கற்பழிக்கும்போது பெண்கள் ஒத்துழைக்கவேண்டும்

டெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால்  மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன் வந்த ஆண் நண்பரும் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டார்.கற்பழித்ததோடு நிற்காமல் அந்தப்பெண்ணின் குடலை இரும்புத்தடியால் சிதைத்துள்ளார்கள் கற்பழித்த மிருகங்கள்.குடல் சிதைந்ததன் காரணமாக குடலின் பெரும்பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.6 தடவை சத்திரசிகிச்சை செய்துள்ளார்கள்.தீவிரசிகிச்சைக்குப்பின் அந்தப் பெண் மருத்துவமனையில் இடையிடையே கண் விழித்து  நினைவுவரும்போதெல்லாம் குற்றவாளிகள்ளை கண்டுபிடித்துவிட்டீர்களா?அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று எழுதிக்காட்டியுள்ளார்.

கற்பழிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்து 18 ஆம் திகதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.போராட்டம் நடத்தியவர்கள் கலைந்துசெல்லாததால் போலீஸ் கண்ணீர்புக்கைக்குண்டு மூலம் கூட்டத்தைக்கலைத்திருக்கின்றார்கள்.கற்பழித்த ஆறுபேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்கள்.கற்பழித்ததற்கு அவர்கள் கூறிய காரணம் எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் அவளுக்கு பாடம்புகட்டவே நாம் கற்பழித்தோம்.அவர்களுள் ஒரு குற்றவாளியான வினய் ஷர்மா தன்னைத்தூக்கிலிடுமாறு கதறியுள்ளாராம்.

இன் நிலையில் இக்கற்பழிப்பு தொடர்பாக லயன்ஸ்கிளப் ecretaryயான Shukla ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைத்துள்ளார்.இரவு 10 மணிக்குப்பின் ஏன் அவள் வெளியே போனாள்?அவள் தன் போய் பிறண்டுடன் வெளியே சென்றதுதான் கற்பழிப்புக்குக்காரணம்.The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'. 6 நபர்கள் அவளை சூழ கற்பழிக்கமுனையும்போது அதை அனுமத்தித்து அடங்கியிருந்தால் குடலாவது தப்பித்திருக்கும். என்று கூறியிருக்கின்றார் Shukla.இனிவரும் காலத்தில் யாராவது பெண்ணை கற்பழிக்கமுயன்றால் அப்பெண் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  அப்படித்தானே? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு போலியான இரங்கலை வெளியிட்டால்கூட மன்னிக்கலாம் அதற்காக  ஏன் இப்படி அவமானப்படுத்தவேண்டும் என்று புரியவில்லை. நல்லவேளை இவர் நேரில் சென்று அந்தப்பெண்ணை பார்க்கவில்லை பார்த்திருந்தால் அப்பெண்ணிடமே இதைக்கூறி அவரை குற்றவாளி ஆக்கியிருப்பார்.
இது தொடர்பான செய்தி..

Continuing with her blames she said, ‘Women instigate men to commit such crimes'. She also raised that why was the victim out of her house after 10 pm and added that if a girl will wander late at night with her boyfriend; such situations are bound to happen. 
In a strange reaction to such comments, most of the senior officials remained silent. Shukla asserted that police cannot give extreme protection to every citizen at all times. She commented, ‘The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'.

இச்சம்பவம் தொடர்பாக ஞாநி உருக்கமாக-விளக்கமாக ஒரு பதிவிட்டிருந்தார்.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.
நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.
பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.
குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

அதை முழுமையாகப்படிப்பதற்கு  லிங்க்


பேஸ்புக்கிலும்,வலைப்பூக்களிலிலும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இதுதொடர்பாக ஸ்ரேட்டஸ்கள்,பதிவுகள் பல வெளிவந்தன.அவற்றில் ஒரு ஒற்றுமையினை என்னால் அவதானிக்கமுடிந்தது.
பெரும்பாலானவற்றில் ஒற்றுமையாக இருந்தவை
1)இரவில் அந்தப்பெண் வெளியே சென்றிருக்கக்கூடாது
2)அப்பெண் கற்பழிப்பைத்தூண்டும் வகையில் உடைகளை அணிந்திருந்தாளா?
3)கூடச்சென்ற  போய் பிறண்ட் உண்மையில் யார்?
4)பெண்கள் இல்லாத பஸ்ஸில் 6 ஆண்கள் மட்டுமே இருந்த பஸ்ஸில் ஏன் ஏறினாள்?
5)கற்பழித்தவனை விட கற்பழிக்கத்தூண்டியவளுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்
இப்படியெல்லாம் விவாதங்கள் ஒரு புறம் இருக்க.இச்சம்பவத்தைப்பயன்படுத்து ஒரு சிலர் வழக்கம்போல் இதனூடாக தமது அன்றாட கருமமான மதம் பரப்பும் பிரச்சார வேலையையும் செய்துகொண்டார்கள்.யாரை சொல்கின்றேன் என்று உங்களுக்கே தெரியும்.

மேலே விவாதிக்கப்பட்ட கேள்விகள்மூலம் என்ன கூறவருகின்றார்கள்.

//1)இரவில் அந்தப்பெண் வெளியே சென்றிருக்கக்கூடாது
2)அப்பெண் கற்பழிப்பைத்தூண்டும் வகையில் உடைகளை அணிந்திருந்தாளா?
3)கூடச்சென்ற  போய் பிறண்ட் உண்மையில் யார்?
4)பெண்கள் இல்லாத பஸ்ஸில் 6 ஆண்கள் மட்டுமே இருந்த பஸ்ஸில் ஏன் ஏறினாள்?//

ஒரு பெண் இரவில் தனியாக சென்றால் அவளைக்கற்பழிப்பதற்கான அனுமதி உரிமை அனைத்து ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.ஒரு பெண் செக்ஸியாக கற்பழிப்பைத்தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் யாரும் அவளைக்கற்பழிக்கலாம்.கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழிக்கப்பட்டபின்  உயிர்தப்பினால் அவளுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.கற்பழித்தவனுக்கு ஆயுள் தண்டை என்றால் கற்பழிக்கப்பட்டவளுக்கு தூக்குத்தண்டனை.

மேலே கேட்கப்பட்ட கேள்விகள் மறைமுகமாக என்ன கூறவருகின்றன என எனக்குவிளங்கியவை இவைகள்தான்.
அந்தக்கேள்விகளுக்கு என்னிடமும் கேள்விகளே உள்ளன

அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பீச்களில் பெரும்பாலான பெண்கள் பிகினியுடன் அரையும் குறையுமாக(சில இடங்களில் நிர்வாணமாக) கடலில் குளித்துக்கொண்டோ கரையில் உலாவிக்கொண்டோ இருப்பார்கள்.அங்கே கேள்விகேட்ட தனவான்கள் சென்றால் உடனே காய்ந்த மாடு காம்பில் பாய்வது போல் பாய்ந்துவிழுந்து அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துவிடுவீர்களா?உங்களால் முடியாது.அங்கு உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு/பொத்திக்கொண்டு நிற்கவேண்டியதுதான்.
சாதாரணமாக எமது ஆசிய சமய,கலாச்சார ஆடைகளையே தொடர்ந்து பார்த்துவந்த எமக்கு சற்று செக்ஸியான(பிகினி அல்லாத) ஆடைகளுடன் ஒரு பெண்ணைப்பார்த்ததும் அவளை கற்பழிக்க முயல்கின்றோம் என்றால் ஏன் எங்களால் அமெரிக்காவில் அந்த செயலை செய்யமுடியவில்லை.
போலீஸ் பிடித்து நொங்கெடுத்துவிடும் என்ற பயம்தான் காரணம் என்றால் இங்கு ஏன் அந்தப்பயம் வேலை செய்யவில்லை.
கலாச்சாரக்காவலர்கள்  பாதுகாப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையா?

டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதி தொடர்பாக யாராவது பேஸ்புக்கில் ஸ்ரேட்டஸ் பகிர்ந்துகொண்டால் உடனேயே பின்னால் கேள்விகள் எழுகின்றன.டெல்லியில் பெண் கற்பழிக்கப்பட்டதால் போராடுகின்றார்கள் தமிழ் நாட்டில் பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்,ஈழத்தில் பெண்கள் கற்பழிக்கப்படும்போது எங்கேயெடா போய் இருந்தீர்கள்.

இங்கே ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாள் என்ற விடய்த்தைத்தவிர ஏனைய அனைத்துவிடயங்களும்தான் முக்கியம் என கூவுகின்றார்கள்.ஈழம்,டெல்லி மாத்திரமல்ல உலகெங்கிலும் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்காவில் மட்டும் ஒரு மணித்தியாலத்திற்கு 78 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள்.

இந்தியா கேட் அருகே பெண்கள் உரிமை அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு இளம் பெண் ஏந்தி இருந்த தட்டியில் இடம் பெற்ற வாசகங்கள் இது :

" IF I AM A WOMEN AND IF I WALK NUDE ON THE ROAD , THEN ALSO U DON'T HAVE ANY RIGHT TO RAPE ME ! "
உடனே ஆரம்பித்தார்கள் பேஸ்புக் கலாச்சாரக்காவலரக்ள்.இதைக்கூற பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை.கலாச்சாரத்தை மீறும் செயல் என்று.
பேஸ்புக்கின் இன்றைய நிலை இதுவேதான்.சொல்லவந்த விடயம் என்ன என்பது தொடர்பாக யாரும் அலட்டுக்கொள்வதாக தெரியவில்லை. நிர்வாணமாக சென்றால்கூட என்னைத்தொடுவதற்கு அனுமதி இல்லை என்ற கூற்றை ஆதரிப்பதன் பொருள் ஒரு பெண்ணை நிர்வாணமாக வீதியில் செல்ல நான் ஆதரவளிக்கின்றேன் என்பதல்ல.

ஒட்டு மொத்தமாக கலாச்சாரம்,சமயம் என்ற போர்வையில் வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகளின் தோற்றப்பாடுகளாகவே பேஸ்புக்,சில பல வலைப்பூக்களின் பதிவுகள் தெரிகின்றன.சுய கட்டுப்பாடு என்ற வார்த்தையை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே தாரைவார்த்துக்கொடுத்துவிட்டோம்.

செக்ஸியாக உடைஅணிந்து வெளியே செல்லும் பெண்கள்தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றார்களா?

வீட்டில் சொந்த இரத்த உறவுகளாலேயே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் இருக்கிறார்களே?தந்தையே மகளைக்கற்பழித்த கதைகளை நாம் செய்திகளாக கேள்விப்பட்டதில்லையா?இவற்றிற்கெல்லாம் செக்ஸியாக அணியும் உடைதான் காரணம் என்று கூறமுடியுமா?


பாலியல் தொடர்பான விழிப்புணர்வு எட்டப்படாதவரை இவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.இதற்கு ஒட்டுமொத்தமாக பெண்களைக்குற்றம்சாட்டி எந்த பயனும் இல்லை.குடும்ப,சமூகக்காரணிகள் இவ்வாறான ரேப்பிஸ்டுகளை ஆழ்மனதில்  உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்த ரேப்பிஸ்ட் முகமூடியை கிழித்துக்கொண்டு வெளியே வருகின்றான்.முக்கியமான எமது வாழ்வில் மிகவும் ஒன்றித்துவிட்ட சினிமாவையும் இங்கு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தமுடியும்.சிலவருடங்கள் முன்பு வரை சினிமா ஒருவன் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டால் அவளை கற்பழித்தாலே போதும் என்று படிப்பித்துவந்தது.உடனே ஒரு பஞ்சாயத்து அதில் அப்பெண்ணை அவனே திருமணம் செய்யவேண்டும் என்று  தீர்ப்புக்கூறியது சினிமா.இன்னொன்றையும் கூறியது கற்பழிக்கப்பட்ட பெண் வாழ்வதை விட தற்கொலை செய்துகொள்வதுதான் சரியான முடிவு.ஹீரோ ஹீறோயினுக்கு செய்யும் ஹீரோயிஸமே பொறுக்கித்தனமாக இருந்தால் அதைப்பார்த்து எனக்கு விரும்பிய பெண்ணிடம் ஹீரோயிஸம் என்ற நினைப்பில் அவற்றை செய்யவைக்கின்றது சினிமா.

//பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

ஞானி//


பெண்களின் உடைதொடர்பாக ஒரு விடயத்தை கூறமுடியும் எனக்குத்தெரிந்த ஒரு பழமொழி 
"கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டுபவன் முட்டாள்" இதைப்புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

கற்பழிப்புக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.ஈரான் போன்ற நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகள்.

மரணதண்டனை சரியாதவறா என்பது விவாதத்திற்குரிய தனி சப்ரர்.கமல் கூறியதுபோல் ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு இன்னொரு காட்டுமிராண்டித்தனம் சரியாகாது.கற்பழிக்கப்பட்டவள் எனது சகோதரி கற்பழிக்கப்பட்டவன் எனது சகோதரன்.அந்த பஸ் என்னுடையது என்றும் கூறாமுடியும்.ஆனால் உண்மையில் எனக்கு அவ்வளவு சகிப்புத்தன்மை இல்லை.

காஸாப்பின்  தூக்குத்தண்டனை தொடர்பாக ஒரு நண்பர் பகிர்ந்துகொண்ட செய்தி


நோர்வே வரலாற்றிலேயே மோசமான கொலையாளியான ப்ரெய்விக் பிடிபட்ட பின்பு 'இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்' என்றார். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நோர்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது! 

-Ilamaran Mathivanan
ஞானி  இன்னொன்றையும் கூறினார் "ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்."
(இதை ஞானி ஆண்களை ரேப்பிஸ்ட் என்று கூறிவிட்டார் என்று பேஸ்புக்கில் ஆரம்பித்துவிட்டார்கள்) ஞானி கூறியதை வைத்துப்பார்த்தால் my name is khan and i'm not a terrorist என்பதுபோல் i am a male and i am not a rapist என்று ஒவ்வொரு ஆணும் கூறுக்கொண்டு திரியவேண்டிய காலம் வந்துவிடுமோ?

ஞானியின் இச்சம்பவம் பற்றி எழுதிய பதிவில் Ganpat  என்பவரால் இடப்பட்ட கொமண்ட்


எங்கள் இஷ்டத்திற்கு ஒட்டு போட்டு(அல்லது ஓட்டே போடாமல்),திறமை,நேர்மையற்ற கயவர்களை ஆட்சிபொறுப்பில் அமர்த்துவோம்.

பிரசித்தி பெற்ற IAS,IPS அதிகாரிகள்,
அமைச்சர்கள்,வழக்கறிஞர்கள்,
மருத்துவர்கள் ,chartered accountants நிகழ்த்தும் ஊழல்கள்,கயவாளித்தனங்கள்,
பாலியல் குற்றங்கள் இவற்றை அசட்டை செய்து மறைமுகமாக ஊக்ககுவிப்போம்.

திரைப்படங்களில் வரும், பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளை,காவல் நிலையத்தில் நடைபெறும் கற்பழிப்பு காட்சிகளை, ரசித்துப்பார்ப்போம்.

தொலைக்காட்சி “ச்சீ”ரியல்களில் வரும் “கணவன் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்தல்”,”ஒரு பெண், ஹிட்லரை விட மோசமான குணநலங்களுடன் தன் புகுந்த வீட்டில் அனைவரையும் பழிவாங்கி கொலை செய்தல்” ஆகிய காட்சிகளை வருடக்கணக்கில்,குழந்தை குட்டிகளுடன் வரவேற்பறையில் அமர்ந்து ரசித்துப்பார்ப்போம்.

இதே சானல்களில், செய்திகள் என்ற போர்வையில் ஒரு போலி சாமியாரும் ஒரு நடிகையும் நிகழ்த்தும் லீலைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டால் சிரித்து மகிழ்வோம்.

16 வயது மகள்,40 வயது மனைவி சகிதம் ஒரு அநாகரீக குத்துப்பாட்டிற்கு திருமண நிகழ்வுகள்,சானல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் ஆடி மகிழ்வோம்.

ஆனால்,ஆனால்…

இரவு,ஒரு யுவதி ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி, அங்கு ஊர் பேர் தெரியாத ரவுடிகளால் தாக்கப்பட்டால் மட்டும் பொங்கி எழுவோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}