யாழ் மாணவரின் தலை விதி(jaffna)-05

காலை 6.00 அம்மா வலு கட்டாயமாக  நித்திரையில் இருந்து எழுப்பிவிட்டார்.டேய் அருள் எழும்படா...உனக்கு 6.30 க்கு கமரன்சேறிண்ட கிளாஸ் எல்லோ?எழும்பு...அவளது மடியில் அப்பொழுதுதான் தலைவைத்த அருளிற்கு திடீர் என்று வெளிச்சம் தெரிந்தது.சடுதியாக எழுப்பிவிட்டது அம்மாவின் குரல்..சும்மா கத்தாதேங்கோ அம்மா.என கனவைக்கலைத்த எரிச்சலுடன் கூறிக்கொண்டு எழுந்தான் அருள்.உன்த வயதில எங்கட குரலைக்கேட்டா எரிச்சலாத்தான் இருக்கும் என்று அம்மா பேசிக்கொண்டே குசினிக்குள் சென்றுவிட்டார்.கிழமையில் 2 நாள்தான் செக்ஸன் கிளாஸ் சனி,ஞாயிறு எப்படியாவது போய்விடவேண்டும்....சரி போன கிளாஸில என்ன படிப்பிச்சவர்..எலக்ரோனிக்ஸ் மூவாயி படிப்பிச்சவர் பி.என்.பி ரான்ஸிஸ்ரர் என்.பி.என் ரான்ஸிஸ்ரர்...ஏதாவது ஹோம் வேர்க் தந்தவரா? இல்லை இல்லை அந்தப்பாடத்தின் அறிமுகத்தை மட்டுமே 2 நாட்களாக படிப்பிச்சவர்.
இதை வைத்து நாஸாவில் ஆராய்ச்சி செய்யிறாங்களப்பன் எண்டுவேற சொன்னவர்.எங்க கமரன் சேருக்கு நாஸா நியூஸெல்லாம் எப்படி உடனுக்குடன வருது என்று அருளிறு ஆச்சரியம் இல்லாமல் இல்லை.ஒருவேளை கமரன் சேரின் பழைய மாணவர்கள் சிலர் நாஸாவில் வேலைபார்த்துக்கொண்டிருக்கலாம் என்று எண்ணி மனதை ஆற்றியிருந்தான் அருள்.

முன்னைய பதிவு-இங்கே கிளிக்

இவற்றை யோசித்துக்கொண்டே பாத்ரூமிற்கு ஓடினான் அருள்.பாத்ரூமிற்கு ஓடும்போதே நீலாம்பரியில் அண்ணை ஒரு டீ என்று கத்துவது போல் அம்மா ஒரு டீ என்று கத்திவிட்டு பாத் ரூமிற்கு ஓருனான் அருள்.அந்த செக்ஸன் கொப்பியை எங்க வச்சேன்?நினைவே வரலையே ஒருவேளை துலைஞ்சிட்டுதா?அது சரி அது 2 பக்கம் கூட வராது.இப்ப கிளாஸுக்கு போவம் கிளாஸ் முடிஞ்சதும் வந்து தேடி எடுத்திடனும்.அப்பவும் கிடைக்கலைன்னா எப்பவுமே 90 மார்க்ஸ் வாங்கிற சசிக்கிட்ட வாங்கலாம் இல்லைன்னா சமீரின் அண்ணன்கிட்ட அந்தசெக்ஸன் கொப்பி இருக்கும்.அவர் போன வரிசம் படிச்சவர்தானே.அதுவும் இல்லைன்னா கமரன் சேர் எங்கட பச்சிக்கு எலக்ரோனிக்ஸ் படிப்பிக்கும்போது படிச்சுக்கலாம்.அதுவும் இல்லைன்னா இருக்காரு கமரன் சேரிண்ட தம்பி ககன் சேர்.அவரிட்டை படிச்சுக்கலாம் நம்மளமாதிரி இருக்கிற ஸ்ருடன்ற்ஸ் பாதிக்கப்படக்கூடாது எண்ட ஒரே நல்ல எண்ணத்திலதானே இப்படி ஒரு சிஸ்ரத்தையே கமரன் சேர்வைச்சிருக்கார்.அட இவ்வளவும் இல்லைன்னாகூட ஒரு பேர்சனல் கிளாஸ் போட்டு படிச்சுக்கலாம்.
ம்ம்ம்...நாமெல்லாம் யாரு?  நமக்குத்தான் எத்தனைவழிகள் இருக்கு?எதுக்கு கவலைப்படனும்?

குளித்துமுடித்துவிட்டு அவசர அவசரமாக ரீ குடிக்கும்போது  நேரம் 6.15 டேய் ஒரு துண்டு பாணையாவது சாப்பிட்டிட்டுப்போடா...இல்லையம்மா நேரமில்லை கடைசியா நான் போனா கிளாஸே திரும்பிப்பாக்கும்...அது ஒருவகையில் உண்மைதான் ஆனால்  அவன் அம்மாவுக்கு அப்படி கூறினாலும் மனதிற்குள் அவள் வந்து 2 ஆவது வாங்கிலே இருந்துவிடுவாள் அதற்கு நேர் வாங்கிலில் இருந்தால்தானே அவளைப்பார்க்கலாம்.2 வருடமாக வெறும் பார்வை மட்டுமே அருளிற்குக்கிடைத்தது சில நண்பர்களின் காதலிகள் ஒவ்வொரு நாளும் போன் பண்ணி நீ படிடா என்ன பண்ணிக்கிட்டிருக்காய் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுவார்களாம்.இதெல்லாம் எனக்கு அமையாதா? டேய் அருள் ஓடு ரைம் ஆகுது அலாரம் அடிக்கின்றது மனது.சேய் 15 நிமிடத்திற்குள் மனது எங்கிருந்து எங்கு சென்றுவிட்டது?அப்பாடா என்று கிளாஸ்வாசலுக்கு போகும்போதுதான் ஐயோ காட் கொண்டுவர மறந்துட்டேனே.காட் இல்லாட்டில் பாலா உள்ளுக்குள்விட மாட்டானே.2 வருடமாக தெரிஞ்ச மூஞ்சி எண்டாலும் ஏதோ ஏப்.பி.ஐ யிடம் மாட்டிக்கொண்ட கைதி மாதிரியல்லவா  பாலா நடத்துவான்.வெளியில் கேற்றடியில் நிற்கவேண்டும் அனைத்து மாணவ மாணவியர்  சென்றபின் முக்கியமாக காதலி அர்ச்சனாவரை சென்றபின்னர்தான் உள்ளேயே அருள் அனுமதிக்கப்படுவான்.அதுவும் கமரன் சேர் அனுமதிக்கவேண்டும் நீ உள்ளே வரலாம் என்று.இந்த கார்ட் சிஸ்ரமெல்லாம் வைத்ததற்கு காரணம் காசு கட்டாமல் வேறு யாராவது புகுந்து "கற்றுவிடுவார்களோ" என்று பயந்து ஏனென்றால் திருடமுடியாத செல்வம் என்று கல்விக்கு தனிச்சிறப்பு உண்டல்லவா?
ஆனால் பணம் கட்டியவர்கள்கூட காட் இல்லாத போது கள்ளத்தோணியினால் வருபவர்கள்போலத்த்தான் நடாத்தப்படுவார்கள்.அருள் சிந்தித்துக்கொண்டு கேற்றடியில் நிற்கின்றான்..இன்று படிக்கமுடியாதே என்ற கவலையைவிட தான் வழமையாக இருக்கும் வாங்கு பறிபோகப்போகின்றதே என்ற கவலைதான் அருளிற்கு மிகையாக இருப்பது என்னவோ உண்மைதான்.

சரியாக அந்த நேரம்பார்த்து சுஜன் அந்தவழியால் சென்றுகொண்டிருந்தான்.சுஜனுக்கும் சுயன்ஸ்கோலுக்கும் சம்பந்தம் குறைவு அவன் சுயன்ஸ்கோலில் ஒரு பாடத்தைமட்டுமே எடுப்பவன்.என்ன கார்ட்டை மறந்திட்டியா? ஓம்..இந்தா தனுசண்ட கார்ட்..சந்தோஸத்துடன் கார்ட்டைவாங்கிக்கொண்டு அருள் பாலாவிடம் ஓடினான் இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டி இருப்பது என் விதி என்று நொந்துகொண்டு உள்ளே போய்விட்டான் அருள்.ஓடி சென்று 2 ஆவது ரோவில் அமர்ந்தாயிற்று. நேரம் 6.45 ஆனால் கமரன் சேர் இன்னும் வரல.வழமையாக இந்த நேரம் கிளாஸ் ஆரம்பித்திருக்கவேண்டும்.ஆனால் சேர் வரவில்லை.என்னையா இன்னும் கமரன் சேரைக்காணவில்லை.அவர் வராவிட்டால் என்ன இருக்க்கிறாளே அர்ச்சனா அவளைப்பார்ப்போம்.பொதுவாக ஓரளவு அழகான பெண் ஆனால் அருளின் உலகத்தில் அவள்தான் தேவதை அருளின் உலகம் சற்று குழப்பமான உலகம் ஏதாவது ஒருவிடயம் மதிக்கப்படக்கூடியது என ஏற்றுக்கொள்வற்கே ராவணன் படத்தில் வரும் வீரா காரக்ரர் மாதிரி டண் டண் டண் என்று மோதிக்கொண்டு இறுதியில் விடைவரும் ஆனால் அர்ச்சனா அவ்வளவற்றையும் உடைத்தெறிந்திருந்தாள்.காதல் என்ற போர்முலாசெய்த வேலை அது.

 நண்பிகளுடன் கதைத்துக்கொண்டு இடையில் ஒரு லுக்கு அருளிற்கு 40 000 வோல்ட் கறண்ட் அடிக்கும்.பின்பு கொப்பியில் கிறுக்கத்தொடங்கிவிடுவாள்.எப்படித்தாண்டா இதுகள் வீட்டையும் படிச்சு இஞ்சயும் இப்படி தொடர்ந்து படிக்குதுகளோ?என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் அருள்.இது அருளுக்குமட்டுமல்ல 99% ஆன ஆண்களை குழப்புகின்ற விடைதெரியாத சுருக்கமாக கிராண்ட் பாதர் பரடொக்ஸ் போன்ற குழப்பமான கேள்வி இது. சிவகார்த்திகேயன்போல் அருகில்  நண்பனாக இருந்த நிரோஸ் சொன்னான்.டேய் 7 மணியாச்சு இன்னும் கமரனைக்காணேல்லை. நான் இன்னும் ரீகூட குடிக்கலைடா.டேய்...டேய்...அருள் நண்பனின் புலம்பலை கவனிக்காது அர்ச்சனாவைக்கவனித்துக்கொண்டிருக்க பிடரியில் ஒரு அறைவிழுந்தது.உடனே அருள் ஓமடா நீ சொல்லுறது சரிதான் என்றான். நீ அவளப்பாக்கேக்க நான் என்ன சொன்னாலும் உனக்கு விளங்காது.கமரன் படிப்பிக்கேக்கையும் அவளத்தான் பாக்கிறாய்.வாத்திவரலைன்னாலும் அவளைத்தான் பாக்கிறாய் ஆனா அவள் எப்ப பாத்தாலும் படிச்சுக்கிட்டிருக்காள். நான் கமரன் இன்னும் வரேல்லை எண்ட கடுப்பில இருக்கிறன். நிரோஸ் கூறியது சற்று உறைக்கவே சரி நாளைல இருந்து நான் கமரனை மட்டும்தான் கவனிப்பன் இதை அருள் நிரோஸிற்கு 2893ஆவது தடவையாக கூறிக்கொண்டிருக்கின்றான்.

நேரம் 7.30 இப்போது நிஜமாகவே அருளிற்கும் கடுப்பேறிக்கொண்டிருந்தது.அம்மா அப்பவே ஒரு துண்டு பாணையாவது சப்பிட்டிட்டுபோ எண்டு சொன்னவ நான்தான் கேக்கல.வயிற்றினுள் கடபுட சத்தம் அதோடு காலைப்பனியும் சேர்ந்து வயிற்றை முறுக்குகின்றது.இந்த முறுக்கல் அருளிற்கு மட்டுமல்ல வகுப்பில் உள்ள பெரும்பாலானமாணவர்களின் வயிறும் இதே துன்பத்தைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்குமோ?

அப்போது சுயன்ஸ்கோல் நிர்வாகி அருள் அங்கு வந்தார் பிள்ளையள் இண்டைக்கு கமரன்சேர் வரமாட்டாராம்.சப் என்று இருந்தது செம கோபமாகவும் இருந்தது அருளிற்கு. வர ஏலாது என்றால் முதல் நாளோ இல்லை கடைசி 7 மணிக்காவது சொல்லியிருக்கலாம்தானே என்ன இழவுக்கு வகுப்புமுடியும் நேரம் சொல்லியனுப்பினவர்?

வகுப்பு இல்லையென்றதும் மாணவர்கள் கலைந்துசெல்ல ஆரம்பித்தார்கள்.வழக்கம்போல் பெண்கள் சிலர் வகுப்பறையினுள்ளேயே தங்கிவிட ஏனையோர் வகுப்பறைக்கு வெளியே வந்துவிட்டார்கள்.அடுத்த கிளாஸ் குக்கர் சேரின்ர கெமிஸ்ரி அது ஸ்ரார்ற் ஆக 9 மணி ஆகும்.அதற்கிடையில் வீடு செல்ல ஆசைப்பட்டால் வீடு சென்று சாப்பிட்டுவிட்டு கோப்பை கழுவி அப்படியே மீண்டும் சுயன்ஸ்கோலுக்குவரவும் நேரம் சரியாக இருக்கும் சோ வீடு திரும்பல் என்பது பயனற்ற அலுப்புத்தட்டும் வேலைதான்.பயணக்களைப்புத்தான் மிச்சம்.எனவே காளிகோவிலடியில் 9 மணிவரை சென்று சகபாடிகளுடன் மாணவரோடு மாணவர்களாக நிற்கலாம்.அல்லது பெருமாள் கோவிலடிக்கு வேண்டுமானாலும் செல்லமுடியும்.வகுப்பறைக்கு வெளியே வந்ததும் பசியினால் ஏற்பட்ட வயிறுபுகைச்சல்காரணமாகஅருகில் உள்ள கடைக்கு சென்று றோல்,டீ குடித்துவிட்டு அப்படியே பெருமாள் கோவிலடிக்கு சென்று தண்ணீர்குடிப்பதுதான் அப்போதைய நிகழ்ச்சி நிரல்.பெருமாள்கோவில் தண்ணீரிற்கு அங்கே தனி மரியாதை இல்லாமல் இல்லை.நல்ல தண்ணீர் என்ற காரணத்திற்காக கோவிலை சுற்றியுள்ள பெரும்பாலான அயலவர்களுக்கு பெருமாள்கோவில் கிணறுதான் அட்சயபாத்திரமாக மாறியிருந்தது.பெருமாள் கோவிலின் முன்பகுதிக்கு இப்படி ஒரு சிறப்பென்றால் பெருமாள் கோவிலின் பின்பகுதிக்கு வேறொரு சிறப்பும் இருந்தது.பெருமாள் கோவிலின் பின்பகுதியில் பாவிக்கப்படாத கேணி/குளம் உள்ளது.அப்பகுதி சற்று பற்றையாக இருப்பதால் மடைதிறந்து பலரது நதிகள் அங்கே ஓடும்.இப்பொழுது அது தடைசெய்யப்பட்டுள்ளதாக கேள்வி.


பன்சுவாலிட்டி என்றால் அது குக்கரைக்கேட்டுத்தான்.வகுப்பு ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பே வந்துவிடுவார் வகுப்பு ஒரு மணித்தியாலங்கள்தான் ஆனால்குக்கர் ஒன்றரை மணித்தியாலங்கள் வகுப்பெடுப்பார்.கற்பிப்பதில் அலாதிப்பிரியம் குக்கருக்கு.கெமிஸ்ரி திறமை அவரிடம் பொங்கிவழிகின்றது என்பதற்கு முதலாவது சாட்சி அவரது பெயருக்கு பின்னால் வரும் பட்டங்கள்தான்.பெயரை கொப்பிபேஸ்ட் பண்ணியதுபோல் பட்டங்களும் கூடவே நீண்டுகொண்டிருக்கின்றன.அருள் கற்கும் பாடசாலையில்தான் குக்கரும் கற்பிக்கின்றார்.பாடசாலையில் இருக்கும் ஏனைய சகலரும் இடைவேளையின்போது வகுப்பிற்குவெளியே வந்துவிடுவார்கள்.ஆனால் அருள் அவதானித்த பல  நாட்களில் குக்கர் தனது ரூமிற்குள் இருந்துகொண்டு ஆங்கிலப்புத்தகங்களைவைத்து நோண்டிக்கொண்டிருப்பார்.மாற்றீடு என்ற பெயரில் ஒரு கேள்வியை கொடுப்பார்.அதற்கு விடைகாணல் என்பது பிம்மனும் விஸ்னுவும் அடி முடி தேடியகதைதான் என்னைப்போன்ற சராசரி மாணவர்களுக்கு.குக்கரை சுயன்ஸ்கோலில் தெரிவு செய்ய காரணம் அவர் பாடசாலையிலும் கற்பிப்பதால் தனியார் வகுப்பில் கற்காவிடில் ஏதாவது விதத்தில் தொந்தரவு இருக்கும் என்பதுதான்.ஆனால் குக்கர் அப்பாவி ஜீவன் எவனோகட்டிய புரளி என்றுபின்னர் தெரிந்தது.குக்கரிடம் கற்பித்தல் திறமைகளைவிட வேறொரு திறமை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.அவர் கற்பிக்கும்போது இடையிடையே டபிள் மீனிங்கில் கற்பிப்பார்.அல்லது அருளிற்குமட்டும்தான் அப்படி தோன்றுகின்றதா என்று எண்ணினால் இல்லை வகுப்புமுழுவதுமே சிரிக்கின்றதே சோ சகலருக்கும் அப்படியேதான் விளங்குகின்றது.ஒரு சிறிய 18+ ஜோக்.
நியமித்தல்(Titration) என்ற பரிசோதனை இருக்கின்றது.பேஸிக் கெமிஸ்ரியில் இதைகற்பிப்பார்கள்.அந்த பரிசோதனையை குக்கர் படிப்பித்துக்கொண்டிருந்தார். கீழே நியமிப்புக்குடுவை இருக்கும் மேலே முள்ளிப்புனல் என்ற ஒரு குழாய்(burette) இருக்கும்.அந்த குழாயின் கீழ் ஒரு முகவையை(கண்ணாடிகிளாஸ்)வைத்து பரிசோதனை செய்யவேண்டும்.அப்போது குழாயில் இருந்து அசிட்டோ,பேஸோ உள்ளே கிளாஸினுள் விழுந்ததும்.கிளாஸை/முகவையை ஆட்டிக்கலக்கவேண்டும்.

குக்கர் மேலே உள்ளது போல் படத்தைவரைந்தார்.வரைந்துவிட்டு கூறினார். வழக்கமா ஒருவர் திறந்துவிடுவார் இன்னொருவர் ஆட்டிக்கொண்டிருப்பார்.அப்படி செய்யக்கூடாது.ஒருதரே திறந்துவிட்டு அவரே ஆட்டவேண்டும்பிள்ளையள்.(குறிப்பு-அவர் முகவையையும் முள்ளிப்புனலையும்தான் கூறுகின்றார்)
இதைக்கூறியதும் வகுப்புல் எந்த ரியாக்ஸனும் இல்லை.அருளிற்கு சிரிப்பு பீறிட்டாலும் அடக்கிக்கொண்டுவிட்டான்.ஆனால் மக்கர் இதைக்கூறி 4 செக்கண்ட்கள் கடந்ததும் ஒரே ஒரு பெண்மட்டும் சிரித்துவிட்டாள் வகுப்பு கொல் என்று சிரித்துவிட்டது.அவள் நண்பிகளுக்கிடையில் மறைந்துவிட்டாள் என்பதுவேறுகதை.ஆனால் வகுப்பு சிரிப்பை நிறித்த சற்று நேரமாகிவிட்டது.இப்பொழுது இதை நினைத்தால்"வீ ஆர் அடல்ற் மிஸ்ரர் மஹாரார்" என்று தோன்றுகின்றது.ஆனால் அப்போது இது சிரிப்புத்தான்.
குக்கர் சேரின் மானரிசம் சற்றுவித்தியாசம் ஆள் இலேசில் கோபப்பட மாட்டார் ஆனால் கோபப்பட்டால் ஏதோ ஒருமாணவன் இன்னொருமாணவனுக்கு அடிப்பதைப்போல்தான் அடிவிழும்.அதனால் மக்கர் மீது பெரும்பாலான மாணவர்களுக்கு ஒறிஜினல் "பய" பக்தி இருந்தது.ஆனால் மாணவர்களுக்கு அவரை பிடிக்ககாரணங்களுள் ஒன்று அந்த நகைச்சுவை உணர்வு.

ஒருமுறை குக்கர் சேர் வகுப்பில் இருந்து மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்பார்..ஆ அவர் இப்ப என்ன செய்யிறார்? இல்ல அவர் இப்ப அந்தப்பொம்பிளைக்கு பின்னால திரியிறதா மற்ற வகுப்பு பொடியள் சொன்னாங்க"திருடன் அகப்பட்டவுடன் கையை பிசைவது மாதிரி சோக்கை(வெண்கட்டி) கையில் பிசைந்துகொண்டு அருகே வந்து இப்படி அப்பாவித்தனமாககேட்பார்.அருளின் நண்பன் குக்கரை இமிட்டேட் செய்ய குக்கரை மாதிரியே கையைப்பிசைந்துகொண்டு குக்கரிடம் கதைத்துக்கொண்டிருந்தான் குக்கர் கோவப்படவில்லை கதையோடு கதையாக அவனிடம் கேட்டார்" நீங்கதானே நல்லூர் திருவிழாவில தேங்காய் களவெடுத்தனீங்கள்?" கொல் என்ற வகுப்பின் சிரிப்பில் அந்த நண்பன் பேசாமல் திரும்பிவிட்டான்.

மாணவர்களுக்கு கட்டளையிடவேண்டிய நேரத்தில் இதை செய்யென்றுகூட கூறமாட்டார் அவரது ஸ்ரைல் வித்தியாசம்..இதை செய்வீங்கள் என்ன..என்று கூறுவார்.ஒரு முறை பாடசாலையில் 7 ஆம் பாடம் லாஸ்றியர் ஆதலால் வீடு சென்றுவிடவேண்டும் என்ற நிலையில் அனைவரும் இருந்தோம் அந்த வருடம் பைனல் ரெஸ்ற் ஸ்ரடி லீவ் என்ற பெயரில் பாடசாலையை கட்பண்ணிவிட்டு சயன்ஸ்கோலுக்குத்தான் செல்வது வழமை.அல்லது வீட்டிற்கு சென்று படிப்பதுதான் வழக்கம்.பைனல் நெருங்குவதால் வகுப்பிற்கு 10 மாணவர்கள் வந்தாலே ஆச்சரியம்.ஏனென்றால் அவனவன் சொல்லாமல் கொள்ளாமல் லீவ் என்று வீட்டில் நின்றுவிடுவான்.ஆனால் வரலாற்று அதிசயம் ஒன்று நடந்தது வகுப்பின் அனைத்து மாணவர்களும் அன்று திடீர் என்று பாடசாலை வர ஆரம்பித்துவிட்டார்கள்.வாசலில் நின்றுகொண்டு அட நீயும் வந்திட்டியே அய்யோ..என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதாகிவிட்டது.எங்கே யாரவது ஆசிரியர் உள்ளே  நுழைந்துவகுப்பெடுத்துவிடுவாரோ என்ற மரணபயம்தான் காரணம் வீட்டில் நின்று படிக்க  போரடித்தால் பாடசாலைக்கு விஸிட்டிங்க் லெக்ஸரர் மாதிரி வருவதுதான் பைனல் நெருங்கும்போது மாணவர்கள் செய்யும் வழமையான காரியம்.சோ அனைவரும் வந்துவிட்டார்கள்..என்ன கொடுமை என்று எல்லோரும் தலையில் கைவைத்துக்கொண்டோம்..இடைவேளையின்போது சிலர் பாடசாலைக்கு வெளியே பாய்ந்துவிட்டார்கள்.ஏனையோர் வகுப்பிலேயே இருந்தோம்..7ஆம் பாடம் வரையாரும் வராததால் சரி எல்லோருமாக வெளியேறுவோம் என்று புறப்பட்டோம்.அந்த நேரம்பார்த்து பிறின்சிப்பல் குக்கரிடம் சென்று எமது வகுப்பிற்கு பாடம் எடுக்கும்படி கூறிவிட்டார்.குக்கர்தான் நீதி நேர்மை தவறாதவர் ஆயிற்றே நாங்கள்  புறப்படவும்,குக்கர் வாசலுக்குவரவும் நேரம் சரியாக இருந்தது.குக்கர் சிம்பிளாக்க சொன்னார்.எங்க எல்லாரும் தண்ணிகுடிக்க போறீங்களோ?சரி போ குடிச்சிட்டு வருவீங்கள் என்ன? என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.ஆமாய்யா பாக்கோட நான்கள் அவளவுபேரும் அழகர் ஆத்தில இறங்கிறமாதிரி வெளிக்கிட்டு தண்ணிகுடிக்கத்தான் போறமாக்கும் என்று  நொந்துகொண்டு உள்ளே வந்து படித்தோம் வேறு என்ன செய்ய?

தொடரும்..

################################################################################
கங்ணம் ஸ்ரைல் யூடியூப்பில் பில்லியன் வியூவேர்ஸை தாண்டியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
உலக அழிவையும் கங்ணம் ஸ்ரைலையும் கூட தொடர்புபடுத்தினார்கள் நம்மவர்கள்.

உலக அழிவுக்கு காரணம் Psy Gangnam Style கூறியவர் நொஸ்ரடாமஸ்


சரிவிடுங்கள் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தவிடயம்தான்...ஆனால் ஒருவிடயம் தெரியுமா கங்ணம் ஸ்ரைல் என்ற அந்தஸ்ரைலே தமிழர்களுக்குத்தான்  சொந்தமானது அந்த ஸ்ரைலை கொப்பியடித்துத்தான் ஸைக்கோ பிரபலமாகியுள்ளார்...
எங்கே எமது பெருமைகள்...
லைக் இஃப் யூ பிரௌட்டுபி ஏ தமிழன்...   =:டி


போட்டோ தாங்க்ஸ் ரு-Tamil Cinema 360º - Official
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}