ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-06


(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க இப்பதிவுடன் இதை நிறுத்துவதற்காகத்தான் இந்த முடிவை எடுக்கவேண்டியதாகிவிட்டது)ரந்தெனிகல காம்புக்குவந்து 10 நாட்கள் ஆகியிருக்கும்  அணி நடைப்பயிற்சிகள் ஆரம்பமாயின கொமாண்ட்கள் சிங்களத்தில்தான் வழங்கப்பட்டன.இதனால் விளங்கிக்கொள்ளல் எங்களுக்கு கடினமாக இருந்தது.2,3 மணித்தியாலங்கள் வேகாத வெயிலுக்குள் வைத்து வாட்டி எடுத்தார்கள்.அணி நடைப்பயிற்சிக்கும் கொமாண்டர்கள் கோப்பிரல்களைவிட்டிருந்தார்கள்.அதில் ஒருவர் இருந்தார் உடம்பு செம்மையாக இறுகிப்போய் இரும்புபோல்தான் ஆளிந்தோற்றம் விசாரித்ததில் இறுதி யுத்தத்தில் பங்குபற்றியவராம்.அந்தக்கோப்பிரல்மட்டும்தான் ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமாகத்தெரிந்தார்.வெயிலுக்குள் நின்றுகொண்டு எவளவு பயிற்சிகொடுத்தும் அவர் களைக்கவே இல்லை அதோடு அவரிடம் பயிற்சிக்கு அகப்பட்டால்  நிச்சயம் நாக்கு வெளியேதள்ளிவிடும்.லா வீ லா வீ என்று கத்தும்போது எல்லோரும் ஒரே நேரத்தில் கால்களை எடுத்துவைக்கவேண்டும் அரேன்ஸன் என்று கத்தும்போது காலால் தரைக்கு உதைக்கும்  உதையில் ஒட்டியிருந்த அவரின் முகத்தில் இருந்த தசைகள் மேலே ஏறி கீழே விழுந்தன இதேபோல் அனைவருக்கும் தசைகள் ஏறியிறங்கவேண்டும் எனக்கூறினார்.கூறியதுடன் மட்டுமில்லாது பயிற்சிகள் வழங்கப்பட்டன ஒருவருக்குப்பிழைத்தால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பயிற்சி வடிவேல் பாணியில்"என்னா மறுபடியும் முதல்ல இருந்தா????" என்ன செய்ய.பெண்கள் சிலர் முடியவில்லை என்று சொல்லிவிட்டு போய் பவிலியனில் இருந்து பார்வையாளர்களாக மாறிவிட்டார்கள்.மணித்தியாலக்கணக்கான தொடர்பயிற்சிகளினால் சில பெண்கள் மயங்கிவிழுந்தார்கள் பின்னர் நண்பிகளினால் அழைத்துசெல்லப்பட்டார்கள்/தூக்கி செல்லப்பட்டார்கள்.கால் ஷூ பிய்ந்துபோகுமளவிற்குப்பயிற்சி ஏதோ போர்ன்ஸ்,ஜேம்ஸ் போன்ட் ,நேவி சீல் படங்களைப்பார்த்துவிட்டு ஆர்மியில்,சீல் படையில் சேரவேண்டும் என்று ஆசைப்படும்போது நன்றாகத்தான் இருந்தது ஆனால் சாதாரண பயிற்சி செய்யும்போதுதான்  நேவி சீலா வேணாம் சாமி அவிங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.அதுவும் அவர்களுக்கான பயிற்சிகள் சாதாரணமனிதர்களினால் கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவிற்குக்கடினமானவை.கை கால்களைக்கட்டிவிட்டு காலில் கல்லைக்கட்டி  நீச்சல் தடாகத்தில் போட்டுவிடுவார்கள் அந்தக்கல்லைத்தூக்கிக்கொண்டு நீந்தி வெளியேறவேண்டும்.முடியாது போனால் நிரந்தரமாக வெளியே செல்லவேண்டியதுதான். சாப்பாடில்லாமல் குறிப்பிட்ட காலம் வரை தாக்குப்பிடித்தல்,இயற்கை கால நிலை மாற்றங்களை சகித்துக்கொள்ளல்,  நகங்கள்,உடலை ஆயுதமாகப்பயன்படுத்தல்,குளிர்ப்பிரதேசங்களில் ஒருவரது உடல் வெப்பத்தை இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டு உயிர்தப்புதல் என பல பயிற்சிகள்.இவற்றையெல்லாம் அறியும்போது,சாதாரண பயிற்சியில் பட்ட துன்பத்தையும் நினைக்கும்போது மனம் எடுத்த முடிவு விடு கழுதை பேசாமல்  நேவிசீல் பேஸ்புக் பான் பேஜை லைக்செய்துவிடுவோம் என்பதுதான்.
படுக்கைகள்

எமது தங்குமிடம்

மெஸ் சாப்பாடு

உள்ளே எம்பிரான் புத்தர்

இந்தப்பயிற்சிகள் ஒருபுறம் இருக்க கல்சரல் புரோக்கிராம்கள் ஆரம்பமாயின.திடீர் என்றுகூறினார்கள் ஒவ்வொருகுழுவும் ஒவ்வொரு புரோக்கிராம் செய்யவேண்டும் என்று.ஆச்சரியம் என்னவெனில் காலை இதைச்சொன்னதும் மாலையில் மாணவர்கள் தயாராகிவிட்டார்கள்.கல்சரல் புரோக்கிராம்கள் இரவு 8 மணிபோல்தான் நடைபெறும்.ஷூ பொலீஸ்,பெண்களது உடைகள்,காட்போட்கள் போன்ற அங்கே வரும் போது கொண்டுவந்த பொருட்களைவைத்தே புரோக்கிராம்களை செய்து அசத்தினார்கள்.சிலர் இங்கே இப்படி கல்சரல்கள் நடக்குமென்று தெரிந்து வீட்டில் இருந்து வரும்போதே உடைகள் பெயிண்ட்கள் மேக்கப் சாதனங்களையும் கொண்டுவந்திருந்தார்கள்.கல்சரல்கள் எல்லாம் தரமாகத்தான் நடந்தன் நாடகங்கள்,தனி,குழுப்பாடல்கள் போன்றவை நடைபெற்றன.கல்சரலுக்கு வரும்போது ஆண்கள் சிமார்ட் கஸுவல் உடையில் பெண்கள் சாறியில் வரவேண்டும் எனக்கூறியிருந்தார்கள்.இவளவு காலமும் வெள்ளை ரீசேர்ட்,ரக் சூட்டுடன் பார்த்த எங்களுக்கு அன்றைக்குத்தான் கண்கள்குளிர்ந்தன.வாவ் வாவ் வாவ் நன்றாகத்தான் இருந்தது...புரோக்கிராம்கள்.ஏதோ பஸன்சோவுக்கு சென்றபீலிங்கு.
முதலுதவி பற்றிய விரிவுரையின்போது

மொத்தமாக 4,5 கல்சரல்கள் நடைபெற்றிருக்கும்,ரூல்ஸ் இதுதான் மேடையில் பெர்போர்ம் பண்ணுவதற்கு ஒவ்வொரு குழுவிற்கும் 10  நிமிடங்கள் தரப்பட்டிருக்கும்.ஏ,பி என்று எஹ் வரை குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன எமது குழுவில் 78 மாணவர்கள் சிங்களம்,தமிழ் என்று சகலமாணவர்களையும் சேர்த்துத்தான் 78 மாணவர்கள் இருந்தார்கள்.ஆனால் எமது குழுவில் தொடர்ந்து புரோக்கிராம்களை செய்தவர்கள் சிங்களமாணவர்கள் மட்டும்தான் அதுவும் ஒரு 15 மாணவர்கள்தான் திரும்பத்திரும்ப செய்தார்கள்.உண்மையில் அவர்கள் 78 மாணவர்களையும் அழைத்து கலந்துரையாடி முடிவுகளை எடுத்திருக்கவேண்டும் ஆனால் தான்தோன்றித்தனமாக அவர்களே முடிவு செய்து அவர்களே நாடகத்தை நடத்தினார்கள்.ஏதோ தமிழ் என்பதால் எம்மைப்புறக்கணித்தார்கள் என்று அர்த்தமில்லை ஏனைய சிங்களமாணவர்களையும்தான் அவர்கள் புறக்கணித்தார்கள் எனவே இறுதிவரை எமது குழுவைச்சேர்ந்த 78 மாணவர்களும் ஒன்றுகூடவே இல்லை.ஆனால் ஒரு குழு தனது குழுவைச்சேர்ந்த சகல மாணவர்களையும் அழைத்து  அசத்தலாக நாடகங்களை நடத்திக்காட்டியது.அது தமிழ்மாணவர்கள்தான்.வேறு சில சிங்களக்குழுமாணவர்களும் அசத்தலாக செய்திருந்தார்கள். மாணவர்கள் ஒரு நாடகம் போட்டார்கள்  இப்போதைய காதல்பிரச்சனை போனில் ஒருபெண்ணை காதலிக்கின்றான் ஒருவன். நண்பர்கள் எவளவு கூறியும்  நண்பர்கள் சொல்லைக்கேட்கவும் இல்லை மதிக்கவுமில்லை பின்னர் அவளிடம் காதலை சொல்ல செல்ல அவள் அவன் கண்முன்னாலேயே இன்னொருவனுடன் சென்றுவிடுவாள் அழுதுபுரண்ட அவனை நட்பு வீடு சேர்க்கின்றது.மிகக்குறைந்த நேரத்தில் அசத்தலாக செய்துமுடித்திருந்தார்கள் அவர்கள்.அதோடு முஸ்லீம் மானவர்கள் நகைச்சுவையாக ஒரு நாடகம் செய்தார்கள்...குழுவாக நின்றுகொண்டு மந்தபோக்கில் பாட்டைப்பாடிக்கொண்டிருக்கு திடீர் என்று மேடையில் தோன்றிய இன்னொருமானவன் ஹிப் ஹொப் ஸ்ரைலில் யோ யோ யோ என்று கத்தி குமார் குமார் லைட் அடி என்ற பாட்டை ஹிஃபொப் பாணியில் பாடிவிட்டு சடுதியாக சென்றுவிட்டான் அரங்கம் அதிர்ந்தது.பின்னர்சிங்கள பெண்கள்  கண்டிக்கே உரித்தான டான்ஸ் ஆடினார்கள்,அதோடு ஆண்களும் சேர்ந்து ஆடினார்கள்.ஒருகுழுவில் தமிழ் சிங்களமாணவர்கள் ஒன்றாக சேர்ந்து குழுப்பாட்டொன்றைப்பாடினார்கள்.சிங்கள மாணவர்கள் முன்னே வந்து தமது பாட்டைக்குழுவாக பாடி செல்ல தமிழ்மாணவர்கள் முன்னே வந்து தமிழ்ப்பாட்டைபாடி சென்றார்கள் ஒரே மேடையில்.

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-04

சிங்களமாணவர்கள் ஒரு  நாடகமொன்றைப்போட்டார்கள்...என்னை யாழ்ப்பாணத்தந்தையாக நடிக்குமாறு கூறினார்கள் சரி கதையைக்கூறுங்கள் என்று கேட்டால் கூறினார்கள்...ஒரு ஆர்மி வீரன் ஒருவன் தீவிரவாதிகளால் போரில் கொல்லப்படுகின்றான்.அவனைத்தேடி அவனது அண்ணன் யுத்தகளத்திற்கு சென்று அவன் பிணத்தை எடுத்துவருகின்றான்.அவன் பிணத்தின் முன்னால் ஒரு தமிழ்க்குடும்பமும் அவனது சிங்களக்குடும்பமும் அழுகின்றது...அதில் யாழ்ப்பாணத்தந்தையாக நடிக்கப்போகும் எனது டயலக்"இதெல்லாம் ஏன் நடக்குதெண்டு எனக்கு விளங்கேல்ல"
நடித்திருந்தேன் என்றால் விளங்கியிருக்கும்...மறுத்துவிட்டபின்னர் எப்படியோ அவர்கள் அன் நாடகத்தை நிறுத்தியேவிட்டார்கள். தமிழ் மாணவன் ஒருவன் பரத நாட்டியம் ஒன்றை ஆடினான் அரங்கம் அதிர்ந்தது.அவனிடம் நான் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டியது தனிக்கதை.சிங்கள மாணவிகள் கண்டி டான்ஸ் ஆடுவதற்குப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாரக்ள் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அந்த மாணவன்வந்தான் நான் கூறினேன் நன்றாக ஆடுகிறார்கள் என்று அவன் கூறினான் கையையும் காலையும் ஆட்டினால் சரியா என்று?அட டான்ஸடாப்பா அது அவளவு சுலபம் இல்லையென்று கூறினேன்.ஓகோ என்றான்.பின்னர் கூறினேன்  நான் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கெல்லாம் சென்று பார்த்ததில்லை ஆனால் டான்ஸ் பிடிக்கும்.கமல் சலங்கை ஒலியில் வித்தியாசமாக  5 விதமாக ஆடுவாரே அத மாதி..... அவர் ஆடினதே முதலில் பிழை...என்ன?? ம்ம் அவர் புரொபஸனல் டான்ஸர் இல்லையெ அது பரதம் இல்லை...என்னடா ஏதோ  2 வருசம் படிச்சு அரங்கேற்றம் பண்ணினவன் மாதிரி சொல்லுறாய்...ம்ம் 4 வருசம் பரதம் படிச்சேன் அரங்கேற்றம் செய்ய 17 லட்சம் தேவை அதால அரங்கேற்றம் பண்ணேல்ல என் காதுக்குள் ங்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....ஒத்துக்கிறன் நீ அப்பாட்டக்கர் என்கிறத ஒத்துக்கிறன் என்று அவனிடம் சரண்டரானதுதான் வேறு என்ன செய்ய.அவன்தான் மேடையில் ஆடினான் டான்ஸ் அப்படி இருந்தது பக்கிரவுண்ட் மியூஸிக் போடுவதற்கு எந்த வசதியும் இல்லை எனவே போனில் பாட்டப்ப்போட்டுவிட்ட்டு மைக்கிற்கருகில் வைத்துவிட்டுத்தான் டான்ஸ் ஆடினான்.அவனுக்கு உடைகள் பார்சல் மூலம் காம்பிற்குவந்திருந்தன.காலில் கட்டிய சலங்கை அவன் டான்ஸிற்கு அவனுக்கே தாளம்போட்டது.அதுவரை மேடையில் பல புரோக்கிராம்கள் ந்டந்தன ஆனால் இதைப்போன்று எந்தப்புரோக்கிராமும் வரவேற்பைப்பெற்றதில்லை ஒட்டுமொத்த தமிழ்,சிங்கள,முஸ்லீம் மாணவர்களின் ஒட்டுமொத்த வரவேற்பு ஒரே நாளில் அவன் பிரபலமாகிவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.


இவந்தான் நான் சொன்ன அந்த டான்ஸர்
இதில் உள்ள சகலருமே கேர்ல்ஸ்தான்


இதில் நடிக்கும் ஆணுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது காம்பின் இறுதியில்


வேறு ஒரு கல்சரல் புரோக்கிராமிற்கு ஏதாவது செய்வோம் என்று சிந்தித்ததும் வைதிஸ் கொலவெறி பாட்டை காம்பிற்கேற்றவாறு ரீமிக்ஸ் செய்து பாடுவோம் என்று முடிவெடுத்து வரிகளை மாற்றினோம்...

மெஸ்சாப்பாடு உதவாது
கவரேஜ் இல்லை...
சேர்ந்த புதிய பிரன்ஸ்
பிகேர்ஸ்...
வீட்டை மிஸ்பண்ணியது...
போன்றவற்றையெல்லாம் குழைத்து ஒரு பாட்டாக உருவாக்கி ரியசல் பார்த்தோம் அந்த ரியசலுக்கு தபேலா வாசித்தவர் ஒரு சிங்களக்கோப்பிரல். சிங்களவர்களிடையே வை திஸ் கொலவெறி பாட்டு பிரபலமாகியதால் இந்த ஐடியாவை எடுத்துக்கொண்டோம்...

பாட்டின் வரிகள்....

Yo boys i am singing song
soup song
flop song
வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
rhythm correct?
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
maintain this
வய் திஸ் கொலைவெறி ….அடி (why this kolaveri..di)
distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u
வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

இதன் இடையில் எமது வரிகளை சேர்த்தோம் ஏதோ அந்த நேரத்தில் தோன்றியது... கீழே பாடல் வரிகள் தொடர்ச்சி ஒழுங்கில் தரப்படவில்லை...எழுதிய பாடல் மறந்துவிட்டது நினைவில் இருப்பதைத்தான் நான் பதிவிடுகின்றேன்.நாங்கள் வைரமுத்துவின் சீடர்கள் இல்லை ஏதோ ஓரளவிற்குத்தெரிந்ததை...என்ன இந்தப்பாடலின் இடையே செருக வைரமுத்து எதற்கு என்கிறீர்களா  ஹி ஹி அப்படின்னா ஓகே...

லெட்டர் கம்மு 
திங்க்ஸு பையு
பாங்கு பலன்ஸு அவுட்டு

(தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வந்தது..அதில் ஷூ,சேர்ட் ஹாப் சிலீப்,புல்சிலீப்,சொஸ் அதுஇதென்று குறிப்பிட்ட அனைத்தையும் வாங்கினால் மொத்த செலவு 10 000 ற்குக்குறையாது)

வென் வீ கம்மு 
கேர்ல்ஸு ஹியரு 
பேரன்ஸ் ஓல்ஸோ நியரு

(வந்ததும் காம்பை சுற்றிப்பார்த்தால் பெண்கள் கூட்டம்..பற் சோ சாட் பேரன்ஸும் கூடவே இருந்தார்கள்)

மெஸ்ஸு மெஸ்ஸு 
ஓ மை மெஸ்ஸு
ஐ மிஸ்ஸு மை ஹவுஸு

(மெஸ் சாப்பாட்டினால் நாக்கு செத்துவிட்டது.மெஸ் சாப்பாட்டை சாப்பிட்டதும்தான் வீட்டில் அம்மாவின் சாப்பாட்டிற்கு விமர்சனம் செய்ததன் பலன் தெரிந்தது)

மம்மி ஐ ஆம் டையிங்க் னவ்வு
யு ஆர் ஹப்பி ஹவ்வு?


ஏதோ ஒரு புரோக்கிராம் செய்யவேண்டும் என்பதற்காக குரூப் சோங்க்காக அந்த நிமிடமே குழுவாக சுற்றியிருந்து வரிகளை எழுதி பாடலைப்படித்தோம் பைலாபோட்டது ஒரு லெப்டினல் என்பது எனக்குத்தெரியாது.அவர் சிரித்தபடியே வாசித்தார்.அருகாமையில் இருந்த சிங்கள மாணவர்கள் கொலைவெறிபாடலைக்கேட்டதும் உற்சாகமாக கவனித்தார்கள் நான்கள் மாற்றியவரிகளின் அர்த்தம் எள்ளல் எகத்தாளம் விளங்கியிருக்கவேண்டும் சிரித்தார்கள்.அடுத்த நாள் கல்சரல் இந்தப்பாட்டுமிகப்பிரபலமாகப்போகின்றது ஒரு வேளை ரந்தெனிகல காம்பின் தீமாக மாறக்கூடுமோ என்ற மிகைப்படுத்தப்பட்ட எண்ணம் தோன்றியது.ஏனென்றால் நாம் எழுதிய வரிகள் அனைத்துமே உண்மை சோ அனைவருக்கும் பிடிக்கும்.பாட்டுக்கு ரியர்சல் செய்தது 2.30 ற்கு..இரவு 8 மணிக்கு கல்சரல் புரோக்கிராம்கள் ஆரம்பிக்கும் ரைம்...வழியில் கண்டவன் போனவனெல்லாம் சொன்னான் வை திஸ் கொலவெறி ரீமை வரட்டாம் விசாரிக்கணுமாம் அந்தப்பாட்டை பாடவேண்டாமாம்..... நான் ஏதோ நக்கலா விளையாடுகின்றார்கள் என்று நினைக்க ஒரு சிங்கள மாணவன் வந்து அரைகுறை இங்கிலீஸில் சொன்னான்..உங்கள் பாட்டில் பிரச்சனை(உன் பாட்டில் குற்றம்)...

கூட இருந்த ஒண்டு பயந்துட்டுது டே என்ன பண்ணப்போறாங்களோ? அட ஒன்னுமில்லை என்ன தமிழீழம்னா எழுதினோம் பாட்டுத்தானேய்யா எழுதினோம் என்றுவிட்டு எமது சில மாணவர்களுடன் கோப்ரல்,ஜெனரல்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றோம் அங்கு எமது ரான்சிலேட்டர்கள் இருந்தார்கள்.. நீங்கள் ஏதோ பாட்டுப்பாடியிருக்கிறீர்கள்...அதில் ஏதோ பிரச்சனை மேலிடத்தில் இருந்து அதை விசாரிக்குமாறு கூறியிருக்கின்றார்கள்( அட ப்பாவிகளா சாதாரண பாட்டு ஹெட் வரைக்குமா போய்ட்டுது ஏண்டா இப்படி?)

சரி என்று வரிகளை வாசித்துக்காட்டி சடைந்தோம் உண்மையில் அங்கு நடக்கும் பிரச்சனைகளை  பாடலாக குறிப்பிட்டிருந்தோம் ஆனால் இவையெல்லாம் சாதாரண பிரச்சனைகள் எல்லாம் கேட்டுவிட்டு கூறினார்கள் வேண்டாம் இந்தப்பாட்டைப்பாடவேண்டாம்...எமக்கு கடுப்பாகிவிட்டது என்ன காரணம்...போன பச்சில  சில தமிழ்ப்பொடியள் இப்படித்தான் நக்கலா புரோக்கிராம் பண்ணி  எங்களுக்கு மேலிடத்தில இருந்து பிரஸர் வந்தது சோ பாடவேண்டாம்...ஆங்கிலத்தில் விளக்கினோம் பாடவேண்டாம்...
என்ன சேர் பாடக்கூடாவா சுதந்திரம் இல்லை....எந்த அளவு சுதந்திரம் எண்டு உங்களுக்கு விளங்கவேணும்(ம்ம்ம் இப்பதான் அர்த்தம் விளங்கியது)
பாடுவதற்கு உற்சாகமாக அனைவருக்கும் ஏமாற்றம் கோபம் எல்லாம் சேர்ந்துவந்தது... நான் எனி இஞ்ச எந்தப்புரோக்கிராமும் செய்யிறதா இல்லை என்று கூறிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் நண்பர்கள். எனக்கும்தான் கோபம் வந்தது...அப்படியே அங்கிருந்து கல்சரல் நடைபெறும் இடத்திற்கு வந்து பார்வையாளர்களாக உட்கார்ந்தோம் வரும் வழியில் நண்பனுக்கு கூறினேன் ... நல்லவேளை ரேக்கு கண்ணு என்று எழுதவில்லை எனக்கு முன்னால் ஒரு கோப்பிரல் சென்றுகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை திரும்பி சொன்னார் பாடவேண்டாம்....
கடுப்பாக அன்றைய நாள் சென்றுவிட்டது.அடுத்த கல்சரல் வந்தபோது எமது குரூப்பின் சிங்கள மாணவர்கள் தமது நாடகமுடிவில்  தாம் தரும் வரிகளை  தமிழில் கூறவேண்டும் எனக்கேட்டார்கள் ஆங்கிலத்தில் இருந்ததை தமிழுக்கு மாற்றினால் இதுதான் அர்த்தம்"எமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. எமது நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சரியான வாய்ப்புக்களை எமது தலைமைத்துவப்பயிற்சி வழங்குகின்றது வழங்கிவருகின்றது இதை சரியாகப்பயன்படுத்தினால் எமது நாட்டை எதிர்காலத்தில் உலக அளவில் செல்வாக்குமிக்க இடத்திற்கு கொண்டு செல்லமுடியும்." இவளவுதானே சரி என்று கூறிவிட்டு அவர்களது நாடகத்தின் இறுதியில்மேடையில் அவ் வரிகளை சொல்லிவிட்டுவந்துவிட்டேன்.ஆனால் அவர்களது நாடகம் எதைப்பற்றி தெரியுமா? தலைமைத்துவப்பயிற்சிக்கு வந்த 2 மாணவர்களைப்பற்றியது...ஒரு மாணவன் பயிற்சிக்கு ஒத்துளைக்காமால் வெட்டியாககாம்பில் திரிகின்றான் மற்றோருவன் சகலவற்றையும் கேட்டு நடக்கின்றான்..ஒரு இன்ரர்வியூவில் கேட்டு  நடந்தவனின் நல்ல பிகேவியர் பொடி லாங்குவிஜ்ஜின் காரணமாக அவன் தெரிவு செய்யப்படுகின்றான் மற்றவன் நிராகரிக்கப்படுகின்றான்...நாடகத்தில் உள்ள ஸ்பெஸல் என்ன தெரியுமா மார்ச்சிங்க் பழக்கியதை முடியுமான அளவிற்கு இமிட்டேட்பண்ணியிருந்தார்கள் சிங்கள மாணவர்கள் எல்லோரும் நன்றாக வாய்விட்டு சிரித்தார்கள்.... ஆனால்  நான்கள் அவர்கள் செய்ததுபோல் நேரடியாக எமது ஆர்மி பயிற்சியாளர்களை இமிட்டேட் செய்யவில்லை.... கேக்கும்போது யாரும் வாய்விட்டு சிரிக்குமளவிற்கு அது அவர்களுக்கு அவமானம் அல்ல ஆனால் அவர்கள் செய்யும்போது சிரிப்பு நாம் செய்யமுற்பட்டபோது தடை.

அடுத்து முஸ்லீம் மாணவிகள் வந்து ஈராக்கின் ஓலம் கேட்கின்றதா என்று பாட்டுப்பாடினார்கள்.

இப்படி நாட்கள் செல்ல வந்தார் திஸ நாயக்க... மேதகு கல்வி அமைச்சர் திஸ நாயக்க அவர்கள்...

9 மணிக்குவருவதாக கூறியிருந்தாராம்.ஏதோ இந்தியப்படங்களில் வரும் அரசியல்வாதி மாதிரி இல்லாமல்  நேரத்துக்கு வருவார் என்றால் இல்லை..அவரும் 9.30க்குத்தான் வந்தார் அரைமணித்தியாலம் காத்திருந்தோம் அனைவரும் அப்போது முன்னால் ஓடிச்சென்ற சிங்களமாணவன் ஒருவன் (அவன்தான்புரோக்கிராம்களில் பெரும்பாலும் பேசுபவன்) பேசினான்...அவன் ஆங்கிலத்தில் பேசினான் பாருங்கள் மாணவர்களே நேரம் பன்சுவாலிட்டி என்பது  ஒரு மனிதனுக்குமிகவும் முக்கியம்...இப்போது பார்த்தீர்களென்றால் ஒரு  தனி மனிதன் நேரம் தவறியதால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்...பலத்த சிரிப்பிற்கு மத்தியில் அவன் நகர்ந்து தன் இடத்திற்கு சென்றுவிட்டான்...பின்னர் வந்த மேதகு திஸ நாயக்கா அவர்கள் பேசினார்கள்...அருகில் இருப்பவர் ரான்சிலேட் செய்தார்....உங்கள் சற்ஸ்கோர்களை கணித்ததில் பிழை என்று சிலர் கேஸ்போட்டார்கள்...ஆனால் உங்கள் சற்ஸ்கோரில் எந்தப்பிழையும் இல்லை(ஓகோ  பிழையில்லை)...இலங்கையில்தான் ராக்கிங்க் இருக்கின்றது ஆனால் வேறு எந்த நாட்டிலும் இல்லை இந்தியாவில் கூட ராக்கிங்கை எப்போதோ ஒழித்துவிட்டார்கள்...வடக்கே தமிழர்களின் பிரதி நிதிகள் என்று கூறிக்கொண்ட அமைப்பு ராக்கிங் செய்தார்கள் தெற்கில் ஜேவிபி ராக்கிங்க் செய்தது...அதனால்தான் அவர்களை நாம் அடக்கினோம்(சப்பா என்ன ஒரு அரசியல் அறிவு ஞானம்...)பின்னர் வந்து மாணவர்களுக்கு கைகொடுத்து விஸ்பண்ணினார் மேதகு கல்வி அமைச்சர் திஸனாயக்கஇந்த நாள் இப்படியே முடிய அடுத்த நாள் ரந்தெனிகல டாமுக்கு அழைத்துச்சென்றார்கள்...போவதற்கு 5 கிலோமீட்டர் மீண்டும் திரும்புவதர்கு 5 கிலோ மீட்டர்...10 கிலோமீட்டர் நாக்கைதொங்கப்போட்டுக்கொண்டு நடந்தோம்....

டாமிற்கு சென்றதும் சிறிது நேரம் தங்கிபோட்டோக்களை சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிவிட்டு மீண்டும் காம்பிற்கு திரும்பினோம்...


அதிக தூரம் நடக்கவேண்டுமென்பதால் பாடிக்கொண்டும்,சிலவார்த்தைகளைக்கத்திக்கொண்டும் வந்தோம்


டாமிற்கு செல்லும் வழியில் பிள்ளையாரின் பிராஞ் ஒன்றிருந்தது ஐ மீன் சிறிய பிள்ளையார் கோவில் ஆனால் சூலம் வரையப்பட்டிருந்தது பிள்ளையாட் சிலையும் ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தது பரிணாமத்தின் இடையில் தவறிப்போய் தப்பிய ஜீவன்போல்(அப்படியான உயிரிகள் தப்பாது அதாவது 2 தலைகொண்டது போன்றவிலங்குகள் தப்பாது கருவிலேயே அழிக்கப்பட்டுவிடும் அது இதுன்னு கிளம்பிடாதீங்க ) அச்சிலைக்கு அருகில் இருந்த வேப்பமிலைகளை சார்த்திவிட்டு தொடர்த்தார்கள் நமது கோப்பிரல்கள்
இறுதி நாளுக்கு முதல் நாள் இரவில் fire camp  நடைபெற்றது. நடுவில் தீயைக்கொழுத்திவிட்டு சுற்றிவர நின்று பாடுதல் ஆடுதல்  போன்றவற்றை செய்தல்தான் இதன் முக்கிய நோக்கம்.
இரவு  சற்று தொலைவில் இருக்கும் எல்லையைசுற்றிவர தீவட்டிகள் அதன் நடுவே பெரிதாக  நெருப்பு எரியவிடப்பட்டிருக்கும். நடுவில் நாம்.சகலரும் ஒருதடையாவது அதை அனுபவிக்கவேண்டும் என்ற உணர்வுதான் அப்போதுதோன்றியது அப்படி இருந்தது அந்த இரவு,,
அதுலும் புரோக்கிராம்கள் செய்யவேண்டும்...புரோக்கிராம் செய்வதற்கு முதல் நாள் எமக்கு சில ரூல்ஸ்களை சொன்னார்கள் நீங்கள் நடத்தப்போகின்ற புரோக்கிராம் எந்த தனி நபரையோ சமூகத்தையோ  சமயத்தையோ பிரதினிதித்துவப்படுத்தவோ அடையாளப்படுத்தவோ அவமானப்படுத்தவோ கூடாது.என்பதுதான் அது.

இரவு பயர்காம்ப் ஆரம்பமானது குரூப் சோங்க்ஸ் ஆடல்கள் பாடல்கள் அமர்க்களமாக நடந்தது...இரவு ஆகையால் எப்படிஉரத்துக்கத்தினாலும் யாரும் கண்டுபிடிக்கமுடியாதே?சோ கத்து கத்தென்று சகலவற்றிற்கும் இயலுமான அளவு கத்தி ஆதரவு கொடுத்தோம்...பெரும்பாலான குரூப் பாட்டுக்கள் பாடியதால் கூடவே நான்களும் ஆடினோம்....

ஆனால் முஸ்லீம் சகோதரர்கள் மட்டும் ஒரு தவற்றை செய்துவிட்டார்கள்.வந்து அவர்கள் முதலில் பாடிய பாட்டு இறைவனிடம் கையேந்துங்கள் அடுத்து ஏதோ அராபிக்கில் பாடினார்கள். fire camp வெறும் கேளிக்கைக்குமட்டும்.அதோடு ஏற்கனவே சட்டதிட்டங்கள் தெளிவாககூறப்பட்டிருந்தன.எந்த சமயத்தையோ,மதத்தையோ....என்று..பாட்டுப்பாடி கூடவே ஆடியிருக்கலாம் அதைவிட்டுவிட்டு இப்படி சமயம்சம்பந்தமாக பாட என்ன நடந்தது தெரியுமா...சிங்கள மாணவர்கள் அனைவரும் சினிமாப்பாடல்களுக்கு ஆடுவதுபோலவே ஆடினார்கள் கத்துக்கொண்டு பாடினார்கள். சகோக்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று புரியவில்லை.

 fire camp இல் நடைபெற்ற புரோக்கிராம்களில் அசத்தலான புரோக்கிராம் ஒன்று...வேடுவர்போல் இலை குழைகளை அணிந்து ஒரு நாடகம்,பாட்டு,
ஒரு வெள்ளைக்காரன் காட்டிற்குள்  நுழைய கூடவந்த நம் நாட்டவன் விளங்கப்படுத்திகொண்டு செல்ல இடையில் வேட்டுவக்கூட்டத்திற்குள் அகப்பட்டுவிட்டான் .வேடுவர்கள் சுற்றி நின்று ஆட அந்தப்பெண்ணும் அவனும் பயப்பட அசத்தலாக நடித்திருந்தார்கள் இடையின் க்ங்க்ணம் ஸ்ரைல் டான்ஸ் மூவ்மென்ற் எல்லாம் வந்திருந்தது.மிகத்தரமான புரோக்கிராம் என்னைப்பொறுத்தவரை அதுதான்.இறுதி நாளில் கிரவுண்டில் மார்ச்சிங்  நடைபெற்றது அதன் பின்னர் விருதுவழங்கல் நடைபெற்றது.அது முடிவடைந்ததும் மைதானத்தில் மாணவர்கள் சில புரோக்கிராம்களை செய்தார்கள்...டான்ஸ் சிங்கள தமிழ் மாணவர்கள் தத்தம்  நடனங்களை ஒன்றாக ஆடினார்கள்...


 சகலதும் முடிந்ததும் அன்றே சான்றிதழைத்தந்து வீடு செல்ல அனுமதித்தார்கள்..


அம்மா நா வயசுக்கு வந்திட்டேஏஏஏஏஏஏஏஏன்...

இறுதி நாள் சகலரையும் கட்டிப்பிடித்து அழவேண்டியதாகிவிட்டது 14 நாளில் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் ஒரு நோட்புக் ஒன்று வாங்கி அதைகொடுக்க அதில் பல இலையாக இருந்தாயே சருகாக உதிர்ந்தாயே பாணியிலான வாசகங்களுடன் போன் நம்பர் பேஸ்புக் ஐடியையும் எழுதித்தந்தார்கள் நண்பர்கள்.

காம்ப் வாழ்க்கையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம் 14 நாள் காம் வாசத்தின் பின்னரான "வீடு திரும்பல்" அது.
ஆனால் நாம் பெற்றுக்கொண்டவை பல முன்னணியில் உள்ள 5 விரிவுரையாளர்களின் வாழ்க்கைக்கு அவசியமான விரிவுரைகள் சைக்கோலொஜி,செக்ஸ் ஏன் ஆன்மீகத்தைப்பற்றிக்கூட விரிவுரைகளை செய்திருந்தார்கள்.கொடுக்கப்பட்ட பயிற்சி சகிப்புத்தன்மையை நன்றாகவே வளர்த்தது.10 கிலோமீட்டர் நடந்தோம்.கயிறுகளில் ஏறினோம்.எமது உடைகளை நாமே தோய்த்தோம் எமக்கு வழங்கப்பட்ட வேலைகளை நான்களாகவே செய்தோம் குரூப் அக்டிவிட்டி மிகவும் பயனுடையதாக இருந்தது..குழுவாக ஒரே நாளில் கிரியேட்டிவ்வான புரோக்கிராம்களை செய்யமுடிந்தது.மொழி தெரியாத நபர்களை நண்பர்களாக்கினோம் சமாளித்தோம்.முடிவுகளை நான்களாக எடுத்தோம் சிலபல பிரச்சனைகளை பேஸ்பண்ணினோம் சமாளித்தோம்.
முக்கியமாக சென்ற அனைவரும் மெலிந்துவிட்டோம். புதிய நண்பர்கள் நண்பிகளை உருவாக்கிக்கொண்டோம்...என்னைப்பொறுத்தவரி இத்தலைமைத்துவப்பயிற்சி தேவையான ஒன்றுதான் ஆனால் நமது ஊடகங்கள் இவற்றை தவறாகவே சித்திகரிக்கின்றன.சிலர் கேஸ்போட்டிருந்தார்கள். பெற்றோர்களால் பொத்திப்பொத்திவளர்கக்ப்பட்டவர்கள் கூட இங்கேவந்து  கொஞ்சமாவது ஆளுமையுள்ளவர்களாக மாறினார்கள்...
ஏதோ முதல் 4,5 நாட்கள் கடினமாக இருக்கும் பின்னர்(50 வருசமா கஸ்ரப்பட்டு கவலைப்பட்டு நஸ்ரப்பட்டு அவமானப்பட்டு அசிங்கப்பட்டு செருப்படி வாங்கியுருப்பீங்க...ஆமா அப்புறமா என்னாகும்?) அதுவே பழகிடும். அதைவிட முக்கியமான ஒன்று இராணுவத்தினரைப்பார்த்து பழக்கப்பட்டவர்கள் என்றாலும் அவர்களிடத்தில் ஒரு பயம் இருந்தது ஆனால் இராணுவ சீருடை அணிந்தவர்களுடன் 14 நாட்கள் நன்றாக மகிழ்ச்சியாக பழகியபின்னர் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவந்ததும்  சென்றியில் இருக்கும் ஆர்மிக்காரனைப்பார்த்து சுப உதாசனை துமணி என்று கூறவேண்டும்போல் இருந்தது ஒருவேளை இதுதான் அவர்களின் வெற்றியோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}