகவோ, teen fact # 23 என்பதாகவோ தொடங்கி சொல்லப்படும் வசனங்கள். பெரும்பாலும் வசனங்கள் மட்டுமே உள்ள ஒளிப்படமாக இவை தயாரிக்கப்படும். பெரும்பாலும் சீரியசாகவே நல்ல விஷயங்களை சொல்லவே இவை வேலை மினக்கெட்டு தயாரிக்கப்படும். லைக்குகள் குறைவாக விழுவது இதற்குத்தான்.பெண்களை கழுவி ஊற்றுபவை


பெண்கள் பணக்கார ஆண்களைத்தான் காதலிப்பார்கள், பெண்களின் மேக் அப், இரண்டு பெண்களிடையே உள்ள நட்பு என்பது போலித்தனமானது, பெண்களின் அறியாமைகள், அற்ப அறிவு, சுயநலம் போன்றவற்றை கலாய்ப்பது. பெருமாளும் பாதிக்கப்பட்ட ஆண்களால் தயாரிக்கப்படுபவை. இதற்கு போட்டியாக அல்லது எதிராக ஏன் பெண்கள் மீம்கள் தயாரிக்கவோ, ஆண்களை கழுவி ஊற்றவோ முயலவில்லை என்பது கண்டறியப்பட வேண்டியது.

What ___ Think I do படங்கள்


ஒரே வேலையை ஒவ்வொருவரும் எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள் என்பதை கலாய்க்கும் ஒளிப்படங்களாக இது தயாரிக்கப்படும். பெரும்பாலும் ஆறு புகைபடங்கள் இடம்பெறும். What my friends think I do, What my teacher thinks I do, What   my mother thinks I do, What my relatives think I do, என்பதாக காட்டி, கடைசியில்  What I actually do என்பதாக சுய மொக்கையிடும் விளம்பரம்.

chat இல் பயன்படுத்த சில smiley கள்

மீம்கள் என்பதே மற்றவர்களை காலி பண்ணத்தான், பிறகு மனங்களை புண்படுத்தக்கூடாது என்றல்லாம் பிகு பண்ணத் தேவை இல்லை. தமிழர்களிலேயே அதிகளவு மீம்களில் கேலி படுத்தப்பட்ட நபர் யார் தெரியுமா? விஜய். வேறு யார்?

chat இலே இந்த கோட் களை டைப் செய்து மீம்களை போட்டு வெறுப்பேற்றி மகிழுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}