ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-05

சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்ததும் அடுத்தடுத்த நாட்களில் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின பெண்களுக்கிடையில் குரூப்வைஸாக நெட்போல்,ஆண்களுக்கிடையில் குரூப்வைஸாக வொலிபோல்  மச்கள் நடந்தன இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வழமையாக ஒரு ஸ்கூலில் ஒரு இவன்ற் நடைபெறுகிறது என்றால் முதலே ரியசல்செய்வார்கள் மச் ஏதாவது நடைபெறுகின்றது என்றால் குறைந்தது 10 நாள் பயிற்சி இருக்கும் சிலரை வலிந்து அழைத்துவரவேண்டியிருக்கும் சிலர் போட்டி நாளன்றுவரமாட்டார்கள் போட்டியில் பங்குபற்றுவதையோ நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதையோ ஊக்குவிக்கும்முகமாக 1 மணித்தியாக சொற்பொழிவெல்லாம் ஆற்றவேண்டியிருக்கும் ஆனால் காம்பில் நான் வித்தியாசமான் ஒரு வைபிரேசனை அவதானித்தேன் செய்யவேண்டிய ஒரு நிகழ்ச்சியை காலையில் சொல்வார்கள் மாலையில் அந்த நிகழ்ச்சி தயாராகிவிடும் மாணவர்கள் தயாராகிவிடுகின்றார்கள்...கூட்டத்தில் இருந்து நான் வருகின்றேன் நான் வருகின்றேன் என்று மாணவர்கள் எழுந்துசென்று நிகழ்ச்சியில் பங்குபற்றினார்கள்,விளையாட்டுக்களிலும் பங்குபற்றினார்கள் இது ஒரு ஆரோக்கியமான விடயம்தான் குரூப் அக்டிவிட்டியின் வெற்றி இது தலைமைத்துவப்பயிற்சியின் வெற்றிகளில் இதுவும் ஒன்று..இவற்றைவளர்ப்பதும் பயிற்சியின் ஒரு நோக்கம்.ஒரே கிரவுண்டிலேயே நெட்போல்,வொலிபோல் மச்கள் நடந்துமுடிந்தன.

முன் அரைக்கிரவுண்டில் போய்ஸ் வொலிபோல்,பிற்பகுதியில் கேர்ல்ஸ் நெட்போல்

அதோடு வித்தியாசமான சில குழுவிளையாட்டுக்களையும் அறிமுகப்படுத்தினார்கள் சற்று சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் நன்றாக இருந்தது.ஒரு குழு லைனில் நிற்கவேண்டும் முன்னால் இருப்பவரிடம் ஒரு வொலிபோலைக்கொடுப்பார்கள் அவர் தன்கால்களுக்கூடாக அவருக்குப்பின்னால் இருப்பவரிடம் கொடுப்பார் அவர் தன் தலைக்குமேலாக தனக்குப்பின்னால் இருப்பவரிடம் கொடுப்பார் இப்படி மாறிமாறி 30 பேர் இருந்தால் 30 பேருக்கூடாகவும் இறுதி மாணவருக்கு செல்லும் இறுதிமானவரிடம் போல்வந்ததும் அவர் போலுடன் ஓடிவந்து முன்னால் நிற்பார் மீண்டும் முதலில் நின்ற மாணவன் வரிசையின் முன்னால்வரும்வரை இது தொடரும் முதன் முதலாக இந்த ஒழுங்கை முடித்த அணி நிலத்தில் இருந்துவிடவேண்டும் அந்த அணியேவெற்றியாளர். ஒவ்வொருகுரூப்பிற்கும் அதில் பங்குபற்றாத ஏனையோர் உற்சாகம் கொடுப்பதற்காக கத்திக்கொண்டிருக்க விறுவிறுப்பாக அந்த விளையாட்டு முடிந்தது.

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-04


காலை நேரத்தில் வழக்கமாக மலைவீதிகளில் ஓடுதல் பயிற்சிகளை செய்தல் போன்றவை முடிந்ததும் வேறுசில விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தினார்கள்.2 குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள் ஒரு குழுவை வட்டமாக நிற்கவேண்டும்.ஏனைய குழு மாணவர்கள் அவ்வட்டத்திற்குள் இருக்கவேண்டும் வெளியே இருக்கும் மாணவர்களிடம் வொலிபோலைக்கொடுக்கப்படும் அதை உள்ளே இருக்கும் மாணவர்களுக்கு எறியவேண்டும் போல் உள்ளே இருப்பவர்கள் யாரின்மீதாவது பட்டால் ஆள் அவுட்.எறியப்பட்ட போல் வட்டமாக  நிற்கும் மாணவர்களிடையே பாஸ் செய்யப்பட்டு எதிர்பாராதவகையில் எறிவதிலேயே அக்குழுவின் வெற்றிஅடங்கியிருக்கின்றது.
எமக்கு லெக்ஸர் செய்யும்போது ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்த்த 2 மாணவர்களை அழைத்து முதுகோடு முதுகு ஒன்றாக இருக்குமாறுகூறுவார்கள் அவ்விருவரும் அப்படி நின்றவாறே ஒருவரை ஒருவர் இறுகப்பற்றியிருக்கசெய்வார்கள் அவர்களின் இருபுறமும் 2 தொப்பிகளை போட்டுவிட்டு சொல்வார்கள். நீங்கள் இருவரும் 2 கழுதைகள் உங்களுக்கு புல் தேவை எடுங்கள் பார்கக்லாம்.
நிகழ்வு இப்படித்தான் நடந்தது.


இத்தகைய விளையாட்டுக்களுடன் ஒரு நாள் சென்றுவிட அடுத்த நாள் ஹைக்கிங்க் என்று அழைத்துச்சென்றார்கள் அதை மலை என்று சொல்வதா குன்று என்று சொல்வதா என்று குழப்பம்தான் மேலே உள்ள போட்டோவின் பின்னணியில் தெரியும் அதில்தான் ஏறினோல் இதுவரை மலையேறியதில்லை பார்க்க சிறிய குன்றுமாதிரிவேறு இருந்து தொலைக்க ஜாலியாக ஏறலாம் என்று சென்றது தப்பாகிவிட்டது ஏறிமுடிப்பதற்குள் நாக்குத்தள்ளிவிட்டது.

மலையில் மானின் தலைச்சின்னத்தைவரைந்திருந்தார்கள் அது இதுதான் அந்தகாம்பின்படைப்பிரிவின் சின்னம் இது

எமது காம்பில் பல நாய்கள் இருந்தன அதில் ஒரு நாய் நாம் எங்குசென்றாலும் கூடவே அதுவும் வந்தது மலையேற்றத்திலும் கூடவே வந்தது.பாசக்கார பயபுள்ளஅந்த உச்சிவெயிலிற்குள்ளும் மலையேறி மேலே சென்றதும் அங்கும் எம்மை வட்டமாக இருத்திவிட்டு லெக்ஸர் செய்தார்கள் நல்லவேளை பின்னர் பாட்டுப்பாடினார்கள்,மாணவர்கள் சிலர் பாடினார்கள் கதைகள் சொல்லப்பட்டன.அங்கே இருந்து ரந்தெனிகல டாமை அவதானிக்கமுடிந்தது அப்போதுதான் எமது ஜென்ரல் ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்  உங்களை இங்கே அழைத்துவந்தது உங்கள் தாங்கும்திறனை விருத்திசெய்வதற்காக வேறு ஒரு காரணமும் இருக்கின்றது அதோ தெரிகிறதே அந்த டாம் ஒருவேளை அது உடைந்தால் நாம் அனைவரும் காம்பில் இருந்து இங்கேதான் ஒடிவரவேண்டும் இல்லையெனின் நீருடன் அடித்துசெல்லப்படுவம்..அடங்க்கொங்காங்கோ..
அந்த நீர் நிலையில் இருந்துதான்  நாம் இருக்கும் காம்பிற்கு நீர் கொண்டுவரப்பட்டது அது குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல எனவே குடிப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட நீர் சிறு சிறு டாங்கிகளில் எமது ரூமிற்கருகில் வைக்கப்பட்டிருந்தது.அடிக்கடி அது நிரப்பப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}