ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-04

எப்போதுமே ஒரே சுழற்சியில் பயிற்சிகள்,விரிவுரைகள்,சாப்பாடு, நித்திரை என்று இருக்கவேண்டாம் என்பதற்காக எம்மை சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்றார்கள்.ஒட்டுமொத்தமாக அனைத்துமாணவர்களையும் அழைத்துச்செல்லவில்லை குரூப் குரூப்பாக பிரித்திருந்தார்கள் எமது குரூப் எப் குரூப் 78 மாணவர்கள் இருந்தார்கள்.ஆண்கள் பெண்கள் என அனைவரும் பஸ்ஸில் ஏறுவதற்காகக்காத்திருந்தோம் அடடே கேர்ல்ஸையும் போய்ஸையும் ஒரே பஸ்ஸிலா கொண்டுசெல்லப்போகின்றார்கள் ஜாலி என்று  நாம் சந்தோஸப்பட ஜோலியை முடித்துவிட்டார்கள் அங்கேயும் தனித்தனிபஸ்தான்...அட  ராவணா....சரி என்று அனைவரும் சுற்றுலாவுக்குக்கிளம்பினோம்.3 பஸ்கள் வந்திருந்தன ஏறி புறப்பட்டோம்.


ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-03(ராக்கிங்க்)
பொதுவாகவே சிங்களவர்களிடம் ஒரு விடயத்தை அவதானித்திருக்கின்றேன்.யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடிவரும்போதும்  நைனை தீவுக்கு வரும்போதும் அவதானித்தவிடயம் இது.சுற்றுலா என கிளம்பிவிட்டால் அவர்கள் பயணிக்கும் வான் அல்லது பஸ்ஸிற்குள் அனைவரும் ஆடிப்பாடி மிகவும் மகிழ்ச்சியாகவே செல்வார்கள் அதே போலத்தான் பஸ் புறப்பட்டதுமே சிங்களமாணவர்கள் அனைவரும் சேர்ந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள் பஸ்ஸிற்குள் இருந்த தண்ணிப்போத்தல்களைக்கொண்டு பாட்டிற்கேற்றவாறு தாளம்வேறு போட்டார்கள்.இதை அவர்கள் பைலா என்று அழைக்கின்றார்கள்.எவ்வாறு இது சாத்தியமாகின்றது திடீர் என்று ஒருவன் பாட ஆரம்பிக்க அனைவரும் சேர்ந்து பாடுகின்றார்கள் தாளம்போடுகின்றார்கள் என்று கேட்டதற்கு.சிறியவயதில் இருந்து தங்கள் பாடசாலைகளில் இது ஒரு அக்ரிவிட்டியாம் எனவே இந்த பைலா மேட்டர் அவர்களுக்கு சாதாரணவிடயம்.சரி அவர்கள் பாட ஆரம்பித்துவிட்டார்கள் நாமும் பாடுவோம் என்றுவிட்டு பாட ஆரம்பித்தோம் என்ன கறுமமோ அன்றைக்குப்பார்த்து 4 வரிக்குமேல் பாடல்வரிகள் யாருக்குமே நினைவுக்கு வராமல் போயிற்று சென்ற தமிழ்மாணவர்களில் நான் வந்த பஸ்ஸில் நடந்த சம்பவம்தான் இது.அதோடு இன்னொன்றையும் அவதானிக்கமுடிந்தது பெரும்பாலான சிங்களப்பாடலகளுக்கு ஒரே மெட்டில்தான் பிளாஸ்டிக்போத்தல்களால் தாளம்போட்டுக்கொண்டிருந்தார்கள்.ஆனால் தமிழ்ப்பாடல்களுக்கு அப்படி செய்யமுயற்சித்தால் சற்றுக்கடினம் இருந்தாலும் நாமும் பாடினோம் ஆடினோம்.சுற்றிவர மலைகள்,தோட்டங்கள்,அருவிகள்,வயல்கள் இவற்றிற்கூடாக நமது பஸ் பிரயாணம் செய்துகொண்டிருந்தது.இதுவரை காம்பில் அடக்க ஒடுக்கமாக இருந்து இப்பொழுதுதான் விடுதலை கிடைத்ததைப்போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும் கத்திவிசிலடித்து பாடி ஆடிக்கொண்டிருந்தோம். எமக்கு பொறுப்பாக இருந்தவர்கள் 2 தடவைகள் கத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள் ஆனால் பின்புவிட்டுவிட்டார்கள்.

முதலில் நாம் சென்றடைந்த இடம் சொரபொரவாவி


இவை எல்லாவற்றையும் தனி ஒருவனே உருவாக்கினான்

இதுதான் மனைவியின் கட்டைவிரல்
அங்கே சென்றதும் ஒரு குழுவாக அனைவரையும் இருத்திவிட்டு சொரபொரவாவி உருவான வரலாற்றைக்கூறஆரம்பித்தார்கள்.
bulatha giant என்ற ஒருவன் இருந்தான் அவன் துட்டகைமுனு மன்னனின் விசுவாசமான சேவகன்.மன்னனுக்கு வெற்றிலைகளைக்கொடுப்பதுதான் அவனது சேவை.அவனது குடியிருப்பிற்கருகில் ஒரு குளம் இருந்தது எனவே வெற்றிலைகளுக்கு நீர் பாச்சுவதற்காக அணைகட்டி வாய்க்கால் ஒன்றை அமைக்கலாம் என்று முடிவெடுத்தான்.தனி ஆளாக ஒரே ஒரு மண்வெட்டியின் உதவியுடன் சொரபொரவை செதுக்க ஆரம்பித்தான்.படிகள்,அணை போன்றவற்றை உருவாக்கினான் அதுவும் தனிமனிதனாக.அவனது மனைவியும் ஒரு ஜயன்ற் அவள் கணவனுக்கு உணவுகொண்டுவருவாள்.கணவன் ஒரு வேளைக்கு 10 கிலோ அரிசி உண்பானாம்.அவள் வரும் வழியில் பெரிய பெரிய பாறைகள் குறுக்கிட்டன.அவள் தனியாக அந்தப்பாறைகளை அகற்றி பாதைகளை உருவாக்கினாள்.அதுதான் நாம் அந்த இடத்துக்கு வந்த வீதி என்று கூறினார்கள்.அந்தக்கணவன் தன் மனைவியைகௌரவிக்கும் முகமாக மனைவியின் கட்டைவிரல் ஸைசில் கால்வாயை அமைத்தான்.தவறுதலாக அவ்விடத்திற்கு வந்த துட்டகைமுனுமன்னன் சொரபொரவைப்பார்த்து அசந்துவிட்டான்.உடனேbulatha giantற்கு அவூரை பரிசாகக்கொடுத்து கௌரவித்தான்.ஏது ஒரே ஒருதன் இந்த வாவியைக்கட்டினானா?ஒரு வேளைக்கு 10 கிலோ அரிசியா இதெல்லாவற்றையும் நம்ப சொல்கின்றார்களா என்றால்...அட செங்கட்டியை பொன்கட்டியாக்கியதை நம்பியவர்கள் நான்கள் இத நம்ப மாட்டமா(பிரேம்ஜி ஸ்ரைல்)


கதைமுடிந்ததும்  சில மாணவர்கள் பாடினார்கள் பின்னர் எமது லெப்டினல்களும் பாடினார்கள் பாட்டுக்கள் முடிந்ததும் அனைவரும் கலைந்துசென்று இடங்களைபார்வையிட்டோம்.அப்பொழுதுதான் அவதானித்தேன் அனைத்து பெண்களும்  போனில் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.காரணம் நமது காம்பில் கவரேஜ் இல்லை ஆக டயலக்கிற்கு மட்டும்தான் கவரேஜ் இருந்தது அதுவும் சில நேரங்களில்தான்.சோ அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்திருக்கின்றார்கள்.குழுக்கள் குழுக்களாக போட்டோக்களை சுட்டுத்தள்ளினோம்.
இந்தப்போத்தில எங்கேயோ பாத்திருக்கன்சொரபொரவில் அன்றைய மாலைப்பொழுது மகிழ்ச்சியாகக்கழிந்தது.அப்படியே வாவியின் அருகில் உள்ள கடையில் ஒரு பிளேன் டீ(சாயா) அதோடு ஒரு கருப்பட்டி குடித்தோம்.சீனி எல்லாம் இல்லை.கருப்பட்டியுடன்தான் டீயைகுடிக்கத்தந்தார்கள் அதுவும் நன்றாகத்தான் இருந்தது.
எமக்காக காத்திருந்த பஸ்வண்டிகளில் ஏறிப்புறப்பட்டோம்.மீண்டும் பாட்டுக்கள் ஆரம்பமாயின.பாடுவதுடன் சேர்ந்து ஆடியதால் குளித்ததுபோன்று வேர்த்துவிட்டது சரி அப்படியே போய்க்குளித்துவிட்டு படுத்துக்கொண்டால் அதுதான் சொர்க்கம் என்ற நினைப்பில் இருக்க பஸ் மகியங்கணைவிகாரைக்கு சென்றது.

பசங்க போஸ்கொடுக்க சொன்னாங்க( நோ நோ அழக்கூடாது)

மகியங்கணை விகாரை...
அனைவரும் பஸ்ஸிற்குள் பாதணிகளை கழற்றிவிட்டு விகாரைக்குள் சென்றார்கள்.சரி நாமும் போய் பார்ப்போம் என்று புறப்பட்டோம் இந்துவும் ஒன்றுதான் பௌத்தமும் ஒன்றுதான் நண்பர்களுடன் புறப்பட்டாயிற்று.அப்போதுதான் பஸ்ஸிற்கு வெளியில் அவதானித்தேன் வீதியின் அருகில் உள்ள புற்தரையில் வரிசையாக நின்று தொழுகைசெய்ய ஆரம்பித்திருந்தார்கள் முஸ்லீம் சகோக்கள்.அவர்களுடைய  தொழுகை நேரம் அது. நாங்கள் உள்ளே சென்றோம்.விகாரைக்குள்ளே புத்தரின் பாதம் என்று பெரிய ஒரு பாதவடிவிலான உலோகப்பாதம் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் கல்வெட்டுக்கள்  இருந்தன.விகாரையினுள்ளேயே காளிக்கும் கோவில் இருந்தது உள்ளே விஸ்னு முருகன் படங்கள் இருந்தன.விகாரையின் உட்புற அலங்காரங்களிற்கும் எமது இந்துக்கோவில் உட்புற அலங்காரங்களிற்குமிடையில் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள்தான் இருக்கமுடியும் என்பதை அவதானிக்கமுடிந்தது.பூசாரி கதிர்காமத்தில் பூசை செய்வதுபோல் வாயை வெள்ளைத்துணியால் கட்டி சமஸ்கிருத மந்திரம் சொல்லாமல் மௌனமாக பூசை நடந்த்தினார்.புத்தரின் வேறுவேறு நிலையிலான இருக்கைகளை சிலையாக வடித்திருந்தார்கள். வரும்போது பஸ்ஸிற்குள் ஆடிப்பாடிக்கொண்டுவந்தோம் சிங்கள தமிழ்ப்பாட்டுப்போட்டியே நடந்தது ஆனால் எமது காம்பிற்குத்திரும்பும்போது குரலே வரவில்லை தொண்டை அடைத்தேவிட்டது கத்திய கத்தல் அப்படி  நன்றாக களைத்துவிட்டிருந்தோம். இரவு 8.30 க்குத்தான் வந்து சேர முடிந்தது.வழக்கமாக அந்த நேரத்தில் இரவு உணவை உண்டுவிட்டு எமது ரூமிற்குத்திரும்பியிருந்திருப்போம் ஆனால் சுற்றுலா காரணமாக நேரம் சென்றுவிட்டிருந்தது.மிகுதியாக இருந்த களைப்பு யாரோ கட்டையால் அடித்துப்போட்டதுபோன்றுதான் இருந்தது எமது ரூமிற்குவந்து குளித்துவிட்டு  கட்டிலில் படுத்து கண்ணை மூடியதுமே  ஆழ்ந்த நித்திரை


தொடரும்....
அடுத்த பதிவில் மலை ஏற்றம்...  பாட்டுப்பாடுவதற்கு  எமக்குதடைவிதிக்கப்பட்டது... கல்சரலில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}