உலகம் ஏன் அழியவில்லை?-ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் விளக்கம்

உலகம் அழியப்போகின்றது என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணிய பலரும் உலக அழிவுக்கு 2 நாட்கள் முன்னதாகவே ஒன்றும் நடைபெறாததைக்கண்டு தமது முடிவுகளை மெதுவாக மாற்றிக்கொண்டார்கள்.ஒட்டு மொத்தமாக மாயன்கள் மீதும் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள்.ஆனால் சிலரோ இல்லை இல்லை நாஸா மறைக்கின்றது(உலகத்தில்  விஞ்ஞானிகள் உள்ள  ஒரே ஒரு இடம் நாஸா மட்டும்தானாம் ரஷ்யா,சீனா,இந்தியாவில் எல்லாம் விஞ்ஞானிகள் இல்லையாம்) நாஸா வெளியே சொல்லவில்லை அது இதுவென்று ஆயிரம் காரணங்களைக்கூறினார்கள்.இப்படி பம்மாத்துவிட்டு  பொய்ப்பிரச்சாரம் செய்ததில் சீனாவில் பலபேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது வேறுகதை.பேஸ்புக்கில் போலியான புகைப்படங்களை  பகிர்ந்து உலகம் அழிந்துக்கொண்டிருக்கின்றது என்றும் பகிர்ந்துகொண்டார்கள் நம்ம விஞ்ஞானிகள்.3,4 வருடங்களுக்கு முன்னர் நடந்த நில நடுக்கங்கள் தோன்றிய விண்வெளி  மாற்றங்களை எல்லாம் இன்று தோன்றியதாகவும் அவை செய்திகளில் ஒளிபரப்பட்டுவருவதாகவும் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அழியும் என்று கூறிய 99% ஆனவர்கள் அழியும் என்று கூறிய இன்னாளில் தாம்  நம்பியது முட்டாள்தனம்தான் என்று பின்வாங்கிவிட்ட நிலையில் ஒரு சிலர் இலைங்கை,இந்திய நேரம் 4.42 pm  இல்தான் உலகம் அழியும் அதுவரை நான் நம்பிக்கையுடன் காத்திருப்பேன்(ஏதோ காதலிக்கு வெயிட்பண்ணுவதுமாதிரி) என்று காத்திருந்துவிட்டு நேரம் சென்றபின்னும் கூட அதை ஒத்துகொள்ளவில்லை.மாயன்கள் கூறியவிடயங்கள் திரிபடைந்துவிட்டனவாம்.மாயன்கள் பற்றி 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்தவர்கள் கூட ஆராய்ந்து கண்டுபிடிக்காத விடயங்கள் இவை.

அதோடு உலகம் அழியப்போகின்றது என நம்பிய ஒரு விவசாயி செய்த விசித்திரமான வேலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

//தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.


பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.

இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.

இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.//


அப்படி  உலகம் அழியும் என  இலவு காத்த கிளியாக காத்திருந்த ஒரு சகபாடி உலகம் அழியவில்லை என்றதும் கூறிய விஞ்ஞான விளக்கம் இது.ஹார்ட் பேஸண்ட் யாராவது இருந்தால் வாசிக்கவேண்டாம்.


"இப்போது நேரம் 4.42 pm.....இதுவரையிலும் உலகம் அழிந்தது போன்று எனக்குத் தோன்றாததால் என் மீது கொலை வெறியுடன் இருக்கும் நண்பர்களுக்காக இந்த ஸ்டேடஸ்..... முதலில் மாயன்கள் விவகாரம் எக்கச்சக்கமாக திரிபடைந்து விட்டதால் அது குறித்தும் எனது நிலைப்பாடு குறித்தும்....
மாயன்கள் கூறியதன்படி 5125 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் தனது ஒரு முழுச்சுற்றைப் பூர்த்தி செய்கின்றது... அதாவது அவர்களின் கலண்டர் கி.மு 3114-08-11 ஆம் திகதி 0,0,0,0,0 இல் ஆரம்பித்து இன்று 13,0,0,0,0 ஐ எட்டி மீண்டும் 0,0,0,0,0 இற்குச் சென்றுள்ளது.... அவ்வாறு பூர்த்தி செய்யும் ஒவ்வொரு ஐந்தாவது தடவையும் (25625 வருடங்கள்) அது பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கின்றது... அந்த இடத்தில் ஒரு Dark Rift உண்டு, அதன் விளைவாக பூமி அழியும் அல்லது பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது தான் கருதுகோள்... இதற்கிடையில் சுமேரியர்களின் கூற்றுப்படியான நிபுரு பூமியைத் தாக்கும் என்ற நம்பிக்கை கடந்த ஒரு மாதத்துக்கு முன்புவரை எனக்கு இதனுடன் சேர்ந்து இருந்திருந்தாலும், அது பூமியை நோக்கி வருவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை நாஸா மறைக்க நினைத்தாலும் கூட, சுயாதீன விண்வெளி ஆய்வாளர்களின் கண்ணில் ஒரு மாதத்துக்கு முன்பே தட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு வாரத்தில் எமது வெற்றுக்கண்ணுக்கே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு முன்னரே அந்த நம்பிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்து விட்டது.... ஆகவே இன்றுவரை நான் நம்பியது Dark Rift ஐத் தான்... ஆனால் இன்னமும் உலகம் அழியவில்லை... இந்த 25625 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் நிகழ்வு மாயன்களின் புராதன பந்து விளையாட்டுடனும், அவர்களது மரணத்தின்கடவுள் வாழும் இடமான 'ஷிபால்பா' வில் நிகழ்ந்த பந்து விளையாட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது... அக் கதையின்படி, “ஒவ்வொரு 25625 வருடங்களும் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன்வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான்.”
ஆகவே இப்போது சூரியன் வென்று விட்டதாகக் கொள்ளலாம்...
ஒவ்வொரு 25625 வருடங்களுக்கு ஒருமுறையும் சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் போது அழிவை நெருங்குகின்றது... அதற்காக ஒவ்வொரு முறையும் அழிந்து கொண்டா இருக்கின்றது...?
இன்று அழியலாம் என்று நம்பினேன்... அழியவில்லை... ஜஸ்ட் அவ்வளவு தான் மேட்டர்.... இதைப் புரியாதவர்கள் நீங்கள் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள்/ ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலறியடித்துக் கொண்டு சுனாமி எச்சரிக்கை விடுவதையும் பின்னர் சுனாமி வரவில்லை என்று தெரிந்தபின் எச்சரிக்கையை வாபஸ் பெறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...
ஆனாலும் பூமியை இன்னும் ஒரு 25625 வருடங்களுக்கு சும்மாவிட்டு வைக்க விரும்பாத காரணத்தால்.... நாஸ்டராமஸ் ஐ உதவிக்கு இழுக்கிறேன்....
நாஸ்டராமஸ் 2012 ஐ மைல்கல்லாக வைத்து பல ஆரூடங்களைக் கூறியுள்ளார்...
நாஸ்டராமஸ் கூறியதன்படி, “எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது....” இதனை நாம் மாயன்களின் காலண்டர் முடிவுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்... மாயன் காலண்டர் 2012 இல் முடிவடைந்த போதிலும் எமக்கு அழிவு கிடைக்கவில்லை....
மேலும் கங்ணம் ஸ்ரைல் பாடல் ஒரு பில்லியனைத் தொடும்போது உலக அழிவு நிகழும் என்று நாஸ்டராமஸ் சொன்னதாக சில நாட்களுக்கு முன்பு இன்னொரு மேட்டரையும் மாயன்களோடு இணைத்தார்கள்... அது ஒருவேளை அவ்வாறு ஒரு பில்லியனைத் தொடும் போது உலகம் அழிவது சம்பந்தமாக உலக மக்கள் எல்லோரும் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று தான் அவர் ஆரூடம் சொன்னார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்... :) இப்போது அது 998,088,796 views.. இதை விளக்கமுடியாதவர்கள் வழக்கம் போல கோயின்சிடன்ஸ் என்று சொல்லிக் கொண்டு திரிய வேண்டியது தான்...

மேலும் நாஸ்டராமஸ் 2012-2025 கால கட்டம் இந்த உலகத்துக்கு மிகவும் கடினமான கால கட்டமாக இருக்கும் என்றும் வறட்சி, பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்றும், 2014 இற்கிடையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மூளும் போர் மூன்றாம் உலக யுத்தமாகப் பரிணமிக்கும் எனவும் கூறியுள்ளார்.... அதிலும் குறிப்பாக ராகு-சனி சேர்க்கை நிகழும் போது இவை நிகழும் என்றும் கூறியுள்ளார்... இப்போது, வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த 02-12-2012 உம் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 22-12-2012 ம் ராகு–சனி சேர்க்கை நிகழ்ந்து அடுத்த ஒன்றரை வருடத்துக்கு நீடிக்குமாதலால் அதகளத்துக்கு ரெடியாக இருக்கவும்... மேலும் நாஸ்டராமஸ் கூறியதன்படி 3797 இல் மனித இனம் முழுமையாக அழியும்..., 4007 இல் இப் பூமியிலுள்ள சகல உயிரினங்களும் அழியும் என்பதால்... என்ச்சாய்..


இவரை விட்டுவிடலாம்.ஆனால் சீரியஸ்ஸாக கவனிக்கப்படவேண்டிய ஒருவிடயம் இருக்கின்றது.உலக அழிவு  என்று ஒரு பேஸ்புக் எக்கவுண்டை ஓபின் செய்து.அதில் உலகம் இருண்டு கொண்டிருக்கின்றது.வானில் வால்வெள்ளி தோன்றியது. நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று  வதந்திகளை பரப்பிவருகின்றார்கள் இவர்களை என்ன செய்யலாம்?

இப்படி செய்திகளைப்பரப்பும் பேஸ்புக் எக்கவுண்ட்கள் கீழே..
இங்கே கிளிக் 1
கிளிக் 2டுபாய் இருட்டில் முழ்கியது .
டுபாய் மாலை 3 மணிக்கே இருட்டியது நாம் கூறியது போல, இது அங்கே தற்போது எடுத்த புகைபடம், உங்கள் நண்பர்கள் அங்கிருதால் வினவி பாருங்கள் நாம் சொல்வது உண்மையா அல்லவா என்று நாம் நடப்பதை தான் சொல்வோம்

பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக 


ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் பார்த்த அதிசயம் !
ஸ்ரேல், ஜோடான் மற்றும் துருக்கி நாடுகளில் உள்ள மக்கள் வானத்தில் தோன்றிய அதிசயப் பிளம்பை பார்த்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்த்ததால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. நேற்றைய தினம் மாலை 8.45 மணிக்கு வாணில் பெரும் வட்ட தீப்பிளம்புடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்துள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து ஒரு ஒளிக்கீற்று ஒன்று பூமையை நோக்கி வந்துகொண்டுள்ளது .

எச்சரிக்கை ரிப்போட் உலக அழிவின் முந்தய செயலாக உலகு இன்று 3 மணி நேரங்களுக்கு முன் இருட்டில் மூழ்கும் .அதாவது பிற்பகல் 3 மணிக்கே நாடுகள் இருட்டிடும்.புவி தனது ஒரு சுழற்சியை பூர்தி செய்து கொள்ளும் நேரம் தான் புவியின் சாய்வு அதிகரித்து புவி தகடு வெடிக்கும் என நாசா விஞ்ஞான யோன் டைமன் தெரிவித்துள்ளார், இது அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு நிகழும் என நாசா கணக்கிட்டுள்ளது, உலக மக்கள் வன்முறைகளில் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என வலியுறுதபட்டுள்ளது, உலக நாடிகளிடையே அவசரகால நிலை தற்போது பிரகடனபடுதப்பட்டுள்ளது என தெருவிக்கபட்டுள்ளது


தற்போதைய செய்தி ... இலங்கை , இந்தோனேசியா,மியான்மார், யப்பான் ஆகியன முதலில் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க பூகோள மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக ஏற்படும் எனவும் தெரிவித்தார், தனக்கு உலக அழிவு பயம் தற்போது தான் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார், இச் செய்தியாலும் தொடர் பாரிய நில நடுக்கதாலும் மக்கள் பீதியின் உச்சியில் இருபதாக றொயிட்ரர் மேலும் தெரிவித்துள்ளது.

மக்களே இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்?இவற்றைப்பார்த்து ஒருவன் தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வது?முதலில் இவ்வாறானவர்களை உள்ளே தள்ளவேண்டும்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}