தீபாவளி வாழ்த்து+குட்டி மெஸேஜ்+பவரின் லட்டு தின்ன ஆசையா?

வயது முதிர்ந்த ஒருவரிடம் சென்று எதையாவது நீங்கள் கதைக்க ஆசைப்பட்டால்.அல்லது கதைத்தால் அதுவும் அருகிலே இருந்து ஆற அமர இருந்து கதைத்தால் ஒரு சில நிமிடங்களின் பின்..தம்பி அந்தக்காலத்தில என்று ஆரம்பித்துவிடுவார்கள்...உன்ர அப்பன் அப்ப காச்சட்டை இல்லாமல் றோட்டில திரிஞ்ச காலம் அது.என்று எனது தந்தை சிறியவயதில் செய்த கூத்துக்கள் தொடக்கம்(தந்தையார்  கண்டிக்கும்போது இவைதான் உதவும் நீங்கள் அப்படித்தானே செய்தீர்கள் என்றதும் சிரித்துவிடுவார்..கிரேட் எஸ்கேப்..உன்ர அப்பனும் முந்தி உன்னை மாதிரித்தான் என்ற சொல் கேட்க ஏதோ சந்தோஸமாக இருக்கும் அட அப்பருமா) அந்தக்காலத்தில எங்களுக்கு அம்மா 1 ரூபாதான் தருவா ஐஸ் பழம்,குச்சி மிட்டாய் சில சாப்பாடுகள் எல்லாவற்றையும் வாங்கிவிட்டு மிச்சமும் கொண்டுவந்து கொடுப்போம்..விலைகளையும் கூறுவார்கள் ஒரு சதம் இரண்டு சதம் என்று..சதமெல்லாவற்றையும் நான் 4ஆம் 5 ஆம் தரங்களில் படிக்கும்போது பார்த்ததுண்டு.அவை காலாவதியாகியவுடன் ஒரு  சேர்பெக்ஸல் டப்பாவில் அதைப்போட்டு வைத்திருந்தேன் இடம் பெயர்ந்துவந்தபோது தொலைந்த லிஸ்டில் அதுவும் ஒன்று.உடமைகளை எடுத்துக்கொண்டு ஓடும்போது எனது கதைப்புத்தகங்களையும்,சேர்த்துவைத்த சத நாணயக்குற்றிகளையும் பற்றிய கதையை யாரும் கேட்பதாக இல்லை.அவர்களது நட்புவட்டாரங்கள் பற்றிய கதைகள் அப்போதுவெளிவந்த அரசியல் கதைகள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும் காரணம் பத்திரிகை எதையாவதுபோடும் ஆனால் அவர்கள் அந்த சம்பவ இடத்தில் நின்றிருப்பார்கள்.சில முதியவர்கள் வயது அதிகம் சென்றபடியால் அப்டேட் ஆக அவர்களது  மூளை அனுமதிப்பதில்லை.சோ ஓடினறி லெவல் அட்வான்ஸ் லெவெல் எல்லாம் தெரியாது.எஸ்.எல்.எல்.ஸி பாஸ் பண்ணிட்டியே என்றுதான் கேட்பார்கள்.கம்பஸ் போக காணுமே என்று கேட்பார்கள்.ஓ.எல்லில் 10 பாடங்கள் இருந்தது.9இப்பொழுது 9 பாடங்கள் ஆக்கிவிட்டார்கள்  மாற்றி 2 வருடங்கள் ஆகின்றது என்று நினைக்கின்றேன்) போய் 10 பாடத்திலும் ஏ தர சித்தி மாவட்டத்தில் 2 ஆவது என்று கூறினாலும்.எனக்கு அது தேவையில்லை நீ பாஸ் பண்ணிட்டியோ அத சொல்லு முதல்ல என்பார்கள் பாருங்கள் தலை தொங்கிடும் அந்தக்கேள்வியோடு 10 ஏ எடுத்த ஆணவம் கன்மம் மாயை என்ற மும் மலங்களும் அழிந்தது போங்கள்.வீட்டிற்குவருபவனைப்பார்த்து பயந்து போன சொந்த யுனிட்டிடம் விடயத்தை கூறினால் ஆறுதல் சொல்லாமல் வெடிச்சிரிப்பு சிரிப்பார்கள்  அந்த நேரம் வயிற்றை தடவிப்பார்த்தால் 47 செல்ஸியஸ்ஸில் கொதிக்கும் இதைத்தான் எரிச்சல் என்று அழைப்பார்கள்.இது ஜெனறேஸன் காப் இதை அவ்வளவு இலகுவாக பில் பண்ண முடியாது.

இவ்வளவையும் ஏன் கூறினேன் என்றால் சில வருடங்களின் முன் தீபாவளி சற்று வித்தியாசமாக இருந்தது என்று ஆரம்பிக்கப்போகின்றேன் சோ வயதுமுதிர்ந்தவர் போல் ஆரம்பித்துவிட்டானே என்று எனக்கே நினைக்கத்தோன்றுகின்றது.இப்போதைக்கு 22 தான் ஆகின்றது .என்றாலும் சில பல மாற்றங்கள் வந்துவிட்டது.உண்மையில் வயது கூடிக்கொண்டிருப்பது முடிகளில் எட்டிப்பார்க்கும் சில வெள்ளைக்கம்பிகளில்(பித்த நரைங்கோ) தெரிவதில்லை.அயல் வீடுகளில் தவ்வலாக தவழ்ந்த குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதைக்காணும்போதுதான் அடடே என்று தோன்றுகின்றது.அதைவிட ஒரு படி மேல் போய் அந்த மாமாவுக்கு டாட்டா சொல்லு என்னும் போது பக் என்று இருக்கும்.சரி விடுடா விடுடா சுனா பானா என்று விட்டுவிடவேண்டியதுதான்.சிறிய வயது நினைவுகள் சில தொடர்கின்றன.4,5 இல் படிக்கும்போது தீபாவளிக்கார்ட்கள் என்ற சமாச்சாரம் இருந்தது இப்பொழுதும் ஊர்க்கடைகளில் கிடைக்கும்.அதில் வாழ்த்துக்களை எழுதி நாம் இல்லாத நேரத்தில் நண்பர்கள் கொப்பிக்குள்வைத்துவிடுவார்கள்.வந்ததும் சிரித்துவிடுவார்கள் புரிந்துவிடும் எடுத்துப்பார்த்தால் முத்திரை என்று பிறிண்ட் பண்ணப்பட்ட இடத்தில் குறோஸ்ஸாக முத்திரை வீட்டில் நித்திரை என்று எழுதியிருப்பார்கள்.எது மாற்றினாலும் அதை நாங்கள் மாற்றியது கிடையாது.யார் அதிகாமாக கார்ட்களை வாங்குவது என்று போட்டி நடக்கும்.அதிகமாக சாமிப்படங்கள்(விக்ரமின் சாமியல்ல)தான் கிடைக்கும் சினிமா படங்கள் சிறிதுகாலத்தின் பின் கிடைத்தன.சில நண்பர்கள் இவற்றை சேகரித்துவைத்ததும் உண்டு.பாடசாலையில் எமக்கு  பிடித்த ஆசிரியருக்கும் இதெ பாணியில்  அவரது கைப்பையிற்கு ள் கார்ட்டை வைத்துவிடுவோம்.மாணவர்கள் 25 பேரின் பேரையும் பின் பக்கத்தில் ஈ மொய்த்தது போல் போட்டுவிடுவோம்.எமது பெயர் அதில் இருப்பதில் அப்படி ஒரு சந்தோஸம்.

2006 அப்பொழுதுதான் எனக்குத்தெரிந்து யாழிற்கு கைத்தொலைபேசி சாதாரணமாக  பாவனைக்கு வந்தது 3310 மொடல் அதுதான் பலரிடம் இருந்தது.அதற்கு ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்றைப்போட்டு இருப்பார்கள்.அதை கழுத்துடன் ஒரு பட்டியால் இணைத்திருப்பார்கள்.3310 உடன் அந்தக்கோலத்தில் இருந்தவர்களை சம்சங்க் கலக்ஸியை கையில் வைத்துக்கொண்டு நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.போன் அறிமுகமானதும் பிடித்த வெறி மேஸேஜ்...மெஸேஜ் மெஸேஜ்ஜாக அனுப்பினோம்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...தீபாவளி வாழ்த்துக்கள்..சகலதும் ஏன் கந்த சஷ்டிக்கு கூட லொள்ளாக மெஸேஜ் அனுப்பினார்கள். நண்பனின் பிறந்த நாளின் போது முதல் நாள் இரவு  11.59 வரை  நித்திரை கொள்ளாமல் விழித்திருந்து 12 மணியின் போது கோல் செய்து வாழ்த்துச்சொலவதில் தனி கிளுகிளுப்பு இருந்தது.

அடுத்ததாக வந்தது பேஸ்புக்..இதிலும் மெஸேஜ்கள்தான் ஆனால் சகல உதவிகளையும் அதுவே செய்யும் குளோஸ் பிரண்டின் பேர்த்டே மறந்தால் அன்றைய தினம் பார்த்துவிட்டு அடடே என்று அவசரப்பட்டு வோலில் ஹப்பி பேர்த்டே மச்சான்....ஒரு மெஸேஜ்சுடன் சரி  குளோஸ் பிரண்டின் பிறந்த நாளுக்கு பேஸ்புக்கினூடாக மேஸேஜ் அனுப்பும்போது ஏதோ அவனிடம் கடன் வாங்கிய பீலிங்க்தான் வருகின்றது.வாழ்த்து வெறும் வேர்ச்சுவல் வாழ்த்துடன் நின்றுகொள்கின்றது.உண்மையைக்கூறினால் பேஸ்புக் போரடித்தால்  நான் செய்யும் முதல் வேலை அன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுதான்.
இதை எல்லாம் செய்யாதீர்கள் சே தொழில் நுட்பவளர்ச்சியால் வந்த கேடுகள் அல்லது மறு பக்கம் என்றெல்லாம் நான் கூறப்போவதில்லை.எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றது.இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமும் ஆகும் என்றிருக்கும்போது மாறத்தான் வேண்டும்.

பேஸ்புக்கை நான் குறை சொல்லவில்லை பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு போன் கோல் செய்யுங்கள் வாழ்த்து சொல்லுங்கள் அவர்களுக்கும் சற்று மகிழ்ச்சியாக இருக்கும்.பிறந்த நாள் வாழ்த்துக்களை போன் கோலில் சொல்லுங்கள் நேரே செல்ல முடியாவிடின்.பேஸ்புக் இருக்க போனில் சொல்வதே பெரியவிடயம்தானே..தீபாவளி வாழ்த்துக்களை பேஸ்புக்கில் டாக் செய்து தொல்லை கொடுப்பதை விட்டுவிட்டு நெருங்கிய வட்டாரத்திற்கு போன் கோல் செய்யுங்கள் 5 ஓ 10ஓ செலவுதான்.பட் அது  மகிழ்ச்சியாக இருக்கும்..இது ஒரு  சின்ன அட்வைஸ்(எங்கேயும் இலவசமாக கிடைப்பது இதுதான்(அட்வைஸ்)).

தீபாவளி ஆரம்பித்ததும்...அது ஆரியர்களினால் இங்கே எம்மீது திணிக்கப்பட்டது என்று ஆரம்பிக்கின்றார்கள் அவை உண்மைதான். நம்மைக்கொன்ற  விழாவேதான்.தீபாவளிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது.

((இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.))ஆனால் பலருக்கு இது விடுமுறை மகிழ்ச்சிபோல் குடும்பத்துடன் கொண்டாடும் விழா.பக்தியுடன்  நரகாசுரனைக்கொண்ற கிருஸ்ணாவே என்று அழைத்து வழிபடுபவர்கள் ஒரு புறம் இருக்க அன்று புது உடை வெடி பட்டாசு பலகாரங்களுடன் அந்த சந்தோஸத்தில் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.அவர்களுக்காக விட்டுவிடலாம் ஒரு நாளைக்கு மட்டுமாவது.வரலாறு முக்கியம்தான்..சில உண்மைகள் சகலருக்கும் தெரிய வேண்டியது அவசியம்தான் நான் இப்பொழுது வலுவில்லாத பக்கத்திற்குத்தான் கதைத்துக்கொண்டிருக்கின்றேன் என்பது தெரிகின்றது... நான் கூறிய கருத்துக்கு சப்போர்ட் பண்ண என்னிடம் எந்தப்பொயிண்டும் இல்லை ஏதோ 4 பேர் சந்தோஸமாக இருந்தால் தவறில்லை ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே...

அன்புவாசகர்கள் அனைவருக்கும் வெங்காயத்தின் தீபாவளி வாழ்த்துக்கள்...

பேஸ்புக்கில் டாக் செய்து தொல்லை கொடுக்காமல் வாழ்த்துக்களைப்பகிர்ந்துகொள்ளுங்கள்.பேஸ்புக்கில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...இந்த கோட்டை கொப்பி(காப்பி) செய்து மெஸேஜ்ஜாக அனுப்புங்கள் அனிமேஸன் சூப்பர்.
(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
¦.`*.¸.*.•°*”˜˜”*°•. [[126216480723638]]
¦.•°*”˜˜”*°•. [[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]
[[312615488792622]] Happy Diwali [[312615488792622]]
¦.(¯` [[312004515520386]] ´¯)´´¯`•°*”˜˜”*°•. [[126216480723638]]
¦.`*.¸.*.•°*”˜˜”*°•. [[126216480723638]]
¦.•°*”˜˜”*°•. [[126216480723638]] * ¸ [[336842623036575]] [[363460793698354]]
[[312615488792622]] Happy Diwali [[312615488792622]]
 அதைவிட போன் கோலில் வாழ்த்து தெரிவியுங்கள் உறவு  நன்றாக இருக்கும்.

முக்கிய விடயம் பவர் ,சந்தானம் நடிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா ரீஸர் வெளியாகி உள்ளது...

"லவ்வில ஜெயிச்சுக்கு பொண்ணுங்களுக்கு சங்கர் சேர் படம் மாதிரி பிரமாண்டமா செலவு பண்ணுறத விட லவ்வில தோத்திட்டு கூட இருக்கிற பிறண்ஸுக்கு ராம நாராயணன் படத்த மாதிரி பட்ஜெட்டில செலவுபண்ணிட்டுப்போயிடலாம்டா"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}