உலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள்?

உலகம் அழியப்போகின்றது  என இதுவரை எத்தனை தடவைகள் ஏமாற்றியுள்ளார்கள்.உங்களுக்கு 3/4 தடவைகள் உலகம் அழியப்போகின்றது என கூறியது நினைவிருக்கலாம்.ஆனால் உங்களுக்கு ஒரு சிறிய அதிர்ச்சி 3 அல்லது 4 தடவைகள் அல்ல 242 தடவைகள் உலகம் அழியப்போகின்றது என கடந்துவந்த நூற்றாண்டுகாலங்களில் மக்களின் வயிற்றில் புளியைக்கரைத்தார்கள் என்று அறிந்திருக்கின்றீர்களா?
உலக அழிவு தொடர்பான முன்னைய பதிவுக்கு  உலக அழிவு திரைப்படங்கள்

முதலில் உலகம் அழியப்போகின்றது என மொக்கைபோட்ட சிலரைப்பார்ப்போம்

உலக அழிவு பற்றிய கேள்விகளுக்கு நாசாவின் பதில் இங்கே கிளிக்
The Prophet Hen of Leeds, 1806
இங்கிலாந்தின் நகரமான Leeds இல் கோழி ஒன்று முட்டையிட்டது.ஆனால் முட்டையில் "Christ is coming" என்று எழுதப்பட்டிருந்தது.விடயம் காட்டுத்தீபோல மக்களிடம் பரவியது மக்கள் உலகம் அழியப்போவதை உறுதியாக நம்பினார்கள்.முட்டை இடப்பட்டதும் முட்டைமேல் எழுதப்பட்டது என்ற உண்மையைக்கண்டுபிடிக்கும்வரை இந்தப்புரளி தொடர்ந்தது.

The Millerites, April 23, 1843


William Miller என்ற இங்கிலாந்தின் விவசாயி சில ஆண்டுகளாக பைபிளைப்படித்தார் பின்னர் அதில் உலகம் அழியப்போகும் தினம் குறிப்பிடப்பட்டுள்ளது என திடமாக நம்பினார்.கடவுள் உலகத்தை அழிப்பதற்கு இரு நேரத்தை தெரிவுசெய்துள்ளார் என நம்பினார்.இதை மக்களுக்கு பரப்பினார் உலகம் March 21, 1843 இல் இருந்து March 21, 1844 இற்குள் அழிந்துவிடும் என உறுதியாக கூறினார்.இவரது கூற்றை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் இவரைப்பின்பற்றினார்கள்.இவரைப்பின்பற்றியவர்களை Millerites என அழைத்தார்கள்.இறுதியாக  April 23, 1843 இல் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு டேட்டை கூறினார்.இவரின் கூற்றை உண்மை என பின்பற்றிய ஆயிரக்கணக்கானவர்கள் தமது வேலையைவிட்டார்கள் அதோடு தமது உடமைகளையும் ஒட்டுமொத்தமாக விற்றார்கள்.மில்லர் உலகம் அழியும் என குறிப்பிட்ட நாளில் ஜீஸஸ் வருவார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.உடமைகள் அனைத்தையும் வேலையையும் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து ஓர் இடத்தில் குழுமினார்கள்.அந்த நாளும் வந்தது உலகமும் அழியவில்லை ஜீஸஸும் வரவில்லை.கூட்டம் உடனடியாகக்கலைக்கப்பட்டது.மில்லரின் நம்பிக்கையாளர்களால் அமைக்கப்பட்ட சேர்ச்தான் தற்போதைய Seventh Day Adventists.

(இவை தொடர்பாக தேடியபோது கிடைத்தது இது-A Gallup poll in 2010 found that 40 percent of Americans still believe in creationism — a literal interpretation of the Bible that says humans were created by a Christian God less than 10,000 years ago. Thirty-eight percent of Americans believe that humans were "intelligently guided" into being by a creator, while only 16 percent reported accepting evolution.)
Mormon Armageddon, 1891 or earlier

Mormon Church இன் ஸ்தாபகரான Joseph Smith  February 1835 இல் சேர்ஜ்ஜின் லீடர்கள் அனைவரையும் அழைத்தார்.தான் கடவுளுடன் நேரடியாக பேசியதாகவும்.இன்றிலிருந்து 56 வருடங்களின் பின்னர் ஜீஸஸ் பூமிக்குவருவார் என்று கூறியதாகக்கூறி ஒரு சமயப்பிரிவை ஆரம்பித்தார் அப்போது அவருக்கு வயது 35.தனக்கு கடவுளின் குரல் கேட்டது என்று கூறியதுடன் அதை பதிவு செய்து மக்களுக்கு ஒளிபரப்பினார்.


14: “I was once praying very earnestly to know the time of the coming of the Son of Man, when I heard a voice repeat the following:”
15: “Joseph, my son, if thou livest until thou art eighty-five years old, thou shalt see the face of the Son of Man; therefore let this suffice, and trouble me no more on this matter.”
16: “I was left thus, without being able to decide whether this coming referred to the beginning of the millennium or to some previous appearing, or whether I should die and thus see his face.”
17: “I believe the coming of the Son of Man will not be any sooner than that time.”

இவரை நம்பிய மக்களுக்கு ஜோசப் கூறினார். நீ மேலும் 36 வருடங்கள் வாழ்ந்தால் ஜீஸஸ்ஸையும் ஜீஸஸ்ஸின் செல்லப்பிராணியான டைனோசரையும் பார்க்கலாம்  அதோடு உலகமும் அழிந்துவிடும் என்று கடவுள் கூறியதாக சொன்னார்.இவரின் கதையை உண்மை என்று நம்பிய மக்கள் அவரின் சேர்ஜ்ஜிற்கு பணத்தை அனுப்பினார்கள்.ஆனால் இவர் தான் குறிப்பிட்ட வயதுக்கு முன்பாகவே இறந்துவிட்டார்.உலகமும் அழியவில்லை ஜீஸஸ்ஸும் வரவில்லை.Halley's Comet, 1910
The orbit of Halley's Comet


1910 இல் ஹெலியின் வால்வெள்ளி பூமியை நோக்கிவந்தது.மக்களுக்கு சில விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அந்த வால்வெள்ளியின் வால்பகுதியில் சயனோஜென் என்னும் சயனைட்டைக்கொண்ட நச்சுவாயு இருப்பதாக அறிவித்தார்கள்.இதனால் வால்வெள்ளி பூமிக்கருகாமையில் வரும்போது அதன் வாலில் உள்ள வாயுவினால் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள் என கூறினார்கள்.மக்கள் பீதியடைந்தார்கள்.ஆனால் ஹெலியின் வால்வெள்ளி ஒவ்வொரு 75-76 வருடங்களுகு ஒரு முறை பூமியின் அருகாமையில் வந்து செல்லும் ஒரு சாதாரண வால்வெள்ளி பயப்படத்தேவையில்லை என நியூயோர்க் ரைம்ஸில் செய்திவெளியிடப்பட்டது.

கிறீஸ்தவ மதத்தைசேர்ந்த பலர் உலகம் அழியும் என எதிர்வுகூறி அவை நடக்காது போயின அவ்வாறு எதிர்வுகூறியவர்களின் லிஸ்ட் கிளிக்

Pat Robertson, 1982

இவர் ,ஏ.பி.சி பமிலி சனல்  Christian Broadcasting Network போன்ற தொலைக்காட்சிகளின் ஸ்தாபகர்.இவரது 700 Club இனூடாக கிறீஸ்தவ செய்திகளைப்பரப்பும் தொலைக்காட்சியில் உலகம் அழியப்போகும்  நாள் தனக்குத்தெரியும் என அறிவித்தார். "I guarantee you by the end of 1982 there is going to be a judgment on the world."ஆனால் உலகம் அழியவில்லை இவர் ஏதோ ஒருதடவைதான் இப்படியான எதிர்வுகூறல்களைக்கூறினார் என்று நினைக்கவேண்டாம்.
2006 இல்  அமெரிக்காவை புயல் தாக்கும் சுனாமி  தாக்கும் என்றெல்லாம் கூறினார். "If I heard the Lord right about 2006, the coasts of America will be lashed by storms.","There well may be something as bad as a tsunami in the Pacific Northwest." இவர் இவைகளைக்கூறியது May 17 இல் இவர் கூறியவை எல்லாம் நடந்தன.ஆனால் மே மாதத்தின் ஆரம்பத்திலேயே ஹிஸ்ரி சனல் மெகா டிஸாஸ்ரர் என்ற புரோக்கிராமில் West Coast Tsunami என்ற எபிசோட்டில் சுனாமிவருவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்திருந்தது.

சரி அதையாவது மன்னிக்கலாம் என்றால் அடுத்துவிட்டார் ஒரு பீலா 2007 இல்  அமெரிக்காவில் தீவிரவாதத்தாக்குதல் நடைபெறும் என்று கூறினார். "The Lord didn't say nuclear. But I do believe it will be something like that." நடைபெறவில்லை.இறுதியாக 2012 இல் கூறினார் கடவுள் என்னிடம் கூறினார் அடுத்த அமெரிக்க ஜெனாதிபதி யார் என்று.ஒபாமா அடுத்த ஜனாதிபதி அல்ல என்று கூறினார்.

Heaven's Gate, 1997Heaven's Gate  என்பது UFO religion.நாம் கடவுளை நம்புவது போல்.இச்சமயத்தவருக்கு  ஏலியன்கள்,பறக்கும்தட்டுக்கள்தான் கடவுள்கள்.இது 1970 இல் உருவாக்கப்பட்டது. உருவாக்கியவர்கள்  Marshall Applewhite, Bonnie Nettles  ஆகியோர்.உலகம் அழியப்போகின்றது என்ற மக்களின் மரணபயத்தை சாதகமாக்கி மக்களை என்னவும் செய்யலாம் என்பதற்கு இந்த அமைப்புத்தான் சரியான உதாரணம்.இவர்கள் மக்களை தற்கொலை செய்யத்தூண்டியிருக்கிறார்கள்.மக்களும் தற்கொலை செய்துகொண்டார்கள்.


இந்த சமயத்தவர்கள் பூமி மீள் சுழற்சியடையும் என நம்புகின்றார்கள்.இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி தற்கொலை செய்துகொள்வது என்று நம்புகின்றார்கள்.தற்கொலை செய்தால் மறு சுழற்சி செய்யப்பட்ட மற்ற உலகத்திற்கு செல்லலாம் என்பது இவர்களது நம்பிக்கை.மனித உடல் என்பது வெறும் கூடு/வாகனம்/கப்பல் என நம்புகின்றார்கள்.இந்த சமய நம்பிக்கையாளரான Rio DiAngelo விடம் அவரது மகனின்  படத்தைக்காட்டியபோது அவரது கொமெண்ட் "Look, there's the little vehicle."

The group believed in several paths for a person to leave the Earth and survive before the "recycling," one of which was hating this world strongly enough: "It is also possible that part of our test of faith is our hating this world, even our flesh body, to the extent to be willing to leave it without any proof of the Next Level's existence."

Applewhite இன் வீடியோ ஓளிபரப்பு  March 19–20, 1997 இல் வெளியிடப்பட்டது."children of the Next Level என்று பேசப்பட்டது.இந்த வீடியோ வெளிவந்ததும் சில சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.இந்த சமயத்தின் நம்பிக்கையாளர்கள் உலகத்தை வெறுப்பவர்கள்.

They believed "to be eligible for membership in the Next Level, humans would have to shed every attachment to the planet." (Balch, 2002, p. 211) This meant that all members had to give up all human-like characteristics, such as their family, friends, sexuality, individuality, jobs, money and possessions (Balch, 2002, p. 211).They believed "to be eligible for membership in the Next Level, humans would have to shed every attachment to the planet." (Balch, 2002, p. 211) This meant that all members had to give up all human-like characteristics, such as their family, friends, sexuality, individuality, jobs, money and possessions (Balch, 2002, p. 211).

இவர்களை நம்பும் இவர்களது பாலோவேர்ஸ் 39 பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.குழுக்களாக தற்கொலை செய்துள்ளார்கள்.இறந்தவர்கள் கட்டில்களில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.அவர்களது தலை சதுரமான பேர்ப்பிள் கலர் துணியால் மூடப்பட்டிருந்தது.

(The members took phenobarbital mixed with pineapple, washed down with vodka. Additionally, they secured plastic bags around their heads after ingesting the mix to induce asphyxiation. Authorities found the dead lying neatly in their own bunk beds, faces and torsos covered by a square, purple cloth. Each member carried a five-dollar bill and three quarters in their pockets. All 39 were dressed in identical black shirts and sweat pants, brand new black-and-white Nike Decades athletic shoes, and armband patches reading "Heaven's Gate Away Team" (one of many instances of the group's use of the Star Trek fictional universe's nomenclature). The adherents, between the ages of 26 and 72, are believed to have died in three groups over three successive days,)உலகம் அழியப்போகின்றது என்ற பயத்தை எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்று இவர்களைப்போன்றவர்களிடம் இருந்து புரிந்துகொள்ளலாம்.உண்மையாக நடந்த சம்பவம் ஒரு சிறுவன் வந்து என்னிடம் உலகம் அழியப்போகுதாம் என்று பீதிய்டன் அழாக்குறையில் கேட்டான். நான் யார் சொன்னது என்று கேட்டேன்.நேற்று ஒரு அண்ணை சூரியனைப்போட்டோ எடுத்துக்காட்டினவர் அதில கல்லுவருதாம் அதில கல்லு கறுப்பா தெரிஞ்சது நான் உடன ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துட்டன் அழியுமா?என்றான்.எனக்கு ணங்க் என்று தலையில் யாரோ கொட்டியது போல் இருந்தது.அவனிடம் அழியாது என்று கூற அவன்  நம்புவதாக இல்லை பின்பு 7 ஆந்தரப்புத்தகத்தில் இருந்த சூரியனைப்பற்றிய விவரங்களை அந்தப்புத்தகத்தை ஆதாரம் காட்டி விளக்கித்தான் அவனை பழைய நிலைக்கு கொண்டுவர முடிந்தது.அதை அந்த சிறுவனுக்கு சொன்ன பக்கியை என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் எமக்குள் எப்படியும் மோதிக்கொள்ளலாம்.ஆனால் குழந்தைகள் எதற்கும்  உடனே பயப்பட்டுவிடுவார்கள்.அவர்களிடம் நீங்கள் மாயன் கூறினார்கள்..கல்லு வருது...வெங்காயம் வருது என்று சிம்பிளாக சொல்லிவிட்டு சென்றுவிடுவீர்கள்.அவர்களுக்கு  அவர்கள் நம்பிய விடயம் பிழை என்று நிரூபிப்பது எவளவு கடினம் என்று நீங்கள் அனுபவத்தால் உணர்ந்தால்தான் தெரியும்.மறந்தும் இந்த ஈனத்தனமான வேலையை செய்துவிடாதீர்கள்.

தொடரும்..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}