நீதானே என் ‘புண்’ வசந்தம்?-சாரு


Win TV-நிகழ்ச்சிக்காக வாரம் ஒரு படம் பார்க்க வேண்டியுள்ளது.  உலக சினிமா பற்றிப் பேசலாம் என்றால் எல்லோரும் தமிழ்ப் படம் பற்றிப் பேசுங்கள் என்கிறார்கள்.  என்னத்தைப் பேசுவது?  குடிகாரன் எடுத்த வாந்தியை நக்கினால் எப்படி இருக்கும், அப்படி எடுக்கிறார்கள் தமிழில்.  நல்லவேளையாக நீதானே என் பொன் வசந்தம் என்ற கசமாலத்தில் மாட்டவில்லை.  என் கனவுக் கன்னி சமந்தாவுக்காகப் போயிருப்பேன்.  நல்லவேளை,  கும்கிக்குத்தான் டிக்கட் கிடைத்தது.  கும்கியும் கூட அந்தக் கால மைக் மோகன் படம் மாதிரிதான் இருந்தது.  இருந்தாலும் புண் வசந்தம் போல் கழுத்தறுப்பு இல்லை.  அந்தக் கழுத்தறுப்புக்குப் போய் வந்த அராத்துவின் விமர்சனம் இது.  படித்து இன்புறுங்கள்.  இன்னொரு விஷயம்.  நடுநிசி நாய்களிலேயே கௌதம் வாசுதேவ் மேனனின் சாயம் வெளுத்து விட்டது.  இனிமேல் அவரால் எந்தக் காலத்திலும் நல்ல படம் எடுக்க முடியாது.  இனி வருவது அராத்து…

நீதான் என் பொன் வசந்தம் என அப்ப நினைச்சிட்டு இருந்தேன் – என ஹீரோயின், படத்துக்கு தலைப்பு வைத்து விட்டதால் டி.ராஜேந்தர் படம் போல வசனம் பேசுகிறாள்.
ஜீவா பத்தாவது படிக்கிறார்.மன்சூர் அலிகானை 11 வது வகுப்பு மாணவனாக காட்ட போகிறார்கள் என பயந்தேன் . அப்படி நடக்கவில்லை.சமந்தாவும் 10 வது படிக்கிறார் . சமந்தாவிற்காவது மார்பகமும் புட்டமும் சின்னதாக இருந்து , ஒத்துழைப்பு நல்குவதால் 10வது மாணவி என ஒத்துக்கொண்டு தொலையலாம் . பருவ மங்கை ஆனதும் கடமையே கண்ணாயிரமாக பேட் வைத்து க்ளோஸ் அப்பில் காட்டுகிறார்கள்.இதுதான் படத்தின் டைரக்டர் டச்.
பேட் வைக்க எடுத்துக் கொண்ட கவனத்தில் 10 சதவீதமாவது கதைக்கு எடுத்துக்கொள்ளலாம் அல்லவா ?
இந்த படத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லோர் வாழ்விலும் ஒன்றாவது நடந்திருக்கும் என கௌதம் தான் பித்துக்குளி போல சொல்றாருன்னா , சில ரசிகர்களும் அதே போல இணையத்தில் பினாத்துவது எரிச்சலாக உள்ளது.
இந்த மாதிரி பித்துக்குளித்தனமான சம்பவங்கள் யார் வாழ்கையிலும் நடந்திருக்க வாய்ப்பில்லை . அடுத்த வீட்டு பெண் போல தோற்றம் என சொல்வது போல , இதை சொல்வது ஒரு ஸ்டைல் ஆகி விட்டது .இனி டாய்லெட் போவது , குளிப்பது , வாந்தி எடுப்பது போன்ற சீன்களை வைத்து , எல்லோர் வாழ்விலும் நடந்த சம்பவங்களின் கூட்டு தொகுப்பு என விளம்பரம் செய்யலாம்.
சமந்தா படத்தில் காமம் கொழுந்து விட்டு எரியும் டீன் ஏஜ் பெண் போல தன் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார். ஜீவா விடம் காதல் மருந்துக்கு கூட இல்லை , மலையாள பட திலகனும் , நெடுமுடி வேணுவும் கட்டிப்பிடித்து உருள்வது போல உருளுகிறார்.
பத்தாவது படிக்கையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு கிஸ் அடித்துக்கொள்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் 4 வது படிக்கும் நர்ஸரி குழந்தைகள் லிப் கிஸ் அடிக்கும் காட்சியை திரையில் காணலாம் . நடப்பதுதானே என்றெல்லாம் கேட்கக்கூடாது. நடப்பதை எல்லாம் அபப்டியே காட்டுபவனா கலைஞன் ?
வழக்கம் போல ஹீரோ கதாநாயகியை தேடி ரயில் , கார் , பஸ் , சைக்கிள் , நடை மூலம் மணப்பாடு செல்கிறார் . எவனாவது காரில் போய் , திரும்ப பின் மினி பஸ்ஸில் செல்வானா ?
இதைப்போல கௌதமும் கதையை தேடி சென்றால் நல்லது.
இளமையான இயக்குநர்கள் எல்லாம் ரத்தம் , துரோகம் , கொலை , தீவிரவாதம் ,பழிக்குப்பழி என கொலைவெறியோடு அலைந்து கொண்டிருப்பதால் ,
கிழ இயக்குநர்கள் எல்லாம் ,காதலைப்பற்றி தெரியாமல் , காதல் படம் எடுத்து நம்மை சாகடிக்கிறார்கள்.
வாசகர்களே நல்ல ஒரு எதிர்மறையான விமர்சனம்...முடியல....சாரு ஒன்லைனில் வெளியிடப்பட்டது இது.
http://charuonline.com
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}