Titanic படத்தில் கவனிக்கத்தவறிய 34 தவறுகள்

Titanic 1997  இல் வெளிவந்த ஹொலிவூட் திரைப்படம்.ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளிவந்தது.உலகத்தில் ரைர்ரானிக் பற்றிகேள்விப்படாதவர்களே இல்லை என்னும் அளவிற்குப்பிரபல்யமான திரைப்படம்.சிலருக்கு Titanic ல் தெரிந்தது காதல் சிலருக்கு தெரிந்தது கப்பல்.உண்மையான Titanic கப்பலை உருவாக்குவதற்கு செலவான பணத்தை விட ஜேம்ஸ் கமரோன் இந்தப்படத்தை உருவாக்குவதற்கு செலவழித்த பணம் அதிகம்.190-1912 களில்Titanicகை உருவாக்குவதற்கு 7.5 மில்லியன் டொலர்கள் செலவானது.1997இல் இதன் பெறுமதி 120 இல் இருந்து 150 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும்.ஆனால் படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டொலர்கள்.எவ்வளவு வசூல் 2,185,372,302 டொலர்கள்.ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் இப்படத்திலும் சில தவறுகள் விடப்பட்டிருக்கின்றன.அவ்வாறான தவறுகள்தான் கீழே தரப்பட்டுள்ளன.ஜேம்ஸ் கமரூன் ஹொலிவூட்டின் பிதாமகர் உலக அளவில் அறிமுகம் தேவையற்றவர் ஆனால் அவரையே பிரமாண்ட இயக்குனர் என்று யாரும்  அழைப்பதில்லை.ஆனால் நாம் சங்கரை அப்படி அழைக்கின்றோம்.கமரூன் எந்தப்படத்திலும் தான் எடுக்கும் படம் நிச்சயம் அதிகப்படியான செலவில்இருக்கவேண்டும் என்று எண்ணியதில்லை.ஆனால் சங்கர் ஒரு காரை உடைத்தால் கூட 1 கோடிக்கு இருக்கவேண்டும் ஒரு பாட்டிருந்தால் அதற்குக்கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டும் என்பது அவரது கொள்கை தனது ஆடம்பரத்தால் செலவுகளால் பட்ஜெட்டினால் தன்னை பிரமாண்டமாக காட்டிக்கொள்கின்றார் சங்கர்.வைத்திருக்கின்றோம் பெயர் பிரமாண்ட இயக்குனர்.இது  கூடப்பறுவாயில்லை அதிக பட்ஜெட்டில் படம் எடுத்ததன் காரணமாக இந்தியாவின் ஜேம்ஸ் கமரோன் என்றார்கள் பாருங்கள்...அதோடு கதை முடிந்தது....

 





































டைட்டானிக் பற்றிய ஆச்சர்யமான தகவல்களுக்கு இங்கே கிளிக்

நிஜ டைட்டானிக்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}