எதிர்கால இராணுவவீரர்கள் எப்படி இருப்பார்கள்?

கி.பி 3456  செய்தி  எதிரி நாட்டின் விமானப்படை 5 சூப்பர் சோல்டியர்களால் ஒரே நாளில் முற்றாக அழிக்கப்பட்டது..ஏதோ சயன்ஸ்பிக்ஸன் கதையைப்போல் இருக்கின்றதா? இப்போதைக்கு சாத்தியமில்லை ஆனால் சாத்தியமே இல்லையென்று யார் சொன்னார்கள்? இராணுவ ஆய்வுமையங்கள் ஆயுதங்கள் பற்றிய ஆய்வு மையங்களில்  நீங்கள் இதைப்படித்துக்கொண்டிருக்கும் கணத்திலேயே ஏதாவது ஒரு அபிவிருத்தி ந்டந்துகொண்டுதான் இருக்கும்.

எதிர்கால இராணுவ வீரர்களின் அபிவிருத்தி என்பது அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள்,யுத்த தளபாடங்கள் போன்றஅனைத்தின் அபிவிருத்தியையும் உள்ளடக்கியது.பல ஹொலிவூட் திரைப்படங்கள் இந்த வகையறாக்களில் வந்துள்ளன.பொதுவாக எதிர்கால இராணுவ வீரர்கள் வித்தியாசமான துப்பாக்கிகளைவைத்திருப்பார்கள்.லேஸர் கண் போன்றவை இருக்கும்,இப்போதுள்ளவற்றைவிட மிகவும் சக்திவாய்ந்த பொடி ஆர்மர்களை அணிந்திருப்பார்கள்,இன்விஸிபிள் பவர்களைக்கொண்டிருப்பார்கள்,உச்சக்கட்டமாக சூட்களை அணிந்திருப்பார்கள்.இந்த சூட்கள் அதிகபலமான தாக்குதலை தாங்குவதற்கு ஏற்றவாறுவடிவமைக்கப்பட்டிருக்கும்.

 தொலைபேசி மனிதனின் அங்கங்களுள் ஒன்றாக  பெரும்பாலும் மாறிவிட்டது.வீட்டில் இருந்து வெளியேறியபின் தொலைபேசியை வீட்டில் விட்டதை அறிந்ததும் லிட்டில் ஹார்ட் அட்டாக்வருவதே இதற்குச்சாட்சி.இது சாதாரணவிடயம்.எலக்ரோனிக்ஸ் எப்படி எம்முடன் ஒட்டிக்கொள்கின்றது என்பதற்கு சிறிய உதாரணம்.ஆனால் எதிர்வரும்காலங்களில் இவ்வாறான உபகரணங்களை நேரடியாக மூளையின்கட்டுப்பாட்டிற்குள் இயங்கக்கூடியதான அங்கமாக எம்முடலில் பொருத்துவோம்.இதுவெறும்கதை அல்ல சாத்தியமானதுதான்.கண்தெரியாத ஒருவரிற்கு சத்திரசிகிச்சை செய்து மூளையின் பார்வைப்புலன் பகுதியில் தகடுகளைப்பொருத்தி மின்சாரம் கொடுப்பதன் மூலம் ஒளியை பொட்டுக்களாக உருவாக்கி பார்வையை ஓரளவிற்கு கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.அந்த பெண்ணிற்கு தலையில் சத்திரசிகிச்சை செய்து ஒரு பிளக்பொயிண்டை இணைத்துள்ளார்கள்.யு.எஸ்.பி போன்ற ஒன்று.அந்தப்பெண்ணிற்கு ஒரு பிரத்தியேகமான கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.அந்தக்கண்ணாடியில் இருந்து அவரது தலையில் இருக்கும் பிளக்பொயிண்டிற்கு வயர் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவைதான் நம் உடலில் எலக்ரோனிக் உபகரணங்களை பொருத்திக்கொள்வதற்கான ஆரம்பத்தின் ஸ்திரமான முதல்படிஎன எனக்குத்தோன்றுகின்றது.இதயத்திற்கு பற்றியை(Artificial cardiac pacemaker) இணைப்பதெல்லாம் ஆதி ஆரம்பம்தான்.செயற்கை கைகளையும் மனித உடலில் பொருத்தியதை செய்திகள் மூலம் அறிந்திருப்பீர்கள்.ஆனால் மனித மூளையிலேயே கைவைத்தல் என்பது பெரியவிடயம்தான்.
எதிர்கால வீரர்கள் சூட்கள் அணிந்திருக்கலாம்.அவர்கள் யுத்தத்திற்கு மட்டும் பயன்படுபவர்களாக மாற்றப்படுவார்கள்.இவ்வாறான கருத்துக்களுடன் வெளிவந்தி சில ஹொலிவூட்படங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

ரோபோ கொப்

இப்படத்தில் ஒரு பொலீஸ் போதைப்பொருள் கும்பலால் சுடப்பட்டுவிடுவார்.உயிர்பிழைப்பது அரிது என்று முடிவுவர அவரை ரோபோ ஆக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடுகின்றார்க்ள்.இறுதியில் ரோபோவாகவே ஆக்கிவிடுகின்றார்கள்.ஹீரோவின் மூளையைக்கொண்டு அந்த ரோபோ உருவாக்கப்படுகின்றது..எதிர்காலத்தில் யுத்தத்தில் உயிருக்குப்போராடும்வீரர்கள் இதேபாணியில் ரோபோக்களாக்கப்பட்டு யுத்தத்திற்கு அனுப்பப்படலாம்.

இராணுவவீரர்களின் மூளைக்குள் சிப்பைப்பொருத்தி அவர்களை முழுமையாக கட்டுப்படுத்தி யுத்தத்திற்கு பயன்படுத்துவதைப்போல் ஒரு படம் வந்தது யூனிவேர்ஸல சோல்டியேர்ஸ்.இப்படி உருவான வீரர்களுக்கு களைப்பு,வலி என்பவை இருக்காது.காயங்களையும் உடனே மறைந்துபோகவைக்கமுடியும்.

டேர்மினேட்டரும் இதேவகைதான் என்ன மெலேகூறியவை எமக்குள் நடக்கும் யுத்தத்திற்கு பயன்பட்டவை ரேமினேட்டரில் ரோபோ மனிதனுக்கு எதிரான யுத்தத்தில்  தன்னைப்பயன்படுத்திக்கொண்டது.
உண்மையில் ரேமினேட்டரில் வரும் இயந்திரமனிதனை ரோபோ என்று அழைப்பதே தவறு சைபர்னெட்டிக் ஓர்கானிஸம் cybernetic organism.தன் சார்பான கட்டுப்பாடுகளைக்கொண்டுள்ள மனித உருவை ஒத்தது.இந்த லிஸ்டிற்குள் ரான்ஸ்போமேர்ஸை சேர்க்கமுடியாது ஏனெனில் அது ஏலியன் ரெக்னோலஜி.

அயர்ன் மான்தான் மிகச்சிறந்த உதாரணம்.அது ஒரு வெப்பன் என்று அப்படத்திலேயே கூறப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.ஒரு நாடு அயர்ன்மான் சூட் வைத்திருந்தாலே போதாதா?

உண்மையில் இப்படங்கள் மூலம் காட்டப்பட்டவை எல்லாமே எதிர்கால யுத்தங்களில் நாம் பயன்படுத்தவேண்டும் என நாம் எதிர்பார்த்தவைதான்.

ஹொலிவூட் படங்களைவிட கம்பியூட்டர் கேம்களில் இவ்வாறான பியூச்சர் ரெக்னோலஜிகள் நிறையவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.அவற்றாய் நாமே பயன்படுத்துவது போன்ற அனுபவத்தையும் பெறமுடியும்.கேம்கள் என்றால் அவற்றில் சிலவற்றை (நான் விளையாடியவற்றை)கூறமுடியும்.இந்த ரைப்பில் நூற்றுக்கணக்கான கேம்கள் வந்துள்ளன.இவ்வாறான பியூச்சர் கேம்களுக்கென்றே தனி ரசிகர்படையே இருக்கின்றது.

கிறைஸிஸ்

இந்த சூட்டை அணிந்தால் நீங்கள் வன்மான் ஆர்மிதான்.இந்த சூட்டிற்கு சில பவர்கள் இருக்கின்றன.இன்விஸிபிள்-கண்ணுக்குத்தெரியாமல் மறைதல்,சூப்பர் ஸ்ரெந்த்-ஒரு டாங்கியில் பொருத்தப்பட்ட மிஸின்கண்ணை அப்படியே புடுங்கிக்கூட எடுக்கமுடியும். பாஸ்ட்-மனிதர்களைவிட விரைவாக ஓடமுடியும்,மக்ஸிமம் ஆர்மர்-இந்த மூட்டை செலக்ட் செய்தால் சூட்டில் இருக்கும் செல்கள் இறுகிவிடும் குண்டுதுளைக்காது.
இவற்றைவிட கொஞ்சம் ஸ்பெஸலானவிடயம் காயம்ஏற்பட்டால் தானாகவே குணமடைந்துவிடும்.

இந்த சூட்டைப்பற்றி பேசுவதற்கு முன்னர்  தயவு செய்து பின்வரும் வீடியோவைப்பார்த்துவிடுங்கள்.
கிறைஸிஸ் என்ற கேமின் நனோ சூட்(Nanosuit)கொண்டிருக்கும் ரெக்னோலஜிகளைப்பார்த்தோம்.ஆனால் அவ்வாறு நடைமுறையில் ஒரு நனோ சூற்றை உருவாக்கமுடியுமா?
ஆம் .சாத்தியம் உள்ளது என்கிறது விஞ்ஞானம்.
நனோ ரெக்னோலஜிகளைக்கொண்டுதான் இந்த சூட் உருவாக்கப்பட்டது.நனோ ரெக்னோலஜி இன்று self cleaning glass,Genetic engineeringNanomedicines,Robotic surgery போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

( நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications.)


மேலேவீடியோவில் துப்பாக்கிக்குண்டு தாக்குதலை சமாளிக்கக்கூடியவிதத்தில் நனோசூட்டின் செல்கள் சடுதியாக மாற்றமடைவது காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு மாறியபின்னர் துப்பாக்கிக்குண்டுகள் உடலை துளைக்காது.சூட் இப்போது armor ஆக தொழிற்படும்.
இது எவ்வாறு சாத்தியப்படலாம்.கார்பன்,வைரங்களைக்கொண்டு அணு அறுகோண அணு அமைப்பை உருவாக்கமுடியும்.காபன் அணுவும்,வைரத்தின் அணுவும் மாறி மாறி அருகருகே அடுக்கப்பட்டு இது உருவாக்க்ப்படும்.அப்போது தோன்றும் சேர்க்கை ஸ்டீலைவிட பன்மடங்கு வலிமையுள்ளதாக இருக்கும்.இதை கிரபீன் என்று அழைப்பார்கள்.சோ சூட் armor ஆக தொழிற்படும்.ஆனால் இதில் உள்ள பிரச்சனை சூட் உடனே அதிகஎடையாகிவிடும்.

graphene strongest material on earthஇன்விஸிபிள் பவர்-கிரபீன் மூலம் இது சாத்தியப்படலாம்.ஒரு பொருள் தன் மீது படும் ஒளியை முற்றாக தெறிப்படைய செய்தால் அந்தப்பொருளை பார்க்கமுடியாது.உதாரணத்திற்கு ஒரு கண்ணாடிக்கோளத்தை சற்று தொலைவில் வெளிச்சத்தில் வைத்தால் அங்கு கண்ணாடிக்கோளம் இருப்பதை அவதானித்தல் கடினம்.தெறிப்பைக்கட்டுப்படுத்தி தெறிக்கும் அளவைக்குறைப்பதன்மூலம்.ஓளித்தெறிப்பின் மூலம் அந்த கோளம் உணரப்படுவதையும் தடுக்கமுடியும்.

grapheneனின் வலிமையை விளக்கும் வீடியோஅடுத்துவேண்டியது

பிஸிக்கல் ஸ்ரெந்தைக்கூட்டுதல் இதன்மூலம் ஒரு காரை உதைத்துவீழ்த்தமுடியும்.இதை சூற்றின் உதவியுடன் செய்யமுடியும்.இயந்திரக்கையைக்கொண்டு பாரங்கள் தூக்குதல்போன்ற தொழில் நுட்பத்தின் மாற்றுவடிவங்கள் மூலம் சாத்தியப்படலாம்.சூற்றில் உள்ள நார்கள் ஸ்டீல் கம்பிகள் போல்  நார்களில் இருந்து சடுதியாக மாறிமாயின் இது சாத்தியம்.ஆனால் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கியோ ஊக்க மருந்துகளை சூட்டின் உதவியுடன் வழங்கியும் பலத்தை அதிகரிக்கமுடியும்.இதே தொழில் நுட்பத்தின் உதவியுடன் சாதாரண மனிதனின் வேகத்தைவிட அதிகவேகத்தைபெறமுடியும்.

ஆனால் இவ்வளவு வேலையையும் செய்வதற்குNanosuit ற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கவேண்டி இருக்குமே அதற்கு என்ன செய்வது?Nanosuitஇன் வெளிப்புற உடலில் சோலர் செல்களை பொருத்திவிடலாம்.அதோடு இரு பொருட்களிற்கிடையிலான வெப்பனிலை வேறுபாட்டைக்கொண்டு மின்சாரத்தை உருவாக்கமுடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் Nanosuitஇன் உட்பாகத்தை வெளிவெப்பனிலையை விட குறைவாக வைத்திருப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.ஆனால் இவ்வாறு பெறப்படும் மின்சாரம் மிககுறைவு ஆகையால் சோலரே சிறந்த தெரிவாக இருக்கும்.

தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கு Nanosuitஇற்கு இவளவு ரெக்னோலஜி தேவைப்படுகின்றது.ஆனால் அயேர்ன் மான் சூட்டிற்கு இது எதுவுமே தேவைப்படவில்லை வெறும் வெளிப்புறக்கவசமே போதுமானதாக காட்டப்படுகின்றது.அயேர்ன் மான் சூற்றில் உள்ள மிகப்பெரிய குறைபாடு இதுதான்.அயர்ன் மான் சூட் அயர்ன்மான் படத்தில் வருவதுபோன்ற செயல்களை செய்ய உதவப்போவதில்லை.உள்ளே இருக்கும் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படும்.கவசம் மிக கனமாக இருக்கும்.கையாளல் கடினம்.ஆனால் Nanosuit  நார்களால் ஆனது தேவைக்கேற்ப அது கடினமான பொருளாக மாறக்கூடியது.இதனால்தான் Nanosuit அயேர்ன் மான் suit ஐவெற்றிபெறுகின்றது.

இவற்றை விளக்கும் வீடியோகிரைஸிஸ் கேமில் வரும்  நனோசூற்றை இப்போதைக்கு நாம் நினைத்துப்பார்க்க மட்டும்தான் முடியும் ஆனாலும் அயர்ன்மான் கவசம் நம் கைகளுக்கு எட்டும் தொலைவில்தான் உள்ளது.கீழே உள்ள வீடியோவைப்பாருங்கள்தொடரும்...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}